நேசம் மறவா நெஞ்சம்-23Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
கயலை பார்த்ததிலிருந்து வாசுவின் நிலைமைதான் கவலை கிடமாக இருந்தது.....சுதா அவனை வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்.......அவள் பொறாமையால் வெம்பி வெதும்பி போய் இருந்தாள்....... அவளுக்கு மனசே ஆறவில்லை..... வெறும் பயனு நெனைச்சா...பொண்டாட்டிக்கு....பட்டு வேலை நகை எல்லாம் வாங்கி குடுத்திருக்கானே..... அவள் சாமி கும்பிட்டதை விட கண்ணன் கயலை அர்ச்சனை செய்ததுதான் அதிகம்.........

காந்திமதி.....அனைவரும் வரவும் திருஷ்டி சுற்றி போட்டார்......

ஆண்கள் வெளியே உட்கார்ந்திருக்க முத்து விட்ட ராக்கெட் வெடி நேராக வினோத் காலுக்கு கீழ் செல்லவும்.... அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது..... சிறிது நேரம் கழித்து கொல்லைபுறத்திற்கு வந்த முத்துவை சுதா....” ஏய் உனக்கெல்லாம் அறிவு இல்லை... எருமைமாடு மாதிரி வளந்திருக்க....வெடி எங்க போடனும்னு தெரியாது.....” கயலின் மேல் உள்ள பொறாமையை எப்படி கொட்டுவது என்று தெரியாமல்.....முத்துவை வாய்க்கு வந்தபடி பேச..... அங்கு வந்த கயல்.... சுதாவிடம் ஒங்கி.” அக்கா...முதல்ல நீ பேச்ச.... நிப்பாட்டுறியா.........சின்ன பையன் ஏதோ தெரியாம பண்ணுனா..... ஏன் இப்புடி பேசுர....முத்து நீ உள்ள போ......”



“அண்ணி நான் வேணும்னே செய்யல.....”



“அது எல்லாருக்கும் தெரியும் முத்து.....நீ போ......” முத்து உள்ளே செல்ல...

“..அக்கா உனக்கு இப்ப என்ன பிரச்சனை.... எதுக்கு இப்ப தேவையில்லாம பேசுற.... இது ஒரு சாதாரண விசயம் யாருக்கும் என்ன காயமா பட்டுச்சு.... போன வருசம்கூட நம்ம அருண்விட்ட ராக்கெட் தென்னை மரத்துல பட்டு எறிஞ்சு அப்புறம் மரத்துல ஏறி....அந்த தீய அணைச்சோம்..... அதுக்கே அப்பா திட்டல..... நீ ஏன் இப்புடி குதிக்குற.....நீ தேவையில்லாம முத்துவ திட்டுறத விடு....”

“திட்டுனா....... திட்டுனா என்ன பண்ணுவ..... ஏன் புகுந்த வீட்டு பாசம் பொங்குதோ. நான் அப்புடிதான் பேசுவேன் என்ன பண்ணுவ....”



“நீ என்னைய என்ன வேணும்னாலும் பேசு ஆனா எங்க வீட்டு ஆளுங்கள பேசாத......”



“ஏண்டி நான் வேணாமுன்னு விட்டுகுடுத்த மாப்புள்ள உன்னைய வம்படியா கல்யாணம் பண்ணியிருக்கான்...........நீ கொஞ்சம்கூட வெக்கமே இல்லாம அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.....”



“அவரு விரும்பி பண்ணுனாறோ.....இல்ல விரும்பாம பண்ணுனாறோ.... என்னையதானே கல்யாணம் பண்ணியிருக்காரு.....இதுக்கும் மேல நீ எங்க வீட்டுக்காரர பத்தியோ.... எங்க வீட்டு ஆளுங்கள பத்தியோ பேசுனா...நான் எப்பவும் போல கேட்டுட்டு போவேன்னு நினைக்காத........ நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்கமாட்டேன்..... அப்புறம் அப்பாட்ட சொல்லவேண்டியிருக்கும்......பாத்துக்க.....” என்றபடி உள்ளேவர.....

வாசல்படியில் நின்றிருந்த கண்ணன்.....” ஊருக்கு போவமா........”



இவரு அக்கா பேசுனத கேட்டுருப்பாரோ.....அவுக தம்பிகள கூட்டிட்டு போக வேணாமுன்னு சொன்னாரு.... நாமதான் இப்ப முத்து திட்டு வாங்க காரணம்.... நம்மள கோவிச்சுக்குவாரோ......

“.நாளைக்கு போகலாம்னு சொன்னிங்க......”

