நீ இருக்கும் நெஞ்சம் இது …20

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கண்மணி யிடமிருந்து “டாக்டர் அட்ரஸ்” வாங்கிக்கொண்ட சந்தோஷ் வாசுகி இடம் கொஞ்சம் வெளிய போகலாம், வர்றியா என்று சொல்லவும்.அவளுக்கும், கொஞ்சம் மாறுதல் தேவைப்பட்டது சரி என்று சொல்லி அப்படியே கிளம்பினாள்.

அவனும், அவள் வந்தால் போதும் என்று அழைத்துக்கொண்டு சென்றான். போகும் வழியில் எங்க போறோம்? என்று வாசுகி கேட்க. என் பிரண்ட் வீட்ல ஒரு “சின்ன கெட் டு கெதர்” என்று சொல்லி அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான். அவனுக்கு பயம், எங்கே ஏதாவது உளறி விடுவோமோ, என்று எல்லாம் சரியாக வேண்டுமே, சரியாக பதினைந்து நிமிடத்தில் இவர்கள் டாக்டர் வீட்டை அடைந்தனர்.

சந்தோஷ் “காலிங் பெல்லை” அழுத்தவும் சரியாக “டாக்டர் சாரதா” கதவை திறந்தார். பார்த்த சந்தோஷ் அதிர்ச்சியடைந்தான், என்ன நம்ப பிரெண்டு ன்னு சொன்னோம், இந்த அம்மாவுக்கு அம்பது வயசு மேல இருக்கும் போல இருக்கே, சும்மாவே இவ நூறு கேள்வி கேட்பா என்று மனதில் நினைத்துக்கொண்டு லேசாக பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்.

இவளும், இவனை சந்தேகமாக பார்த்துக்கொண்டிருந்தாள், அதற்குள் “டாக்டரின் மகன் சேகர்” சந்தோஷ் என்று கூப்பிடவும் அப்பாடி, இவனும் கை குலுக்குவது போல் கிட்டே சென்று ,உங்க பேர் என்ன? என்று கேட்க சேகர் என்று சொல்லவும் இவர்களை பார்த்துக்கொண்டிருந்த, வாசுகி இடம், என் பிரண்டு சேகர் நாங்க சின்ன வயசுல இருந்து எல்லாம் ஒன்னாவே செய்வோம். என்று சொல்லவும், அப்படியா? நீங்க ஒருவாட்டி கூட வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இல்லையே, நம்ம கல்யாணத்துக்கு கூட வந்ததில்லையே என்று சொல்லவும

இவ “ஞாபக சக்தியில் தீய வைக்க” என்று மனதில் நினைத்துக்கொண்டு, என்ன பதில் சொல்வது என்று முழித்துக் கொண்டிருந்தான். அதற்குள் டாக்டர் சாரதா சரி வாங்க முதல்ல சாப்பிடலாம், அப்புறம் பேசலாம் என்று சொல்லவும் அமைதியாக சாப்பிட்டனர்’ சாப்பிட்டு முடித்தவுடன், சேகர், சந்தோஷ் இடம் நம்ம தனியா பேசலாமா என்று கண்ணை காட்டி அழைத்துச் சென்றுவிட்டான்.

இங்கு அமைதியாக, இருந்த வாசுகி இடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். சாரதா ஏன் வாசுகி?சரியா சாப்பிடல போல இருக்கு, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே ,நல்லா தான் சாப்பிட்டேன். என்னம்மா பண்றது வயசாயிடுச்சு இல்ல, இவன் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, சமையல் பொறுப்ப மருமக கிட்ட கொடுத்திடலாம். அப்புறம் வாசுகி, என் பையனுக்கும், உன் புருஷனும் ஒரே வயசுதான். ஆனா, அவன் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான். என்று சொல்லவும், ஏனென்று இவ கேட்கவும் அவனுக்கு லவ் ஃபெயிலியர்.

எப்படியோ, சம்மதிக்க வச்சு பொண்ணு பாக்க கூட்டிட்டு, போனா இவனோட தங்கச்சி, என் பொண்ணு இருக்காளே, ஏதாவது, ஒன்னு சொல்லு சொல்லி வர வரன் எல்லாம் தட்டிவிட்டு இருக்கா. ஏனென்று வாசவி கேட்கவும் ஒன்னுமில்ல, அது ஒரு சின்ன விஷயமா, அவனுக்கு கல்யாணமாகி, இவன் பொண்டாட்டி வந்துட்டா, இங்கு அவளுக்கு முன்ன மாதிரி இருக்க முடியாது, அவளோட முக்கியத்துவம் குறைந்துவிடும், பீல் பண்ணுறா, அது மட்டும் இல்ல, வர்ற மருமகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம்.

இவ இரண்டாம் பட்சம் ஆயிடுவா, அவ உரிமை போயிடும்னு, நினைக்கிறா. வேகமாக வாசுகி “அது தப்பில்லை அம்மா இவளோட சுயநலத்துக்காக அவள் சொந்த அண்ணன் வாழ்க்கையையே இப்படி பண்றார லே”….

முகத்தையே கூர்ந்து பார்த்த, “டாக்டர் சாரதா உபதேசம் ஊருக்கு தானா வாசுகி என்று கேட்கவும்” அதிர்ச்சியாகி நிமிர்ந்து பார்த்த வாசுகி. நீங்க யாரு? என்று கேட்கவும் நான் டாக்டர் என்கிட்ட, உன்னோட விஷயத்தை மனசுவிட்டு சொன்னா என்னால நிச்சயமா “சொல்யூஷன்” சொல்ல முடியும் “பேசி தீர்க்கமுடியாத பிரச்சனை எதுவும் இல்லை” என்று சொல்லவும் கத்தி அழ ஆரம்பித்தாள் வாசுகி சாரதாவும் அவளை நன்றாக அழ விட்டார்.

எத்தனை நாள் பாரமோ அழுது ,அழுது ஓய்ந்த வாசுகி இடம் தண்ணீரை கொடுத்தவர் இப்ப சொல்லு வாசுகி என்ன பிரச்சனைநான் எங்க அம்மாக்கு பொண்ணு இல்லையாம் என் தம்பிக்கு அக்கா இல்லையாம்.

இத்தன நாளு, நமது என்று நினைத்துக் கொண்டிருந்த உறவு நினைத்துக் கொண்டிருந்த உறவு அவங்கதான் எல்லாம் என்று நெனச்சிட்டு இருக்கும்போது, “எதுவுமே நமது இல்ல என்று தெரியவரும்போது” அதோட வலி அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும், என்று சொல்லவும். “எது உண்மையோ, பொய்யோ நான் உண்மைதானே வாசுகி” என்று சந்தோஷம குரல் கேட்கவும் அதிர்ந்து திரும்பிய வாசுகி. மாமா என்று கட்டிக்கொண்டு அழுது தீர்த்து விட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top