Naan Ini Nee - Precap 2

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“என்ன அனு இதெல்லாம்...” என்று தாரா பதறிப்போய் அவளைப் பார்க்க, அத்தனை பதற்றமும் கோபமாய் மாறி சுற்றி இருந்த வேலை ஆட்களின் மீது திரும்பியது..

“என்ன பண்ணிட்டு இருந்தீங்க எல்லாம்?? இதான் பொறுப்பா இருக்கிற லட்சணமா??” என்று தாரா காத்திட, அனைவரும் வாய் மூடி நிற்கும் நிலை..

அனுவோ அம்மாவைக் கண்டதும் “மாம்...” என்றபடி வெறித்துப் பார்க்க,

“என்னாச்சு அனு?? ஏன் இப்படி பீகேவ் பண்ற??” என்ற தாராவின் கேள்விக்கு,

“லீவ் மீ அலோன்...” என்று அனு கத்த,

“அனு... ஸ்டாப் இட்..” என்றவர் அவளின் முகத்தினைப் பார்க்க, நெற்றியில் சிறு சிறு ரத்தத் துளிகள் சிவப்பாய் தெரிய,

‘நல்லவேளை பெரிதாய் எதுவுமில்லை...’ என்றே தோன்றியது தாராவிற்கு..

-----------------------------------

“வந்து டென் டேஸ் மேல ஆச்சு.. ஐ க்னோ உனக்கு இங்க வொர்க்ஸ் இருக்கு சோ யூ ஆர் ஹியர்... பட் வொய் மீ...” என,

“ஹா ஹா... கிளம்பிப் போ...” என்ற தீபனின் பார்வை தூரத்தில் தெரிந்த அந்த கடலைப் பார்க்க,

“இருக்கேன்... இருந்து தொலைக்கிறேன்...” என்றுவிட்டு போனான் புனீத் கடுப்பாய்..
பார்வையை திருப்பியிருந்த தீபனின் முகத்திலோ சின்னதாய் ஒரு குறுஞ்சரிப்பு..


அவன் அவனாய் இருப்பது இந்த நண்பர்கள் குழுவில் இருக்கையில் தான்.. ஆயிரம் வேலையில், அவனை சுற்றி இருந்தாலும், ஆயிரம் ஆபத்துக்கள் அவனை நெருங்கக் காத்திருந்தாலும், தீபனுக்கு எப்போதுமே தன் நண்பர்களோடு நேரம் கழிப்பது மிகவும் பிடித்த ஒன்று..

முதல் நாள் ஒருவனை துப்பாக்கி முனையில் நிறுத்தியவனா இவன்??

அப்படித்தான் தோன்றும், இப்படி ஒரு புன்னகை புரிந்து நிற்பவனைக் கண்டால்.

----------------------------------------------

“டாட்....” என்றவள் ஒருநொடி அமைதிக்குப் பிறகு “பிரஷாந்த் இன்னும் டூ டேஸ்ல சென்னை பிராஞ்க்கு வரணும்..” என,

“நோ சான்ஸ் பேபி...” என்றார் லோகேஸ்வரன்.

“டாட்...!!!!!!” என்று அனு குரலை உயரத்த,

“லுக் அனு.. உன்னை வேணாம் சொன்னவனை போய் திரும்ப வா.. என் பொண்ணு பாவம்னு சொல்ல சொல்றியா?? நோ வே... அப்படி நீ அவ்வளோ மோசமான நிலைல இல்லை.. ஓகே..” என்று அவரும் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

தாராவோ “ஏன் இப்படி??” என்று இருவரையும் பார்த்து வைத்தார்.

“அனு.. உனக்கு இப்போ தேவை மைன்ட் டைவர்சன்.. அதையே நினைச்சா சின்ன விஷயம் கூட பெருசா தெரியும்.. நெக்ஸ்ட் வீக் டேஸ்ல கோவால இண்டஸ்ட்ரியல் மினிஸ்டர் பொண்ணோட ரிசப்சன்.. நம்ம பேமிலியோட அங்க போகணும்... உனக்கு ஓகேன்னா இப்போவே டிக்கட்ஸ் போடுறேன் யூ கோ அண்ட் ரிலாக்ஸ்...” என்றவரை கண்கள் இடுங்க பார்த்தாள் அனு...

--------------------------------------------------


பீச் ரிசார்ட்கள்.... தனி தனியாய் இருந்தாலும், எல்லாமே அருகருகே, போட்ட குடிசைகள் போல், ஒவ்வொன்றுக்கும் தொடர்புடையது போலவே இருந்தது. அதிலும் இரவு நேர மின் விளக்குகளில் பல வர்ண ஜாலங்கள் காட்டி மின்னிக்கொண்டு இருக்க, ஒவ்வொரு ரிசார்ட்டிலும் தனி தனி நீச்சல் குளங்கள் நீல நிற விளக்கொளியில் என்னுள் வாயேன் என்று காண்போரை அழைத்துக்கொண்டு இருந்தது..


அனு, கரு நீல நிற முழங்கால் வரையிலான ஒரு நீச்சல் உடையில் நீந்திக்கொண்டு இருக்க, சிறிது நேரம் நீந்தியவள், அப்படியே மேலே வானை நோக்கி மிதப்பதுபோல் நீந்தாமல் மிதந்தபடி இருக்க, அவள் தங்கியிருந்த ரிசார்ட்டின் அருகிருந்த ரிசார்ட் பால்கனியில் நின்று பேரர் வைத்துவிட்டு போல ஒரு பச்சை நிற திரவியத்தை விழுங்கியபடி ‘யாரிவள்????’ என்ற கேள்வியோடு பார்த்துக்கொண்டு இருந்தான் தீபன் சக்ரவர்த்தி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top