நேச நதி -24(final)

Advertisement

KP JAY

Well-Known Member
This story is kind of selfish love story which happens in real world.In reality the consequences are really bad .The acceptance wont come that easy.Even in arranged marriages discrimination happens .As usual author writing good.I feel sorry for Prasanna why everybody feel what he does is wrong.I see nowadays guys who follow family traditions and follow parental guidelines are treated as bad person or timid or shy where as person who is selfish never follows parental guidelines are treated as heroes.According to me how Prasanna behaves is not shocking he is been taught about family values culture in that case a Bhavana's back ground is not so good.Vijay from the first he never follows father instruction. From a third eye point of view Vijay is selfish person only.What if Bhavanas nature is money minded .Inreality as parents would prefer Prasanna than Vijay at the same time 95% of the family won't accept Bhavana.As author rightly said this story is different from her previous ones.
Discrimination alavukku kondupogaathinga..
Thappunna thappu

Antha thappa ellarum easy ya aethukka maattaanga
This is discrimination only. If vijay’s father sees pavana as an individual person and list a number of negative characters as reason for his opposing, then i will agree. Avaloda parents vachu ava etho vaazhave thaguthi illathava maathiri pesurathu romba thappu. ipdi naama oru pre mindsetla irunthonna, nammalala nalla manusangala sambarikka mudiyathu. Eanna nalla manusanga ellam background la irunthum vanthurukkanga.
 

MAR

Active Member
Any culture should not teach discrimination. All are equal on this earth and this earth is for everyone. If pavana herself is not a good girl and if she does not follow any morals, then prasanna can oppose. Just bcaz she is unfortunate to get good parents, that does not mean that she cant dream for anything good in her life.
Agreed but I feel author is trying to justify each character in this story.Nobody is right or wrong here.Unless time heals everyone.Thats of how family .Family will have discrimination.All family are bounded by society. Some family follows society or communityrules strictly and some dont. Nobody will give a warm or red carpet welcome for girls like Bhavana This is hard to digest but that's the reality.It will take lot off time to accept them.As a reader u support Bhavana I support Prasanna intentions but yes his words needs to be refined.If I am Prasanna I would have stopped to talking to Vijay n Bhavana.Silence is a biggest weapon .
 

Shaloo Stephen

Well-Known Member
Nice story dear.
Matraya story vida ithu romba thathrubama irrunththu.
Yathartha manusha gunangalodu nalla oru feel good story.
Kochu pullaru eppadi serious ah na situations ellam simplify pannividuranga,ithama irrunthathu.
Katha mudiju allo, seri vidungo part 2 pola continue pannungo, nangalu ellam eager ah wait seyuthu.
Super story, super script author ji.
 

MAR

Active Member
நான் சொன்ன கருத்து தான் தவறாக இருந்துச்சான்னு எனக்கு சரியாக தெரியல கண்டிப்பாக உங்களை காயப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ உங்கள் மேல் கோப பட்டோ நான் எந்த கருத்தும் சொல்லல . எனக்கு பிடிக்காத விஷயத்தை வெளிப்படையாக சொன்னேன் அதை சொல்ல நான் பயன்படுத்தின‌ வார்த்தை தான் தவறாகிடுச்சு நினைக்கிறேன். எப்பவும் டைப் பண்ணிகிட்டு இரண்டு தடவை வாசிச்சு பார்த்துட்டு ஏதாவது தப்பான வார்த்தை இருக்கான்னு செக் பண்ணிட்டு தான் பதிவிடுவேன். ஒருவேளை என்னோட பார்வையில் நான் போட்டது சரியா தெரிஞ்சிருக்கலாம் ஏன்னா என் மனசுல ஒரு புரிதல் இருக்கும் நான் அந்த கோணத்தில் யோசிச்சு நான் ஒரு அர்த்தத்தில் போட்டுருப்பேன் ஆனால் அது உங்க பக்கம் இருந்து வாசிக்கும் வேர அர்த்தம் தந்திருக்கும் . நான் சொல்ல வந்ததை சரியா தெளிவா சொல்லலன்னு மட்டும் எனக்கு புரியுது. உங்களை காயப்படுத்தின மாதிரி கருத்து பதிவிட்டது நானா இருந்தால் உங்க கிட்ட மனதார மன்னிப்பு கேட்டுகிறேன்.

இப்பவும் இந்த கதை எனக்கு ஏத்துக்க முடியல. இரண்டு விஷயம் மட்டும் உறுத்தலாக இருக்கு ஆழினியோட பிறப்பு வைஷுவோட கல்யாணம்

விஜய் பாவனா வீட்டை விட்டு போய் கல்யாணம் செஞ்சு வாழ்ந்து குழந்தையோடு திரும்பி வந்தால் ஆழி மேல் பேத்தி பாசம் வரும் ஆனால் புருஷன் விட்டு பிரிஞ்சு எங்க இருக்கான்னு தெரியாத ஒருத்தி சில வருஷம் கழிச்சு ஒரு குழந்தையோடு வந்து அந்த குடும்பத்தோட வாரிசு என்று சொன்னால் அந்த குடும்பமே அந்த குழந்தையை எப்படி ஏத்துக்கும்

மனதர்கள் செயல்களை உணர்வுகள் சூழ்நிலைகள் காரணம் காட்டி சரி தப்பு நியாயபடுத்துவது பாவனா விஜய் திருமணத்தை எதிர்க்கிற விஷயம் வரை தான் பொறுந்தும்.
அதற்கு பிறகு பாவனா மாதிரி புருஷனுக்கு தெரியாமல் குழந்தை பெத்துட்டு வந்தால் எந்த பிரச்சினை இருக்காது புருஷனும் குடும்பமும் அவளை ஏத்துக்கும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்பது சாத்தியமா
பாவனாவோட செயல் அவளுக்கும் குழந்தைக்கும் எந்தவித மோசமான விளைவுகளையும் உருவாக்காதா விஜய் குடும்பம் ஆழினியை ரொம்ப சாதாரணமா ஏத்துக்குற மாதிரி காட்டுறது தவறான வழிகாட்டுதல் மாதிரி எனக்கு தோணிச்சு.

பாவனா ஆழினியை பெத்து எடுத்த விதம் ஆழினியோட பிறப்பை கேள்விகுறி ஆக்காது என்று நீங்கள் காட்டுறது எனக்கு நியாயமா தெரியல. பாவனாவை ஏத்துக்காத குடும்பம் விஜய்க்கே தெரியாமல் பிறந்த குழந்தையை எப்படி ஏத்துக்கும்.

வைஷு தேவா திருமணத்தை அரங்கநாதன் சம்மதத்தோடு நடத்தி இருக்கலாம் . அப்பா ஒழுக்கம் இல்லாதவனா இருந்தால் மகன் மேலும் நம்பிக்கை வராது தான இவனும் அப்பா மாதிரி ஒழுக்கம் இல்லாதவனா இருந்தால் தன் பொண்ணோட நிலைமை என்ன ஆகும் என்கிற பயம் இருக்க தான் செய்யும் அப்போ தேவா தன்னை நிரூபித்து அரங்க நாதன் நம்பிக்கை சம்பாதிக்க வேண்டியது தான அவனோட கடமை. ஆனால் இங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்து அரங்கநாதனை ஒதுக்கி வச்சிட்டு விஜய் வச்சு கல்யாணம் முடிச்சாச்சு.

அரங்க நாதன் எதிர்பார்ப்பு தவறாக இருந்தால் தான் அவரை ஒதுக்கலாம் ஆனால் அவர் நியாயமாக தான் இருக்கிறார்.

ஒழுக்கமா வாழாத ரமணனை அவரோட பிள்ளைங்க எங்கயும் ஒதுக்கி வைக்கல ஆனால் அரங்கநாதனை அவரோட பிள்ளைங்க அவங்களோட விருப்பத்துக்காக ஒதுக்கி வைச்சிட்டு தங்களோட வாழ்க்கை அமைச்சுக்கிற மாதிரி காட்டியது எனக்கு ஏற்க முடியல.

விஜய் பாவனா பிரிவு வரை எனக்கு கதை சரியாக தான் தெரிஞ்சுது அதற்கு பிறகு ஒரு குழந்தையை கதையில் கொண்டு வந்திருக்க வேண்டாம் என்று தோணுது.
இப்பவும் நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிட்டேனான்னு எனக்கு தெரியல.
Agreed Mam even I had the same thought as father of girl what Aranganathan did is right.Will Ramanan and his family would accept dil or sil like Bhavana or Deva .Then why discriminating Aranganathan.
 

Sarojini J

Active Member
அனைவருக்கும் வணக்கம் பிரெண்ட்ஸ்.

ஆரம்பத்திலிருந்தே எந்த கமெண்ட் க்கும் பதில் சொல்லாம அமைதியா இருந்தேன். ஒன்று நேரம் இல்லை இன்னொன்று அது அப்படியே விவாதமா மாறிப் போனா அதுலேயே டைம் போகும். இறுதியா விளக்கம் சொல்லலாம் என இருந்தேன்.

ஹீரோ ஹீரோயின் அப்படின்னா இப்படித்தான் இருக்கணும் அப்படினு நிறைய நமக்குள்ள பதிஞ்சு போயிருக்கு. இந்த கதையில விஜய் பாவனா இருவரையும் ஹீரோ ஹீரோயினா பார்க்க வேணாம். இந்த கதையோட முதன்மை கதாபாத்திரங்கள் இவர்கள்.

இருவரது தடுமாற்றங்கள், முடிவுகள், செயல்கள், அதன் விளைவுகள் இதுதான் கதை. அவங்க என்ன செய்றாங்களோ அதுக்கான விளைவுகளை எதிர் கொள்றாங்க. எல்லா சமயமும் யாரும் சரியா முடிவெடுக்கிறது இல்லை, அந்த நேர சூழல், உணர்வுகள் வச்சுத்தான் பெரும்பாலானவர்கள் முடிவு எடுக்கிறாங்க. சில சமயம் சரியா இருக்கலாம், சில சமயம் தவறா போகலாம்.

மனிதர்கள் பெரும்பாலும் உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். அவங்களுக்கு அந்த நேரம் செய்றது சரியாத்தான் தோணும்.

பாவனா விட கொடிய சூழல்ல இருந்து தன்னம்பிக்கையா போராடுற பெண் கதாபாத்திரங்களையும், எதையும் அறிவு பூர்வமா அதிரடியா செய்ற ஆண் கதாபாத்திரங்களையும் ஏற்கனவே சில கதைகள்ல எழுதிட்டேன். காதலித்து வீட்டினர் சம்மதத்துக்காக காத்திருக்கிற கதா பாத்திரங்கள் வச்சும் எழுதியிருக்கேன். முன்னாடி எழுதின கதையிலேர்ந்து கொஞ்சமும் வித்தியாசம் இல்லாம எழுதினா கண்டிப்பா உங்களுக்கு எல்லாம் போர் அடிச்சிடும்.

இந்த கதையிலும் முதன்மை கதா பாத்திரங்கள் உணர்வு ரீதியாக பலமில்லாதவர்கள். இப்படியும் மனிதர்கள் இருக்காங்க தானே. ஆனால் நிச்சயமாக கெட்டவர்கள் இல்லை.
வேறு பல விஷயங்களுக்கு கதை மூலமாவே விளக்கம் சொல்லிட்டேன்.

பிரசன்னா பிருந்தா இருவருக்கும் தனியா கதை இருக்கு. பிரேக் எடுத்திட்டு வர்றேன் பிரெண்ட்ஸ்.

இதோ கதையின் இறுதி அத்தியாயங்கள்…






Please read and share your thoughts.

அப்புறம் ஒரு விஷயத்தை இங்க சொல்லணும்னு நினைக்கிறேன். உங்க கருத்துக்கள் எப்போதும் என்னை உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்துபவை, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தாராளமாக உங்களுக்கு தென்படும் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு முன்பு கூட குறைகள் சொன்ன நண்பர்களுக்கு தெரியும், அதை அலசி ஆராய்ந்து திருத்திக் கொண்டிருக்கிறேன். இனியும் என் தவறுகளை திருத்தம் செய்து கொள்ள முழு மனதோடு தயாராகவே இருக்கின்றேன்.

ஆனால் சில சமயங்களில் ஹார்ஷ் டோனில் சொல்லப் படும் போதும் உபயோகப் படுத்தும் சில வார்த்தைகளும் காயப்படுத்துவதை போல இருக்கின்றன. யார் என குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. தாராளமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், கண்ணோட்டங்களை தெரிவியுங்கள், குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.

சில நேரங்களில் உங்களது ஒரு வார்த்தை கூட பல மணி நேரங்கள் என்னை செயல்படாமல் வைத்து விடுகிறது. உங்கள் கருத்துக்களை கண்ணோட்டங்களை கொஞ்சம் மென்மையாக கொஞ்சம் மேன்மையாக சொல்லுங்கள் என மிக மிக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வாசக நண்பர்கள் இல்லையென்றால் இரு வருடங்களாக என் எழுத்து பயணம் தொடர்ந்து கொண்டிருக்காது. இனியும் தொடராது. என்னை தொடர்ந்து எழுத வைக்கும் அனைவருக்கும் என் அன்புகளும் நன்றிகளும்.
Awesome Sis
 

Sathya Velusamy

Well-Known Member
According to me how Prasanna behaves is not shocking he is been taught about family values culture in that case a Bhavana's back ground is not so good.Vijay from the first he never follows father instruction. From a third eye point of view Vijay is selfish person only.What if Bhavanas nature is money minded .Inreality as parents would prefer Prasanna than Vijay at the same time 95% of the family won't accept Bhavana.
I agree Prasanna's behaviour is not shocking bcos he is brought up in that way.....but if he doesn't like Bhavana he could have avoided her as like his dad ....why does he want to hurt her talking about her birth....it was not she who decided to born for this parents....he doesn't have any right to hurt her ....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top