பெண்ணே நீ by Shanisha

#1
_191102_215002_844.jpg மண்ணில் பாவாத கால்களென்ன விண்ணை தொடும் ஆசைகளென்ன
முகம் கொள்ளா சிரிப்பென்ன
வில்லாய் வளைக்கும் உடலென்ன


பெண்ணே நீ
தொட்டு விட்ட வெற்றியின்
தூரம் தான் வானம்


நீ முயன்றாய்- கல்வி
உன் வசமாச்சு
வீடு முதல் விண்வெளி வரை உன் வசமாச்சு


நீ கால் பதிக்கா இடமேது
உன்னை கால் இடற ஆட்கள் உண்டு


உறவுகள் எனும் தானா சேரும் கூட்டம்
நான் ஆணென வீணா கத்தும் கூட்டம்


பிஞ்சுகளை கூட
பிய்த்து எறியும்
பிசாசு கூட்டமும் உண்டு


பெண்ணே எதிரியாகி பொறாமை கொண்டு
நெறி தவறி முன்னேறியவள் என வெறிகொண்டு பழிக்கும்
தயங்காதே தகர்த்து எறி
தடைகளை உடைத்து எறி


சரித்திரம் படைக்கும் பெண் அரசியாய்
சராசரி உணர்வுகளுடன் சகமனுஷியாய் சந்தோசித்திரு
பெண்ணே நீ
என்றென்றும்!!!!!
 
Advertisement

New Episodes