புடலங்காய் கடலைப் பருப்பு வறுவல்

Sahi

Well-Known Member
#1
தேவையானப்பொருட்கள்:
புடலங்காய் - 1
கடலைப் பருப்பு - 1/2 கப்/50 g
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை 3/4 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும்.
மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாயை பொடித்து அதோடு ஊறவைத்த கடலைப் பருப்பை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து ஒருமுறை ஓட்டி எடுக்கவும். விழுதாக அரைக்க வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புடலங்காய் போட்டு வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
புடலங்காய் வெந்ததும் அரைத்து வைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு மிதமான தீயில் சிவக்க வறுத்தெடுக்கவும்.
கொஞ்சம் பொறுமையாக, நிறைய எண்ணெய் விட்டு செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
செய்துப்பார்த்துவிட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு.
நன்றி.

vlcsnap-8115-10-22-22h31m08s921.png
 

Latest profile posts

ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்னைக்கு நோ அப்டேட். சண்டே கொஞ்சம் பிசி ஆகிட்டேன். :) நாளைக்கு கண்டிப்பா உண்டு :)
banumathi jayaraman wrote on சரண்யா's profile.
உங்களுடைய புதிய அழகிய நாவலை இங்கே பதிவிடுவது குறித்து இந்த அழகான தளத்தின் admin ஸ்ரீமதி மல்லிகா மணிவண்ணன் டியர் அவர்களை @mallika Profile-லில் or இந்த தளத்தின் moderator சரயு டியர் அவர்களை @Sarayu
Profile-லில் தொடர்பு கொள்ளுங்கள், சரண்யா டியர்
shiyamala sothy wrote on GomathyArun's profile.
HAPPY BIRTHDAY GOMATHYARUN!

Sponsored