நேச நதி -21

Advertisement

umamanoj64

Well-Known Member
பரங்கிமலை ..ஹ ஹா...சரியான ஜோடி..
இன்றைய எபிசோட் வசனம் அடி தூள்...
 

Vatsalaramamoorthy

Well-Known Member
இந்த பிரசன்னா என்ன அடுத்த அரங்கநாதன் வாரிசாக இவ்வளவு பேசறான்…பிருந்தா கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கப்போறான்…வேணும் அந்த சீனியர் அரங்குக்கு…பிருந்தா தான் ஸ்டார் ப்ளேயர் இந்த கதையில்..என்னமா பாயின்ட் பாயின்டா பேசுது..அதிரடி சரவெடி..வைஷூ பாவனா எல்லாம் தண்ட த்த்திங்க..என்னமா வெளுக்குது பிரசன்னாவை..
அருமையான பதிவு.
 

உதயா

Well-Known Member
இந்த ஜென்மத்தில் பிருந்தா உன் லவ்வை ஏத்துக்க போறது இல்லடா லவ் பண்ற பொண்ணுகிட்ட பேசுற மாதிரியா பேசுற கொஞ்சம் கூட ரொமான்டிக்கா பேச தெரியல விஜய் கிட்ட டியூசன் போடா நல்லா சொல்லி தருவான்

ஆனால் நிஜத்தில் எல்லாருமே பிரசன்னா மாதிரி தான் இருப்போம் பாவனா மாதிரி பொண்ணுங்களை அவங்க அப்பா அம்மா ஒழுக்கத்தை வச்சி தான் எடை போடுவாம். நம்ம நாட்டில கல்யாணம் செய்யுறது என்றால் முதலில் குடும்பத்தை பத்தி தான் விசாரிப்போம் ஆண்/ பெண் அவங்க அப்பா அம்மா உடன் பிறந்தவங்கன்னு எல்லோரையும் பத்தி விசாரிச்சு அவங்க குடும்பத்துக்கு ஊருக்குள்ள மதிப்பு மரியாதை இருக்கான்னு விசாரிச்சு அது திருப்தியா இருந்தால் மட்டும் தான் அடுத்து அந்த ஆண்/ பெண் பத்தி விசாரிப்போம்.
குடும்பம் சரி கிடையாது அப்பா அம்மா ஒழுக்கம் இல்லாதவங்க ஆனால் பொண்ணு நல்ல குணம் என்று சொன்னால் சம்மதிப்போமா நிச்சயம் மாட்டோம். ஏன்னா நம்ம நாட்டில் திருமணங்கிறது இரண்டு பேர் சம்பந்த பட்டது இல்ல இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டது இரண்டுமே சமமாக இருந்தால் மட்டும் தான் பேச்சு வார்த்தையே தொடங்குவாங்க.
பிரசன்னா ஜாதி மதம் பண வசதி வச்சு பாவனா தப்பாக பேசல அவளோட குடும்பம் சரியில்லை அதனால் அவளையும் மதிக்க மாட்டேன் என்கிறான் இது நாம எல்லோரும் செய்யுறது தான் யதார்த்தமும் அது தான். பாவனாவோட குணத்தை மட்டும் பார்க்கிறது அவளை ஏத்துக்காது எல்லாம் இப்படி கதையில் ஈசியா செய்துடலாம்.
ஆனால் நிஜத்தில் பிரசன்னாவோட எண்ணம் தான் நமக்கும் இருக்கும்.

இப்போது எல்லாம் சாதாரண குடும்பத்தில் கூட பொண்ணு படிச்சிருக்கணும் வேலை பார்க்கணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க அப்படி இருக்கும் போது பாவனா மாதிரி பொண்ணுக்கு கண்டிப்பா கல்வி தான் தேவை அதை தான் அவளும் தேர்ந்து எடுத்து இருக்கணும் காதலோ கல்யாணமோ அடையாளம் கிடையாது. பாவனாவுக்கு கல்வியை விட காதல் மூலமாக தன்னோட நிலையை உயர்த்திக்க தான் நினைக்கிறாள்.
பாவனா மாதிரி பொண்ணுக்கு மட்டும் ஏன் அந்த பிரஷர் கொடுக்குறீங்க என்று பிருந்தா கேட்கிறாள். வேற என்ன செய்யணும் அப்பா அம்மா சரியில்லை அப்பாவுக்கு லீகலா ஒரு பொண்டாட்டி இல்லீகலா ஒரு பொண்டாட்டி அம்மாவுக்கும் அதே மாதிரி இரண்டு புருஷன் பொண்ணும் படிப்போ வேலையோ சொல்லிக்கிற மாதிரி இல்லை அப்படின்னு சொன்னா எப்படி அவ மேல மரியாதை வரும்..
ஒருவேளை பாவனா நல்லா படிச்சு ஒரு கவர்மென்ட் வேலையில் இருந்துருந்தா அதுவே அவளுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை அமைச்சு கொடுத்துடும்...

மூன்று வருஷம் பாவனாவை காப்பாத்தினது கல்யாணமோ விஜயோட மனைவி என்கிற அந்தஸ்தோ இல்லை அவளோட கல்வியும் ஆசிரியர் என்கிற கௌரவமான வேலையும் தான் விஜய் கடைசி வரை வரவே இல்லன்னா அந்த கல்வி தான் அவளையும் அவ குழந்தையும் பாதுகாத்து இருக்கும். காதலிச்சு கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையோடு தனியா நிக்கும் போது கௌரவமான வேலை தேடிகிட்டா இதை விஜய் காதலிக்கும் போதே இதை செய்து இருந்தால் அவளுக்கு மரியாதை கிடைச்சிருக்கும்.
நல்ல குடும்பத்தில் பிறந்த பிருந்தா வைஷு மாதிரி பொண்ணுங்களுக்கு படிப்பும் வேலையும் எக்ஸ்ட்ரா குவாலிட்டி தான் அவங்களுக்கு பணம் சம்பாதிக்க மட்டும் தான் தேவை படும் ஆனால் பாவனா மாதிரி பொண்ணுங்களுக்கு அதுதான் அடையாளமே அது கூட இல்லன்னா எப்படி

பாவனாவுக்கு விஜய் குடும்பத்தை பத்தி சின்ன வயசில் இருந்தே தெரியும் அப்போ விஜயை காதலிக்கும் போதே அவன் குடும்பம் தன்னை ஏத்துக்கிற மாதிரி அவளோட நிலையை உயர்த்தியிருக்கணும்.
ஆனால் அதை செய்யாமல் விஜயை மட்டும் ஆதரவா பிடிச்சு வச்சுருக்கா அவன் போதும் வாழ்க்கைக்குன்னு நினைக்கிறாள் ஆனால் அந்த எண்ணம் மூன்று வருடம் சுக்கு நூறா உடைஞ்சு தான் போச்சு. மோசமான பெத்தவங்களுக்கு பிறந்த பிள்ளைங்களுக்கு கல்வி மட்டும் தான் அடையாளம். பாவனா மாதிரி பெண்களுக்கு குறைந்தபட்சம் கல்வியோ கௌரவமான வேலையோ கூட தகுதியா எதிர்பார்க்காமல் எப்படி ஏத்துக்க முடியும் .

குடும்பம் கல்வி வேலை எதுவுமே இல்லாமல் ஒழுக்ககேடை காரணம் காட்டி பாவனாவை ஏத்துக்கிற மாதிரி காட்டுறீங்க.
அரங்கநாதன் கங்கா பிருந்தா எல்லாரும் விஜய் ஒழுக்கம் தவறுனதை காரணம் காட்டி வேர வழி இல்லாமல் பாவனாவை ஏத்துக்கிற மாதிரி தான் இருக்கு. நிஜத்தில் இப்படி நடந்துருந்தால் விஜய் குடும்பம் அவனுக்கு ஒரு கல்யாணம் செய்வாங்க அவனும் செஞ்சுக்குவான் பாவனா தெருவில் நிற்பாள்.
விஜய் ஒழுக்ககேடு வெளியில் வராது பாவனாவோட தப்பு மட்டும் தான் வெளியில் தெரியும் அவ அம்மா மாதிரி அவளும்ன்னு முத்திரை குத்திடுவாங்க.
ஆழினி பிறப்பை தப்பா பேசி பிரசன்னாவுக்கு கோபம் வர மாதிரி காட்டுறீங்க ஆனால் நிஜத்தில் விஜயே அது என்னோட குழந்தை கிடையாதுன்னு சொல்லிடுவான் ஏன்னா நம்ம நாட்டில் நிறைய பாவனாக்கள் இருக்காங்க ஆனால் ஒரு விஜய் அரங்கநாதன் கங்கா பிருந்தா இருக்காங்களான்னு கேட்டால் நிச்சயமா உங்க வீட்டிலும் கிடையாது எங்க வீட்டிலும் கிடையாது நாம் எல்லோருமே இது நம்ம வீட்டில் நடந்தால் பிரசன்னாவா தான் இருப்போம்.

கதையில் பாவனாவோட அடையாளமா கல்வியை தேர்ந்து எடுக்காமல் கலவியை தேர்ந்து எடுத்து அதை வச்சு நியாயப்படுத்தி அவளை பெரிய குடும்பத்து மருமகள் ஆக்கிட்டீங்க.

நிஜத்தில் பாவனா மாதிரி பொண்ணு பெரிய குடும்பத்து பையன் கூட பழகி குழந்தை பெத்துகிட்டா அரங்க நாதன் சாட்சிகளை அழிச்சமாதிரி எல்லாத்தையும் அழிப்பாங்க அதுவே படிச்சு ஒரு பெரிய வேலையில் இருந்தால் அந்த பதவி கொடுக்கிற கௌரவம் அவளை ஏத்துக்க வச்சுடும்.
கல்யாணத்தை நம்பி தோத்தவங்க உண்டு
கல்வியை நம்பி அதோட கையை பிடிச்சு போனவங்க தோத்தது கிடையாது
கல்யாணம் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்காது ஆனால் கல்வி எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துடும்......

பாவனா‌ மாதிரி பொண்ணுங்களுக்கு கல்வி தான் முக்கியம் அந்த பிரஷ்ஷர் சமூகம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். அது தான் நியாயமும் கூட.

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பாவனா கதாபாத்திரம் மேல் உடன்பாடு இல்லை. என்னோட வாழ்க்கையில் பாவனா மாதிரி பொண்ணை பார்த்தால் கல்வி பத்தி தான் சொல்வேன் நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குன்னு தான் சொல்வேனே தவிர நல்ல பையனாக பார்த்து காதலிச்சு லைஃப்ல செட்டில் ஆக சொல்லி யோசனை கொடுக்க மாட்டேன் ஏன் இந்த கதை படிக்க யாருமே சொல்ல மாட்டாங்க. நம்மோட பிள்ளைங்களுக்கு கல்வியோட முக்கியத்துவம் பத்தி தான் சொல்லி கொடுக்கிறோமே தவிர நல்லவனை கல்யாணம் செய்து கிட்டா நல்லா இருக்கலாம் என்று சொல்லி கொடுக்க மாட்டாம் ஏன்னா கல்யாண வாழ்க்கை கடைசி வரை சரியாக அமையும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.

பாவனா மாதிரி பெண்களுக்கு இந்த கதையில் நீங்கள் சொல்லுற கருத்து எல்லாம் நிஜ வாழ்க்கையில் பொருந்தாது.
குடும்ப அடையாளம் இல்லன்னா அவளுக்கான தனி அடையாளமாவது சரியாக இருக்கணும் ஆனால் இப்படி எதுவுமே இல்லாமல் பாவனாவால் சமூகத்தில் நல்லா வாழ முடியாது.

எதுவுமே இல்லாத பாவனாவை காதலிக்க இங்க எந்த விஜயும் இல்லை.
சும்மா கதைக்காக வேண்டும் என்றால் பிரசன்னாவை திட்டிட்டு பாவனாவுக்காக சப்போர்ட் பண்ணலாம் ஆனால் நிஜத்தில் நானும் பிரசன்னா தான். பாவனா படிப்பை அடையாளமாக்கி இருந்தால் மதிச்சு இருப்பேன் இப்படி காதலிச்சு குழந்தை பெத்துகிட்டா குழந்தை காட்டி விஜய் வீட்டுக்குள்ள வந்தா பாவனா மேல் பிரசன்னா மாதிரி எனக்கும் மதிப்பு இல்லை.

விஜய் செஞ்சது தப்பு கிடையாதான்னு கேட்டால் விஜய் மாதிரி கௌரவமான குடும்பத்து பசங்க பண்ற தப்பு கடைசி வரை வெளியில் வராது. அவன் குடும்பம் ஏழையோ பணக்காரனோ அவன் குடும்பமும் சொந்தமும் சேர்ந்து எதுவும் வெளியில் வராமல் செஞ்சுடுவாங்க. மூன்று வருடத்துக்கு முன்ன நடந்தது தான் நிஜத்தில் நடக்கும் மூன்று வருடத்திற்கு பிறகு நடக்கிறது எல்லாம் சும்மா கதையில் மட்டும் தான் நடக்கும்.

கல்விக்கூடங்களை நிர்வாகம் செய்கிற பிரசன்னாவுக்கு தான் கல்வியோட முக்கியத்துவமும் அது கொடுக்கிற மதிப்பும் மரியாதையும் கௌரவமும் எப்படி இருக்கும் என்று தெரியும் . அவனோட கல்லூரியில் படிக்கிற மாணவர்களுக்கு கல்வியால் தான முன்னேற சொல்லி கொடுப்பான் காதலிக்கவா சொல்லி கொடுப்பான் அதை தான் பாவனாகிட்ட எதிர்பாக்கிறான்.அவ மட்டும் படிச்சு பெரிய வேலையில் இருந்துட்டு விஜயை காதலிக்கிறேன்னு சொல்லி இருந்தால் பிரசன்னாவும் விஜய் பாவனா காதலுக்கு ஆதரவா இருந்து இருப்பான். வைஷு மாதிரி சுய நலத்துக்கு அண்ணி கூப்பிடாமல் பாவனா மேல் உள்ள வெறுப்பை வெளிப்படையாக காட்டுற பிரசன்னாவை எனக்கு பிடிச்சிருக்கு.

இந்த எபில பாவனா பத்தி நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

பிரசன்னா பிருந்தா க்கு தனியா ஒரு கதை எழுதுங்க. இந்த கதையில் கடைசி எபில சேர்த்து வச்சிட்டு முடிச்சிராதீங்க.
தனி கதை எழுத தகுதியான ஜோடி தான் இவங்க இரண்டு பேரும்..
 

Rajivijay

Well-Known Member
Nice update sis. Friends pesinale boost thaan. Happy agidum manqsu. Shyam enga poitaan. Unmai therinja enna pannuvaanga? Brinda superb. Practical la think panra .,ellar idathil irundhum yosikira. Great personality
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top