Naan Ini Nee - Precap 40

eanandhi

Well-Known Member
#26
சக்ரவர்த்தி கேட்டார் “நான் எதுவும் செய்யனுமா??!!” என்று.

“நீங்களோ... கட்சி ஆளுங்களோ யாரும்.. யாருமே அந்த பக்கம் எட்டிப் பார்க்காம இருந்தா போதுமப்பா..” என்றுவிட்டான்.

காதரைக் கூட அவன் அழைத்துக்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க அவன், நாகா தர்மா மட்டுமே. என்னென்ன செய்யவேண்டும், யார் யாரைக் காண வேண்டும், யார் யாருக்கு எல்லாம் அழைப்புகள் விடுக்கவேண்டும்.. என்று எல்லாமே தீபனின் திட்டம் தான்.

தப்பித்தவறிக்கூட அரசியல் ஆட்கள் யாரையும் இதில் அவன் உள் நுழைக்க விரும்பவில்லை.

அரசியல் சாயம் அல்லாத ஒரு நிகழ்வை நிகழ்த்திட விரும்பினான்.

அதாவது இன்றைய தலைமுறையினர் மத்தியில் தன்னை ‘யூத் ஐகான்..’ என்று காட்ட, மந்திரியின் மகன், நிழல் உலகத்தில் அவன் வேலைகள் நிறைய என்பது எல்லாம் தாண்டி, தீபன் சக்ரவர்த்தி என்ற தனிமனித அடையாளத்திற்காக இதனை செய்ய நினைத்தான்.

-----------------------

“நீங்க கிளம்புங்க.. போய் முதல்ல பார்த்துட்டு வாங்க..” என்று நாகா சொல்லியபடி அந்த மேப்பினை மடக்க,

“டேய்.. என்னடா இப்படி மாறிட்டீங்க..??!!” என்றான் இருவரையும் பார்த்து தீபன் சக்ரவர்த்தி.

“கூட இருக்கிறது பெருசில்ல.. நல்லது செய்யணும்.. நல்லது எடுத்து சொல்லணும்.. நீங்க சொல்றத எல்லாம் கேட்டு செய்றது மட்டும் உங்களுக்கு நல்லது பண்றதுன்னு ஆகிடாது..” என்று தர்மா சொல்லவும்,

“ஓ!!! அப்போ போங்களேன்.. போய் அவங்கக்கிட்டயே வேலைக்கு இருந்துக்கோங்களேன்..” என்று தீபன் சொன்னாலும், அவனையும் மீறி முகத்தினில் ஒரு முறுவல்..

“எதுக்கு அவங்க பல நேரம் திட்றது எல்லாமே புரியாத வார்த்தைல..” என்று நாகா சொல்ல, தீபனின் அந்த முறுவல் அப்படியே சத்தமான சிரிப்பாய் மாறியது..

-------------------------------------------

தாராவிடம் நானே செல்கிறேன் என்று சொன்னவன் அமர்ந்தபடி இருக்க “நான் போய் சொல்லட்டுமா??!!” என்றார் தாரா.

“இல்ல.. ஆன்ட்டி.. நான் நானே போறேன்..” என்றவன், சென்று அவளின் அறை கதவினைத் தட்ட,

“எஸ்...” என்ற அவளின் குரல் வந்து எட்டியது இவனை.

அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருப்பாள் போலும். மேஜை மீதிருந்த இரண்டு பைல்களை புரட்டிப் பார்த்து அவளின் ஆபிஸ் பேக்கில் வைத்தபடி

“ப்ரேக்பாஸ்ட் வேண்டாம்.. மீட்டிங் இருக்கு..” என்றவள், பதிலே வராது போகவும், திரும்பிப் பார்க்க, தீபன் நின்றான்..

------------------------------------

‘ஆண் பிள்ளை அழலாமா??!!’ இப்படித்தானே அனைவரும் சொல்வர்.. அதிலும் தீபன் சக்ரவர்த்தி போன்ற ஒருவனின் கண்களில் கண்ணீரா??!!!

இது சாத்தியமா??!!

சாத்தியம் தான். மனம் நிறைந்த காதலில்.. மனதை நிறைத்த காதலியால் இது சாத்தியமே..

அனுராகாவின் மடியினில் முகம் புதைத்திருந்தவன் “ஏன் ராகா இப்படி பண்ண நீ??!!” என்று கேட்கையில் குரல் உடைந்து போனது.

“ஷ்..!! தீப்ஸ்...” என,

“போ டி... எனக்கு அப்படியே உயிர் எவ்வளோ துடிக்குது தெரியுமா??!! உன்ன எவனாவாது சும்மா பார்த்தாலே கொல்லனும் போல இருக்கும்.. ஆனா நீ.. இப்...” என்றவன் அதற்குமேல் சொல்லாது தவித்தான்..சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா..

செல்ல செல்ல முத்தங்களால்

உன் உயிரை வாங்கவா??!!
Super sis sema promo
 
Advertisement

New Episodes