மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 4 - ராணி சுவர்க்கம் முன்னோட்டம்

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
#1
அனைவருக்கும் வணக்கம்.

தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்கவும். இதுவரையில் இந்த புதினத்திற்கு விருப்பமும், கருத்துக்களிட்டு ஊக்கமும் கொடுத்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

இந்த புதினத்தில் இரண்டு கோவில் நகரங்கள் தொடர்பு படுகின்றன. பல நகரங்களை சிந்தித்து விட்டு, முடிவாக, குணாவின் ஊராக தஞ்சையையும், இந்தக் கதை நிகழும் முக்கியக் களமாக நாமக்கல் நகரத்தையும் தேர்வு செய்திருக்கிறேன். இரண்டுமே காவிரி நதி பாயும் மாவட்டங்கள். தஞ்சையில் நகரினுள்ளேயே காவிரி பாய்கிறது, நாமக்கல்லில் சற்று தொலைவோடே காவிரியன்னை கடந்து சென்று விடுகிறாள்.

இந்தப் புதினத்தினிடையே திருச்சி நகரமும் வந்து போகும். தஞ்சை, நாமக்கல் இடையே இருக்கும் பெரு நகரமல்லவா திருச்சி. இந்த நகரங்களைத் தீர்மானிக்காது இனி கதை நகராது என்பதாலேயே தாமதமாகிற்று. தஞ்சை, பெரிய கோவில் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அதே சமயம், நாமக்கல் நகரமும் தமிழகத்தின் ஒரு முக்கிய கோவில் நகரமே. அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில், உலக பிரசித்தி பெற்றது. மலையினைக் குடைந்து அமைக்கப்பெற்ற நரசிம்மர் கோவிலும், அந்த நரசிம்மரை நேரெதிரே நின்றபடி தனிக் கோவிலில் தொழும் ஆஞ்சநேயரும், நாமக்கல் மலைக்கோட்டையும் புகழ் பெற்றவையே.

இருப்பினும், 20 முதல் 25 வருடங்கள் பின்னோக்கிய நாமக்கல் நகரைப் பற்றி நீங்கள் அறிந்த தகவல்கள் எதுவானாலும் இங்கோ, என் முகநூல் பக்கத்திலோ, என் வலைத்தளத்திலோ பகிரலாம். அவை மிக உதவிகரமாக இருக்கக் கூடும்.

ஏன், நாமக்கல் நகரம்? குறிப்பிட்ட காலகட்டத்தில், அதிகமான கல்லூரிகள் இல்லாத, அதே சமயம், கோவில் நகரமாகவும் ஒரு நகரம் தேவைப்பட்டது. அதனருகே எதிர் திசையில் மற்றொரு சிறு கோவில் நகரமும் அவசியப்பட்டது. இப்படியாக பின்னப்பட்ட வலையின் பின்னே, நாமக்கல் நகரம் பொருந்திப் போயிருக்கிறது.

இது கதை பற்றிய அடிப்படைத் தகவல்.

இனி, அடுத்த அத்தியாயத்தின் முன்னோட்டம். இதில் சில பகுதிகள், இரண்டாம் அத்தியாயத்தின் முன்னோட்டமாக என் வலைத்தளத்தில் எழுதியபோது இருந்தவையே.

படித்து விட்டு, உங்கள் கருத்துக்களை இடுங்கள். உங்கள் ஊக்கங்களே அடுத்தடுத்து, இந்த புதினத்தினை விரைந்து கொடுக்கும் உத்வேகத்தினை அளிக்கும். நன்றி.

--------------------------------------------------------------------------

ஏய்.. ஏய்..ஏய்தன் மேலே வந்து விழுந்த குணாவினால் எரிச்சலில் கத்தினான் மணி.

குணாவோ, “அடப்பாவி” என்று திகைத்து சொன்னான்.

அதிகாலை ஐந்து மணிக்கு, தன் மீது வந்து விழுந்த குணாவினால் உறக்கம் கலைந்து விட்ட எரிச்சலோடு, “ஆமடா. நீ வந்து விழுந்ததில், உன் மீது பூமாரி வீசி வாழ்த்துப்பா பாடவில்லைதானே அதனால், நான் பாவிதான்” என்றான் மிகவும் கடுப்போடு.
-------------------------------------------------------------------------------------------------------------
முதல்
நாளில், கல்லூரித் தாளாளர் எச்சரித்த மாணவன் என்ற நோக்கத்தில் குணாவின் மீது சில பார்வைகள் விழத்தான் செய்தது. ஆனால், அதன் பிறகு வெளிப்பட்ட குணாவின் செயல்பாடுகள், ராசுவின் வெளிப்படையான புகழ்ச்சி, வகுப்புகளில் பாடங்களை எளிதாகப் புரிந்து கொண்டு வைக்கப்படும் கேள்விகளுக்கு, மற்றவர் எவரும் பதில் சொல்லாத போது, பதில் சொல்லும் தன்மையும் என அவனைக் குறித்த முதல் அபிப்ராயம் தவறு என இளவழகனுக்கும், அங்கு தங்கியிருந்த பிற விரிவுரையாளர்களுக்கும் தானாக விளங்கச் செய்தது.

வழக்கமான மாணவப் பருவத்திற்கே உரிய கேலிகள், சர்ச்சைகள் சக மாணவர்களிடையே எழுந்த போதும், குணாவை அந்த விடுதி ஏதோ ஒரு விதத்தினில் கொண்டாடத்தான் செய்தது. குணாவோ எந்த விதத்திலும் தன் இயல்பினை மாற்றிக் கொள்ளவில்லை. நண்பர்களுடன் இருக்கும்போதெல்லாம் அவர்களை ஒட்டியே அவனது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. தன்னைத் தனியனாக அவன் தன்னை எப்போதும் தள்ளி நிறுத்திக் கொண்டதில்லை. நண்பர்கள் ஏதேனும் சேட்டை செய்வதென்று முடிவு செய்தால், ஈடுபாடு உண்டோ இல்லையோ, அதை அவனும் செய்வானோ இல்லையோ, அங்கு அவனும் இருப்பான்.

விடுதி வாசத்தின் முதல் நாளிலேயே அறிமுகம் ஆகிவிட்ட, மணி, நுண்ணியிரியல் பயிலும் செந்தில், தன் வகுப்பிலேயே பயின்ற பல்லவன், முதல் நாள் கேலி வதையில்பச்சைக் கிளிகள் தோளோடுஎன்று பாடிய சங்கரன், அடுத்தடுத்த நாட்களில் வந்து சேர்ந்த அருள்மொழி, நபி, ஓரிரு வாரங்கள் கழித்து வந்து சேர்ந்த முரளி, அங்கே இரண்டாம் வருடம் பயின்ற மாணவன் வித்யனின் நெருங்கிய தோழனான, தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பாதுகாப்பு தொடர்பான பட்டம் பயில வந்த வேதன், அதே பட்டம் பயில வந்த அன்பு என குணாவின் நட்பு வட்டம் விரிந்தது.
அந்த வாரம் முழுவதுமே அந்தப் படத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

------------------------------------------------------------------------------------------

அந்தப் படத்தின் பாடல்களும், முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இரண்டு நாயகர்களும், நாயகியையும் பற்றியுமாக எங்கு சென்றாலும் அதே பேச்சுதான். ஆக, அந்த வார இறுதியில் சென்று பார்த்தே ஆக வேண்டிய படமாக ஏகமனதாக எல்லோராலும் முடிவு செய்து தீர்மானம் இயற்றப்பட்டது.‘ஹ.. ஹா.. ரதம் தயார்’கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு பேரை வைத்து, சிரமப்பட்டுக் கொண்டு மிதிவண்டியை மிதித்து, திரையரங்கை அடைந்து, அரங்க நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு சிலர் வரிசைக்கு செல்ல, மிதிவண்டிகளை ஓட்டி வந்தவர்கள், அதை நிறுத்துவதற்கு செல்ல, குணாவும் இன்னும் ஓரிருவரும் இடைவழி நிற்க, மிதிவண்டியை நிறுத்தி விட்டு, ஓட்டம் ஓட்டமாக ஓடி வந்த மணி கேட்டானே ஒரு கேள்வி. அருகில் இருந்த பிற கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரிக்க, மணி கேட்ட கேள்வியில் இவர்களுக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்த போதும், அவனைப் பார்த்து முறைத்து நின்றனர் தோழர்கள்.கேட்கப்பட்ட கேள்வி அப்படி!!! :)

‘இப்படி எல்லோர் முன்னும் அசிங்கப்படுத்தி விட்டானே’

அன்றைய தினத்திற்குப் பிறகு, அந்தப் படத்தின் பெயர் மணியின் பெயரோடு அடைமொழியாக பசை போட்டு ஒட்டிக் கொண்டு விட்டது என்றால், மணியின் கைங்கர்யம் அவ்வாறானதென்றறிக. :);):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes