வண்ணங்களின் வசந்தம் -14

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_145408143760664.jpeg

அத்தியாயம் -14

அர்ஜுனும் பூஜாவும் அந்த மாலில் இருந்த சினிமா தியேட்டர்க்கு செல்ல மற்ற நால்வரும் ‘விண்டோ ஷாப்பிங்’ என்ற பெயரில் அந்த மால் முழுக்க சுற்றி வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கிருக்கும் புத்தக கடையை பார்த்த சூர்யா “ஹேய் அங்க பாருங்க புக் ஷாப் இருக்கு, ரொம்ப நாளா ஒரு புக் தேடிட்டு இருக்கேன் அங்க இருக்கானு போய் பாத்துட்டு வரலாம் வாங்கடி” என்று கூப்பிட, ப்ரீத்தியோ “எது படிக்கற பக்கமா” என்று அலற மதுவும் “இங்க பாருடி என்னை கெட்ட வார்த்தைல வேணாலும் ரெண்டு என்ன நாலு திட்டுக்கூட திட்டிக்க ஆனா புக் பக்கம் கூப்பிடாத நானே வீட்ல இருந்தா போர் அடிக்கும்தான் காலேஜ்க்கு வரேன் இவ என்னடானா சுத்த வந்த இடத்துல கூட படிக்க கூப்பிடறா” என்று சொல்லி வர முடியாது என்றுவிட்டாள். .

சூர்யாவின் பாவமான முகத்தை பார்த்த அபி, “சரி வா நாம போய் வாங்கிட்டு வரலாம்” என்று அழைக்க அவளை அதிர்ச்சியாக பார்த்த சூர்யா “என்ன……. இவங்க ரெண்டு பேரையும் தனியா விடறதா,ரெண்டும் பச்ச மண்ணுங்க டா…...இவங்கள தனியா அனுப்பறதும் நாமே போய் பிரச்சனைய விலை கொடுத்து வாங்குவதும் ஒன்னு, அதனால நான் மட்டும் போய் கூட புக் வாங்கிட்டு வரேன்.நீ இவங்களோட இரு தனியா விட்டறாத” என்று எச்சரித்துவிட்டு புக் ஷாப்பை நோக்கி சென்றாள்.

அபியும் சூர்யா சொல்வது உண்மைதான் என்பதை புரிந்து கொண்டவளாக “சரி ஐந்தாவது ஃப்ளோரில் இருக்கும் புட் கோர்ட்டில் நாங்க வெய்ட் பன்றோம் நீ புக் வாங்கிட்டு அங்க வந்துடு என்றவள் மதுவுடனும், ப்ரீத்தியுடனும் லிப்ட் இருக்கும் பக்கம் சென்றாள்.

சூர்யாவும் அவளுக்கு தலையாட்டிவிட்டு புக் ஷாப் சென்று வெகுநாட்களாக வாங்க நினைத்த புக்கை தேடி பிடித்து வாங்கியவள், அடுத்ததாக தோழிகள் காத்திருப்பதாக சொன்ன புட் கோர்ட்டிற்கு செல்ல லிப்ட் அருகில் வந்து காத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு பின்பு லிப்டு அங்கு வந்து திறந்தது. ஆனால் உள்ளே யாரும் இல்லை. “ஹய்யயோ லிப்ட்ல யாருமே இல்லையே தனியா இதுல போகணுமா” என்று யோசனையோடு விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை, அவள் சுதாரித்து என்ன ஏது என்று உணரும் முன்பே லிப்டின் உள்ளே தள்ளி,சிறை செய்வது போல் இரு பக்கமும் கை வைத்து நெருங்கி நின்றான் திருனேஷ்.

