E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் அரசியலுக்கு வந்த போது நிறைய எதிர்ப்பு ....
நடிகை , நடிகையின் மகள் , எங்கள் வீடு திருமணத்தி நாட்டியம் அடியவள் இப்படி பல .....
எதையும் பொருட்ப்படுத்தாமல் வென்று சாதனை படைத்தார் .... இன்று அவர் பெயர் சொன்னால்
நினைவுக்கு வருவது அவருடைய சாதனைகள் தான் ..... அவரின் பிறப்பு வளர்ப்பு அல்ல......


நான் அவர் அளவு வர்ஷினியை உயர்த்தவில்லை இங்கு ....அனால் அடிப்படை சாராம்சம் ஒன்று தான்....
ராஜாராம் illegal சைல்ட் ,...... விஸ்வேஸ்வரன் மனைவி என்பதை விட .... அவள் தான் சுய உழைப்பின்
மூலம் அறியப்பட வேண்டும் என்பது அவள் விருப்பம் ......இந்த போராட்டம் அதற்கு தான்....


கொஞ்சம் ஓவர் ஆனா மாதிரி தெரியுது....பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க .....
ஜெ மாம் பத்தினது தேவையில்லாட்டாலும் வர்ஷு பத்தி சொன்னது ஓவர் எல்லாம் இல்லை
 

sindu

Well-Known Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..


அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..


இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..


தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..


இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..


மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..


வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..


ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
congrats Fathima for getting your poem published. All the best for your future works
 

Joher

Well-Known Member
கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும் - போதும்
கண்ணே தென்றல் வேண்டாம்
உந்தன் தேகம் மட்டும் போதும்
மலர் சிந்தும் தேன் வேண்டாம்
உந்தன் இதழ் தரும் சுவை போதும்
முக்கனி வேண்டாம்
இக்கன்னி ஒன்றே போதும் போதும் போதும்

உறவே பழசு வேண்டாம் காதல் சொல் போதும்
உயிரின் ஓசை வேண்டாம் காதல் ஒன்று போதும்
அதிகாலை நிலவே வேண்டாம்
அடடா இவள் முகம் போதும்
அசைந்தாடும் கொடியே வேண்டாம்
வளைந்தாடும் இவள் இடை போதும்
வான் மேக கூட்டம் வேண்டாம்
காதல் கூந்தல் தோட்டம் போதும்
வண்ண மலர்கள் பஞ்சனை வேண்டாம்
இவள் மடிசுகம் ஒன்றே போதும்
இலக்கியமே இனி வேண்டாம்
இவள் இளமை சிந்தும் கவி போதும்
சுவாசமே வேண்டாம்
இவள் வாசம் மட்டும் போதும் போதும் போதும்

அந்த ஏழு அதிசயம் இனி வேண்டாம்
அந்த அழகின் அதிசயம் நீ போதும் - கண்ணே
குகூ குயிலின் குரல் இசை இனி வேண்டாம்
கொஞ்சும் காதல் மழலை நீ போதும் - கண்ணே கண்ணே
அந்த வானவில்லும் வேண்டாம்
உந்தன் நினைவின் வண்ணம் போதும்
பல கோடி புன் நகை வேண்டாம்
உன் புன்னகை ஒன்றே போதும்
அடி அகிலமே வேண்டாம் அருகில் நீ இருந்தாலே.. போதும் போதும் போதும்

Movie Shree by Suriya
 

murugesanlaxmi

Well-Known Member
இதை இங்கு பதிவில் சிறு குழப்பம், தேவையில்லை எனில் சொல்லுங்கள் நண்பர்களே டெலிட் செய்துவிடுகிறேன்.{மரண கவி{அல்லது},இறப்பு கவிதை வகையை சேர்த்த அறிய கவிதை

நான்
இறந்த பின்

கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!
அம்மா அப்பா

என்னை
கடைசியாக
மடியில்
வைத்துக்கொள்ள
நினைக்கலாம்..!!!
அக்கா தங்கை

என் கை
பிடித்து அழ
நினைக்கலாம்..!!
துனைவியாரோ

கடைசி
நிமிடத்திலாவது
அருகில் இருக்க
நினைக்கலாம்..!!
பெற்ற குழந்தை

என்னை
தட்டி எழப்ப
நினைக்கலாம்..!!
தொலைந்த

தோழியொருத்தி
கடைசியாய் என் கரம்
கோர்க்க வரலாம்..!!
கூட பழகிய

நண்பர்கள்
கடைசியாய்
கட்டித்தழுவி கதறி
அழுதிட விரும்பலாம்..!!
அன்பைக்

காட்டத் தெரியாத
நான் விரும்பியோர்
கடைசியாய்
என் தலைகோத
ஆசைப்படலாம்..!!
உறவற்ற

பெயரற்ற
செய் நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம்
தொட விரும்பலாம்..!!
உயிரற்று

போனால்தானென்ன..?
கடைசியாய் எனக்கும்
தேவையாய் சில
வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!
எல்லாம் அந்த ஒரே ஒரு

நாள் மட்டுமே..!!
கண்ணீருடன்....
 

murugesanlaxmi

Well-Known Member
படித்ததில் பிடித்தது #

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு
நாய்க் குட்டிகள் விற்பனைக்கு
என்று எழுதிய
பலகையை தனது கடைக்
கதவுக்கு மேல் மாட்டிக்
கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.
அந்தப் பலகை
குழந்தைகளை ஈர்க்கும்
என்று நினைத்தார் அவர்.
அதன்படியே ஒரு சிறுவன்,
கடையின் முன் வந்து நின்றான்.
"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன
விலைக்கு விற்கப் போகிறீர்கள்?"
என்று கேட்டான்.
"முப்பது டாலரிலிருந்து ஐம்பது டால
வரை" - கடைக்காரர் பதில் சொன்னார்.
அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட்
பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம்
சில்லறைகளை எடுத்தான்.
"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான்
நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?"
என்று கேட்டான்.
கடை உரிமையாளர் புன்னகைத்து,
உள் பக்கம் திரும்பி விசிலடித்தார்.
நாய்க் கூண்டிலிருந்து ஒரு பெண்
இறங்கி நடைபாதை வழியாக
ஓடி வந்தாள்.
அவளுக்குப் பின்னால், முடியாலான
பந்துகளைப் போல
ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள்
ஓடிவந்தன.
ஒரு குட்டி மட்டும் மிகவும்
பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த
அந்தக் குட்டியை உடனே கவனித்த
சிறுவன்,
"என்னாச்சு அதுக்கு?"
என்று கேட்டான்.
அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த
கால்நடை மருத்துவர், அதற்குப்
பிற்பகுதி சரியாக
வளர்ச்சி யடையவில்லை.
எனவே எப்போதும் நொண்டித்தான்
நடக்கும், முடமாகத் தான் இருக்கும்
என்று கூறிவிட்டதாக விளக்கினார்
கடைக்காரர்.
சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."
"அப்படின்னா நீ அதுக்குக்
காசு கொடுக்க வேணாம். நான்
அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்"
என்றார் கடைக்காரர்.
அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்
இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின்
கண்களை நேருக்கு நேராகப்
பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.
"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக்
கொடுக்க வேணாம். மற்ற நாய்க்
குட்டிகளைப் போலவே இதுவும்
விலை கொடுத்து வாங்கத்
தகுதியானது தான்.
நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்
தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட 2.37
டாலர்தான் இருக்கு. பாக்கித்
தொகையை மாசாமாசம் 50
சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."
ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால
உனக்கு எந்தப் பிரயோஜனமும்
இல்லை.
இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல
ஓடமுடியாது...
குதிக்க முடியாது... உன்னோட
விளையாட முடியாது."
உடனே, அந்தப் பையன்
குனிந்து தனது இடது கால்
பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த
அக்காலில் ஓர் உலோகப்
பட்டை மாட்டப்பட்டிருந்தது.
இப்போது அவன்
கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச்
கொன்னான்.
"என்னாலும் தான் ஓட முடியாது...
குதிக்க முடியாது. இந்தக்
குட்டி நாயின் கஷ்டத்தைப்
புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத்
தேவை!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top