ராதையின் காதல் 8

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
குழந்தைக்காக தன்னை கெடுத்தவனையே திருமணம் செஞ்சுக்கனும்ன்னு எந்தவொரு அவசியமும் கண்டிப்பா கிடையாது. In fact நான் அந்த கருத்துக்கு எதிரானவள். பாரதியார் சொன்னதுபோல ‘கற்பு நெறியென்று சொல்ல வந்தால் அது இரு கட்சியினருக்கும் பொதுவில் வைப்போம்’ அப்படிங்கிற உழெஉநிவ தான் என்னோடது. இன்னொன்னு இருக்கு பாரதியாரா? திருவள்ளுவரா?ன்னு சரியா தெரியல ‘பரத்தையரிடம் சென்றுவந்த ஆணுடன் கூடும் பெண்களும் தன் கற்பை இழந்துவிட மாட்டார்களா?’ அப்படின்னு. எனக்கு 27 வயசாயிடுச்சு. எங்கப்பாவுக்கு ஜாதகம் மேல நம்பிக்கை அதிகம். எங்கப்பாவும் ஜாதகம் பார்ப்பாங்க. என் ஜாதகத்தில ஏதோ பிரச்சனைன்னு எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணல. ரொம்ப வேண்டப்பட்டவங்க வந்து பொண்ணு கேட்டால்கூட எங்கப்பா ‘ஜாதகம் பொருத்தம் இல்ல’ ‘இன்னும் கல்யாண யோகம் வரல’ அப்படின்னு சொல்லி திரும்ப அனுப்பிடுவாங்க. இதனால நிறைய பேர் எங்கப்பாகூட சண்டையெல்லாம் போட்டிருக்காங்க. போன மாதம் என்ன கூப்பிட்டு எங்கப்பா சொன்னாங்க ‘உனக்கு மாப்பிள்ளை நல்லவனா வரமாட்டான்மா.. ஏற்கனவே கல்யாணமாகி பிரிஞ்சவனா இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாடி வேற பொண்ணுகூட வாழ்ந்தவனா தான் வருவான்’ அப்படின்னு சொன்னாங்க. ‘யாருப்பா அப்படி சொன்னது?’ ன்னு நான் கேட்டேன். ‘இல்லம்மா இது தான் உன் விதி’ அப்படின்னு எங்கப்பா சொன்னப்போ என்னால அதை ஏத்துக்க முடியல. நம்ம வாழ்க்கையில நல்லது கெட்டதுன்னு சொல்லிகுடுத்து நம்மள வளர்த்திருப்பாங்க. நாமளும் அவங்க சொன்னத கேட்டு இது சரி இது தப்புன்னு வளர்ந்திருப்போம். ஆனால் திடீர்ன்னு ஒரு நாள் உன் வாழ்க்கையில இந்த தவறை நீ சகிச்சுக்கனும் ஏத்துக்கனும் அப்படின்னு யாராவது சொன்னா எப்படி இருக்கும் தெரியுமா? அந்த நிமிடம் எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ஆனாலும் நான் என்னோட கோபத்தை அப்போ நான் காட்டமுடியாது. ஏன்னா எங்கப்பா எப்பவுமே லவ் பண்றத எந்தளவுக்கு ஆதரிக்க மாட்டாங்களோ அதே அளவு பிடிக்காத திருமணத்தை ஆதரிக்கவும் மாட்டாங்க. எங்கம்மா எப்பவும் ‘நான் பார்க்கிறது தான் பொண்ணு. நான் பார்க்கிறது தான் மாப்பிள்ளை’ அப்படின்னு சொல்வாங்க. ஆனால் எங்கப்பா ‘அந்த பிள்ளைகிட்ட கேட்டியா? அந்த பையன்கிட்ட கேட்டியா? அவங்களுக்கு சம்மதமா?’ அப்படின்னு கேட்டுட்டு தான் பதில் சொல்வாங்க. எங்கக்காவுக்கு எங்க பெரியம்மா பசங்களுக்கு எல்லாருக்கும் எங்கப்பா தான் கல்யாணம் பண்ணி வைத்தாங்க. எல்லாருக்குமே அவங்க விருப்பம் கேட்டு அதன்படி தான் கல்யாணம் நடந்துச்சு. அப்படிப்பட்ட அப்பா சின்ன வயசிலிருந்து என் விருப்பத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லாத அப்பா என்னை இப்படி ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை. நான் சொன்னது ஒன்னுதான் ‘அப்பா.. சங்கரிக்கு மாப்பிள்ளை சங்கரி மாதிரிதான் வேணும். நான் தப்பு செய்யமாட்டேன் ஏன்னா எனக்கு யார்கிட்டையும் மன்னிப்பு கேட்க பிடிக்காது. அப்படிப்பட்ட எனக்கு மாப்பிள்ளைன்னா என்னை மாதிரி இருக்கனும்’ அப்படின்னு சொன்னேன். எங்கப்பா ‘உன் விதி அப்படி தாம்மா இருக்கு’ அப்படின்னாங்க. ‘என் விதி எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்ப்பா நான் என் விதி எனக்கு மாப்பிள்ளையை கொண்டுவரும்ன்னு நம்பி என் வாழ்க்கையை கொடுக்கல. எங்கப்பாவ நம்பி தான் கொடுத்திருக்கேன்’ ன்னு சொன்னேன். எங்கப்பாவுக்கு ஏதோ ஒரு தெளிவு தேவைப்பட்டுச்சு ‘ஒரு வேளை அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமைந்தால் என்னம்மா பண்ணுவ?’ அப்படின்னு கேட்டாங்க. ‘கண்டிப்பா அவங்ககூட வாழமாட்டேன்ப்பா. திரும்ப வந்துடுவேன்’ ன்னு சொன்னேன். ‘அது தான்ம்மா எனக்கும் பயமா இருக்கு’ அப்படின்னு எழுந்து போய்ட்டாங்க எங்கப்பா. இதுல வருந்தத்தக்க விசயம் என்னன்னா நாங்க மூனு பசங்க. ஆனால் எங்கப்பா சின்ன வயசிலிருந்து நல்லது கெட்டதுன்னு எல்லாம் எனக்கு தான் சொல்லிக்கொடுத்தாங்க. எனக்கு அந்த வயசில அந்த வார்த்தைகளை புரிஞ்சுக்கறதுக்கான பக்குவம் இல்ல அர்த்தம் கூட தெரியாது. ஆனாலும் எங்கப்பா சொல்லுவாங்க. எங்கப்பா நாலு வயசுல சொன்ன வார்த்தைகள் இப்பவரை எனக்கு நினைவிருக்கு. அதற்கான அர்த்தங்கள் இப்போதான் புரிபடுது. நான் இந்த கதையை முன்னாடியே இந்த தளத்தில போட்டிருக்கேன்னு சொன்னேன். அப்போ நிறைய பேருக்கு இந்த கதையில பிடிச்சது கண்ணன் அப்பறம் சுகந்தின்னு சொல்லுவாங்க. அவங்களுக்கான விமர்சனங்கள் தான் அதிகமா வரும். அவங்க சொன்னதா நான் போட்ட நிறைய கருத்துகள் எங்கப்பா எனக்கு சொன்ன வார்த்தைகள் தான். அந்த அப்பா என்னைப்பற்றி எல்லாம் தெரிந்த அப்பா நான் தவறுகளை சகிக்க மாட்டேன்னு தெரிஞ்சும் என்னை வாழ்க்கையில adjust பண்ணிக்க சொன்னத என்னால ஏத்துக்க முடியல. இத ஏன் நான் இங்க சொன்னேன்னா இதைத் தொடர்ந்து என் வாழ்க்கையில couple of the days நிறைய விசயங்கள் நடந்துச்சு. அதெல்லாம் சொல்லனும்ன்னு நினைச்சேன். ஆனால் இதுவே ஒரு update rangeக்கு போயிடுச்சு. அதனால இதோட முடிச்சுக்கிறேன். என் வாழ்க்கையிலயும் இதுபோல சில கேள்விகள் இருந்தது. அதை இந்த ஒரு மாத காலமாக என் தந்தையும் தாயும் மாறிமாறி தீர்த்து வைக்கிறார்கள். புதுபுது கேள்விகள் அதற்கேற்ற பதில்கள் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் உதாரணங்கள். இந்தக் கேள்விக்கு கூட நான் பதிலை அவங்ககிட்ட தெரிஞ்சுக்கிட்டேன். And it’s reasonable answer. அதிகமா பேசிட்டேன்னு நினைக்கிறேன். Bore அடிச்சிருந்தா Sorry. நன்றி. நான் இதெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்க நினைத்த விசயங்கள் தான். இது மட்டுமல்ல இன்னும்கூட. ஆனால் இப்படி இல்ல. இன்னைக்கு ஒரு கமெண்ட் என்னோட கேள்வியை முன்வைத்து அப்படின்றப்போ இதை இப்போ சொல்லனும்ன்னு தோனுச்சு. இன்னும் நிறைய இருக்கு. நீங்க விருப்பப்பட்டால் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். Bore அடிச்சா சொல்லிடுங்க update மட்டும் எப்பவும்போல போடுறேன். நன்றி நன்றி நன்றியோ நன்றி. And கதையை பற்றி சொல்லனும்ன்னா நான் முதல் அத்தியாயத்திலேயே உங்களுக்கு க்ளு குடுத்துட்டேன். ட்விஸ்ட் ட்விஸ்ட்ன்னு சொன்னீங்களே ட்விஸ்ட் அது இல்ல. அதுக்கான க்ளுவும் முதல் அத்தியாயத்தில இருக்கு. யாருமே கண்டுபிடிக்கல. இது ஒரு பெண்ணின் மெல்லிய காதல் உணர்வை புரியவைக்கும் முயற்சி.

Nirmala vandhachu
 

Nirmala senthilkumar

Well-Known Member
Sankari ma nirmala oru vishayam solluren
UNGHALUKKU accept panna mudiyalai nna no problem aana enna wrong ahh judge panna venam ma
Appa sonna oru vishayam enakku correct ahh puriyuthu
Divorce or wife death agittangha nnu irrukkurangha nalla manithan nnu UNGHALUKKU thonum pothu okay solla matteenghala
Thappu nnu neenga solluravanga physical relationship la thappa contacts irrukku rangha la avangha taane appadi UNGHALUKKU venam ma
Appa solluravanga ippadi irrukkum pothu neenga conceder pannungha
Thappunnu appa sonnathu ippadi nna okay taane
UNGHALUKKU ungha manasukku pudicha life kku nichayama naanum wish panna ren
May God bless you ma
Physically nallavan nnu namma nenaikkuravangha manasaala kettu romba worst ahh irrukku rangha ma neraiya per ahh parthurukken
Free advice kudukkurathu romba easy nnu enakku theriyum
But fact naanum solluren
 

Pooja Soundarya

Well-Known Member
Shankari nega uga Appa pathi sonadum …. Ega Appa sonadha nenache…… nanum ugala mathiri than ….. but my marriage pathi onnum solraduku illa…….. yepa ipadi keta… unoda vithi nu easy ah solrar……. Enaku kovam Appa appanu irunde thane….. apo unoda ponnuku ne ipadi ya olunga visarikama marriage panuvenu keta….. mudijathu pathi pese ena Aga pogudunu solrar…….

For u … I will say only dis ……. Appa vithi forget about all …. Ugaluke yaaraivathu pidikum…. Thonum marriage panalaamnu …..
20s love vera ….. after 30s ur view about life, person and relationship will change …. So wait … don’t rush
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top