P2 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends

Intha story regular updates kodukalamnu iuruken. Neenkalum comments pottu encourage pannalaam. sila per thaan comments podureenka. Next epi tomorrow.

மரியதாஸ் வழியில் ஒரு டீ குடித்துவிட்டு கடலுக்குச் செல்ல... இவருடைய கூட்டாளிகள் நாட்டுப் படகை கடலுக்குள் வண்டி வைத்து தள்ளிக் கொண்டு இருந்தனர்.

அதில் சென்று ஏறியவர், தூக்கு வாலியை ஓரமாக வைத்துவிட்டுத் துடுப்பை கையில எடுத்தார். இன்னொருவரும் சேர்ந்து துடுப்பு போட... நிறையத் தண்ணீர் இருக்குமிடம் வந்ததும், துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு, மோட்டாரை போட்டு விட்டனர்.

சிறிய என்ஜின் கொண்ட மோட்டார் தான். அதனால் அதிக வேகம் இல்லாமல் மிதமான வேகத்தில் சென்றது. குறிப்பிட்ட இடம் வந்ததும், படகை நிறுத்திவிட்டு வலையைப் போட்டனர். பிறகு தூண்டிலும் போட்டுச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்தனர்.

மரியதாஸ் சென்றதும் மீண்டும் படுத்து உறங்கிவிட்ட ரோஜா, சற்று தாமதமாகவே எழுந்து குளித்து நைட்டி அணிந்து வந்தவள், தந்தைக்குக் கொடுத்துவிட்டது போக, எஞ்சி இருந்த நீராகாரத்தில் உப்பு போற்று குடித்தாள். வேறு ஒன்றும் சாப்பிடுவதற்கு இல்லை.

கழுவதற்கு இருந்த பாத்திரங்களை, எடுத்துக் கொண்டு வெளியில் சென்று உட்கார்ந்து அவள் கழுவ... பக்கத்து வீட்டுப் பெண் வனஜா அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

“உங்க அப்பா கடலுக்குப் போயிட்டாரா?”

“ஆமாம் கா...”

“இன்னைக்கு என்ன உங்க அப்பா பிடிச்சிட்டு வர மீன்னை வச்சு குழம்பா?”

“சோறே அவர் வந்த பிறகு தான் ஆக்கணும். அரிசி இல்லை.”

“என்கிட்டே இருக்கு ரோஜா... வேணா எடுத்துக்கோ...”

“இல்லை கா, அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்.” என்றவள், கழுவிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

*************************************************************************************************************

அவன் இல்லாத நேரம்தான், அவன் வீட்டிற்குச் செல்வது எல்லாம். அவன் இருக்கும்போது, அந்தப் பக்கமே செல்ல மாட்டாள்.

“மதியம் அப்பா வந்ததும், மீன் குழம்பு வச்சு கொடுத்து விடுறேன். நீங்க சாப்பாடு மட்டும் வச்சுக்கோங்க.” ரோஜா சொல்ல,

“இல்லை வேண்டாம். நான் இன்னைக்கு டவுனுக்குப் போறேன். வெளிய சாப்பிட்டுகிறேன். உனக்கு நான் வரும் போது பிரியாணி வாங்கிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அங்கே கடலில் தான் கொண்டு வந்த உணவை எடுத்து வைத்து மரியதாஸ் சாப்பிட்டவர், மீண்டும் மீன் பிடிப்பதில் கவனம் செலுத்தினார். அன்று எதுவம் சரியாகக் கிடைக்கவில்லை. மதியம் வரை பார்த்துவிட்டு கரைக்குத் திரும்பினர்.

கொண்டு வந்த மீன், படகின் வாடகைக்குக் கூடக் கட்டுப்படி ஆகவில்லை. அன்று அவருக்கு ஒரு வருமானமும் இல்லை.

*******************************************************************************************************************

“எனக்குப் பொண்ணு கொடுக்காம வேற யாருக்கு கொடுப்ப? நேத்து சோறு கூட அந்தப் பிள்ளைக்கு நீ கடன் வாங்கித்தான் போட்ட... இவரு என்னவோ ராஜ பரம்பரை மாதிரி பேச்சைப் பாரு.”

“உன்னை விட உன் பெண்ணை நான் நல்லா வச்சுப்பேன். எங்க அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உன் பொண்ணு சொன்ன வார்த்தைக்காகத்தான், இவ்வளவு நாள் பொறுத்து போனேன். இல்லைனா உன் பெண்ணைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்ட முடியாம இல்லை.”

அருள் பேசியதில் மரியதாஸ் வாய் அடைத்து போய் நின்று விட...
“ஆமாம் நீங்க தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ற வரை என் கை பூ பறிக்கும் பாருங்க.” எனச் சீறிக் கொண்டு வந்தது ரோஜாவே தான்.


“எங்க அப்பா சம்மதம் கொடுக்கிற வரை காத்திருக்கக் முடிஞ்சா காத்திருங்க... இல்லைனா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போங்க...”

“எங்க அப்பா எனக்குச் சோறு போடலைன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?”
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன இருந்தாலும் இல்லைனாலும் ரோசம் ரொம்ப அதிகம் தான் பொண்ணுகளுக்கு........
அதுவும் அப்பாவை சீண்டினால் :devilish:
பசங்களுக்கு மாமனாரை சீண்டுறதே பொழப்பு.......

யாரையும் கல்யாணம் பண்ணமாட்டான்னு தானே பேசுற ரோஜா :D

“எங்க அப்பா எனக்குச் சோறு போடலைன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?”
ஏம்மா ரோசா..... இந்த டயலாக் பிரியாணிக்கு முன் or பிரியாணிக்கு பின் :p
சொல்லிட்டு போம்மா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top