வ்ருஷாகபி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அற்புதமான பதிவு..
கண்டிப்பாக படிக்க வேண்டியது..

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.

(குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது
அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.

முதலில் நினைவு கொள்ளுங்கள்.. வ்ருஷாகபி: ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம், “தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே
நீ ஒரு தவறு செய்து விட்டாய்
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய்.
அதனால்தான் அழிந்தாய்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம்தான்.
அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா?
நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா?

மகனே!
சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள்.
‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்

“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால் முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்...
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
இதும் வித்தியாசமா நல்லா இருக்கே.....

கரெக்ட் தான .... அவங்களாம் மனித தர்மம் தான் சிறந்ததுனு கைகேயிக்கும் ராவணனுக்கும் இரணியனுக்கும் கூட இருந்தா இவங்களுக்கு பாவக்கணக்கு தான சேரும்...அந்த நேரத்தில சமயோசிதமாயோசித்து கடவுள் பக்கம் சேந்ததால அவங்க புண்ணியம் பக்கம் போயிட்டாங்க...

சூப்பரா இருக்கு பானுமா
 

D.Deepa

Well-Known Member
கிருஷ்ணன் பற்றி எவ்வளவு கேட்டாலும் சலிக்காது அவர் லீலைகள் அனைத்தும் ஆனந்தம் இந்திர செளந்தரராஜன் கிருஷ்ணன் லீலை அருமையாக இருக்கும் உங்கள்பதிவும் அருமை
 

banumathi jayaraman

Well-Known Member
மேம் விசேஷ தர்மம், சாமானிய தர்மம் என்ன வித்தியாசம் புரியலையே...
சாமானிய தர்மம்ன்னா அதர்மமா நடந்த துரியோதனன்கிட்டே பட்ட நன்றிக்காக கர்ணன் அவன் கூடவே கடைசி வரை இருந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தது

விஷேச தர்மம்ன்னா கூடப் பிறந்த அண்ணனா இருந்தாலும் அக்கிரமம் செஞ்ச இராவணனின் தப்பை விபீஷணன் தட்டிக் கேட்டு ராமனின் பக்கம் நின்றது
 
Last edited:

I R Caroline

Well-Known Member
சாமானிய தர்மம்ன்னா அதர்மமா நடந்த துரியோதனன்கிட்டே பட்ட நன்றிக்காக கர்ணன் அவன் கூடவே கடைசி வரை இருந்து செஞ்சோற்றுக் கடன் தீர்த்தது

விஷேச தர்மம்ன்னா கூடப் பிறந்த அண்ணனா இருந்தாலும் அக்கிரமம் செஞ்ச இராவணனின் தப்பை விபீஷணன் தட்டிக் கேட்டு ராமனின் பக்கம் நின்றது

ரொம்ப நன்றி மேம் புரிந்து விட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top