மாலை சூடும் வேளை-29

Advertisement

laxmidevi

Active Member
பாடல் வரிகள்


கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்
மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
ஏட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்
தாய்பாலு தரம்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்.....

விக்ரம் ஓரளவு அந்த கொலையை பற்றிய விவரங்களை கண்டுபிடித்து விட்டான். ஆனால் அவனுக்கு விளங்காதது ஒன்றே ஒன்றுதான் இந்த கொலைகான காரணம் என்ன? அதன் பின்னணி என்ன என்பதை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான் .
அந்த இடத்தை சுற்றிலும் முழுவதுமாக சல்லடை போட்டுத் தேடியும் வித்தியாசமாக எதையும் காண இயலவில்லை . அந்த விஷயம் அவன் மூளைக்குள் புகுந்து சிந்தனை முழுவதும் பரவி இருந்தது.

வீட்டில் அவன் அறையில் இதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் போது விக்ரமிற்கு போன் செய்தாள் சாரு.

சொல்லு சாரு?

என்ன விஷயம் என்று உனக்கு தெரியாதா இங்க எனக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்றாங்க . நீங்க இன்னும் உங்க பக்கத்துல எந்த முடிவும் எடுக்கல நானிவது வீட்ல சொல்றேன் சொன்னால் அதையும் கேட்க மாட்டேங்கிறீங்களே ?இப்ப நான் என்னதான் பண்றது சொல்லு ?எங்க வீட்ல பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு மா ?அவன் கிட்ட கேட்டா கொஞ்சம் பொறுமையா இருனு தான் சொல்கிறான். என்னால முடியல டா விக்ரம்.

கொஞ்சநாள் பொறுத்துக்க சாரு.கிஷோர் சித்தி பொண்ணுக்கு இப்பதான் பேசி முடித்து இருக்காங்க எப்படி இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணிருவாங்க அதற்கப்புறம் இதைப் பத்தி உங்க வீட்ல பேச சித்திய கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இருக்கான்.

விக்ரம் அதுக்குள்ள எனக்கு இங்க கல்யாணமே முடிஞ்சுரும். நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நீங்க .வீட்ல காரணம் கேட்கிறார்கள் ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற? நான் என்ன பண்றது?

என்ன பண்ண சாரு. எனக்கு புரியுது இருந்தாலும் அவங்க அப்பா அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவங்க சித்தி தான் எடுத்து வளர்க்கிறார்கள். இப்ப கிஷோர் வேறு இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டா அவ தங்கச்சிய கல்யாணத்துல பிரச்சினை வரலாம்னு யோசிக்கிறாங்க அதனாலதான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் உங்க கல்யாணத்தை நடந்த்தலாம்னா சொல்லிட்டாங்க. இதுக்கு மேல நாம அவங்கள எப்படி வற்புறுத்த முடியும் ?


உன் பிரண்டு தங்கச்சி கல்யாணம் நடக்கனும் .அதைப் பற்றி மட்டும் யோசிக்கறயே? இரண்டு பேரும் என்ன பத்தி கொஞ்சம்மாவது யோசிக்கிறீர்களா. சரி விடு பரவாயில்லை. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.யாருக்கும் தெரிய வேண்டாம். அதுக்கப்புறம் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் யாராலும் எங்களை பிடிக்க முடியாது என்று.

ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டா மட்டும் உங்க வீட்ல பிரச்சினை வராதா சாரு?

பிரச்சனை வரலாம் .ஆனா கல்யாணம் பண்ணியாச்சுனு தெரிஞ்சா அதை எப்படியும் ஏத்துக்குவாங்க
அதுக்காகத்தான் சொல்றேன்.

ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றதுன்னு அவ்வளவு ஈஸியான வேலை இல்லை சாரு , உங்க வீட்ல தெரியவில்லை என்றாலும்.இங்க அப்பாக்கு தெரிந்து விடும்.அவரோட கான்டக்ஸ் வேற லெவல்.உனக்கு தெரியாததா?


விக்ரம் சாருவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மங்கை விக்ரமிற்கு காபி எடுத்துக்கொண்டு வந்தாள்

இப்ப என்ன தான் சொல்ற விக்ரம் ? அவனும் அப்படித்தான் பேசினான். அவன் தான் புரிஞ்சுக்க மாட்டேங்குறானு உன் கிட்ட பேசினா நீயும் அப்படிதான் பேசுற?உங்களை எல்லாம் பிரச்சனையும் செட்டில் பண்ணி எப்ப எங்க வீட்ல பேச? நீங்க எல்லாம் ஒண்ணு நான் மட்டும் இப்ப தனியா இருக்கேன் என்ன பத்தி உங்களுக்கு என்ன கவலை என்றாள் கோபமாக சாரு.

என்ன சாரு இப்படி பேசுற?

பின்ன எப்படி பேச சொல்ற ?

சரி விடு இப்ப என்ன உனக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும் அவ்வளவு தானே..பண்ணலாம். நான் ஏற்பாடு பண்றேன்.

அப்படி ஒன்னும் நீ எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் நான் பாத்துக்கிறேன் என்றாள் சாரு

யாருமே நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்க மாட்டீங்களா எல்லாரும் சேர்ந்து என்னை டார்கெட் பண்றீங்க ?சரி உன் இஷ்டம் போல செய் என்று போனை வைத்தான் கோபமாக விக்ரம்.


இதையெல்லாம் அரைகுறையாக கேட்ட மங்கை விக்ரமும் சாருவும் விரும்பி இருக்கிறார்கள்.இப்போது சாரு விக்ரமை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள் போல என்று நினைத்தாள். நினைக்கும்போதே அவளது இதயமே நின்று விடும் போல இருந்தது .ஓரளவு தன்னை சமன்படுத்தி கொண்டு விக்ரமிடம் கொண்டு போய் காப்பியை கொடுத்தாள். அவனிடம் என்ன சாரு திருமணத்திற்கு வற்புறுத்துகிறார்களா என்று கேட்டாள்.

ம்ம் என்ன செய்யவது என்றே தெரியவில்லை.தவறு என் மீது தான்.அவள் வீட்டில் பேசி சம்மதம் வாங்குவதாய் கூறியிருந்தேன். இப்போது சூழ்நிலை வேறு சரியில்லை . சாரூ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்கிறாள். இது நம் வீட்டில் தெரிந்தால் அவ்வளவு தான். பரவாயில்லை சமாளிப்போம்

ரெஜிஸ்டர் மேரேஜா? என்றால் மங்கை உள்ளே எழும் வேதனையை மறைத்துக்கொண்டு ?

அது சரி இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும் ?சாரி உன்னிடம் நான் இது பற்றி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சாரு தான் பயந்து கொண்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி விட்டாள்.

மங்கை எனக்கு தெரியும் என்று மட்டும் பதில் கூறினாள்.

ஒருவேளை இந்த விஷயம் நம் வீட்டில தெரிந்து ஏதேனும் பிரச்சினை என்றால் நீதான் எனக்காக அப்பாவிடம் பேச வேண்டும் . எங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் செய்வாய் தானே?

மாமாவிடம் நான் பேசுகிறேன் என்றாள் மங்கை.

விக்ரம் ஏதோ ஒன்றை நினைத்து சொல்ல இவள் ஏதோ ஒன்றை நினைத்து புரிந்து கொண்டாள்.

இதுவரை விக்ரம் மங்கையுடனான திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்யவில்லை. படிப்பு முடித்ததும் பதிவு செய்து கொள்ளலாம் என்று விக்ரம் எண்ணியிருந்தான்.


மங்கையோ இன்னும் தங்கள் திருமண த்தை ரெஜிஸ்டர் செய்யாததால் தான் சாரு விக்ரமை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து சட்டபடி முதல் மனைவியாக எண்ணி விக்ரமை வற்புறுத்துவதாக எண்ணினாள்.

விக்ரமிடம் பேசிவிட்டு வந்த மங்கை நேராக தோட்டத்திற்கு சென்று தனது மன பாரம் குறையும் மட்டும் அழுது தீர்த்தாள்.

விக்ரமை விட்டுப் பிரிய வேண்டும் என்று நினைத்தாலே வலித்தது. ஒரு தலையாய் காதலித்த தனக்கே இப்படி என்றால் காதலித்த இருவருக்கும்
எப்படி இருக்கும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் அதுதான் சரி அன்று யாரோ காலேஜில் எடுத்த வீடியோ தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் அதற்கான தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என முடிவு எடுத்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றாள் மங்கை.

மங்கை தோட்டத்திற்கு சென்றவுடன் விக்ரம் சாருவிற்கு அழைத்து கிஷோருடன் ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி பேசி விட்டதாகவும் அவன் அதற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறினான்

சாரு அவனிடம் சாரி விக்ரம் ஏதோ கோபத்திலும் குழப்பத்திலும் உன்னிடம் அவ்வாறு பேசிவிட்டேன். பேசிய பிறகுதான் நான் பேசியது தவறு என்று தெரிகிறது .எப்படி இருந்தாலும் நம்மை பெற்று வளர்த்தவர்ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது தவறு . அதனால் வேண்டாம் .நீ அங்கிளிடம் என் காதல் விஷயம் பற்றி கூறி விடு அங்கிளை இன்னும் இரண்டு மாதம் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க சொல்லலாம் என்று கூறினால் சாருமதி

எனக்கு தெரியும் .என் சாரு புத்திசாலி என்று .அவ்வப்போது அவளுடைய மூளை வேலை நிறுத்தம் செய்து விடும் என செல்லமாக அவளை கேலி பேசினான் விக்ரம்.

சரியாக விக்ரம் என் சாரு என்று சொல்லும்போதும் மங்கை உள்ளே வந்தாள்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய வேண்டிய விஷயங்களும் அப்பாவிடம் இந்த விஷயத்தை கூறி எப்படி சாருவின் அப்பாவிடம் பேசி திருமணத்தை தள்ளிப் போடுவது என்ற யோசனையுடன் இருந்த விக்ரம் மங்கையின் முக மாற்றத்தை கவனிக்க தவறினான் .


விக்ரம் சாருவும் தான் விரும்புகிறார்கள். இன்னமும் சாரு விக்ரமை தான் திருமணம் செய்ய நினைக்கிறாள்.ஒருவேளை அப்படி நடந்தால் .....என் ஏதேதோ எண்ணி தன்னைத்தானே வருத்திக்கொண்டு இருந்தாள் மங்கை.

ப்ராஜெக்ட் ரிவியூவிற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அதற்கு தயாரவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளி வர முயன்றாள்.

அதிகாலையில் பூஜை செய்வதற்காக தோட்டத்தில் மலர்களை பறித்துக்கொண்டிருந்தாலா மங்கை. அப்போது விக்ரமும் அங்குதான் ஜாகிங் செய்து கொண்டிருந்தான்.

மலர்களை பறித்து கொண்டிருக்கும்போது ஒரு மாதிரி தலை சுற்றலாக இருக்கவே பக்கத்தில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் .

மங்கை அமர்ந்திருப்பதைப் பார்த்த விக்ரம் அருகில் வந்து என்னம்மா என்ன செய்கிறது உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேட்டான்.

விக்ரமின் அக்கறையான செயல்களில் மனம் நெகிழ்ந்தது மங்கைக்கு.

இல்லை ஒன்றும் இல்லை கொஞ்சம் டயர்ட் ஆக இருந்தது .அதனால் தான் அமர்ந்தேன் என்று கூறி விட்டு மறுபடியும் மலர்களை பறிக்க சென்றாள்.

பூக்களை பறித்து விட்டு வீட்டினுள் செல்லும் போது ரொம்பவும் தலைசுற்றியது. அவள் கீழே விழும் முன் விக்ரம் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அப்படியே தூக்கிக்கொண்டு போய் சோபாவில் அமரவைத்தான்.

என்ன செய்து மங்கை என்று கேட்டான் விக்ரம்.

அதற்குள் அம்பிகாவும் வந்து விட்டார்

நைட்டு சரியா தூங்களை அதனாலதான் ஒருமாதிரி தலைசுற்றியது என்றாள் மங்கை. பிராஜக்ட் சமிஷனுக்காக நைட்லாம் ப்ரிப்பர் பண்ணியா என்று கேட்டான் விக்ரம்

வாழ்க்கையே போகப்போவது இதனை ப்ராஜெக்ட் தான் குறை என்று மனதில் நினைத்துக்கொண்டு ஆம் என்று தலையை ஆட்டினாள்

ஏதாவது டவுட்னா என்ன கேட்க வேண்டியதுதானே? ஏன் ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்கிறே ?

அம்பிகா தன் மருமகளுக்கு பூஸ்ட் கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.

கொஞ்சம் குடித்தவள் ஒரு மாதிரி இருக்கு என்று அங்கேயே படுத்துக்கொண்டாள் சோபாவிலேயே

விக்ரம் மங்கலயை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரியா ?

ம்ம் எனக்கு முக்கியமான வேலை இருக்கு.நீங்களும் அப்பாவும் கூட்டிட்டு போங்களேன் என்றான் கெஞ்சலாய்.

சரிடா நானே கூட்டிட்டு போகிறேன் என்றார் அம்பிகா.

இவை அனைத்தும் காதால் கேட்டு இருந்தாலும் கண்களை திறந்து பார்க்கவே முடியவில்லை பெண்ணவளால்.

விக்ரம் கமிஷனர் ஆபீஸ் கிளம்பி செல்லவும்
முரளிதரன் அம்பிகா மங்கை மூவரும் ஹாஸ்பிடல் சென்றனர்.

அங்கு சென்ற அம்பிகா என்ன நினைத்தாரோ விக்ரம் கொஞ்சம் ஹாஸ்பிடலுக்கு வரியா ?உன் வேலையை கொஞ்சம் அப்புறம் போய் பாரு என்றார் போனில்.

முக்கியமான வேலைமா சொன்னா புரிஞ்சுக்கோங்க என்றான் மகன்.

எதுவாகினும் பரவாயில்லை. நான் வேண்டுமானால் அப்பாவை கமிஷனரிடம் பேச சொல்லவா என்று கேட்டார் அம்பிகா.

ஏன் இவ்வாறு பிடிவாதம் பிடிக்கிறீங்க நானே வரேன் அப்பாவ பேச சொல்ல வேண்டாம் என்றான் சலிப்பாக.

விக்ரம் வரவும் மங்கை அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் .

நீயே உன் பொண்டாட்டியுடன் போ.உள்ள நம்ம டாக்டர் சுந்தரியே பாருங்க என்று கூறினார் அம்பிகா

டாக்டர் சுந்தரி மங்கையிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அவளை பரிசோதித்தார்.

விக்ரமிடம் வந்தவர் வாழ்த்துக்கள் அசிஸ்டன்ட் கமிஷனர் சார் பிரமோஷன் வாங்கிடீங்க போல என்றார்.

இல்லை மேடம் பிரமோஷன் எல்லாம் இல்லையே என்று மறுத்தான் விக்ரம்.

நான் உங்கள் வேலையில் பிரமோஷன் பற்றி சொல்லவில்லை நீங்கள் அப்பாவாக புரமோஷன் ஆகி விட்டீர்கள் என்று கூறினேன். அதுவும் டபுள் ப்ரமோஷன். இரட்டைக் குழந்தைகள் என்றார் சந்தோஷமாக.

அந்த நிமிடம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான் விக்ரம்.தன் உயிர்கள் தன் உயிரானவளின் உதிரத்தில் வளருவதை நினைத்து கர்வம் கொண்டான் ஒரு காதலனாக கணவனாக.

டாக்டர் சுந்தரி சொன்னதைக் கேட்ட மங்கைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் காதல் கணவனின் வித்து தன்னுள் வளர்வதை எண்ணி ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.இந்த மகிழ்ச்சியில் முன்னர் இருந்த குழப்பங்கள் எல்லாம் சற்றே பின்னுக்கு சென்றது.

அறையிலிருந்து வெளியே வந்தவுடன் மங்கையை மென்மையாக அணைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறது மங்கை .என்ன சொல்வது என்றே தெரியவில்லை .என் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று கூறினான் விக்ரம்.

இப்போதுதான் புரிந்தது எதற்கு அன்னை தன்னை கட்டாயப்படுத்தி வர சொன்னார் என்று.

இது போன்ற சந்தோஷமான தருணங்கள் வாழ்க்கையில் ஒரு முறை தான் கிடைக்கும் அதை தந்த தனது தாய்க்கு நன்றி உரைத்தான் மனதில்

தன் தாய் தந்தையரிடம் அவர்கள் மீண்டும் ஒரு முறை தாத்தா பாட்டி ஆகி விட்டதை கூறினான்.

அம்பிகா முன்னரே இது தான் என்று நினைத்து இருந்தாலும் இப்போது உறுதியாக அதுவும் இரட்டை குழந்தைகள் எனவும் மிகவும் மகிழ்ந்தார்.மங்கையை அணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டார்

விக்ரமின் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

பின் வரும் பிரச்சனைகளை பற்றி அறியாமல்.

மாலை தொடுக்கப்படும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top