கனநேரத்தில் நடந்த இந்த அதிரடி செயலில் பயந்த சூர்யா “யார் சார் நீங்க எதுக்கு என்னை உள்ள இழுத்துட்டு வந்திங்க” என்று கேட்டு கொண்டே நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது, “இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே எங்க” என்று, பின் நினைவு வந்தவளாக “இவன் அன்னைக்கு காலேஜ்ல பார்த்தோமே அவன்தானேஆனா எதுக்கு இப்போ நம்மல உள்ள தள்ளுனான்” என்று மனதில் நினைக்க, அவளையே பார்த்து கொண்டு இருந்தவன், அவள் மனதை படித்தவனாக சிறு சிரிப்புடன் “என்ன நான் யாருனு கண்டுபிச்சிட்டியா” என்று கேட்டு, பின் தீவிரமான குரலில்.”நீ என்னை காலேஜ்ல பார்த்ததுதான் நியாபகம் வருதா, இல்ல அதுக்கு முன்னாடியே உனக்கு என்னை தெரியும், எனக்கும் உன்னை நல்லாவே தெரியும் என்று சொல்ல அவளோ குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

அவளின் குழப்பாமான பார்வையிலேயே மனதை அறிந்தவனாக “என்ன நான் யாருனு இன்னும் நியாபகம் வரலையா நல்லா யோசி” என்று சொன்னான்.

என்ன யோசித்தும் அவன் யார் என்று அவளுக்கு சுத்தமாக தெரியாமல் போக ‘இல்லை’ என்று தலையாட்டிவள்,”நீ முதல்ல தள்ளி நில்லு” என்றாள் கோபமாக.

அவனோ “முடியாது இதுக்கு மேல என்னால உன்னைவிட்டு தள்ளி இருக்க முடியாது.இவ்வளவு நாள் உனக்காகத்தான் தள்ளி இருந்தேன், இப்பவும் உனக்காகதான் தள்ளி இருக்க முடியாம நெருங்கி வந்தேன்” என்றவன் அவளை மேலும் நெருங்கி நின்றான்.

அவள் திகைத்து விழித்து கொண்டிருக்க அவளையே பார்த்தவன் “முதல் காதலையும் முதல் புரொபசலையும் யாரும் மறக்க மாட்டாங்க நீயும் மறந்துருக்க மாட்டேன்னு நினைக்கறேன். நீ மறக்க கூடாதுன்னுதான் அப்படி பண்ணுனேன். என்ன இப்பவாவது நான் யாருனு தெரியுதா.எஸ் ஸ்கூல் படிக்கும்போதே உனக்கு மஞ்ச கயிறு கட்டி பொண்டாட்டியாக்கிக்கவானு கேட்டது நான்தான்” என்று சொல்ல இவளோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள்.

மனதிலோ “ஸ்கூல்ல காதலை சொன்னவருக்கு என்ன ஆச்சோனு தெரியாம பயந்துட்டு இருந்தோம், தேங்க் காட்” என்றவள், இவ்வளவு நாள் அவளே அறியாமல் மனதை அழுத்திய பாரம் விலகியதை உணர்ந்தாள்.

சூர்யாவின் விரிந்த விழிகளை கண்டவன் சிறு சிரிப்புடன் தன் நெற்றியால் அவள் நெற்றியை முட்டி “பார்த்து பார்த்து மெதுவா கண்ண விரி, இல்லனா கரு விழி தனியா கலண்டு விழுந்தர போகுது” என்று கிண்டல் அடித்து “உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்ட அன்னைல இருந்து இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் நான் உன்னையேதான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா நீ நான் உன் பின்னாடி வர்றது கூட கவனிக்காம வேற ஒருத்தன பார்த்துட்டு இருக்க” என்றான் கோபத்துடன்.

