Oh..!! My Cinderalla - Precap 14

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் உள் அலங்காரமும் அங்கிருந்த மக்களின் ஆடம்பர தோற்றமும் பெண் வீட்டார் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பல பேருக்கு அபரிவிதமான பிரமிப்பை கொடுத்தது…..

அதுநாள் வரையில் தங்களுடன் மிகச் சாதாரணமாக பேசி பழகி உறவு பாராட்டிய அவர்களுக்கு எங்கிருந்து இத்தனை பெரிய சம்பந்தம் அமைந்தது……. என்ற குழப்பத்தோடு கண்களில் பொங்கும் பொறாமையும் சேர்ந்துகொள்ள வலம்வந்த பலபேரின் பார்வையும் அங்கு மணமேடையில் தான் பதிந்திருந்தது...‌..

சினிமாவில் கூட இவ்வளவு அழகான அம்சமான ஹீரோக்களை இப்பொழுதெல்லாம் காட்டுவதில்லை என்றும் குறை சொல்லக் கூடிய அளவுக்கு……. கம்பீரத்திலும் அழகிலும் அங்கிருந்த கன்னியர் முதல் பேரிளம் பெண்கள் வரை தன் வசியப்படுத்தி கொண்டிருந்த மணமகனின் தோற்றம் பலரின் ஏக்க பெருமூச்சை வெளிப்பட வைத்தது…….

மணப்பெண் அழைத்ததற்கான குரல் கேட்க மண்டபமே ஒரு நொடி அமைதியாகி மேடையின் பக்கம் திரும்பிப் பார்க்க……..தங்கம் கொண்டு உடல் முழுவதும் இழைத்த அழகிய பட்டுடுத்தி அதற்குப் மிகப் பொருத்தமாக நகைகளில் பெரும் மதிப்பிலான வைரங்கள் சேர்த்து…….

நெத்திச்சுட்டி முதல் கால் கொலுசு வரை பசுந்தளிர் மேனி முழுக்க வைரங்கள் நட்சத்திரங்களாய் ஒளிவீச அதற்கு நடுவில் முழுமதியோ வான் நிலவு என்று நடந்து வரும் பெண்ணானவள் எழில் அழகு…...காதல் காமம் இத்தகைய மனித உணர்வுகளைத் தாண்டி கடவுள் தொழும் பக்தனாய் அவளை ஒரு நொடி பார்க்க வைத்தது அவளின் ஆளை கொல்லும் பெண்ணழகு………

இத்தனை கம்பீரமான கணவன், இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை, இனி அவளுக்கு குறை என்ன…..என்று பேசிய வெளிமனிதர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்…... தங்கத் தேரில் பவனிவரும் பேதை அவள் மனதில் ஆறாத காயம் ஏற்படுத்திய ரணத்தின் உயிர் போகும் வலியில் உணர்வுகளோடு உள்ளமும் மரத்துப்போய் பொம்மை நிலை கடந்த இயந்திரமாய் அவள் மாறிவிட்ட அவலத்தையும்…..

ஒரு நிமிடம் தலை குணிந்திருந்த அவள் கண்களை நேருக்கு நேராய் யாரேனும் சந்தித்திருந்தால் தெரிந்திருக்கும்…... அந்த அப்பாவிப் பெண்ணின் உள்ளம் படும் பாடு அத்தனை காயத்தையும் தனக்குக் கொடுத்தவனையே இன்று மணந்து கொள்ள வேண்டிய கொடூர நிதர்சனத்தின் கோரம்……..

தன்னைச் சுற்றி இருப்பவரின் எண்ணங்களையும் தனக்கு நடக்கப் போகும் திருமணம் என……. எதுவுமே புத்தியில் பதியாமல் கல்லைப் போல் இறுகிவிட்ட உணர்வுகளோடு தன் அருகில் வந்து அமர்ந்த ஷிவானி யின் நிலையை பரிபூரணமாய் இன்னும் சொல்லப்போனால்…..

மற்ற எவரையும் விட மிக மிக ஆழமாய் புரிந்து கொண்ட அவளின் வருங்கால கணவன் ஆரியனுக்கு அவளை பற்றியும் அவள் உணர்வுகள் பற்றியும் எந்தக் கவலையும் இல்லையோ…..

இதழில் நிலைத்த புன்னகை ஒரு நொடி கூட வாடாமல்……..உலகாளும் இராஜராஜன் நான்தான் என்று மீசைய முறுக்கி அறிவிக்கும் திமிரோடு அமர்ந்திருந்தவன் சரியான சுப நேரத்தில் தன் கையேந்திய மங்கல நாணை தன்னை சற்றும் பிடிக்காத இவ்வுலகத்தில் அவனை முழு மொத்தமாய் தன் முதல் எதிரியாய் வெறுக்கும் ஷிவானிக்கு சாத்வீக முறைப்படி அணிவித்து…... என் வாழ்வின் சரிபாதி நீ என் உயிரின் முகவரி நீயே என்னும் முகாந்திரம் இட்டு கட்டி முடித்தான்…..

அன்றே இரவுக்குப் பிறகு அவளிடம் முதல் முறை சிறு சலனம் கண்களில் தேங்கிய விழிநீர் தரை தொட முயன்று பாதியில் மன்னவன் கரம் சேர்ந்தது……. அவள் உள்ள குமுறலை பறைசாற்ற தோன்றிய அந்த விழி நீர் அவனை சுட்டு விட்டதோ..??!! ஆடிப்பட்ட வலி பொருக்க முடியாத வன் போல் இரு நொடிகள் தன் இமை மூடித் திறந்தவன் முகத்தில் மீண்டும் மீண்டிருந்தது பழைய திமிரும் ஆணவமும்……

அவள் அருகில் சற்று நகர்ந்து அமர்ந்தவன் பிறர் கவனம் கவராமல் சற்று குனிந்த படி வாழ்த்துக்கள் பூனைக்குட்டியே என் நிரந்தர அடிமையாய் பதவி உயர்வு பெற்றதற்கு……நான் உனக்கு வழங்கிய இந்தத் தாலிக்கு பதிலாக இன்றைய இரவு உன் எஜமானனுக்கு சேவை செய்ய தயாராக இரு…..

சேலை மறைத்திருந்த அவள் வெற்றிட மீது தன் கரம் பதித்து அழுத்தி வேண்டுமென்றே அவளை வலிக்கச் செய்தவன் சொற்களும் செய்கையும்……. மிச்ச சொச்ச உயிரும் இல்லாமல் அவளை மொத்தமாய் உள்ளத்தால் இறக்க செய்தது…….
 

Jamunachandhru

Well-Known Member
இது எதிர்பார்த்ததுதான் ஆனா இவ்வளவு சீக்கிரம் திருமணம் நடக்கும்னு நினைக்கல
 

kayalmuthu

Well-Known Member
டேய் என்னடா டக்குன்னு கல்யாணம் வந்துட்டு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top