பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 132. புலவி நுணுக்கம், குறள் எண்:- 1314 & 1315.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1314:
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள் :- காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள் :- காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

தலைவனுடன் தலைவி ஊடிக்கொண்டிருக்கும் படுக்கையறைக் காட்சி தொடர்கிறது. பிறமகளிர் தொடர்பு உள்ளவன் தலைவன் என்று பொய்யான உறவைக் கற்பனை செய்து அவனைக் காய்கிறாள் காதலி. சினமும் கண்ணீரும் அழுகையுமாக இவ்வதிகாரத்தில் தோன்றுகிறாள் அவள். அவன் எது செய்தாலும் அவளுக்கு எரிச்சல் உண்டாகிறது; அவன் எது சொன்னாலும் குற்றமாகப்படுகிறது. இந்த ஊடல் நாடகத்தின் வழி தலைவி தலைவனைத் தனக்கு-தனக்குமட்டுமே உரிமைகொண்டாடுதலும் (possessiveness) அவர்களிடையேயான உழுவலன்பும் (எழுமையுந் தொடர்ந்துவரும் அன்பு) கலைத்திறனோடு சொல்லப்பட்டுள்ளன.

பெண்ணும் பெண்தன்மை கொண்டவரும் உன் பரந்த மார்பு மேல் பார்வை செலுத்துவதால் அதை நாட மறுக்கிறேன். நீடு வாழ்க என வாழ்த்துவேன் என்று ஊடலாக இருக்கும் பொழுது தும்மினார். புது மலர் சூடி இருந்தால் யாரை எண்ணிச் சூடினீர் என்கிறாள். உன்னிலும் அழகி யாரும் இல்லை என்றாலும் யாருடன் ஒப்புமை செய்கிறீர் என்று கேட்கிறாள். இப் பிறவியில் உன்னை பிரியேன் என்றாலும் கண்ணிர் வழிய வாடினாள் அடுத்த பிறவிக்கு ஆள் கிடைத்ததோ என்பதைப் போல். நினைத்தேன் என்றதும் மறத்தீரோ என்று விலகினாள். தும்பினேன் வாழ்த்தினாள் மறுகணமே யாரை எண்ணி தும்மினீர் என்கிறாள் சரி அடக்கினேன் அதற்கும் அறியாதபடி மறைக்க முயல்கிறாய் என்கிறாள். அவளது நற்செயலை பாராட்டினாலும் வறுந்துகிறாள் இப்படித்தான் அடுத்தவளையும் தேற்றுகிறாயா என்று. அவளையே நினைத்தபடி பார்பினும் வருந்துகிறாள் யாரை நினைத்து என்னை பார்க்கிறாய் என்று.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes