பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 122. கனவுநிலையுரைத்தல், குறள் எண்: 1213 & 1218.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1213:
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

பொருள் :- நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

பொருள் :- என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

தலைமகள் தலைமகனைப்பற்றித் தான்கண்ட கனவுகளின் இயல்பை சொல்லுதல். தான் கனவு காண்பதற்கு வழி செய்யும் வகையில், கலக்கமுற்று இருக்கும் கண்களை உறங்குமாறு கெஞ்சுவேன் என்கிறாள் தலைவி. கனவில் காதலனைக் கண்டு, கலந்து, மகிழ்கிறாள். 'விழிப்பு ஏன் வருகிறது? கனவில் வந்த காதலர் பிரிந்துவிட்டாரே!' எனச் சொல்லி கனவுநிலை தொடரவேண்டும் என விழைகிறாள். கனவில் காதலரைக் காண அறியாதவர்தாம் நனவில் அருள் செய்யாதவரை நொந்து உரைப்பர் என்கிறாள்.

காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes