வண்ணங்களின் வசந்தம் -3

#1
IMG-20200815-WA0022.jpgவண்ணம் 3 :

தனது அறைக்கு வந்தவள் சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக ஆயத்தமாகி கீழே வரும் வரைகூட அவள் அப்பத்தா முதலில் அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து இருந்தவர் பேத்தி வெளியே செல்ல தயாராகி வருவதை பார்த்து தன் புலன்விசாரணையை ஆரம்பித்தார்..

“என்ன இப்பதான் வந்தே அதுக்குள்ள நகர்வலம் கிளம்பிட்டியா” என்று கேட்க அவரை முறைத்துப் பார்த்தவள், “சும்மா நான் எங்கு போகிறேன் எங்கே வருகிறேன் என்று கேள்வி கேட்டுட்டு இருந்த கல்லை தூக்கி தலையில போட்டுருவேன் பார்த்துக்க” என்று மிரட்ட அவரோ “ஏன்டி போட மாட்ட ஏன் போட மாட்ட. எல்லாருக்கும் மருமக தான் பிரச்சனையா இருக்கும் ஆனா எனக்கு வந்த மருமக தங்கம். ஆனா அவ பெத்தது எனக்கு மாமியாரா பொறந்து என்னை ஆட்டி படைக்கிது” என்று புகைய பூஜாவோ கூலாக “ஆமா நீ உன் மாமியாரை என்னவெல்லாம் கொடுமைப்படுத்தினியோ அதெல்லாம் நீ திரும்ப அனுபவிக்கனும்ல . எங்க அம்மாதான் சாது உன்ன சும்மா விட்டு வச்சு இருக்காங்க ஆனால் நான் அப்படி இல்லைபார்த்து இருந்துக்கோ” என்று கூறியவள் வீட்டை விட்டு வெளியே செல்ல, அவரோ “போ போ உன் அப்பன் வரட்டும் நான் பார்த்துக்கிறேன்” என்று செல்லும் பேத்தியின் முதுகை பார்த்து கத்தியவர் மகனுக்காக காத்திருக்க துவங்கினார். பாட்டியின் கத்தலை கெட்ட பூஜாவும் " உன்னால முடிஞ்சதை பாத்துக்க கிழவி " என்று கூறிவிட்டு சூர்யா வீடு நோக்கி சென்று விட்டாள்.

அடுத்து அபி, ப்ரீத்தி இருவரும் தங்கள் வீட்டுக்கு செல்ல அவர்களை வரவேற்றது என்னவோ வெறுமையான வீடே. இருவரின் பெற்றோரும் அரசாங்க வேலையில் இருப்பதால் இவர்கள் வரும் நேரம் வீடு வெறுமையாகத்தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு பெருமூச்சை வெளியிட்டவர்கள் பின் தங்களை சரி செய்து கொண்டு சூர்யா வீட்டிற்கு செல்ல தயாராகி கிளம்பிவிட்டனர்.
பூஜா சூர்யா வீட்டிற்கு வர அங்கு அவளுக்காக காத்திருந்தனர் மற்ற மூவரும்.”ஏண்டி இந்தா ஒரு நாலு வீடு தள்ளி இருக்க உனக்கு வர்ற இவ்ளோ நேரமா அடுத்த தெருவில் இருந்து நாங்களே வந்துட்டோம்” என்று ப்ரீத்தி கத்த ஆரம்பிக்க பூஜாவோ “நீ ஏண்டி சொல்ல மாட்ட எங்க வீட்ல இருக்க கிழவிய சமாளிச்சுட்டு நான் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிட்டது” என்று சொன்னாள்.. அவளது பேச்சை கேட்ட ப்ரீத்தியோ “அப்படி ஒரு பாட்டி வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல” என்றாள் ஏக்கமாக. ப்ரீத்தியின் பெற்றோர் காதல் மனம் புரிந்ததால் அவளுக்கு சொந்தம் என்று இல்லாமல் போய் விட்டனர். அதனாலேயே பாட்டி ஏக்கத்தில் ப்ரீத்தி சொல்ல அவளை கடுப்பாக பார்த்த பூஜா “வேணும்னா நான் எங்க வீட்டு கிழவியை தத்து கொடுக்கறேன் வாங்கிக்கோ” என்றாள்.அவளின் பேச்சை கேட்டு அலறிய ப்ரீத்தியோ “வேண்டாம் டி வேண்டாம் உங்க பாட்டி மட்டும் வேண்டாம்” என்றாள் வேகமாக.

இருவரின் பேச்சை கேட்ட மது " அடியே போதும் வாங்கடி உள்ள போகலாம் கேக் வாசம் வர ஆரம்பிச்சுருச்சு " என்று மற்றவர்களை இழுத்து கொண்டு சென்றாள்
நால்வரும் வீட்டிற்கு நுழையும்போதே.அவர்களை வரவேற்றார் சூர்யாவின் அம்மா “வந்துட்டீங்களா செல்ல குட்டிஸ் வாங்க வாங்க உங்களுக்காக என்ன பண்ணி இருக்கிறேன் பாருங்கள்" என்று கூறி உள்ளே சென்றார்.அவர் பின்னோடு நால்வரும் செல்ல ஆரம்பிக்க . ப்ரீத்தி வேகமாக மற்றவர்களை தள்ளிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அவளை பார்த்து சிரித்த சூர்யாவின் தாய் சுந்தரியும் அப்பொழுதுதான் அவனிலிருந்து சூடாக இறக்கிய கேக்கை காட்டி தன் புருவத்தை “எப்படி” என்பதுபோல் ஏற்றி இறக்க மற்ற அனைவரும் கேக்கை பார்த்து சப்பு கொட்டியவாறே " இதுக்காகத்தானே வந்திருக்கோம் " என்று கோரஸ் பாடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

சூர்யாவோ தன் தாயை கிண்டல் செய்யும் பொருட்டு “ இருந்தாலும் உங்க சமையல் சாப்பிட அடிமைகள் கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக இவ்வளவு சந்தோஷ படக்கூடாது மாம்” என்று கூற மற்ற நால்வரும் அவளை பார்த்து முறைத்து “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.ஆன்ட்டி சமையலுக்கு முன்னாடி யாராவது நிற்க முடியுமா” என்று கூறி அவருக்கு ஐஸ் வைத்து சூர்யாவை கிண்டல் அடித்து கொண்டு இருந்தனர் அனைவரும்.

அவர்கள் கிண்டலில் பங்கெடுக்காத ப்ரீத்தி கேக் பசி அதிகமாக பிளேட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “கேக் வேணும் கேக் வேணும்” என்று டேபிளில் தட்ட ஆரம்பித்தாள். அவளை பார்த்த மற்றவர்களும் ஆளுக்கு ஒரு பிளேட் எடுத்து கொண்டு அதே போல் டேபிளில் தட்டியபடி இருந்தனர். அதைக்கண்ட சூர்யாவின் தாய் “இருங்க இருங்க 2 மினிட்ஸ் கட் பண்ணி கொண்டு வந்துடுறேன் சூடு கொஞ்சம் ஆறட்டும்” என்று கூறி வேகமாக கேக்கை கட் செய்து அனைவருக்கும் பரிமாறினார்.

எல்லோரும் கேக்கை ரசித்து உண்ண மது மட்டும் “ஆன்ட்டி நான் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தரேன் அது மாதிரி பண்றீங்களா”.
மதுவின் சமையல் ஆர்வம் தெரிந்தவர் என்பதால் அவரும் “ஆம்” என்பது போல் தலையசைக்க, மற்ற நால்வரும் கேக்கை உள்ளே தள்ளியபடியே " பாருடா வந்துட்டாங்க செஃப் தாமு ஐடியா கொடுக்க "என்றனர்.
அவர்களை முறைத்துப் பார்த்தவள் " நீங்க சொன்னாலும் சொல்லல நாளும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் செஃப் தாமுக்கே சவால் விடற அளவு சமைப்பேன் அப்போ யாராவது வந்து என்கிட்ட அது செஞ்சு குடு இது செஞ்சு குடுனு சொல்லுங்க அப்போ இருக்கு உங்களுக்கு” என்றவள்.

சூர்யாவின் தாயிடம் “ஆன்ட்டி நீங்க இப்படி வெண்ணிலா கேக் செய்யறது விட்டுட்டு இந்த கலர் கலரா கேக் செய்கிறார்களே அது மாதிரி ஏன் பண்ண கூடாது எனக்கு புடிச்ச பட்டர்ஸ்காட்ச், நம்ம பூஜா க்கு புடிச்ச சாக்லேட் சூர்யாக்கு புடிச்ச வெண்ணிலா இப்படியே நீங்க ட்ரை பண்ணலாமே” என்று யோசனை கூறினாள்.

சூர்யாவின் தாய் “இது கூட நல்ல ஐடியாவா இருக்கு அடுத்த டைம் உங்க ஒவ்வொருக்கும் புடிச்ச ஃப்ளேவர்ல ஒரே கேக்காக செய்து தருகிறேன்”.

சூர்யாவோ வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டவள் “எனக்குன்னு நல்லா வந்து சேர்ந்து இருக்கீங்க பாரு " என்றவள் கேக் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அடுத்ததாக அனைவரும் சூர்யாவின்அறையில் கூடி “மிஷன் யமுனா” பற்றி தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்க ப்ரீத்தியோ மனதினுள் “சமோசாவை கொட்ட சொல்றாங்களே பழிவாங்க யாராவது சாப்பிடற பொருளை வேஸ்ட் பண்ணுவாங்களா இதை சொன்னா எல்லோரும் நம்மைதான் திட்டுவாங்க சரி அமைதியாக இருப்போம் ஆனால் ஒரு சமோசாவாது கீழே விழாத மாதிரி பத்திரமா பாத்துக்கணும்” முடிவெடுத்துவிட்டு அப்பாவியாக அமர்ந்திருந்தாள்.

ஒருவழியாக அனைவரும் திட்டம் போட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாடிவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

பூஜா வீட்டுக்குள் நுழைந்த நேரம் அவளது அப்பத்தா அவர் மகனிடமும், மருமகளிடமும் மாலை நடந்த நிகழ்வை அப்படியே ஒப்பித்து கொண்டு இருந்தார்.

பூஜாவின் தாய் மாமியாரின் பேச்சை கேட்டு மகளை முறைக்க அவளது தந்தையோ " விடுங்கம்மா சின்ன பொண்ணு பேசறதை போய் பெருசா எடுத்துக்கிட்டு.அவளை இவ்ளோ குறை சொல்ற நீங்கதான் அவளை பார்க்காம இருக்க முடியலன்னுதான் கிராமத்துல இருந்து இங்க வந்து இருக்கீங்க. அப்புறம் என்ன போங்க போய் ரெஸ்ட் எடுங்க " என்று சொல்லி அனுப்பிவிட்டார். பூஜாவோ நமுட்டு சிரிப்போடு அப்பத்தாவை பார்த்தவள் பெற்றோருக்கு தெரியாமல் அப்பத்தாவிற்கு பழிப்பு காட்டிவிட்டு தந்தையை கட்டி கொண்டாள். மற்றவர்களுக்கும் மீதி நாள் தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக சென்றது.
மறுநாள் காலை ஐவரும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் யமுனாவிற்காக காத்திருந்தனர்.

யமுனா தன் சைக்கிளை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வகுப்பை நோக்கி செல்ல அவள் சென்றதை உறுதிபடுத்தி கொண்ட ஐவரும் தங்கள் பிளானை நடைமுறைபடுத்த ஆரம்பித்தனர். அதன்படி அபி தன் தோழிகளை பார்த்து " நான் போய் ஊக்கு வைத்து குற்றி அவள் சைக்கிள் டயரை பஞ்சர் ஆக்குகிறேன். நாலு பேரும் கவர் பண்ணும் படி இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் யாரும் வருகிறார்களா என்று பாருங்கள் " என்று சொல்லி சென்றவள் தன் பணியை செவ்வனே செய்து முடித்திருந்தாள்.

நெக்ஸ்ட் ஆபரேஷன் பிரேக் டைமில் மது, சூர்யா இருவரும் செய்ய வேண்டும். அதாவது பிரேக் டைமில் எல்லோரும் வெளியே சென்றவுடன் மது யமுனாவின் டிபனை காலி செய்ய வேண்டும் அதே போல் சூர்யா அவளின் நோட்டை கிழிக்க வேண்டும். மற்ற மூவரும் கிளாஸ்ஸிற்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வெற்றிகரமாக மூன்று ஆப்ரேசனை முடித்த திருப்த்தியில் ஐவரும் இப்போது கேன்டீன் சென்றனர்.

கேண்டினில் அவர்கள் அடுத்த பிளானை எக்ஸிகியூட் செய்ய ஆரம்பித்தனர் .

அடுத்த பிளான் ப்ரீத்தி சமோசா வாங்கி வரும்போது எதிரில் வரும் யமுனா மீது சமோசா சட்னியை கொட்ட வேண்டும் அதனால் அபி, ப்ரீத்தி , பூஜா மூவரும் சமோசா வாங்க கிளம்பினர்.சூர்யாவும் , மதுவும் அவர்கள் இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

மூவரும் சமோசா வாங்கி வரும்போது எதிரில் யமுனா வந்தாள்.அவளை பார்த்த உடனே அபி, ப்ரீத்தியிடம் " கரெக்டா அவ தலையில் கொட்டணும் புரியுதா " என்று முணுமுணுப்பாக சொல்லிக்கொண்டு வர ப்ரீத்தியோ கடைசி நிமிடம் சமோசா மேல் கொண்ட ஆசையால் " முடியாது " என்று இருந்தாள்.

ப்ரீத்தி முடியாது என்ற உடன் மற்ற இருவரும் " ஏன் " என்று கேட்க " சமோசா வேஸ்ட் ஆகிடும்ல " என்றாள்.

ப்ரீத்தியின் பதிலில் கடுப்பான அபி " இவ வேலைக்கு ஆக மாட்டா நாமே ஏதாவது செய்தால்தான் உண்டு " என்ற முடிவிற்கு வந்தவள் பூஜாவை பார்த்து கண் அசைத்தாள்.

அபியிம் கண் அசைவை புரிந்து கொண்ட பூஜாவும் யமுனா தங்கள் அருகில் நெருங்கி வரும்போது ப்ரீத்தியின் காலை வாரி விட்டாள்.கையில் சமோசாவுடன் தடுமாறிய ப்ரீத்தி யமுனா மீது விழுந்தாள்.

ப்ரீத்தி திடிரென்று இப்படி விழுவாள் என்று எதிர் பார்க்காத யமுனா அப்படியே விழ அவள் கையில் வைத்திருந்த சமோசா சட்னி அவள் முகத்தில் தெறித்தது என்றாள் ப்ரீத்தி வைத்திருந்த சட்னி அவள் தலையில் கொட்டி இருந்தது நொடி நேரத்தில் இவையாவும் நடந்து இருக்க யமுனாவும் சரி அங்கிருந்த மற்றவர்களும் சரி நடப்பதை அறிந்து கொள்ளும் முன் அபியும், பூஜாவும் ப்ரீத்தியை இழுத்து செல்ல ஆரம்பித்தனர்.ப்ரீத்தியோ " ஐயோ என் சமோசா " என்று கத்த அதை மற்ற இருவரும் கண்டுகொள்ளாமல் திரும்ப அங்கு யமுனாவின் தோழிகள் ஓடி வருவதை பார்த்து வேகமாக ப்ரீத்தியை இழுத்து கொண்டு அங்கிருந்து ஓடி இருந்தனர் .

யமுனாவின் அருகில் வந்த தோழிகள் அவளை பார்த்து " என்னாச்சுடி " என்று கேட்க அவளோ " ஒன்னும் இல்லை விழுந்துட்டேன் " என்று சொல்லி முகத்தில் பட்ட சட்னியை கழுவ சென்றுவிட்டாள்.

கடைசியாக பூஜாவின் முறை. அனைவரும் கிரவுண்டில் விளையாட சென்றனர். அப்போது யாருக்கும் தெரியாமல் பூஜா யமுனாவின் மேல் இங்க் அடிக்க வேண்டும்.

யமுனா தனியாக வரும் நேரத்திற்கு ஐவரும் காத்திருந்தனர்.இவர்களின் பொறுமையை வெகுநேரம் சோதித்த பிறகே அவள் ரெஸ்ட் ரூம் செல்ல தனியாக சென்றாள்.

நால்வரும் பூஜாக்கு கட்டை விரலை உயர்த்தி ஆல் த பெஸ்ட் சொல்லிவிட்டு மறைவாக நின்று கொண்டனர்.

பூஜாவும் யமுனாவின் பின்புறத்தில் இங்க் அடித்துவிட்டு மகிழ்ச்சியில் துள்ளி கொண்டு திரும்ப அங்கே அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் யமுனாவின் அண்ணன்.பூஜாவின் சைட்.அவனை பார்த்து ஷாக் ஆகி நின்றவள் திரும்பி தன் தோழிகளை தேட அவர்களோ முதலிலேயே ஓடி இருந்தனர்.

ஹையோ இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள் ஒரு யோசனையும் வராமல் போக அவனைப் பார்த்து கேவலமாக சிரித்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். இப்படியே இவர்கள் பள்ளி வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்க, இவர்களை கலவரப்படுத்த என்றே அந்த நாளும் வந்து சேர்ந்தது.

வண்ணங்கள் தொடரும்....
 
Last edited:
#8
சின்ன வயசு கலாட்டா
அருமையான பதிவு
இது எல்லாம் sampledhan இனிதான் மெயின் picture இருக்கு பாத்து மெர்ஸல் ஆக போறீங்க .நன்றி சிஸ் ♥️♥️♥️
 
#9
Shaba ipave kanna kattudhe...idhuga pandra lollu ku school eh vitu thorathama irundha seri...enna oru villa thanam...:ROFLMAO:
என்ன சிஸ் இப்போதான் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க அதுக்குள்ள கண்ண கட்டுதுனு சொல்லறீங்க. இனி தான் இருக்கு பஞ்ச பாண்டவிகள் ஆட்டம் .நன்றி சிஸ்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes