ராதையின் கண்ணன் இவன்-3

Advertisement

E.Ruthra

Well-Known Member
"மார்னிங் உங்களை பார்க்கணும்னு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா, எச்.ஓ.டி ஒரு வேலை குடுத்துட்டாரு, பச்… அதனால தான் மார்னிங் முடில சாரி கிரிஷ், உங்களை நா ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா, நீங்களும் என்ன மிஸ் பண்ணி இருப்பிங்கன்னு எனக்கு தெரியும் இன்னைக்கு என்கூட லன்ச்க்கு ஜாய்ன் பண்றீங்க தானே?? " என அந்த அழகிய யுவதி கேட்பவர்கள் காலையில் இவள் வந்து பார்க்காததுதால் தான் இவன் கோபமாக உள்ளது போலவும், இருவரும் சேர்ந்து உணவு உண்பது தான் இயல்பு போலவும் பேசிவைத்ததில் பொன்னிற மேனியனுக்கோ கட்டுப்படுத்த முடியாத எரிச்சல், அதை சிறிதும் மறக்காத குரலில்,

"ஜஸ்ட் கால் மீ ஆர்.கே, மார்னிங் நீங்க வந்து இருந்தாலும் என்னை பார்த்து இருக்க முடியாது, நான் பிஸியா இருந்தேன், சாரி நானும் ராதாவும் சாப்பிட போறதா ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம், சோ…. பை" என அதே எரிச்சலுடன் பேச அந்த அழகிய யுவதியின் முகத்தில் இவனின் அலட்சியத்தால் இவனிடம் செல்லுபடியாகாதா கோவத்தின் சாயல். அதோட பேச்சு முடிந்தது என திரும்பிய ராகவ் தன் பின்னால் வந்த கார்மேகத்தை எங்கே என தேடி , வாசலில் தேங்கிய அவளை " அங்கேயே ஏன் நிக்கிற, வா ராதா போகலாம்" என அழைத்தான்.

இரண்டு வருடமாக இவளும் தான் ஒரு நாளேனும் அவனோடு உணவு குறைந்த பட்சம் ஒரு காபி அருந்த எத்தனை விதமாக அழைத்து பார்த்தும் அவனின் பதில் எப்பவுமே பெரிய நோ தான். அதில் ஒரு பெரிய திருப்தி என்னவென்றால் அவன் இதுவரை இவளோடு மட்டும் இல்லை வேறு யாரோடும் சென்றதும் இல்லை. இன்று பொன்னிற மேனியன் ராதா என்றதும் இந்த கல்லூரியே பின்னால் சுற்றும் தன்னை விட அப்படி என அவள் அழகி என இவனின் குரலில் திரும்பி ராதிகாவை நோக்கிய அந்த அழகிய யுவதியின் உள்ளம் திகுதிகுவென எரிந்தது, அந்த கோவத்தை ஒரு அலட்சிய பார்வையாக ராதிகாவை நோக்கி செலுத்தி, " ஓ… இவங்க தான் அந்த ராதாவா,ஏன் ஆர்.கே உங்க டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கு, உங்க அழகுக்கு இந்த மாதிரி ஆளுங்க கூட எல்லாம் நீங்க பேசுறதே அதிகம் இதுல லன்ச் வேற, இந்த லச்சனத்துல, இந்த ரதிக்காக என் கூட சாப்பிட வர மாட்டேன்னு வேற சொல்றிங்க" என அவள் தன்பாட்டில் பொறிய, " லுக் ஸ்வேதா, திஸ் இஸ் நன் ஆப் யுர் பிசினஸ், ஜஸ்ட் ஷட்அப் அண்ட் கெட் தி ஹெல் அவுட் பரேம் ஹியர்" என அடிக்குரலில் உரும பொன்னிற மேனியன் கோவத்தில் செந்நிற மேனியனாக , இவனின் கோபத்தில் அப்பெண் மிரண்டு போய் பேசிய தன் வாயை கை கொண்டு மூடினாள், பின்பு தெளிந்து தன் செய்கையில் வெட்கி அதற்கும் சேர்த்து இருவரையும் பொசிக்கியவாறே விடை பெற்றாள்.

