பூவே வாய் திறவாயோ - 09

#1
பூ - 09


மாப்பிள்ளையும் பெண்ணும் பேசி விட்டு இன்னும் வரவில்லை என்றதும் ரவீந்திரனை விடுத்து அழைத்து வர சொல்ல வேகமாக சென்றவன் "பாப்பா பேசி முடிச்சாச்சுன்னா வர சொன்னாங்க" என்றதும் "ஆ பேசிட்டோம் ண்ணா" என்று குரல் கொடுத்தவள் "சரி" என்று பாலாவின் முகத்தை பார்க்க


"ம் உன்னோட போன் நம்பர்" என்றதும் "சாரி போன் நாட் ஆலோவ்டு படிச்சு முடிக்கிற வரைக்கும் போன் யூஸ் பண்ண அனுமதி இல்ல தப்பா நினைச்சுக்காதீங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்று கூற


"பரவாயில்ல அப்ப நா கிளம்புறேன்" என்றவன் பிரிய மனமில்லாமல் நளாவை திரும்பி பார்த்த படி செல்ல "டேய் முன்னாடி பாத்து போ படி இருக்கு கீழ விழுந்து தொலைஞ்சிறாத" என்ற வம்சி "நீ போ நா வறேன்" என்க "சரி சீக்கிரம் வா" என்றவனுடன் நளாவும் சென்று விட


அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் நிரஞ்சனாவிடம் திரும்பி "உனக்கு கொடுத்த பனிஸ்மெண்ட் சோ நீ தான் பண்ணனனும் என்னால முடியாது" என்று புத்தகத்தை கொடுக்க அவனை மேலும் கீழும் பார்த்தவள் "தப்பு செய்றவங்கள விட செய்ய தூண்டுனவங்களுக்கு தான் அதிக தண்டனை!, சோ நேத்து கிளாஸ் கவனிக்காம இருந்தது என்னோட தப்பு தான் அதுக்கு எனக்கு பனிஸ்மெண்ட் கிடைச்சுருச்சு" என்றவள் "செய்ய தூண்டுனவங்களுக்கு பனிஸ்மெண்ட் கிடைக்க வேணாமா? நீங்க தான் எழுதணும் எழுதிட்டு வர்றிங்க முடியாதுன்னு சொன்னிங்க நா நேரா உங்க அத்தை கிட்ட போய் சொல்ல வேண்டியது வரும்" என்று கூற


"என்ன சொல்லுவ இவரால கிளாஸ் கவனிக்க முடியாம போச்சுன்னா!" என்றான் நக்கலாக


"அப்டியெல்லாம் சொல்ல மாட்டேன் நீங்களும் நானும் லவ் பண்றோம்னு சொல்லுவேன் சாட்சி உங்க தம்பி அப்றம் மேனேஜர் அண்ட் மை பிரெண்ட்" என்று அசல்டாக கூறியவள் "இப்போ என்ன பண்ணுவா" என்ற ரீதியில் பார்க்க


வம்சி வாயில் கை வைக்காத குறையாக "அடி பாவி சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல நிக்கிற தோரணைய பாரு! என அவளை திகைப்புடன் பார்த்தவன் சட்டென முகத்தை மாற்றி கொண்டு "என்ன மிரட்டுரயா! ஒரு வேளை நா ஆமா லவ் பண்றோம்னு சொன்னா என்ன பண்ணுவ!" என்று புருவம் உயர்த்தி கேட்க


சற்று திகைத்தவள் "சொன்னாலும் சொல்லிருவானோ?" என அவனை ஆழ்ந்து நோக்கிவிட்டு "சொல்ல மாட்டீங்க உங்கள பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும் சார் உங்களுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லன்னு சொன்னதால தான் தம்பியோட கல்யாணத்தை நடத்த முடிவு பண்ணிருக்காங்க" என்றவள் "ஏ சார் என்ன பேச வைக்கிறீங்க பாருங்க மூச்சு இரைக்குது ப்ச் குடிக்க சோடா கூட இல்ல" என்று சோகமாய் கூறிவிட்டு "எழுதிட்டு வர்றிங்க அவ்ளோ தான்!" என்று கட்டளை இடும் குரலில் கூறியவள் அவன் மேற்கொண்டு பேசுவதற்கு இடம் கொடுக்காமல் விறுவிறுவென செல்ல