அதற்குள் ஓரளவு தன்னை சமாளித்து கொண்ட சூர்யா “நீங்க நினைச்சுட்டு இருந்தா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் முதல்ல என்னைவிட்டு தள்ளி நில்லுங்க” என்று தடுமாற்றத்துடன் சொல்ல, அதை எல்லாம் காதில் வாங்காதவன் “முடியாது இனி நானும் தள்ளி போக மாட்டேன்.உன்னையும் என்கிட்டே இருந்து தள்ளி போக விட மாட்டேன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் காது படவே இன்னொரு பையன பத்தி பேசுவ”என்று முறைத்து கொண்டு கேட்க,அதில் கடுப்பானவள்“நான் யார வேணா சைட் அடிப்பேன், அழகா இருக்கான்னு சொல்லுவேன் அதை கேட்க நீ யார்” என்று கத்தினாள், உடனே சுவற்றில் இருந்த ஒருகையை எடுத்து அவளின் கழுத்தை பற்றியவன் “நீ என்னோட பொண்டாட்டி, லவ்வரும் இல்லை பிரண்டும் இல்லை, ஸ்கூல் படிக்கற வயசுலயே கல்யாணம் பண்ணிக்கதானே கேட்டேன், அந்த அறியாத வயசுலயும் என்னை காதலிக்கிறியான்னு நான் கேட்கலையே, கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் கேட்டேன். அப்போல இருந்தே நீ மட்டும்தான் என்னோட பொண்டாட்டின்னு நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.என் பொண்டாட்டி என்னை தவிர வேற ஒருத்தன பாக்கறதையும், அவன் அழகைப்பற்றி விளையாட்டா பேசுறதையும் என்னால ஏத்துக்க முடியாது.நான் உன்னை யாருக்கும், யாருக்காகவும் விட்டு குடுக்கமாட்டேன், உனக்காகவும் கூட என்று அழுத்தமாக சொல்ல, இவளோ கோபமாக“நீ சொன்னா நான் கேட்கணுமா முடியாது, நான் அப்படிதான் சைட் அடிப்பேன் முதல்ல தள்ளி போடா” என்று முரண்டு பிடித்து அவனை விலக்க முயல அவள் வார்த்தையில் கோபம் கொண்டவன் கழுத்தை பிடித்த கரங்களால் அப்படியே அவள் பிடரி முடியை பற்றி அசைய விடாமல் செய்து,மற்றொரு கரத்தால் இடையை சுற்றி வளைத்தவன் அவளின் இதழை அழுத்தமாக சிறை செய்தான். அவளோ இவனது திடீர் செய்கையில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

வெகுநேரம் வரை தொடர்ந்த முத்தத்தில் அவளே அறியாமல் அவனிடம் கிரங்கி தான் போனாள் அந்த பேதை, அவள் உடல் மொழியில் அதை புரிந்து கொண்டவன், தாங்கள் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து பிரிய மனமே இல்லாமல் பிரிந்த திருனேஷ் சிறு சிரிப்புடன் அவளிடமிருந்து விலகி, “இன்னைக்கு சொல்றேன் நல்லா நினைவு வச்சுக்கோ விளையாட்டுக்கு கூட இனிமே நீ வேற ஒருத்தன பத்தி பேசக்கூடாது. அன்னைக்கும் உன்னுடைய பிரண்ட டைவர்ட் பண்ணதான் பேசினனு எனக்குத் தெரியும்.ஆனா விளையாட்டுக்கு கூட நீ வேற ஒருத்தன பாக்கறது என்னால ஏத்துக்க முடில என்று சொல்ல அவளோ அப்போதும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக நின்றிருந்தாள்.

அவள் அதிர்ந்து நிற்பதை பார்த்தவன் குறும்பு சிரிப்புடன்,”இதுக்கே இப்படி நின்னா என்னடி செல்லம்பண்றது, இன்னும் எவளோ இருக்கே,சரி அதை எல்லாம் விடு இனி நீ வேற ஒருத்தன பார்த்தாலும், அவன்கிட்ட பேசுனாலும் உனக்கு இதே பனிஷ்மென்ட்தான் கிடைக்கும்.இந்த பனிஷ்மென்ட் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, உனக்கும் பிடிச்சிருந்தா சைட் அடி” என்று தீவிரமான குரலில் சொல்லவும் அவள் இறங்க வேண்டிய தளம் வரவும் சரியாக இருந்தது. அவளையும் லிப்டின் வெளியில் அழைத்து வந்தவன் “பாய் பொண்டாட்டி” என்று இன்னும் திகைப்பு மாறாமல் நின்றவளின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்று எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ,அவளுடைய போன் அடிக்கவும் தன்னிலை அடைந்தவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக “இவன் இப்போ என்ன பண்ணிட்டு போனான்,எ…..எ….. என்னை கிஸ் பண்ணிட்டுதானே போனான் ராஸ்கல், எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்பான்.நீ சொன்னா நான் கேட்கணுமா முடியாது போடா, நான் அசந்த நேரத்தில் என்ன வேலை பண்ணுன இனி என் முன்னாடி வா, இந்த சூர்யா யாருனு உனக்கு காட்டுறேன்” என்றவள் தோழிகள் இருக்கும் புட் கோர்ட்டிற்கு சென்றாள். அதுவரை அங்கிருந்த தூணின் பின் புறம் மறைந்து அவளையே பார்த்து கொண்டிருந்த திருனேஷ்,சிரிப்புடன் அவள் பின்னோடு சென்றான்.