ராதிகாவுமே அவனின் கோபத்தில் மிரள தான் செய்தாள், இவ்வளவு நேரம் உரையாடிய ராகி இல்லை இது, ஆனாலும் அவளுக்கு அந்த பெண்ணின் கோவத்திற்கான காரணம் அவளின் பேச்சில் புரிந்த போதும் இருவருக்கும் இடையேன உறவை அவள் அறிய வேண்டியது அவசியம் அல்லவா, கேட்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்துடனே "அவங்க??" என கார்மேகம் இழுக்க, பொன்னிற மேனியனோ எந்த விதமான தயக்கமும் இன்றி "பேரு ஸ்வேதா, எனக்கு ரெண்டு வருஷம் ஜூனியர், அவங்க அப்பா பெரிய ஜவுளிக்கடை வச்சி இருக்காரு, ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் போல, திமிரு அதிகம், பத்தாததுக்கு காலேஜ வேற அந்த பொண்ணு பின்னாடி சுத்துறதுனால தான் பெரிய அழகினு வேற நினைப்பு, நா மட்டும் அந்த பெண்ணை திரும்பி பார்க்கலா, மே பி அது அவங்க ஈகோவ அபக்ட் பண்ணி இருக்கும் போல, அதனால அவங்க பின்னாடி அலையுற பசங்க லிஸ்ட்ல என்னையும் சேர்க்க ட்ரை பன்றாங்க, நா அவைட் பண்ற மாதிரி தான் பேசுறேன் பட் நோ யூஸ்" என சலித்து கொள்ள

"ஏன் அவங்களுக்கு என்ன நல்ல அழகா தானே இருக்காங்க, மே பி அவங்களுக்கு உன் மேல உண்மையா கூட இன்டெர்ஸ்ட் இருக்கலாம் இல்ல"

"நீ எத வச்சி அந்த பொண்ணு அழகுனு சொல்றன்னு எனக்கு தெரில, பட் என் கண்ணுக்கு அந்த பொண்ணு அழகா தெரியலையே, அந்த பெண்ணுக்கு இது வெறும் ஈகோ பிராப்ளேம், எல்லாரும் பார்க்கிற என்ன நீ எப்படி பாக்காம போலாம் அப்படின்ற கோவம் அவ்ளோதான்"
மடைத்திறந்த வெள்ளம் போல் பேசியவன் தயங்கியவரே "சாரி ராதா, என்மேல இருந்த கோவத்தில் தான் அந்த பொண்ணு உன்னை " என வருந்த,

இவ்வளவு நேரம் அவனுடன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் ஏதோ யோசனையோடு உரையாடியவள், அவன் வருந்தவும் அவனை சகஜமாக்கும் பொருட்டு "ஊருல பத்து பிரின்ட் வச்சி இருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கான், ஒரே ஒரு பிரின்ட் அதுவும் ஒரு 4 மணி நேரத்துக்கு முன்னாடி பிரின்ட் ஆகிட்டு நா படுற பாடு இருக்கே ஆண்டவா, அந்த பொண்ணு உன்ன லன்ச்க்கு கூப்டா, நீ போகல அதுக்கு எதுக்கு அவ என்ன கிழிச்சு தொங்க விட்டுட்டு போறா " என பாவமான முகத்துடன் கூற இறுக்கம் தளர்ந்து ராகவும் சிரித்து விட்டான்.

இருவரும் பேசியபடியே கேன்டீனுக்கு வந்து இருந்தனர். ராகவ் டோக்கன் வாங்க செல்ல அவனுடன் பேசியபடி வந்த ராதிகா, அவன் பணம் செலுத்த முயல"ஹே என்னோட ட்ரீட் நா தான் தருவேன்" என அவன் கை பற்றி தடுக்க அவனும் சிரித்தவாறே விலகினான். இருவரும் உணவு தட்டுடன் தனி மேசையில் அமர்ந்து உணவில் கவனம் செலுத்த அப்போது தான் கேன்டீனில் இருந்த மற்றவர்களின் பார்வை வித்தியாசத்தை உணர்ந்த ராகவி "ராகி, ராகி" என அழைக்க, "என்ன ராதா"

"ஆமா ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க"

"அப்படியா ஒரு மாதிரியான"(என்றவாறே எல்லாரையும் ஒரு நோட்டம் விட)

"கோவமா, ஆச்சர்யமா, ஆராட்ச்சியா" (யோசனையோடு சொல்லு)

"ஏன்னு எனக்கு தெரியுமே"(ஏதோ அரும்பெரும் ரகசியத்தை கண்டுப்பிடிச்ச கணக்கா சொல்ல)

"அப்போ சொல்லு ராகி" (என்னவா இருக்கும்??)

"கிட்ட வா"ஹஸ்கி வாய்ஸில் சொல்ல (பப்ளிக், பப்ளிக்)

" இங்க இருக்கவங்க பாதி பேருக்கு மேல என்ன லன்ச் கூப்பிட்டு இருக்காங்க" என சற்று முன்பு அவனை சகஜமாக்க ராதிகா சொன்னதை அவளுக்கே திருப்ப, அடக்கப்பட்ட சிரிப்புடன் ஆரம்பித்த ராகவ், ராதிகாவின் முகம் போன போக்கில் அட்டகசமாக வாய்விட்டு சிரிக்க, கண்டும் காணாமல் இவர்களின் மேசையை பார்த்தவர்கள் அனைவரும் நேரடியாக பார்வைகளை இவர்கள் பக்கம் திருப்ப, ராதிகா தான் பதறிப்போய் ராகவை வாயை மூடுமாறு சைகை செய்தவண்ணமே இருக்க, எங்கே ராகவ் கவனித்தால் தானே அவனோ தன்பாட்டில் சிரிக்க, ராதிகா அவனை அடக்கும் வழி தெரியாமல் கோவத்தில் உணர்ச்சிவசப்பட்டு பொன்னிற மேனியன் தலையில் ஒரு கொட்டு வைத்து, ஆள்காட்டி விரலை வாயில் வைத்து குழந்தைகளுக்கு சொல்வது போல் "ஸ்ஸ் மூச்" என மிரட்ட இப்போது அனைவரின் பார்வையும் பொன்னிற மேனியன் பக்கம், அவனின் எதிர்வினையை எதிர்நோக்கி, அவனோ தலையை தேய்த்துவிட்டவரே மூக்கை சுருக்கி அவனின் கார்மேகத்தை போலவே ஆள்காட்டி விரலை வாயில் வைத்தவாறே " சாரி, சாரி, உன்னோட முகம் போன போக்க பாத்ததும் என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடில" என்றவாறே மீண்டும் சிரிக்க எல்லார் பார்வையிலும் ஆச்சர்யத்தின் உச்சம்..

அவர்கள் அறிந்த ஆர்.கே எல்லாரிடம் சாதாரணமாக பழகினாலும், அது அளவோடு இருக்கும். ஒரு எல்லைக்கு மேல் அவனிடம் நெருங்க முடியாதுவாறு ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு ஒதுக்கம் வேலி போல் இருக்கும். இதே கல்லூரியில் நான்கு நெடிய ஆண்டுகள் படித்த போதும், அவனின் பின்புலம் இன்னும் யாரும் அறியா மர்மமே. எல்லாரும் தன் தந்தை மற்றும் பரம்பரை பெயரால் அறியப்பட, பொன்னிற மேனியன் மட்டும் கல்வி, விளையாட்டு, திறமை என தனக்கான தனிஅடையாளத்தால் மட்டுமே அறியப்பட்டான்.

பொன்னிற மேனியன் விரும்பியதும் இதை தான், அவனின் கார்மேகத்தின் மீதான அலட்சியபார்வையை அவன் அறிந்தே இருந்தான்.பெண்களுக்கு அழகை அளவுகோலாகவும், அந்த அழகிற்கு நிறத்தை அளவுகோலாக கொள்ளும் இவர்கள் அவளை புறணிக்கப்போவது உறுதி. அவன் சக வகுப்புமாணவர்களும் நீ எல்லாம் எங்களுக்கு இணையா என்ற அலட்சிய பாவத்தோடு பார்க்க அவர்கள் சர்வநிச்சயமாக அவளோடு நட்போடு பேசவோ அல்லது உணவு உண்ண அழைக்க போவதோ இல்லை எனும் போது அவளின் மீதான அவனின் ஈர்ப்பின் காரணமாக அவளை தனியே விட மனம் இல்லாமல் தான் பொன்னிற மேனியன் அவளை தன்னுடன் உணவு உண்ண அழைத்தது. இந்த கேன்டீன் அனைத்து பிரிவினருக்கும் பொதுவானது. ஆர்.கே ஒரு பெண்ணுடன் வந்தது இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு இருப்பவர்களால் மற்ற அனைவரின் செவிகளுக்கும் உணவாகும். அவனின் கார்மேகம், இவனின் தோழியாக மற்றவர்களால் அறியப்படுவாள். அப்போது அவனின் கார்கால மேகத்தின் மீதான அவர்களின் அலட்சிய பார்வை, ஆராய்ச்சி பார்வையாக மாற்றம் கொள்ளும். பின்னாளில் அது ஆச்சர்ய பார்வையாக கூட மாறலாம் எவர் அறிவார்.

ஒருவாறு சிரித்து முடித்த ராகவ் சிரிப்பின் மிச்சங்களோடு "பின்ன என்ன அவங்க அவங்க வேலைய பாத்துகிட்டு அமைதியா இருக்காங்க, அவங்கள பாத்து ஏன் ஒரு மாதிரியா பார்க்குறாங்கன்னு கேட்டா நா என்ன சொல்வேன்"

"உன்ன போய் ஒரு ஆள மதிச்சி கேட்டேன் இல்ல என்ன" என தன் தலையில் அடிச்சிக்க,

"சாரி, நா ஷூ போட்டு இருக்கேன்" ராகவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற,

"போடாங்" என ராதா என்ன சொல்லி இருப்பாளோ
ராகவ்"வேண்டாம், மீ பாவம்" என கை எடுத்து கும்பிட "பொழச்சி போ" என ராதா கூற இருவரும் வாய் விட்டு சிரித்தனர். புன்னகையோடு தொலைப்பேசி இலக்கங்களையம் பகிர்ந்துகொண்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
அந்த நாளின் மிட்சமும் அறிமுகத்திலேயே கழிய கல்லூரி முடிந்ததும் அனைவரும் தன் கூடுகளுக்கு பயணமாக தயாராயினர்.

"எப்படி போற வீட்டுக்கு" என ராகவ் கேட்க

"கார் எடுத்துட்டு முத்து அண்ணா வந்து இருப்பாங்க, நீ"

"நா ஹாஸ்டல் தான், வா முத்து அண்ணாவா பாத்துட்டு, அப்படியே அவருக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போறேன்" என, "ம்ம்ம்"என அவனுக்கு பதில் அளித்த கார்மேகத்திற்கு ஹாஸ்டல்னா அப்போ வீட்டுல இருந்து வரலையா, அப்பா, அம்மா, கூட பொறந்தவங்க, என பொன்னிற மேனியனின் குடும்பத்தை பற்றி அறிய ஆவல் மிகுந்தாலும், அவன் திரும்ப தன்னை விசாரித்தால் உண்மையை மறைக்க இயலாது என்பதாலும், தன்னை இன்னார் மகள் என்று அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாத காரணத்தாலும் அவனாக தன்னை பற்றி சொல்லும் வரை காத்திருப்போம் என முடிவு செய்தாள் கார்மேகம்.அவனுக்கு தன்னை தனியே விட மனம் இல்லாமல் தான் உடன் வருகிறான் என்பது புரிவதாய். ஏன் என்றால் விடுதிக்கு செல்லும் வழி இது அல்லவே. வகுப்பில் இருந்து கார் இருக்கும் வரையினால அந்த பாதையில் இவர்கள் கடந்த பெரும்பாலானோர் பொன்னிற மேனியனிடன் ஓரிரு வார்த்தை பேசியபடியே கடக்க, இவளின் மீதான அவர்களின் பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம். மதியமே அதை பற்றி ராகவிடம் கேட்டும், அவன் பதில் சொல்லாமல் இவளை திசை திருப்பியதை அறிந்தே இவளும் அமைதியாக, அவனிடம் மறுபடியும் அதை பற்றி கேட்காமல் உடன் நடந்தாள்.

சொன்னபடியே முத்து அண்ணாவை பார்த்து ராதிகாவின் தோழன் என தன்னை அறிமுகபடுத்தி கொண்டு அவரிடம் சில வார்த்தைகள் பேசி அவர் கவனத்தை கவராத வகையில் "வீட்டுக்கு போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு என்ன" என உரைக்க அவனின் தன் மீதான அக்கறை தித்திப்பாய் உள்ளே இறங்க
சரி என்பதாய் தலை அசைத்தாள். ராதாவோடு இருந்த இந்த நாள் நீண்டு நெடியது போல் ஒரு தோற்றமயக்கம் தர கார்மேகத்தின் மீதான தன் ஈர்ப்பு, நீர்த்து போகாமல் ஒரு வீரியத்துடன் அதிகமாவதை ஒரு பரவசத்தோடு உணர்ந்தான் பொன்னிற மேனியன்…….

இவன் ராதையின் கண்ணன்…………………….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top