Naan Ini Nee - Precap 33

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“என்ன நொம்மா..?? உன்னோட ப்ரியாட்டில எப்பவுமே நான் இருந்ததில்ல..” என, இப்படியொரு வார்த்தைகளை பெற்றவளிடம் இருந்து கேட்கையில், ஒரு மகனுக்கு எப்படியிருக்கும்.

முன்னே இப்படி உஷா சொல்லியிருந்தால் “ம்மா நீயா எதுவும் திங் பண்ணிக்காத..” என்று சொல்லி கடந்திருப்பான்.

அதன் பின்னே அதனை மறந்தும் போயிருப்பான்.

ஆனால், இப்போதோ அனுவின் வார்த்தைகள் கொடுத்தத் தாக்கம், அம்மாவையும் வேறொரு கோணத்தில் பார்க்க வைத்தது. அவரின் வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கவேண்டும் என்று தள்ளியது.

“ம்மா... எப்பவுமே யூ ஆர் மை மாம்...” என்றவனின் குரலும் கரகரத்துப் போக,

“என்னவோ.. எடுத்து சொல்ற நிலை எல்லாம் நீயும் பெரியவனும் தாண்டிட்டீங்க.. சொல்றதும் இப்போ மரியாதையில்லை.. ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன்.. கல்யாணம்னு பண்ணி வச்சா, வர்ற பொண்ணோடவாது நல்லபடியா வாழு..

உனக்கு எங்க பொண்ணு செட்டாகும்னு இருந்தேன்டா.. நீ கொடுத்த ப்ரேக் அப் பார்டிக்கு யார்கிட்டயும் நிக்க மாட்டேன்னு நினைச்சேன்.. ஆனா உன்னையும் ஒருத்தி பெருசா நினைச்சு வந்திருக்கான்னா அது ரொம்ப பெருசு..” என,

----------------------------------


தீபன் சக்ரவர்த்தி மட்டுமே அவளுக்கு இப்போது பிரதானமாகிப் போனான்.

ஒருவன் மீது இத்தனை பிடிப்பு வருமா??!! என்று அவளுக்கே ஆச்சர்யமாகிப் போனது. இதற்கு அவனுமே அவளைக் காயப்படுத்தியவன் தான்.

ஆனால் அந்த காயங்கள் எல்லாம் இப்போது எங்கோ காணாது போயிருந்தது. இவனோடு மட்டும் தான் தன்னால் இயல்பாய் பொருந்திப் போக முடியும் என்பதனை நன்கு உணர்ந்துபோனாள் அனுராகா..

இது ஒன்று போதாதா??!!

இப்படியே இருவரும் மாலை வரை ஓட்ட, தீபனின் யோசனையோ நாளை தாரா இங்கே வந்தால், அனுராகா எப்படி நடந்துகொள்வாள் என்பதிலேயே இருந்தது.

அனுராகா அவனை கவனித்து கவனித்துப் பார்த்தவள் “தீப்ஸ்.. நீ யோசிக்கிறது எதுவா இருந்தாலும் பரவாயில்ல.. இப்போ கிளம்பலாம்..” என,

“நான் என்ன பெருசா யோசிச்சிட போறேன்..” என்றபடி அவனும் கிளம்ப,

“ஹா.. ஹா.. நீல்லாம் யோசிக்கிறதே பெருசு தீப்ஸ்...” என்று அவனைக் கிண்டலடித்தபடி அனுராகாவும் கிளம்ப,

----------------------------------------

தீபன் அனுராகாவோடு சல்லாப்பித்துக்கொண்டு இருக்க, மிதுன் அவனின் திட்டத்தினை சரியாய் நிறைவேற்றிவிட்டான். இரண்டொரு நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று நினைத்தவன், ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று அப்போதே முயன்று பார்க்க, அவனின் நல்ல நேரமோ என்னவோ சரியாய் நடந்தேறியது அனைத்தும்..

விஷயம் அப்படியே சக்ரவர்த்திக்கு வர “டேய்.. நான் என்ன சொன்னேன்.. நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க...” என்று சத்தம் போட,

“மன்னிச்சுக்குங்க அய்யா..” என்ற பதில் தான் வந்தது.

அடுத்தது என்ன என்று சக்ரவர்த்தி சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவதற்குள், “சக்ரவர்த்தியின் நாற்காலி ஆட்டம் காணுகிறதா??!!”

“தூண்களாய் இருந்த இரு பிள்ளைகளும் இப்போதேங்கே...??!!”

“குடும்ப அரசியலா??!! இல்லை குடும்பத்தில் அரசியலா...??!!”

என்கிற தலைப்புகளில் செய்தி சானல்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்திகளை பரவ விட, இதனை சக்ரவர்த்தி சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

 

Joher

Well-Known Member
:love::love::love:

குடும்ப அரசியலா குடும்பத்தில் அரசியலா??? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
MLA ஆக பிரகாசமான வாய்ப்பிருக்கு :p:p:p

அந்த breakup party :p:p:p
அம்மா நல்ல புரிஞ்சு வச்சிருக்காங்க........

இப்போ priority அம்மாவா ராகாவா???
உஷா நீங்க சரியா தான் சொல்றீங்க........

நீயெல்லாம் யோசிக்கிறதே பெருசு :eek::eek::eek:

மிதுன்........ If you are bad I am your dad (y)(y)(y)
 
Last edited:

Janavi

Well-Known Member
குடும்ப அரசியல் தான்.... Eagerly waiting for your ud sis....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top