தன் தோழிகளை புட் கோர்ட்டில் தேடி கண்டு பிடித்த சூர்யா அவர்கள் அருகில் சென்று அமைதியாக அமர்ந்தாள். வெளியில் பார்க்க அமைதியாக இருந்தாலும் மனதில் திருனேஷை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள். அவளின் முகம் ஒரு மாதிரி இருப்பதை பார்த்த தோழிகள் என்னவென்று விசாரிக்க இவளோ என்ன சொல்வது, நடந்ததை எப்படி சொல்வது என்று விழித்தவள் தலைவலி என்று சொல்லி சமாளிக்க.

அபியோ, சரி கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ பூஜா வந்தவுடனே கிளம்பிடலாம் என்றாள்.அவளும் அப்போதைக்கு அவளிடம் தலை ஆட்டி வைத்தாலும், ஓரளவு அந்த நிகழ்வில் இருந்து வெளி வர முயன்று கொண்டிருந்தாள்.

மூவரும் சள சளவென்று பேசி கொண்டு இருந்தனர்.அப்போது ப்ரீத்தி “ஹேய் பசிக்கற மாதிரி இருக்கு ஏதாவது சாப்பிடலாம்” என்று சொல்ல மதுவும் ப்ரீத்தி சொல்வதற்கு தலையாட்டினாள். அதே நேரம் படம் முடிந்து பூஜாவும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

அபி, “என்னடி இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட”,

பூஜா, பிராஜெக்ட் சம்மந்தமா ஒரு இடத்துக்கு போகணும்னு அந்த கோகுல் கரடி போன் பண்ணுனது இவரும் போகணும்னு சொன்னாரு அதான் வந்துட்டோம்.

பூஜாவை சந்தேகமாக பார்த்த மது “இல்லையே படிப்புதான் முக்கியம் நீ போ அப்படினு உடனே பொறுப்பா போக சொல்ற ஆள் நீ இல்லையே” என்க, அவளை பார்த்து அசடு வழிந்த பூஜா “டென் மினிட்ஸ் டா,போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இங்கயே வெயிட்பண்ணு, லாங் டிரைவ் போகலாம்னு சொன்னாரு அதான் நானும் ஓகே சொல்லிட்டேன்” என்றாள். உடனே ப்ரீத்தி “அதானே பார்த்தேன்” என்று கிண்டல் அடிக்க, சூர்யா மட்டும் அமைதியாக இருப்பதை பார்த்த பூஜா “இவ ஏன் இப்படி இருக்கா, இந்த நேரத்துக்கு எனக்கு ஒரு பாடமே எடுத்துருப்பாளே” என்று சொல்ல,
ப்ரீத்தியும் “ஆமா புக் வாங்க போயிட்டு வந்ததுல இருந்து இவ பேய் அடிச்ச மாதிரிதான் உட்காந்து இருக்கா” என்று சொல்ல, மதுவோ அதுதான் முக்கியம் என்பது போல் “மால்ல கூட பேய் இருக்குமா என்ன” என்று கேட்டாள்.

பின் அபிதான் “அவளுக்கு தலைவலி அதான் அப்படி இருக்கா, சாப்பிட்டு ரிலாக்ஸ் ஆனாலே அவளுக்கு தலைவலி கொஞ்சம் பரவால்லையா இருக்கும், யாருக்கு என்ன வேணும், ஆர்டர் பண்ணுங்க”சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிடலாம்” என்று சொல்ல எல்லோரும் ஒரு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்து சேர்ந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்து அதன்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

காத்திருந்த நேரத்தில் தன் பார்வையை சுழலவிட்ட ப்ரீத்தியின் கண்ணில் விழுந்தான் திருனேஷ்.அவனும் சூர்யாவைதான் பார்த்து கொண்டிருந்ததால் ப்ரீத்தி தன்னை கண்டு கொண்டாள் என்பதை அறிந்து சைகையாலேயே “திரும்பு இல்ல கொட்டிடுவேன்” என்று சொல்ல, இவளோ “ஹய்யோ சீனியர் வந்து கொட்டு வாங்கிட்டு போனு சொல்றாரு போலயே பேசாம அந்த பக்கம் பாக்காமலேயே இருந்துருக்கலாம், இப்பயும் ஒன்னும் கெட்டு போகல, பாக்காத மாதிரி திரும்பிக்கலாம்” என்று வேறு பக்கம் திரும்பியவள் ஓர கண்ணால் திருனேஷ் இருக்கும் பக்கம் பார்க்க, இவளின் சேட்டையை அறிந்தவன்,”இந்த பக்கம் பார்த்த எல்லோரும் பார்க்கற மாதிரி இந்த மால்லையே கொட்டுவேன்” என்று சைகை செய்ய, இதையும் தவறாக புரிந்து கொண்ட ப்ரீத்தி “ஹையோ வந்து கொட்டு வாங்கிட்டு போ இல்லைனா இங்க வந்து எல்லோரும் பார்க்க கொட்டுவேன்னு சொல்றாரே, ஏன்டி ப்ரீத்தி இது உனக்கு தேவையா பேசாம பயந்தவனு மதுக்கிட்ட ஒத்துட்டு இருந்திருக்கலாம், தைரியம் ராகிங் அது இதுனு சொல்லி இப்போ வினையை விலை கொடுத்து வாங்குனவன் மாதிரி ஆகிடுச்சு உன் நிலமை என்று தனக்குள் புலம்பியவள் “சரி யாரும் பார்க்கறதுக்கு முன்னாடி போய் கொட்டு வாங்கிட்டு வந்துரலாம்” என்று முடிவெடுத்தவள் தன் தோழிகளிடம் “ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன்” என்றவள் திருனேஷ் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி சென்றாள்.

ப்ரீத்தி தன்னிடம் வருவதை பார்த்தவன், “இந்த திருஷ்டிபொம்மை எதுக்கு இங்க வருது”,என்று யோசிக்கும்போதே வேகமாக அவன் அருகில் சென்ற ப்ரீத்தி “இங்க பாருங்க சீனியர் ஒரு நாளைக்கு ஒரு கொட்டுங்கறதுதான் பேச்சு, இன்னிய கோட்டாக்கு காலேஜ்ஜிலேயே கொட்டிட்டிங்கள்ல, அப்புறம் எதுக்கு இப்பவும் கொட்ட வர சொல்லறீங்க, இதுவே குட்டி தலை, வலி தாங்காது சீனியர் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க, இன்னைக்குத்தான் முதல் நாள்ங்கறதால போனா போகுதுனு ரெண்டாவது கொட்டுக்கு ஒத்துக்கறேன் ம்…. சீக்கிரம் கொட்டுங்க எசமான் கொட்டுங்க என்னோட பிரண்ட்ஸ் பார்க்கறதுக்குள்ள கொட்டுங்க” என்று சொல்ல, அவனோ “ஸ்கூல்ல இருந்து பார்த்தும், இந்த லூச பத்தி தெரிஞ்சும் சைகைல பேசுனேன் பாரு எனக்கு இது தேவைதான்” என்று தலையில் அடித்து கொண்டவன் திரும்ப அங்கு இவர்களைத்தான் கண்களால் எரித்து கொண்டு இருந்தாள் சூர்யா.

தன்னவளின் பார்வையிலேயே அவளின் கோபத்தை அறிந்த திரு “இன்னைக்கு நான் கொட்ட மாட்டேன் ஆனா உனக்கு கொட்டு கன்பார்ம்” என்றவன் நமுட்டு சிரிப்புடன் அங்கிருந்து சென்றுவிட, ப்ரீத்தியோ அவன் சொல்வது புரியாமல் திருதிருவென விழித்துவிட்டு பின் “ஹப்பாடா கொட்டு இல்லாம தப்பிச்சாச்சு” என்ற குதூகலத்துடன் தோழிகளிடம் சென்றாள்.

ப்ரீத்தியையே பார்த்து கொண்டிருந்த சூர்யா அவள் அருகில் வந்தவுடன் “யாருடி அவன்” என்று கேட்க, அதுவரை தங்களுக்குள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த மற்ற மூவரும் கேள்வியாக ப்ரீத்தியை பார்க்க அவளோ பேந்த பேந்த விழித்தவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, சூர்யா மீண்டும் அழுத்தி கேட்டாள். வழக்கம் போல் பயந்த ப்ரீத்தி, காலேஜ்ஜில் நடந்தது, இப்போது நடந்தது என அனைத்தையும் தோழிகளிடம் ஒப்பித்தாள்.

ப்ரீத்தி சொல்வதை கேட்ட சூர்யா மனதிற்குள் “அந்த கடங்காரன் இங்க வர நீதான் காரணமா, அவன்கிட்ட டீடெயில் சொல்றியா…. டீடெயில், இப்போ பாரு என்ன பண்றேன்னு” என்று மனதில் கருவியவள். வெளியே “ஏன்டி யார் யாரோ உன்னை கொட்டுறாங்க கூடவே இத்தனை வருஷம் இருக்கேன், எனக்கு அந்த கொட்டுற உரிமை கிடையாதா”என்று கேட்க மற்ற மூவரும் கூட ஒரே நேரத்தில் “அதானே” என்று கோரஸ் பாடினார்.

தோழிகளுக்கு என்ன பதில் சொல்வது என்று ப்ரீத்தி யோசித்து கொண்டு இருக்கும்போதே அவள் அருகில் வந்த மது “நான்தான் பர்ஸ்ட்” என்று சொல்லி முதல் கொட்டு கொட்ட அடுத்தடுத்து மற்றவர்களும் கொட்ட சூர்யாவோ நங்கென்று டபுள் கொட்டு கொட்டிவிட்டு, நக்கல் சிரிப்புடன் “சரி வாங்க சாப்பிடலாம்” என்று அமர்ந்து கொள்ள மற்றவர்களும் சிரிப்புடனேயே ப்ரீத்தியை பார்த்தனர்.அவளோ பிரியாணியை பார்த்த உடன் வலி மறந்தவளாக “கொட்டியாச்சா வாங்க சாப்பிடலாம் வாங்குனது எல்லாம் அப்படியே ஆறுது” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“இவ என்ன டிசைன்டி” என்ற கேள்வியுடன் மற்றவர்களும் சாப்பிட்ட ஆரம்பித்தனர்.அப்போது அபி “சீக்கிரம் சாப்பிட்டு வீட்டுக்கே கிளம்பலாம்” என்று சொல்ல, அலறிய மது “ஹேய் வேண்டாம்டி வீட்டுக்கு இப்போ போக வேண்டாம், காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்கு முன்னாடியே டிரைவர்க்கு போன் பண்ணி வர சொன்னா வீட்ல பெரிய விசாரணை கமிஷனே வச்சுடுவாங்கடி”என்க.

சற்று நேரம் யோசித்த அபி,”ஓகே அப்போ இப்படி பண்ணலாம் சூர்யா வேற தலை வலிக்குது சொல்றா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அர்ஜுன் வந்தவுடன் பூஜாவை விட்டுட்டு நாம திரும்பவும் காலேஜ்கே போகலாம்,அங்க நம்ம பேவரட்டான மரத்தடில கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு அப்புறம் எப்போவும் போல காலேஜ் முடிஞ்சதும் கிளம்பலாம்” என்று சொல்ல மற்றவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டனர்.

சூர்யா ஏனோ இந்த எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாமல் மனதில் திருனேஷ் மேல் பயங்கர கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள். இப்போது யாராவது மாட்ட மாட்டார்களா அவர்களை வெளுத்து வாங்க மாட்டோமா என்ற கடுப்பில் அமர்ந்திருக்க யார் மீது அவள் கோபம் பாய போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top