Naan Ini Nee - Precap 4

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பிரஷாந்திற்கு பெங்களூரில் எத்தனை நாட்கள் வேலை என்பது அவனுக்கே தெரியாது. ஏன் இந்த திடீர் இடமாற்றம் என்றும் தெரியாது. டெல்லி சென்றே முழுதாய் அங்கிருக்கும் பிரச்சனை புரிபடாத நிலையில், இப்படி உடனடியாக பெங்களூர் செல்லவேண்டும் என்று உத்திரவு வந்ததும்

‘போங்கடா நீங்களும் உங்க வேலையும்..’ என்றுதான் எண்ணத் தோன்றியது.

ஆனால் லட்சங்களில் சம்பளம்.. அது அவனை தடுத்தது. மற்றொன்று அவனுக்கு முடிவுகள் எடுக்கும் சுந்ததிரம் நிறையவே இருந்தது. அதாவது இதெல்லாம் தான் உனக்கு, என் பெண்ணில்லை என்று செய்து காட்டி இருந்தார் லோகேஸ்வரன்.

எப்போது அனுராகா, அவனைப் பற்றிய சிந்தனை மறந்து இயல்பாய் இருக்கத் தொடங்குகிறாளோ அன்றே பிரஷாந்த் நிலையான ஒரு இடத்தில அமர்வான். அதுவரைக்கும் இப்படித்தான்


------------------------------

“ஷ்...!!! நம்மளை இங்க ரெண்டு பேர் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க..” என்று பார்வையை சுழல விட்டபாடி அனுராகா சொல்ல,

“யா.. தெரியும்...” என்றான் தீபனும்..

‘தெரியுமா??!!!’ என்று அதிர்ந்து அனுராகா பார்க்க,

“பட் பார்க்கிறது என்னாளுங்கதான்..” என்றான் வெகு கூலாக..

“வாட்??!!!!” என்று அனு மீண்டும் அதிர,

“ஹேய்... கூல் கூல்... அவங்க என்னைத்தான் வாட்ச் பண்றாங்க?? ஜஸ்ட் பார் எ சேஃப்டி பர்பஸ்...”என்று உண்மை போலவே தீபன் சொல்ல,


“நோ நோ.. அவங்க வாட்ச் பண்றது என்னைத்தான் வாட்ச் பண்றாங்க??” என்ற அனுராகா மீண்டும் பார்வையை ஓடவிட்டாள்.

‘சோ... இந்த டாப்பிக் விட மாட்டாளோ...’ என்றுதான் இருந்தது தீபன் சக்ரவர்த்திக்கு.

---------------------------

“இந்த ஸ்டட் போட்டுக்கோ அனு..” என்று தாரா ஒரு பெரிய தோடினை கொடுக்க,
“ம்ம்ஹும்... இந்த டிசைனர் சேரிக்கு இதான் நல்லாருக்கும்..” என்று அவள் வேறு அணிய, நீரஜா “இதெல்லாம் எப்போ வாங்கின நீ..” என,


“எப்போவோ...” என்றவள் மீண்டும் தன் அலங்காரத்தில் குறியாய் இருந்தாள்.

லோகேஸ்வரனுக்கு அப்போது வேறு சிந்தனை. தாரா அதனைக் கவனித்தவர் என்னவென்று கேட்க, “மினிஸ்டர் சக்ரவர்த்திக்கிட்ட நெக்ஸ்ட் மன்த் ஒரு மீட்டிங் பிக்ஸ் பண்ணிருந்தேன்.. அவர் பிஎ போன் பண்ணி இன்னிக்கே முடியுமா கேட்கிறார்..” என,

“அவங்களும் தானே இங்க ரிசப்ஷன் வருவாங்க??” என்றார் தாரா..

“எஸ்.. ஃபுல் பேமிலியும்.. அதான் யோசனை.. திடீர்னு இப்போ ஏன்னு..” என்று லோகேஸ்வரன் யோசிக்க,

“லோகேஷ்.. நீங்க பாருங்க.. அனுவை நான் பார்த்துக்கிறேன்...” என்று தாரா உறுதி சொல்லவும்தான் அவருக்கு சற்று நிம்மதியானது.

------------------------------

‘என்னாச்சு??!!’ என்று பார்வையாலே கேட்க, அவளும் அங்கே நின்ற புதியவனை கண் காட்ட,
தீபனோ “கம்மான் லெட்ஸ் டான்ஸ்..” என்று யோசிக்காது அவளின் கை பற்றி, நடனமாடும் இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டான்..

“நோ...” என்று அனுராகா மறுத்தாலும்,

“அவன் போற வரைக்கும்..” என்று தீபன் சொல்ல, அனு அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை..


இசைக்கு ஏற்ப, இருவரும் கை கோர்த்து ஆட, தீபனின் ஒரு கரம் அவளின் கரத்தினைப் பற்றியிருக்க, மற்றொரு கரம் அவளின் இடையினை சுற்றியிருந்தது. அனுராகா ஒரு கரத்தினை தீபனின் கரத்தோடு இணைத்திருக்க, மற்றொரு கரம் அவனின் தோள் மீதிருக்க, இசைக்கும் இசைக்கேற்ப இருவரும் தங்களை அசைத்துக்கொண்டு இருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.. நிச்சயமாய் அது நடனமல்ல.. மாறாக அவர்கள் இருவருக்குள்ளும் எதுவும் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது.

கண்ணிலே கண்ணில்லே மதுச்சாரல்..
வந்ததே முதல் காதல்...
 

Joher

Well-Known Member
Tks சரயு.........

இந்த லோகுக்கு தன் பொண்ணை அடக்க தெரியாமல் ஊரான் வீட்டு பிள்ளை பிரசாந்தை ஊர் ஊரா சுத்த வைக்கிறார்.........
நீ ஏண்டா போற......... வந்து தூக்கிட்டு போ.........

அதுக்குள்ளே இங்கே ஒருத்தன் மேல் காதல் வந்துடுச்சாமே.........
கண்ணிலே கண்ணில்லே மதுச்சாரல்.. வந்ததே முதல் காதல்...
இது யாருக்குனு தெரியலையே????????

பிரசாந்தை அலைய விட்டாயேமா டைட்டன் ராகா..........
அதுக்கு தான் உனக்கு breakup party சிக்கியிருக்குது..........

ராகா.......... நீ இடியாப்பத்துக்குள் சிக்கிவிட்டாய்..........
பிரஷாந்த் வேற பெங்களூரில்........
நல்லா மாட்டிக்கிட்டியே.........
உன்ன இடியாப்ப பாயாவா ஆக்காமல் விடமாட்டாங்க..........:p:p:p:p

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே...........
 
Last edited:

Saroja

Well-Known Member
என்ன இது தீபன் கூட சேர்ந்து
டான்ஸ் ஆடுறா
அந்த அளவுக்கு வந்தாச்சா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top