ப்ரியசகியே 7

Preetz

Well-Known Member
#1
சகி-7சுந்தரி-மாதுரி

அப்பொழுதுதான் கிளம்பியிருந்த கிருஷ்ணாவிற்கு கையசைத்துவிட்டு வீட்டிற்குள் வந்திருந்தார் சுந்தரி.அந்த வீட்டின் அமைதியே அவரை என்னவோ செய்தது இந்த அமைதி பிடிக்காமல் தானே அவர் அன்று கோவிலுக்கு கிளம்பியது ஆனால் அங்கு நடந்தது அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று அதனால்தானோ என்னவோ எங்கு செல்கிறோம் என்று கூட கவனியாமல் நடந்துவிட்டார். கெட்டதிலும் ஒரு நன்மை என்பார்களே அதுபோல் ஒன்று தான் அன்று அவர் மாதுரியை சந்தித்தது...அவருக்கு என்னவோ அவளை பார்த்தால் மனதில் ஒரு விதமான நிம்மதி, அவள் குரலை கேட்டால் ஒரு சின்னப்புன்னகை….இது எதனால் என்று அவருக்கும் புரியவில்லை ஆனாலும் அவளை பிடித்து இருந்தது. அவளை பற்றிய யோசனையிலிருந்தவருக்கு கதவிற்கு அந்தப்புறமிருந்து அவள் அடித்த காலிங் பெல் கேட்கவேயில்லை. அவளோ சற்று இடைவெளிவிட்டு அடுத்த முறை கதவில் லேசாக தட்டவும் தான் அவர் நிகழ்காலத்திற்கு வந்தார். அப்பொழுதுதான் அவர் அப்படியே உட்கார்ந்துவிட்டதை உணர ‘ச்சே முதல்ல இந்த கனவுல மிதக்குறத நிறுத்தனும்’ என்று தலையை உலுக்கிக்கொண்டு கதவை திறந்தார்.திறந்தவருக்கு ஆச்சர்யம் என்னவென்றால் அவர் யாரைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தாரோ அவளே நேரில் நின்றுக்கொண்டிருந்தாள். அவள் இன்று வருவாள் என்பது அவருக்கு தெரிந்த விஷயமே ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவாளென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
‘மாதுரி!!!! வா வா’
‘ஹப்பா!!! கதவை திறக்கலன்ன உடனே டென்ஷனாகிட்டேன் தெரியுமா….இப்போ உங்க ஹெல்த் எப்படி இருக்கு? ஓகே வா?’
‘ம்ம் இப்போ ஒன்னுமேயில்லை தெரியுமா...என்னவிட்டா இப்போ மாரத்தானிலயே ஓடுவேன்’
‘விட்டா தானே’என்று அவள் கிண்டலாக சிரிக்க
‘என்னையவே கிண்டலடிக்கற பார்த்தியா’என்று அவர் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க
‘சரி ஓகே நீங்க மாரத்தான்ல ஓடும்போது என்னையும் கூப்பிடுங்க’
‘ஏன் நீயும் என்கூட ஓடப்போறியா என்ன?’
‘ச்சே...என்ன வார்த்தை சொல்லிட்டீங்க என்னை பார்த்து’
‘ஏன்மா நான் அப்படி என்ன சொல்லிட்டேன்?’
‘நானெல்லாம் ஓடுனா இந்த நாடு தாங்குமா?’
‘அதுசரி...அப்புறம் எதுக்கு நான் உன்னை கூப்பிடனும்?’
‘அதுவா நீங்க சீறும் சிறுத்தையா ஓடுறத நான் பாப்கார்ன் சாப்ட்டுட்டே பவிலியன்ல இருந்து பார்க்க வேண்டாமா ?’ என்க
‘உனக்கு ஜாமுன் கட்டு’ என்று அவர் எழ
‘என்னது ஜாமுனா???’
‘ஆமா ஜாமுன்தான் உனக்காக இன்னைக்கு ஸ்பெஷலா செய்யலாம்னு இருந்தேன் ஆனா நீ என்னையவே கலாய்ச்சிட்டல’ என அவர் பொய் கோபம் காட்ட அது பொய் என்று தெரிந்தும் அவள் சமாதானம் செய்தாள்….அங்கு ஒரு அழகான உறவு ஆரம்பமானது.

கிருஷ்ணா

அந்த காலை நேர நெரிசலில் ஒரு சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.காலையில் கிளம்பும்போதே சுந்தரி கேட்கத்தான் செய்தார் அவ்வளவு தூரம் போகத்தான் வேண்டுமா என்று இவன்தான் ‘நல்ல கம்பனிமா இங்க மட்டும் வேலை கிடைச்சா நாம அங்க பக்கத்திலயே எங்கயாவது வீடு பார்த்துக்கலாம்’ என்று சமாளித்தான் அவனுக்கல்லவா தெரியும் இங்கு வந்த ஒரு மாதத்தில் எத்தனை இடம் ஏறி இறங்கினான் என்று கையில் இருக்கும் சேமிப்பு வேறு கரைந்துக்கொண்டிருந்தது. வேலையை விடும்போதுக்கூட அவன் இவ்வளவு யோசிக்கவில்லை, அவன் சூழ்நிலை அவனை யோசிக்க விடவுமில்லை.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு அவன் அந்த வேதா அன்ட் கம்பனீஸ் முன் வந்து நின்றான் வண்டியை நிறுத்திவிட்டு அந்த கட்டத்திற்குள் நுழைந்தான். எப்படியாவது இங்கு வேலை கிடைத்துவிட வேண்டும் என்ற வேண்டுதலே அவனிடம் இருந்தது….
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa