வந்தேன் உனக்காக EP -1

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
அதிகாலை பொழுதின் ரம்யத்தை ரசித்துக் கொண்டே, மனதில் பல சிந்தனைகளுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் பிரபா.

பச்சை பசேலென்ற புல்வெளியும், அதிலிருந்த வண்ண மலர்களும், குயிலின் கானமும், அந்த காலைப் பொழுதை மேலும் அழகாக்க,

“குட் மார்னிங் அம்மு”, என்று ஒரு காபி கப்பை அவள் கையில் கொடுத்தவன், அவளது கணவன் கார்த்திக்.

கஷ்டப்பட்டு வரவைத்த புன்னகையுடன், அவள் அதை வாங்கி பருக,

“அப்படி என்ன சிந்தனை பிரபா”, எனறான்.

"எல்லாம் நமது சானாயா குட்டி பற்றிதான், அவள் எழுந்துவிட்டாளா, அவளை தனியே விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே, நான் சென்று பார்த்துவருகிறேன்" என கூறி வேகமாக எழுந்தவளை, அவளது கை பிடித்து அமர்த்தியவன்,

"அவள் உன் அத்தையிடம் தான் இருக்கிறாள், முதலில் காபியை குடி பிரபா", என்றான்.

"சரி மாமா", என அவள் கூற,

அவள் முகம் வாட்டமாக இருப்பதை உணர்ந்து, தனது கையா, அவளது கையை அழுத்தமாக பிடித்து,

"என்ன அம்மு", என்றான் பரிவாக.

எதுவும் கூறாமல், அவன் மீது சாய்ந்து கண்களை மூடினாள் பிரபா.

"கொஞ்ச காலம் தான் அம்மு, எல்லாம் சரியாகிவிடும், வீண் கவலை கொள்வதாள் எந்த பயனும் இல்லை, மேலும்... நீ என்னுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான், நாம் இங்கு வந்துள்ளோம், அதை மறவாதே",என்று அவன் சீரியசாக கூறவும்,

"சரி சரி,... கொஞ்ச காலம் இல்லை மாமா, நாளை மதியமே என் கவலை தீர்ந்துவிடும், இல்லை இன்னமும் அதிகமாகிவிடும்,எது எப்படி என்று அறிந்தவன் அந்த இறைவனே", என்றாள் பிரபா, கவலையுடனே.

"புரியும்படி கூறினால் நன்றாய் இருக்கும்",...

"கூறுகிறேன் கேளுங்கள், நாளை காலை பத்து மணிக்கு, சனாயா பள்ளியின் தலைமைச் செயலாளர் வரப்போகிறார், அவர் ஒவ்வொரு பெற்றோரையும் தனியே சந்தித்து பேச வேண்டுமென கூறியுள்ளார்"....

"அது எப்படி சாத்தியமாகும் பிரபா, ஆயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், எப்படி இயலும்" என கேள்வியாய் பார்த்தான் கார்த்திக்.

"ல்.கே.ஜி குழந்தைகளின், பெற்றோரை மட்டும்" என்றவளின் கண்கள் கலங்கின.

“அதற்குத்தானே காத்திருந்தாய் பிரபா, நாளையே உன் கவலை கண்டிப்பாக முடிவிற்கு வரும், இனி நம் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே”, என கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திக்.

“ஒன்றும் சொல்வதற்கில்லை கார்த்திக், நம் சானாயாவை இந்த பள்ளியில் சேர்த்துவிட்டு, அவர்களை சந்திக்க, ஒரு மாதம் காத்திருந்தோம், ஆனால் அது நாளை என்று தெரிந்தவுடன், இனம்புரியாத கலக்கமும், கவளையும் தோன்றுகிறதே, இப்போது எப்படி இருப்பார்களோ” என்றாள்.

கார்த்திக், எதுவும் கூறாமல், அவள் கையை பிடித்துக் கொண்டு, ஊஞ்சலில் இருந்து எழுந்து, பூந்தோட்டத்தில் நடக்கத் துவங்கினான்.

“எதுவானாலும்... நான் உன்னுடன் தான் பிரபா”, என்று கூறிவிட்டு சென்றான்.

மறுநாள் காலை மலரவே , சற்று கலக்கமும் எதிர்பார்ப்புமாக தனது குட்டி ஏஞ்சல் சனாயாவை, பள்ளிக்கு தயார் செய்தாள் பிரபா.

சற்றே இறுக்கமான முகத்துடன் கார்த்திக் முன்பு சென்று, “நீங்களும் அவரை காண வருகிறீர்களா”, என அவள் வினவ.

“உன் விருப்பம், என்ன செய்ய வேண்டும்”, என்றான் கார்த்திக்.

“வாருங்கள்”, என்று ஒற்றை வார்த்தையில் முடித்து,

கவலையுடன் பிரபா அவனை பார்க்க, இவனும் ஆறுதலாய் அவளை பார்க்க, இப்படியே பார்த்துக் கொண்டு வெகுநேரம் நின்றிருந்தனர்.

"அம்மா, எனக்கு நேரமாகிறது, வாங்க போலாம்", என்று சிணுங்கினாள் குட்டிப் பெண் சனாயா.

"ஓஓஓ…. சாரிடா செல்லம்", என்று, பிரபா தன் மகளை தூக்கிச் செல்ல,

அவர்களை பின்தொடர்ந்த கார்த்திக், கார் கதவை திறந்து அவர்களை அமர்த்திவிட்டு, டிரைவர் சீட்டுக்கு சென்று அமர்ந்தான்.

"லவ் யூ, கார்த்திக்…., என்னால் உங்களுக்கும் சங்கடம்" என்று அவள் கூற,

உதட்டில் சிறு புன்னகையுடன், "நீ வேறு, நான் வேறு இல்லை பிரபா, எதையும் சேர்ந்தே சமாளிப்போம்" என்றவன், பள்ளியின் முன் வந்துவிட்டான்.

வேர்க்க விறுவிறுக்க கலக்கத்துடன் பள்ளிக்குள் நுழைந்தாள் பிரபா.

"நானே உற்சாகமாக பள்ளிக்கு செல்கிறேன், நீ ஏம்மா இப்படி பயப்படுகிறாய்" என சனாயா குறும்பாய் வினவிய அழகை, பதில் கூறாமல் பார்த்திருந்தாள் பிரபா.

"உனக்கு ஸ்கூல்னா பயமா, இல்லை டீச்சர்னா பயமா" என, கேள்வியை தொடர்ந்தாள் அந்த குட்டிப்பெண்.

"எனக்கு யாரிடமும் பயமில்லை கண்னே, சனாயாவிடம் மட்டும் தான், ரொம்ப பயம்" என்றாள் பிரபா கலக்கமாக.

"போதும் பாப்பு, உனக்கு கிளாஸ்கு நேரமானது, சீக்கிரம் செல்" என்று சனாயாவை தூக்கிச்சென்றான் கார்த்திக்.

"ஒரே ஒரு கேள்வி அப்பா", என்று அவள் கூற கூற, அவளை டீச்சரிடம் ஒப்படைத்துவிட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டு,

"மதியம் சந்திப்போம் பாப்பா", என்று பிரபாவிடம் விரைந்தான் கார்த்திக்.

இருவரும் தலைமை செயலாளர் அரை அருகில் சென்றனர், மற்ற பெற்றோர்கள் செல்லும் வரை பொறுத்திருந்துவிட்டு, கடைசியாக பிரபா மட்டும் அவர் அறைக்கு செல்வதாக முடிவு செய்தனர்.

நேரம் நெருங்க நெருங்க... பயம் அதிகரித்தது... பிரபாவின் முகம் வாடியும், கார்த்திக்கின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தும், காணப்பட்டது.

"நீங்கள் மட்டும்தான் உள்ளீர்கள், உள்ளே வாருங்கள், அவருக்குப் பல வேலைகள் உள்ளது" என்ற ஊழியரின் குரலை கேட்டு, இருவரும் திடுக்கிட்டனர்.

"தைரியமா போய் வா பிரபா, எல்லாம் நல்லபடியாக முடியும்", என்று கார்த்திக் அவளை வழி அனுப்பினான்.

சரி என்பது போல் தலையசைத்து, அவனிடமிருந்து விடைபெற்று, அறையை நோக்கி நடந்தாள் பிரபா.

அவளது இதய துடிப்பு அதிகரிக்க, 'நாம் வந்திருக்கவே கூடாது, இவரை சந்திக்க ஊரை மாற்றி வந்தோம்…. , எதற்கு வந்தோம்..., அவரை நேரில் சந்திக்க தைரியம் கூட இல்லாமல், எதற்கு வந்தோம்…' என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.

'திரும்பி சென்று விடு, சென்று காரத்திக்கை ஆறுதலாய் அனைத்துக்கொள்', என்று மனம் கெஞ்சியது.

'இப்போது நீ சந்திக்கவில்லை என்றால், எப்போதும் சந்திக்க இயலாது, தைரியமாக செல்' என்று மூளை, கட்டளையிட்டது.

இதற்கு நடுவில், அந்த ஊழியர் வேறு, "சீக்கிரம் வாருங்கள் மேடம்", என்று கெஞ்சும் பாவனையில் கூறினாள்.

மனதிற்கும், அறிவுக்கும் நடக்கும் போரில் அகப்பட்டு சிக்கிக் கொண்ட பிரபா, அவளை அறியாமலேயே அறைக்குள் பிரவேசித்தாள்.

அந்த அறை மிகவும் பெரியதாகவும், கலைநயம் கொண்டதாகவும் காணப்பட்டது, பள்ளியில் உள்ள ஒரு அரைக்கு, இவ்வளவு ஒப்பனை தேவையா!!... என நினைக்கும்படி கண்ணைக் கவர்ந்தது.

அதனை கவனித்த பிரபா, 'இவர் இன்னமும் மாறவில்லை' என்று உள்ளூர நினைத்துக் கொண்டே, அவர் இருந்த திசையை நோக்கினாள்.

அங்கே, ஆளுமை பொருந்திய அழகிய தேவதை போல், அமர்ந்திருந்தார் தலைமைச் செயலாளர். அவருடைய தெய்வீக அழகும், சாந்தமான முகமும், நேரான பார்வையும், மெல்லிய புன்னகையும், அன்னவரையும் ஈர்க்கும்வண்ணம் இருந்தது.

பிரபா, கண்ணில் நீர் ததும்ப, அவளருகில் சென்று, "எப்படி இருக்கிறாய் சனாயா" என வினவினாள்.

சனாயா ( இனி இக்கதையில் வரும் சனாயா, தலைமைச் செயலாளர் ) சற்று சிரமப்பட்டு வரவழைத்த வார்த்தைகளை சிதறினால், "நீ எப்படி இங்கே" என வினவினாள்.

"என் மகள் இங்கே தான் படிக்கிறாள், அவளது பெயர் கூட சனாயா தான்", என பிரபா கூற,

"பரவில்லையே!!!... நீயும், உன் கணவனும், என்னை மறக்கவில்லை போலும்", என்று, கண்ணில் மின்னும் நீர் துளிகளை, வெளியே வர விடாமல் தடுத்துக் கொண்டே, வினவினாள் சனாயா.

"உன்னுடன் பேச வேண்டும் சனா, நிறைய பேச வேண்டும், மனதில் உள்ளதை எல்லாம், சொல்லிவிட வேண்டும்", என்று திக்கித் திணறி பிரபா கூறவும்,

"உன்னை மாலை கடற்கரையில் சந்திக்கிறேன், எனக்கு முக்கியமான வேலைகள் பல உள்ளது", என்று கூறி வெளியேறினாள் சனாயா.

"நான் அவளுக்கு முக்கியமில்லை, என்று மறைமுகமா கூறுகிறாளோ!!!", என்று எண்ணினாள் பிரபா,

பிறகு, "இராது… அப்படியே இருந்தாலும், சனா என்னிடம் பேசியதும், என்னை மாலை கடற்கரையில் சந்திக்கிறேன், என்று கூறியதுமே, மிகப்பெரிய வெற்றிதான்", என்று சமாதானம் அடைந்தாள் பிரபா.

வெளியே கார்த்திகை பார்த்த சனாயா, சற்று தயங்கி நின்றாள்.

அவளை எதிர்பாராத கார்த்திக், அவளினும் அதிகமாய் தயங்கி, ஓர் புன்னகையை மட்டும் வீச,

சில நொடிகள் கடந்தன, "வாருங்கள் கார்த்திக், செல்லலாம்" என்று கூறிக் கொண்டே, வந்த பிரபா, சனாயாவை பார்த்ததும் அமைதியாய் நின்றாள்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, "எப்படி இருக்கிறாய் சனா??" என்று, கார்த்திக் வினவினான்.

"நலம், மாலை இருவரையும் சந்திக்கிறேன்" எனக்கூறி, அங்கிருந்து விரைந்து நடந்தாள் சனாயா.

அவள் சென்றபின், தன் மனைவியை நோக்கியவன், "இப்போது மகிழ்ச்சிதானே அம்மு, இன்று மாலையே அனைத்தும் செரியாகி விடும், நம்பிக்கைகொள்" என புன்முறுவலிட்டான்.
 

Vinotha Thirumoorthy

Well-Known Member
அருமையான பதிவு dear குழந்தையின் பேச்சு மட்டும் மழலை மொழி யாக தர முடியுமா dear... கதையில ondra முடியவில்லை...

கண்டிப்பாக மேடம்.....மிக்க நன்றி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வந்தேன்
உனக்காக"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Dr. வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr. வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top