“இல்லை கிளம்பு..... எனக்கு வேலை இருக்கு.....”.



மாணிக்கமும் சகுந்தலாவும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கண்ணன் ஊருக்கு கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்...... கண்ணனுக்கும் கயலுக்கும் தீபாவளி முறையை கொடுக்க...... காந்திமதி ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.....வந்ததிலிருந்து கயல் சந்தோசமாக இருந்ததை பார்த்து மகிழ்ந்தவர்.... இப்போதுதான் மல்லிகா வந்து சுதா பேசியதை சொல்லவும் அதனால் தான் கண்ணன் கிளம்புகிறான் என்று நினைத்தார்....... இதை இப்புடியே விடக்கூடாது..... நாம ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சா....சுதாவோட ஆட்டம் ஒரு எல்லைய மீறி போகுது....... நம்ம மகன்கிட்ட சொல்ல வேண்டியதுதான்......நாளபின்ன பெரிய பிரச்சனைய கொண்டுவந்து இவ கயல இங்க வரவிடாம கூட பண்ணிறுவா......



ராமன் காரை கிளப்ப....கண்ணனும் கயலும் பின்னால் உட்கார்ந்திருந்தனர்..... கயலுக்கு மனதிற்குள் மிகவும் பயமாக இருந்தது...... இவரு நம்ம சுதாக்கா……. முத்துவை திட்டுனதை கேட்டுட்டாரு போல..... இந்த லூசு அக்கா ஏன் இப்புடி பேசுது.... முத்துவும் நம்ம தம்பி மாதிரி தானே..... பாவம் முத்து மூஞ்சியே மாறி போச்சு..... நாளைக்கு முத்துகிட்ட நாம சாரி கேட்டுரனும்..... இவரு திட்டுனாலும் வாங்கிக்கனும்......என்று யோசித்தபடி வர.....



கண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது....... இவன் கயலிடம் சார்ஜர் பின் கேட்க வந்தவன்..... சுதா...கயல் இருவரும் பேசியதை கேட்டவன்....பேச்சு முத்துவிடமிருந்து தன்னை பற்றியும் தன் குடும்பத்தையும் மாறி போவதை கண்டவன்...... சுதாவுக்கு.... கயலின் இருந்த பொறாமையால் தான்..... இப்புடி பேசுவதை எளிதாக கண்டுகொண்டான்...... தன் தம்பியை விட்டுக்கொடுக்காமலும் தன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமலும் கயல் பேசியதை கேட்டவனுக்கு ..... பரவால்ல நம்ம தம்பிகளையும் நம்ம குடும்பத்தையும்.... இவ என்ன சூழ்நிலையிலும் யார் கிட்டயும் விட்டுக்குடுத்துர மாட்டா....... இவ மனசு சின்ன புள்ள மாதிரி இருந்தாலும் என்னோட குடும்பத்தை இவ தன்னோட குடும்பமா...... நினைக்க ஆரம்பிச்சுட்டா...... இங்க இருந்தா.... இவ அக்கா இன்னும் ஏதாச்சும் பேசி இவ மனச கஷ்டபட வச்சாலும் வச்சுருவா......என்று நினைத்துதான்.... ஊருக்கு கிளம்பச் சொன்னான்.....



கயல் காரில் ஏறியவுடன் தூங்கியிருக்க மெதுவாக அவளை தன் தோளில் சாய்த்தவன்........ அரைமணி நேரத்தில் வீடு வரவும்....”.நீங்க ரெண்டுபேரும் உள்ள போங்க.... நான் உங்க அண்ணிய எழுப்பிட்டு வாரேன்.......”

“ம்ம் சரிண்ணே.....”

இருவரும் உள்ளே செல்லவும் ..... ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து சிறுபிள்ளை போல் தூங்கும் அவளை எழுப்ப மனமில்லாமல் தூக்கிக் கொண்டு சென்றான்.......

சாவித்திரி....” என்னப்பா... என்னாச்சு.... தூக்கிகிட்டு வார....”

“ஒன்னுமில்லமா.... எழுப்பி எழுப்பி பாத்தேன் அவ எழுந்துக்கல... அதான்....”

“பாத்து பத்தரமா.... தூக்கிட்டு போப்பா....” என்றபடி கதவை சாத்த.....

தன் கையில் ஒரு தேவதை போல தூங்கும் அவளை....சுமந்த படி மாடியேறினான்.....

இனி.........................??

தொடரும்........................







ஹாய் ப்ரண்ட்ஸ் கண்ணன் கயலோட தலைதீபாவளி பத்தி எழுதியிருக்கேன்... .படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ் மறக்காம போட்ருங்க.....போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்...
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top