"உங்கப்பவுக்காக தானே பேச வந்த!" என்றதும் கால்கள் சட்டென நின்றன "அந்த கடைய எப்டி வாங்கணும்னு எனக்கு தெரியும் நீ பேசிட்டு போன பிறகு யோசிச்சு பாத்தேன்!, சும்மா இல்ல சாப்பிடும் போது நடக்கும் போது குளிக்கும் போது இவ்ளவு ஏ தூங்கும் போது கூட கனவுல நீ பேசிட்டு போனத பத்தி தான் யோசிச்சேன் நீ பேசுன பிறகு தான் அந்த கடைய எப்டியாவது வாங்கிறணுமன்ற எண்ணம் அதிகமா வந்திருச்சு சோ என்னோட முடிவ மாத்திக்க முடியாது, அடுத்தவங்க வயித்துல அடிச்சு பொழப்பு நடத்துறவன் திமிரு பிடிச்சவன்னு நீ என்ன பத்தி என்ன வேணாலும் நினைச்சுக்கலாம் அத பத்தி ஐ டோன்ட் கேர்" என்று உதட்டை பிதுக்கி காட்ட


தீயாய் முறைத்தவள் "அதையும் பாப்போம் எங்கப்பா மனசு கஷ்டப்படுற மாதிரி நா விட மாட்டேன் அந்த கடை எந்த அளவுக்கு அப்பாவுக்கு நெருக்கமானதுன்னு எனக்கு தான் தெரியும் நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க எனக்கும் பிடிவாதம் ஜாஸ்தி நானும் என்னோட எண்ணத்துல இருந்து மாற மாட்டேன் பாத்துருவோம் நீங்க எப்டி வாங்குறிங்கன்னு!" என்று சவாலாக கூறிவிட்டு "அதுக்காக எழுதாம வந்துற கூடாது சரியா" என எச்சரிக்கும் குரலில் கூறி விட்டு செல்ல


"பாப்போம்" என்றவனின் உதட்டில் சிறு புன்னகை தவழ்ந்தது "சரியான வாயாடியா இருப்பா போல என்ன பேச்சு பேசுறா கட்டிக்க போறவன் என்ன பாடு பட போறேன்னோ பாவம் அப்ராணியா மட்டும் சிக்கினான் சின்னா பின்னம் ஆகிருவான் ராங்கி சோடா வேணுமாம்ல சோடா!" என தனக்கு தானே பேசி கொண்டு உள்ளே வந்தான்


"சரிங்க நாங்க கிளம்புறோம் கல்யாண தேதி குறிச்சிட்டு சொல்லி விடுறோம்" என்றவர்கள் நளாவிடம் "பாத்து இரும்மா" என்று விட்டு நிருவின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்த பல்லவி "பாத்து இரு ஒத்தியில எங்கயும் போகாத ரெண்டுபேரும் துணைக்கு யாரையாவது கூட்டிட்டு தான் போகணும் சரியா அப்றம் நாங்க வறோம்" என்று கிளம்ப பல்லவியின் பேச்சில் குழம்பி போனவள் தாய் தந்தையை பார்க்க அவர்கள் இவள் பக்கமே திருப்பி பார்க்க வில்லை மாப்பிளை வீட்டாரை வழி அனுப்பி வைப்பதில் மும்முரமாக இருந்தனர்


பாலாவும் வம்சியும் அவர்கள் வந்த காரில் ஏறிக்கொள்ள மற்றவர்கள் வேறு ஒரு காரில் ஏறிக்கொண்டதும் கார் கிளம்பியது


அறைக்கு வந்த நளா "என்னடி நிரு என்ன நடக்குது பல்லவி பெரியம்மா எதுக்கு அப்டி சொல்லிட்டு போனாங்க எனக்கு ஒண்ணுமே புரியல" என்று அலங்காரத்தை கலைத்து கொண்டே கூற


"எனக்கு மட்டும் என்ன தெரியும் நானும் உன்கூட தானே இருந்தேன்" என்றவள் "சரி நா வீட்டுக்கு போறேன் ரொம்ப டையர்டா இருக்கு" என்று கூற "ஏய் சாப்ட்டு போ அவங்க எல்லாரும் இருந்தாங்க அதனால ஒழுங்காவே சாப்பிட முடியல அறைக்குறையா தான் சாப்டேன் நீ அதுவும் இல்ல வந்து சாப்பிடு உங்க வீட்டுல எதுவும் பண்ணல" என்றவள் "கொஞ்ச இரு முகத்தை கழுவிட்டு வறேன் போயிறாத!" என்றுவிட்டு குளியலறை புகுந்தாள்


மாப்பிளை விட்டார் சென்ற பின்பு தான் வீட்டில் இருந்தவர்கள் உண்ண தொடங்கினர் இரவு உணவை முடித்து சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்த சரோஜா "அருணா நிரு இன்னைக்கு இங்கயே நளாக்கு துணையா படுக்கட்டுமா!" என்று கேட்க


"இதுல என்ன க்கா இருக்கு படுகட்டும்" என்றவர் "என்ன நிரு இங்க படுத்துகிறயா?" என்று கேட்க


"ம் சரிம்மா" என்றவள் கண்ணடித்து "உன்னோட லவ்ஸ் ஆரம்பி அதுக்கு நா டிஸ்டப்பா இருக்க மாட்டேன்" என்க "அடி வாலு என்ன பேச்சு பேசுற!" என்று கையை ஓங்க "நா கடைய விரிக்க போறேன்" என்று அறைக்குள் சென்று விட்டாள்


"சரிக்கா நா போய்ட்டு காலையில வறேன்" என்று அருணா கிளம்பி விட மூர்த்தி இரவு முக்கியமான வேலை இருப்பதாக சென்றுவிட்டார் ரவீந்திரன் அன்றைய களைப்பில் உண்டதும் உறங்க சென்றுவிட்டான் கதவை மூடி விட்டு விளக்கை அணைத்து விட்டு வெளியே ஹாலில் விரிப்பை போட்டு படுத்து கொண்டார் சரோஜா


"ஹப்பா என்ன மாதிரியான ஆளு நா கூட என்னமோ நினைச்சேன் ஆனா வேற மாதிரி இருக்காரு எவ்ளோ வெளிப்படையா பேசுறாறு இன்னேரம் என்ன பண்ணிட்டு இருப்பாரு? தூங்கிருப்பாறா?" என்று தன் போக்கில் பேசி கொண்டிருந்தவள் அருகில் படுத்திருந்தவளை பார்க்க நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் "இவளுக்கு மட்டும் எப்டி தான் படுத்ததும் தூக்கம் வருதுன்னு தெரியல நாமா கண்ண முடினாலும் உறக்கம் வருவேனாங்குது" என புலம்பியவள் விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்


---------------------------------------------


மறுநாள் காலை ஒன்பது மணியாகியும் இருவரும் கீழே இறங்கி வராதை கண்டு எழுப்பிவிட மேலே சென்ற சோபனா பால்கனியில் சுள்ளென வெயில் முகத்தில் அடிப்பதையும் பொருட்படுத்தாமல் உறங்கி கொண்டிருந்தவனை கண்டு "இவனுக்கு என்னாச்சு ரூம்ல தூங்காம இங்க வந்து படுத்துட்டு இருக்கான்" என எண்ணியவர் "டேய் பாலா எந்திரிடா மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க எந்திரி வெயில் அடிக்கிறது கூட உரைக்காம தூங்கிட்டு இருக்க" என்று சத்தம் போட்டு எழுப்ப


"என்ன பெரியம்மா நீங்க! என்ன வேணும் உங்களுக்கு தயவுசெஞ்சு என்ன தூங்க விடுங்க நானே நைட்டெல்லாம் தூங்காம மூணு மணி வாக்குல தான் வந்து படுத்தேன்" என சலித்து கொண்டவன் "எனக்கு எதுவும் வேணாம் இப்போதைக்கு தூங்கனும் தூக்கம் மட்டும் தான் வேணும்" என்று மீண்டும் போர்வையை இழுத்து போர்த்தியவன் "பிள்ளை தான் நைடெல்லாம் பாடா படுத்துனான்னா இப்போ அம்மாவும் சேந்து" என்று முணுமுணுதவாறே உறங்கியவனை ஏதோ ஓர் ஜந்துவை பார்ப்பது போல பார்த்து விட்டு சென்றவர் வம்சியின் அறை கதவை தட்டினார்


