Naan Ini Nee - Precap 11

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“யார் நீங்க... என்னை எதுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கீங்க??” என்று பிரஷாந்த் கேட்க,

“சார் தான் உங்களை வரச் சொன்னார்..” என்றார் வந்த இருவரும் சொல்ல,

“எந்த சார்?? யாரா இருந்தாலும் அவரை வந்து பார்க்கச் சொல்லுங்க..” என்று பிரஷாந்தும் சொல்ல,

“ஏய்... என்ன கூப்பிட்ட வரணும்..” என்று இவர்கள் மிரட்ட, “ஹலோ என்ன??!!” என்று பதிலுக்கு அவனும் குரல் உயர்த்தினான்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேச, அப்படியே பிரச்சனையும் ஆகிப்போனது.
பிரஷாந்த் அப்போதுதான் D- வில்லேஜில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தான்.. அவனோடு வந்தவர்களை ஏற்கனவே ஏர்போர்ட் சென்று விட்டு வந்திருந்தான்.. தானும் காலி செய்து கிளம்பிடலாம் என்று எண்ணுகையில், இருவர் வந்து மொட்டையாய்
‘சார் உங்களை கூப்பிடுறார்..’ என்று அழைக்க, அதுவும் கொஞ்சம் திமிராகவே அழைக்க, அவனுக்குக் கோபம் வந்து போனது..


-----------------------------------------------

“உன்னால உன்னோட இடத்துலேயே கூட ஒருத்தனை வர வைக்க முடியாதா??” என்ற அனுராகாவினை கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது தீபனுக்கு.. அவளுக்காக என்று அவன் இத்தனை இறங்கிப் போவதே பெரிது.. அவளோ மேலே மேலே என்று அவளின் திமிரைக் காட்டினாள்.

அதாவது, உன்னிடம் எல்லாம் இப்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோல் அவள் சொல்ல, அது தீபனின் ஆண் என்ற ஈகோவை சீண்டிப் பார்த்தது.

“ஏய்.. உன்னோட ஹெல்த் கண்டிசன் பார்த்து நான் அமைதியா போனா.. நீ ரொம்ப பண்ற..” என்றான் பல்லைக் கடித்து.

“நானா எதுவும் ஸ்டார்ட் பண்ணலை.. பண்ணது எல்லாம் நீ.. சோ முடிவுக்கு கொண்டு வர்றதும் நீயா இருந்தா பெட்டர்..” என்று தோளைக் குலுக்கினாள் அனுராகா.

அவளும் அவளின் பிடியில் இருந்து இறங்குவாதாகவே இல்லை. நீ இதை செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லியேவிட்டாள். அவளின் காய்ச்சல் வேறு நேரம் செல்ல செல்ல அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.. கண்களின் சிவப்பு ஏறிக்கொண்டு தான் இருந்தது. வலியை மிக மிக சிரமப்பட்டே பொறுத்துக்கொண்டு இருந்தாள்.

------------------------------------------------------


“தீப்ஸ் நீ இங்க வந்துதான் ஆகணும்டா..” என்று மிதுன் அழைக்க,

“டேய் என்னடா... நீ சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற..” என்று தீபன் காட்டுக் கத்தல் தான் கத்தினான்.

அவனின் பொறுமை எல்லாம் காற்றோடு போனது.. இழுத்து இழுத்து பிடித்து வைத்தது எல்லாம் மொத்தமாய் ஒன்றுமில்லாது போவதாய் உணர்ந்தான். அனுராகா அங்கே பிரஷாந்தோடு பேச அமர்ந்த இந்த சில வினாடிகளே மொத்தமாய் தீபன் வீழ்ந்து போனது போல் உணர்ந்தான்.. அதே நேரம் மிதுன் வேறு அழைக்க, அவனால் எதையும் கையாளும் நிலையில் என்ற நிலை..

“உனக்கு என்னதான்டா ஆச்சு.. நீ நீயா இல்லைங்கிறது மட்டும் நல்லா தெரியுது.. பட் இது உனக்கும் நல்லதில்ல தீபன்.. நமக்கும் நல்லதில்ல.. சொல்றதை கேளு..” என்று மிதுன் எச்சரிக்க,

“எல்லாம் எனக்குத் தெரியும்.. பொதுக்கூட்டம் வேலை சரியா நடக்குதா அதை மட்டும் பாரு..” என்றான் இவனும்..

மேலும் மேலும் குடும்பத்தினரின் மனதை நோகடிப்பது தீபன் நன்கு உணர்ந்தான். ஆனாலும் அதெல்லாம் அவனை மீறி நடந்துகொண்டு இருந்தது..

------------------------------------------

மண்ணாசை.. பொன்னாசை.. பெண்ணாசை.. மூன்றுமே ஆபத்தானது தான். முதல் இரண்டில் இருந்து கூட மீண்டுவிடலாம்.. ஆனால் ‘பெண்ணாசை..’ என்பது ஆசை கொண்டவனை அழிக்கும் ஆயுதம்..

ஆரம்பத்தில் சுவையாய் இருக்கும்.. ஆனால் அது கழுதை நெருக்கும் சுருக்குக் கயிறு என்பது போகப் போகத்தான் புரியும்.. உயிரும் போகாது.. பிடியும் விடாது.. சிக்கித் தவிக்க மட்டுமே முடியும்.. தீபனுக்கு இப்போது இதே நிலை தான்.

அனுராகா மயங்கிச் சரிகையில் “ஏய்....” என்றுதான் பதறிப் போய் பிடித்தான்..
உடல் சூடு அப்படிக் கொதித்தது.. இதற்குமேல் இங்கிருப்பது உசிதமல்ல என்று தோன்ற, கார் எடுக்கச் சொல்லிவிட்டான்.


பெங்களூருவின் புகழ்பெற்ற மருத்துவமனையில், தீபன் அனுராகவை அழைத்துக்கொண்டு செல்வதற்கு முன்னமே அனைத்தும் தயாராகி இருக்க, இவர்கள் போனதுமே மருத்துவம் தொடங்கிப் போனது.. என்னவோ சொல்ல முடியாத உணர்வு ஒன்று தீபனைப் போட்டு அழுத்த, அவனையும் மீறி உஷாவிற்கு அழைத்துவிட்டான்.
 

Joher

Well-Known Member
Tks சரயு........

பிரஷாந்த் பார்த்தால் தான் காச்சல் போகுமே?????
ஏக்கத்தில் வந்த காய்ச்சலோ???????:p:p:p

பிரஷாந்தோடு பேசுறாளே.........
வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டானா??????
இன்னும் இங்கேயே இருக்கிறா?????

யம்மா காப்பாத்துமா சொல்ல போறானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top