மண்ணில் தோன்றிய வைரம் 24

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அங்கு அறையினுள் தலையில் கட்டுடன் வலக்கையில் பாண்டேஜுடனும் உறக்கிக்கொண்டிருந்தாள் சாரு. அவளது கையை தாங்கும் விதமாக பாண்டேஜ் அவளது கழுத்துடன் பொருத்தப்பட்டிருக்க அக்கையை தன் மார்பை அணைத்தவாறு வைத்திருக்க மறுகையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் தன்னவளை கண்டதும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வலி அவனுள் எழுந்தது. அவன் வருந்துவதை விரும்பாத சாருவின் அலைபேசியோ ஒலி எழுப்பி அவன் கவனத்தை தன் புறம் திருப்பியது. அழைப்பினை ஏற்ற அஸ்வினுக்கு சஞ்சயின் குரல் வந்தனம் கூறியது.
“ஹலோ சாரு… எவ்வளவு நேரம் ட்ரை பண்ணுறது.. போன் கட்டாகுனா திரும்ப கால் பண்ண மாட்டியா?” என்று தன்பாட்டில் பேசிச்சென்ற சஞ்சயை..
“ஹலோ சஞ்சய் நான் அஸ்வின் பேசுறேன்” என்று கூற
“அஸ்வின் நீங்க எப்படி சாரு போன்ல?”
“சாருவிற்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட்” என்று அஸ்வின் கூறிய அடுத்த நொடி
“ஆக்சிடன்டா? எப்போ? எப்படி?? இப்போ எங்க இருக்கீங்க??அவ எப்படி இருக்கா??”என்ற அடுக்கடுக்கான கேள்விகளிலே அவனது அக்கறையை வெளிப்படுத்த
“கூல் சஞ்சய்... இப்போ சாரு நல்லா இருக்காங்க.. அங்க என்ன நடந்திச்சினு தெரியலை அவங்க கண்முழிச்சா தான் நடந்தது என்னானு தெரியும்.. நீங்க கால் பண்ணதால நான் அவங்களை தேடி போனேன். அப்போ அங்கிருந்த ஆற்றங்கரை படிகட்டுல மயங்கி கிடந்தாங்க. அங்க இருந்து அப்படியே அவங்களை ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். கையில பிராக்சராகிருக்குனு சொல்லி கட்டுபோட்டுருக்காங்க ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு...”
“ஓ.... இப்போ சாரு கூட பேசமுடியுமா?”
“இல்லை சஞ்சய். அவங்க தூங்குறாங்க. அவங்க கண் முழிச்சோன நான் உங்களை கூப்பிடுறேன்.”
“ ஓகே அஸ்வின். வேறு ஏதும் தேவைனா சொல்லுங்க. டிஸ்சார்ஜ் பண்ண பிறகு காரில் இங்க வந்துருவீங்களா இல்லைனா நான் அங்க வரவா??”
“இல்ல சஞ்சய். நான் சாருவை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். சாருவுக்கு இந்த நேரத்தில் பெண் துணை வேண்டும். அங்க கவி,சித்தி, பாட்டினு எல்லாரும் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க சாருவை பற்றி கவலைப்படாதிங்க. அவங்க என் பொறுப்பு” என்று சஞ்சயை சமாதானப்படுத்த அவனோ மனதில் “அப்படியே இனிமேனு ஒரு வார்த்தையையும் சேர்த்து சொல்லியிருந்தனா இன்னும் சந்தோஷப்பட்டுருப்பேன்”என்று நினைத்ததை வெளியே சொல்லாமல்
“ஓகே அஸ்வின். சாரு கண்முழித்தவுடன் எனக்கு கால் பண்ணுங்க.. வேறு ஏதும் தேவைனாலும் சொல்லுங்க”
“ஓகே சஞ்சய். நீங்க கவலை படாதிங்க. ஐல் டேக் கேர் ஒப் ஹேர்” என்றுவிட்டு போனை அணைத்தான் அஸ்வின்.
பின் நியாபகம் வந்தவனாக அந்த அலைபேசியில் ஏதோ செய்தவன் பின் அதனை அணைத்துவிட்டு தன் பாக்கெட்டினுள் வைத்துவிட்டான்.
பின் தன் அலைபேசியில் ராக்கேஷிற்க்கு அழைத்து உண்மையை சொல்லி அங்குள்ளவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாது ஒரு அவசர வேலையாக தானும் சாருவும் சொல்லாமல் கிளம்ப வேண்டியதாகிவிட்டது என்று பொய் உரைத்துவிட்டு அதற்கு மன்னிப்பும் வேண்டிவிட்டு போனை அணைத்தான்.