பதில் எதுவும் இல்லாமல் போக பலமாக கதவை தட்டி "டேய் வம்சி கதவை திறடா எவ்ளோ நேரமா தட்டிட்டு இருக்கேன் காது கேக்குதா இல்லையா?" என்று கத்த


வேகமாக கதவை திறந்தவன் "இப்போ எதுக்கு கத்துறீங்க எந்திரிச்சு வந்து கதவ திறக்கிறதுக்குள்ள என்ன அவசரம் சொல்லுங்கம்மா என்ன வேணும்?" என்க


கண்கள் சிவந்து போய் இருக்க உறங்கவில்லை என அவன் முகம் அப்பட்டமாய் காட்டிக்கொடுத்தது கண்களை கசக்கி கொண்டு "சொல்லுங்கம்மா என்ன வேணும் எதுவும் இல்லன்னா சரி" என்று கதவை அடைக்க போக


"டேய் இருடா நா இன்னும் சொல்லவே இல்ல நைட்டு தூங்கலைய தூங்கமா என்னடா பண்ண கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு" என்று அக்கறையுடன் கேட்க


"ப்ச் அத கேட்டு என்ன பண்ண போறீங்க தலாட்டு பாடி தூங்க வைக்க போறீங்களா?" என்றதும் முறைத்து பார்த்த சோபாவை கண்டு "போங்கம்மா எனக்கு வேலை இருக்கு அப்றமா நானே கீழ இறங்கி வருவேன் அது வரைக்கும் யாரும் என்ன டிஸ்டப் பண்ண வேணாம்" என்று கூற


"டேய் என்ன வேலைய இருந்தாலும் சாப்ட்டுட்டு பாருடா இன்னைக்கு கடை லீவ் தானே அப்றம் என்ன?"


"ப்ச் ஒரு தடவை சொன்னா சரின்னு போயிறனும் இப்டி நிப்பாட்டி கேள்வி கேட்டுட்டு இருக்க கூடாது என்னோட டைம் வேஸ்ட் ஆகுதா இல்லையா!" என்றவன் அதற்குமேல் பேச்சு கொடுக்காமல் கதவை சாத்தி விட மூடிய கதவை வெறித்து கொண்டிருந்தார் சோபனா


அருணா சந்திர சேகர் எப்படி சொல்வது யார் சொல்வது என விவாதம் செய்து கொண்டிருக்க "அம்மா" என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தாள் நிரஞ்சனா


இருவரும் திருதிருவென முழிப்பதை கண்டு புருவம் சுருக்கி பார்த்தவள் "அம்மா காபி" என்று கூற


"உக்காரும்மா கொண்டு வறேன்" என்றவர் "என்னங்க உங்களுக்கு!"


"கொண்டுவாம்மா" என்றதும் வேகமாக அடுபடிக்கு செல்ல மகளின் முகத்தையே தயங்கியபடி பார்த்து கொண்டிருந்தார் சந்திர சேகர் "என்னப்பா ஏதாவது சொல்லனும்மா இப்டி பாக்குறிங்க என்னைக்கும் பாக்காத மாதிரி!" என்று கேட்க


"இல்லடா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், அதுக்கு முன்னாடி அப்பா அம்மா உன்னோட லைஃப்ல எடுக்குற முடிவு எந்த மாதிரி இருக்கும்னு கொஞ்சம் சொல்லுடா" என்க


"எதுக்குப்பா இந்த திடீர் கேள்வி" என்றதும் "சும்மா சொல்லுடா தெரிஞ்சுக்க தான்" என்று கூற


"காபி குடிச்சிட்டு சொல்லவா வாசம் இங்க வருது அப்றம் குடிக்கிற இன்ரஸ்ட் போயிரும்" என்று கூற


"சரி" என்றவர் "அருணா சீக்கிரம் கொண்டுவாம்மா" என்று குரல் கொடுக்க


"இதோ வந்துட்டேங்க" என்ற அருணா மகளிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு கணவருக்கு ஒன்றை கொடுத்து விட்டு மகளின் அருகில் அமர ரசித்து குடித்து முடித்தவள் இருவரின் ஆர்வத்தையும் அதே சமயம் கலவரத்தையும் கண்டு "என்னாச்சு இவங்களுக்கு" என நினைத்து கொண்டே "சொல்லுங்கப்பா நா என்ன சொல்லணும்?"


