ராதையின் காதல் 9

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
நான் தான் எங்க வீட்லயே வயசுக்கு வந்தபிறகு வீட்டவிட்டு வெளியில போன முதல் பொண்ணு. என்னை காட்டிதான் எங்க சித்தப்பா பொண்ணுங்க எல்லாம் ஸ்கூல்.. காலேஜ் எல்லாம் போனாங்க. நான் பத்தாவது முடிச்சதும் எங்கப்பா என்கிட்ட வந்து ‘ஸ்கூல் போகதம்மா’ன்னு சொன்னாங்க. நான் முடியாது போவேன்னு அடம்பிடிச்சு போனேன். நான் வயசுக்கு வந்ததும் வந்து ‘ஸ்கூல் போகாதம்மா’ன்னாங்க. மறுபடியும் நான் முடியாதுன்னு சொன்னேன். திரும்பவும் காலேஜ்.. அப்புறம் வேலை.. எல்லாமே என்னோட விருப்பம் தான். நான் என்ன எடுத்து படிக்கனும். எங்க வேலைக்கு போகனும் எல்லாமே என்னோட முடிவுதான். இதெல்லாம் நடக்கும்போது எங்கப்பாவுக்கு விருப்பமே இருக்காது இருந்தாலும் எனக்காக ‘சரி போ’ன்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க. அந்த வார்த்தை எங்கப்பா வாய்ல இருந்து வந்ததும் என் முகத்துல ஒரு சிரிப்புவரும். அதைப் பார்த்த எங்கப்பா கண்ணுல ஒரு ஒளி வரும். அதை நான் எப்பவுமே கவனிப்பேன். எங்கப்பாவ யாராவது எதாவது சொல்லிட்டா எனக்கு கோபம் அப்படி வரும். ரோட்ல நின்னு சண்டை போட்டிருக்கேன். அப்போலாம் எங்கப்பா ‘அட விடும்மா’ன்னு போயிடுவாங்க. ஒரு நாள் நான் ஆபிஸ் முடிச்சு வரும்போது எங்கப்பா.. அம்மா.. சித்தப்பா முனு பேரும் சண்டைபோடுற சத்தம் கேட்டுச்சு. வேகமா வந்து பார்த்தேன். எங்கப்பாவ நடுல நிற்கவச்சு எங்கம்மாவும் சித்தப்பாவும் அப்பாகூட சண்டை போட்டாங்க. பெரியப்பா அதை உட்காந்து வேடிக்கை பார்த்து சிரிச்சிட்டிருந்தாங்க. ‘ஏய்.. ஏன் சத்தம் போடுறீங்க? சத்தம் அங்கவர கேக்குது’ ‘உன் வேலையைப்பாரு. நீ தலையிடாத’ ன்னு சொல்லிட்டாங்க. எங்க பெரியப்பாகிட்ட போய் என்னாச்சுன்னு கேட்டேன். அப்பதான் சொன்னாங்க. அவங்க தங்கச்சி பையனுக்கு பொண்ணு கேட்டாங்க. கொடுக்கனும்ன்னு எங்கப்பாவும் கொடுக்கக்கூடாதுன்னு அம்மாவும் சித்தப்பாவும் சண்டை போடுறாங்க. பஞ்சாயத்து கடைசியில என்கிட்ட வந்தது. நான் விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். எங்கப்பா ‘எனக்கு கொடுக்கனும்ன்னு ஆசையிருக்குமா’ன்னு சொன்னாங்க. நான் எதுவும் பேசல. எங்கம்மா சொன்னாங்க ‘இப்படி எதையாவது சொல்லி அவ மனச கலைச்சயின்னா நான் என் தம்பிய கூட்டிட்டு போய் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்’ நானும் அப்பாவும் அம்மாவ பார்த்தோம். ‘எங்கப்பன மீறி கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சீங்கன்னா உங்களவிட முட்டாள் யாரும் இருக்கமாட்டாங்க’ன்னு நான் சொன்னேன். அன்னைக்கு எங்கப்பா முகத்துல அந்த சிரிப்பை பார்த்தேன். நான் எங்கப்பாவ அந்தளவுக்கு சந்தோசமா அதுவரை பார்த்ததில்லை. அப்பவும் எங்கப்பா சொன்ன பையனை வேண்டாம்ன்னு தான் சொன்னேன். ஒரு நாள் அந்த பையன் தங்கச்சி எனக்கு கால்பண்ணி ‘உங்கம்மா பொண்ணு கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்ல’ன்னு கேட்டாங்க. அப்போதான் எனக்கு தெரியும் எங்கப்பா இப்படி சொல்லிருக்காங்கன்னு. ‘நீ வா நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’ன்னாங்க. எனக்கு அந்த வார்த்தையை கேட்டதும் கோபம் வந்துடுச்சு. ‘எனக்கு யார் மாப்பிள்ளைங்கிறத எங்கப்பாதான் முடிவு பண்ணனும் நீங்க இல்லை’ அப்படின்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன். அவங்க உங்க மக என்ன இப்படி பேசுறான்னு எங்கப்பாகிட்ட கேட்க ‘என் மக இப்படி சொல்லுச்சுலம்மா நீயும் அதே மாதிரி சொல்லி உங்கப்பா பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கோ. நான் அடுத்த முகூர்த்தத்துலயே என் மகள கட்டிக்குடுக்குறேன். என் பெண்டாட்டி நீ இருக்கறதனால தான் பொண்ணு கொடுக்கானே;னு சொன்னா’ன்னு சொல்லிட்டாங்க. அப்பா.. எங்கப்பா முகத்தை அன்னைக்கு பார்க்கனுமே அவ்ளோ சந்தோசம். எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை. நான் பிடிக்கலைன்னு சொல்லி வேண்டான்னு சொல்ல வைச்சுருக்கேன். ஆனாலும் அவ்ளோ சந்தோசம். டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ் இந்த வார்த்தை புதுசா இருக்கலாம். ஆனால் அந்த தந்தைக்கும் மகளுக்குமான உறவு என் மகள் எதை செய்தாலும் ஏற்றுக்கொள்வேன். மன்னிப்பேன்ற அந்த குணம் தந்தைக்கு மட்டுமே உரியது. எங்கப்பா இதை எங்கக்காவுக்காக செய்திருப்பாரான்னு கேட்டா கண்டிப்பா இல்லை. ஆனால் எனக்காக செய்தார். எங்கப்பாவா நான் அவருக்கு 100க்கு கண்டிப்பா 95 மார்க் கொடுப்பேன். கண்டிப்பா அந்த 5 அட்ஜஸ்ட் பண்ணுமான்னு சொல்றதுக்காகத்தான். நீங்க உங்கப்பாவுக்கு எவ்ளோ மார்க் ஏன் கொடுப்பீங்கன்னு சொல்லுங்க. என்னுடைய கேள்வியை கண்டிப்பா நாளைக்கு கேட்கிறேன். நன்றி.

Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top