பின் தன் சித்தியை அழைத்து விவரம் கூறியவன் சாருவை அங்கு அழைத்து வரப்போவதையும் கூற அவரும் அதையே ஆமோதித்தார். அவன் பேசி முடித்துவிட்டு வைக்கும் வேளையில் கண்முழித்தாள் சாரு. கண்முழித்ததும் அவள் எழும்ப முயல அவளது அசைவில் அவள் எழுந்ததை உணர்ந்த அஸ்வின்
“ஹே... சாரு எழும்ப முயற்சித்து ஸ்ரெய்ன் பண்ணிக்காதிங்க.. உங்களுக்கு சேலைன் ஏறிட்டு இருக்கு.” என்று அஸ்வின் கூற அப்போது தான் தன் இடக்கையில் உணர்ந்த வலிக்கான காரணத்தை அறிந்தாள். பின்
“நான் எப்படி இங்க??”என்று கேட்க நடந்த தனக்கு தெரிந்த அனைத்து விபரங்களையும் கூறினான். பின் அவளிடம் விபரம் கேட்க அவள் தான் விழுந்த கதையை கூறத்தொடங்கினாள்.
“நான் சஞ்சுவோட பேசிட்டே ஆற்றங்கரை படிக்கட்டுகிட்ட வந்து அங்கு தூணா இருந்த அந்த கல்லு மேல இருந்த அந்த இலைய பிடுங்கிட்டே பேசிட்டு இருந்தேன். திடீர்னு அந்த கல்லில் இருந்த துளையில் இருந்து ஏதோ கருப்பா ஒரு பூச்சி வந்துச்சு. எனக்கு சின்ன வயசுல இருந்தே பூச்சினா பயம். அந்த பூச்சினை பார்த்து பயத்திலே பின்னாடி போக முயற்சி பண்ணேன்.காலை தூக்கி மேலிருந்த படிக்கட்டுல வைக்காம பின்னாடி போக அங்க பாசி படிந்து இருக்க அது வழுக்கி கீழ விழுந்துட்டேன். அதுக்கு பிறகு எனக்கு கான்சியஸ் போயிருச்சி” என்று தன் கதையை சாரு கூற அவள் கூறிய தோரணையில் சிரிப்பு வந்தாலும் அவனது மிக முக்கிய சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டி “ அது சரி ஆனா உங்க மொபைலை மட்டும் எப்படி எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றுனீங்க?” என்று கேட்க அப்போது தான் நியாபகம் வந்தவளாக “என்னோட மொபலை எடுத்துகிட்டீங்களா? இல்லாட்டி மிஸ் ஆகிருச்சா?”என்று கேட்க
“இந்தாங்க உங்க மொபைல்” என்று அஸ்வின் அவளிடம் மொபைலை வழங்க அதை வாங்கிய சாரு அதனை செக் செய்ய
“சஞ்சய் கால் பண்ணி இருந்தாரு. நீங்க கண் முழிச்சோன உங்களை பேசச் சொன்னாரு” என்று கூற அவனது கேள்விக்கு பதில் கூற தொடங்கினாள் சாரு.
“அந்த போன் எனக்கு ரொம்ப முக்கியம். ரொம்ப முக்கியமான சில போல்டர்ஸ் அதுல இருக்கு.சோ கீழ விழப்போறேனு தெரிந்தவுடனே அதை தூர தூக்கி போட்டுட்டேன். எப்படியும் ரிப்பெயார் வராதுனு தெரியும். அந்த நம்பிக்கையில் தூர தூக்கி போட்டுட்டேன்.”என்று சாரு கூற இவ்வளவு நேரம் அஸ்வின் கட்டுப்படுத்தியிருந்த சிரிப்பு உடைப்பெடுத்த வெள்ளமாய் வெளிவரத்தொடங்கியது. அவன் சிரிப்பதை பார்த்த சாரு அவனை முறைக்க அவனோ சிரிப்பை கட்டுப்படுத்தும் வகையறியாது தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தான். அவனின் சிரிப்பில் காண்டான சாரு “இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?? நான் விழுந்தது உங்களுக்கு சிரிப்பா இருக்கா??” என்று சிறு கோபத்துடன் வினவ
“ஐயோ இல்லைங்க.. நீங்க சொன்ன ரீசனை கேட்டோன என்னால வந்த சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை அதான் சிரிச்சிட்டேன். சாரி” என்று மன்னிப்பு கேட்க “ட்ஸ் ஓகே..”
“சாரு ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆகுனோன நம்ம வீட்டுக்கு போகலாம். உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்து அனுப்ப சொல்லிட்டேன். உங்க கை குணமாகிற வரைக்கும் நம்ம வீட்டுலயே தங்கிக்கோங்க. உங்களால தனியா மானேஜ் பண்ண முடியாது.. அதான் இந்த ஐடியா.. சித்திகிட்டயும் சொல்லிட்டேன். அவங்க பார்த்துக்கிறேனு சொல்லிட்டாங்க” என்று கூறிய அஸ்வின் அறையினுள் டாக்டர் நுழைவதை பார்த்து தன் உரையை நிறுத்தினான்.
 

banumathi jayaraman

Well-Known Member
சக்க போடு போடு ராஜா
சிவாஜி: டே டே என்னடா
பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட
TMS: நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சிவாஜி: ஆமா மழை பெய்யுது
நீ வந்து குடைபிடி..ஏண்டா..ங்க்

TMS: சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லிகைப் பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேன்டா..
சக்க போடு போடு ராஜா.............

நல்ல சமயம் இதை விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே
என்ன என்ன?
என்னடா நல்ல சமயம்
வெள்ளி நிலா காயுது
வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளி கையிரண்டில்
ஏந்திக் கொள்ளடா

சக்க போடு போடு ராஜா...........

ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே
ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள் உண்டான
தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டோடுமோ
ஆமாண்டா இப்படி பழமொழி
பேசியே பொழுத கழிச்சிட்டிரு
போடா போ பழம் பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி
பொண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறேன்னடா....

சக்க போடு போடு ராஜா............
தானா கனியுற கனிய ஏன்டா
தடியால அடிச்சி கனிய வைக்கணும்
டேய் என்னை ...நீ ரேய்க்காதே
போராட்டம் இள நெஞ்சத்திலே
உண்டான இந்த நேரத்திலே
உன்னால நான் போட்ட
தொல்லைகள் போதாதா
எட்டி போனால் என்ன
என்னையாடா எட்டி போகச்
சொல்ற
உன்னோடு நான் உண்டானவன்
உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீயில்லை
நீ இன்றி நானில்லை
பிரிக்க முடியாதடா
போதும் போடா நீயும் வாடா
வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே
அடக்க நினைக்காதே
அடிப்பேன்டா நடக்காது
உதைப்பேன்டா .முடியாது
ஏன்டா முடியாது?
கட்டி புடிப்பேன்டா
கழுத்த நெறிப்பேன்டா..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top