"அதாண்டா நாங்க உன்னோட லைஃப்ல எடுக்குற முடிவு நல்லதா இருக்கும்னு நினைக்கிறயா இல்ல கெட்டதா!" என்று முடிப்பதற்குள் "அப்பா" என்று குறுக்கிட்டவள் "உங்க ரெண்டுபேரு மேலயும் நா ரொம்ப மரியாதை வச்சுருக்கேன் உங்க சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம் எனக்காக நீங்க நிறைய விட்டு கொடுத்துருகிங்க நா கேக்காமலே என்னோட தேவை என்னன்னு அறிஞ்சு நிறைவேத்திருக்கிங்க என்னோட லைஃப்ல என்ன மாதிரியான முடிவா இருந்தாலும் சரி அத எடுக்குற முதல் உரிமை உங்களுக்கு தான் இருக்கு அதுக்கப்றம் தான் எனக்கு"


"எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு நீங்களும் அம்மாவும் பாத்து பாத்து செய்யிறீங்க உங்கள மாதிரி ஒரு பேரன்ஸ் கிடைக்க நா குடுத்துவச்சுறுக்கணும்" என்றவள் "இப்போ சொல்லுங்க என்ன விஷயம்" என்று கேட்க


மகள் பேசியதில் தாய் தந்தை இருவருக்கும் அளவில்லாத ஆனந்தம் உண்டானது இருந்தாலும் அவளது வாழ்வு சிறக்கவே நிச்சயம் செய்தது, அதில் அவள் முடிவு அதுவும் மனநிறைவான முடிவாக இருக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருவருக்கும் உண்டாக மறுபடியும் காரணத்தை கூறாமல் பேச ஆரம்பித்தார்


"இல்லடா உன்னோட வாழ்க்கைய பத்தி நிறைய கற்பனை பண்ணிருப்பா தானே அத பத்தி" என்றதும் "அப்பா எதுவும் கிடைக்காம இருந்தா தான் நா கற்பனை பண்ணனும் ஆசைப்படனும் ஆனா எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்ல என்ன பத்தி என்னோட எதிர்கால வாழ்க்கைய பத்தி நீங்க என்ன முடிவு பண்ணாலும் எனக்கு முழு சம்மதம் தான் இப்போயாவது சொல்லுங்களே என்ன விஷயம்ன்னு" என்று பொறுமையை இழுத்து பிடித்து கேட்க


"இல்லடா நேத்து நளாவ நிச்சயம் பண்ணோமே"


"ஆமா அதுக்கு என்னப்பா!"


"அவங்க" என்று சந்திர சேகர் தயங்க


"என்னங்க டக்குன்னு சொல்லிற வேண்டியது தானே நீட்டி முழுங்கிட்டு இருக்கிங்க" என்ற அருணா "இல்லடா உனக்கும் நிச்சயம் பண்ணிட்டோம்" என்றதும் "என்னம்மா சொல்றிங்க!" என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை அதிர்ச்சியுடன் அமர்ந்திருத்தாள் இப்படி ஒரு விஷயத்தை கூறுவார்கள் என அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை


"நளாவ கட்டிக்க போறாருல மாப்பிளை தம்பி அவரோட அண்ணன தான் உனக்கு நிச்சயம் பண்ணிருக்கோம் உன்னகிட்ட கேக்க முடியல பெரியவாங்க நாங்களா பேசி முடிவு பண்ணிட்டோம்" என்றவர் "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ன்னு சும்மாவா சொல்லிருக்காங்க நல்ல சம்பந்தம் தேடி போனாலும் கிடைக்காது அவங்களா வந்து பொண்ண பிடிச்சிருக்கு கொடுங்கன்னு கேக்கும் போது எப்டிடா வேணாம்னு சொல்றது" என்று பேசியவர் மகளின் முகத்தை வாட்டத்தை பார்க்க சற்று முன் இருந்த முகம் மாறி சோகத்தை அப்பி கொண்டது


கணவரின் முகத்தை கவலையுடன் ஏறிட "இரு" என்று கண் ஜாடையாக கூறியவர் "உன்கிட்ட கேக்காதது எங்க தப்பு தான் ஆனா பெத்தவங்க இடத்தில இருந்து யோசிச்சு பாக்கும் போது சரின்னு தான் தோணுச்சு சாரிடா உனக்கு விருப்பம் இல்லன்னா சொல்லிரு அவங்ககிட்ட ஏதாவது ஒரு காரணம் சொல்லிடுறேன்" என்று கூற


தந்தையின் முகம் சோர்ந்து போய் இருப்பதை பார்த்தவள் "இல்லப்பா நீங்க நல்ல முடிவு தான் எடுத்துருக்கிங்க நீங்க வருத்தபட தேவையில்ல எனக்கு முழு சம்மதம்" என்று சுரத்தே இல்லாமல் கூற


"நிஜமாவா சொல்ற எங்க சந்தோஷத்துக்காக பொய் சொல்லலேயே" என்று விடாமல் சந்திர சேகர் கேட்க


"அப்பா என்ன இது" என்றவள் "அப்பாடி இப்போயாவது எனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு உங்களுக்கு தோணுச்சே எங்க கடைசி வரைக்கும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம காரைக்கால் அம்மையார் ஒளவ்வையார் மாதிரி ஆக்கிருவீங்கலோன்னு நினைச்சேன் பரவாயில்ல தமாதமான முடிவு" என்று அப்போதைக்கு அவர்களின் மனநிலையை மாற்ற கூற


இருவரும் மகளை முறைத்தனர் "பின்ன என்னவாம் படிப்பு முடிய போகுது பிள்ளைக்கு மாப்பிள்ளை பாப்போன்னு ஒரு பொறுப்பு இருக்கா நல்லவேளை நானே மாப்பிள்ளைய பாருங்கன்னு சொல்றதுக்கு முன்னாடியே பாத்துடீங்க" என்று அலட்டி கொள்ள


"வாலு வாய் கொறையுதான்னு பாரு அப்டியே நாலு போட்டேன்னா" என்று கூறிய அருணா "நிஜமாவே உனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தானே" என்று மனம் தாளாமல் கேட்க


"ப்ச் ஒரு தடவை தான் சொல்ல முடியும் ஓயமாலாம் சொல்லிட்டு இருக்க முடியாது எனக்கு முழு சம்மதம்" என்று சிரித்தபடி கூற


மகளின் கன்னத்தை தடவி திருஷ்டி கழித்த அருணா "சரிம்மா போய் குளிச்சிட்டு வா உனக்கு பிடிச்ச தேங்காய்பால் பிரிஞ்சு பண்ணிருக்கேன் சாப்ட்டுட்டு கோயிலுக்கு போயிட்டு வரலாம்" என்றவர் "கோயிலுக்கு போறதால சேலை கட்டிட்டு வாடா அது தான் நல்லா இருக்கும்" என்று கூற


"சரிம்மா" என்று நிரஞ்சனா அறைக்குள் சென்றுவிட "நீங்க ஏ உக்காந்துட்டு இருக்கீங்க போய் குளிச்சிட்டு வாங்க" என கணவரிடம் கூறிவிட்டு அடுக்களை சென்று விட்டார்


இங்கிருக்கும் சூழ்நிலைக்கு நேர்மாறாக வம்சி கிருஷ்ணா பல்லவியிடம் விவாதம் செய்து கொண்டிருந்தான் கோபமாக
 
#5
Yedo thambi ithu than thavarana Seyal,manasu than yethukitu night ellam iruthu imposition yezhuthitu irruki gala, pinna entha oru gemmae?sattham illathu katikondu podo.Unnda athay, vendamna niruthira pora.pinna unnaku than kashtum.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement