Naan Ini Nee - Precap 5

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அனுராகாவிற்கு தங்களோடு டெல்லி வருவதில் விருப்பம் இருக்கும் என்று தெரிந்ததுமே தீபன் சக்ரவர்த்திக்கு ஏக குஷியாகிப் போனது.. நேரம் பார்த்து காத்திருந்தவனுக்கு, அந்நேரமே நழுவி வந்து அவன் கைகளில் புகுந்துகொள்ள,

“ஆன்ட்டி.. ஜஸ்ட் எ மினி ட்ரிப் போகலாம்னு இருக்கோம்.. தேவ் வர்றதுனால நீரஜா ஆல்சோ கம்மிங்.. நீங்க ரா.. ஐ மீன்.. அனுராகவை அனுப்பினா இன்னும் கூட நல்லாருக்கும்... என்று தீபன் நல்லவிதமாய் கேட்க,

அவர்களில் இப்படி நண்பர்கள் எல்லாம் குழுவாய் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம்தான் என்பதனால், தாராவிற்கு தீபன் கேட்டதும் தவறாய் தெரியவில்லை.
மகளின் முகம் காண, அவளோ தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தான் நின்றிருந்தாள்.


“அனு... உனக்கு ஓகே வா..” என்று தாரா கேட்க, நீரஜாவோ “ஆன்ட்டி நோ சொல்லிடுங்க...” என்று வேண்டிக்கொண்டு இருந்தாள். மனதளவில் தான்..

“போகலாம் தான்.. பட் நீயும் அப்பாவும் தான் எனக்கு பின்னாடியே ஆள் அனுப்புவீங்களே..” என்று அனு சொல்ல,

“ஷ்..!! இப்போ ஏன் அதெல்லாம் பேசற..” என்று கடிந்தார் தாரா.

----------------------------------------------------------------------
“நாகா... நான் சொன்னது புரிஞ்சதா... எந்த சொதப்பலும் இருக்கவே கூடாது.. எல்லாமே பக்காவா இருக்கணும்..” என்று தீபன் சொல்ல,


“எஸ்.. கண்டிப்பா எந்த பிராப்ளமும் வராது.. நல்லா செக் பண்ணிட்டோம்..” என்றான் நாகாவும்..

“அண்ட் தர்மா.. நான் அண்ணாக்கிட்ட பேசிட்டேன்... நீங்க ரெண்டு பேருமே நான் சொல்றப்போ வந்து என்னோட ஜாயின் ஆகிட்டா போதும்.. சோ மிதுன் என்ன சொல்றானோ அதை பண்ணுங்க.. எந்த ரீசனுக்காகவும் அந்த சேட் நம்ம மானிடரிங்ல இருக்கிறது வெளிய தெரியவே கூடாது.. முக்கியமா அப்பாக்கு..” என,

“கண்டிப்பா...” என்றான் தர்மாவும்..

வெறுமெனே டெல்லி செல்லவேண்டும் என்று இருந்தவன், அனுராகா வருகிறாள் என்றதும் அதை ஒரு சிறு சுற்றுலா பயணம் போல் மாற்றிவிட்டான். ஆனால் அதற்குமுன்னே அவன் செய்து முடித்து செல்ல வேண்டிய ஏற்பாடுகளும் நிறைய இருந்தது..

------------------------------------------------------------
நீரஜாவோ “அனு.. இதெல்லாம் சரியா வராது.. நீ பண்றது தப்பு..” என,


“என்ன தப்பு பண்ணிட்டேன்..” என்றாள் பட்டென்று..

“என்ன பண்ணல?? நீ பண்றது உனக்கே சரின்னு தெரியுதா??” என்று நீரஜாவும் கேட்க,

“சரி.. தப்பு எல்லாம் யோசிக்கிற மைன்ட் செட்ல நான் இல்லை நீரு.. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ரட் மீ... எனக்கு மனசு போட்டு உறுத்திட்டே இருக்கு.. சி நான் ஒன்னும் ஓடிப்போகப் போறதில்லை.. அங்க போய் அந்த பிரஷாந்த் கூடவே இருந்திடவும் போறதில்லை...” என்று அனு கோபத்தில் சற்று சத்தமாகவே பேசிட,

இவர்களை அழைக்க வந்த தீபனின் செவிகளில் அனுராகா கடைசியாய் சொன்னது மட்டும் தெளிவாய் விழுந்து வைத்தது.

-------------------------------------------------
உஷாவிற்கு வீட்டிற்கு போனதில் இருந்து ஆரம்பித்துவிட்டார்.. “மிதுனுக்கு சீக்கிரம் ஒரு நல்லது பண்ணிடனும்..” என்று.


சக்ரவர்த்தியோ “அடடா இதென்ன இவ்வளோ வேகம் திடீர்னு.. மூணு மாசத்துல எலக்சன் வருது.. எதுவா இருந்தாலும் அதெல்லாம் முடியட்டும்.. புரிஞ்சதா.. இப்போ கல்யாணம் வச்சா அதையும் அரசியல் நோக்கோட தான் செஞ்சோம் சொல்வாங்க..” என,

“அது என்ன நோக்கா இருந்தாலும் பரவாயில்லை.. என்னோட நோக்கமெல்லாம் என் பையனுக்கு இந்த வருசமே கல்யாணம் வைக்கணும்.. சின்னவன் அதெல்லாம் செய்வானான்னு தெரியாது.. ஏன்னா அவனுக்கு இந்த கல்யாணம் அது இதெல்லாம் செட்டாகுமா தெரியலை..” என்று உஷாவும் சொல்ல,

அப்பா அம்மா இருவரும் பேசுவது கண்டு சிரித்துக்கொண்டு இருந்தான் மிதுன் சக்ரவர்த்தி. இதை மட்டும் தீபன் கேட்டிருக்க வேண்டும்.. அவ்வளோதான்.. அம்மாவோடு மல்லுக்கு நின்றிருப்பான் என்றுதான் தோன்றியது. ஏனெனில் தீபனின் நிஜமான முகம் மிதுன் அறிவான்..
 

SriMalar

Well-Known Member
அம்மா நினைப்பது போல் நடக்காமல் மிதுன் தீபனுக்கு விட்டுக் கொடுப்பானா?இவன் தானே அவன் மனம் அறிந்தவன்....
 

Joher

Well-Known Member
Tks சரயு......

பிரஷாந்த் பற்றி ராகா வாயால கேட்டாச்சு......
Breakup party break ஆகிட கூடாதுன்னு நினைக்குமே.....
நீ ஒன்னு நினைக்க உன் அம்மா ஒன்னு நினைக்க.......

இருந்தாலும் யாமிருக்க பயமேன்...... மிதுன் இருக்க பயமேன்......

டெல்லி போறாங்க.......
பிரஷாந்த் என்ன பண்ணபோறான்?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top