நீ இருக்கும் நெஞ்சம் இது …19.1

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
கதவு தட்டும் சத்தத்தில் அடித்து, பிடித்துக்கொண்டு எழுந்தால் கண்மணி. ஐயோ! இவ்வளவு நேரமா, தூங்கிட்டோம் என்று வேகமாக எழுந்தவள், கால் தடுக்கி, கீழே படுத்திருந்த கிருஷ்ணாவின் மீது விழுந்து வைத்தாள்.

கதவு தட்டும் சத்தத்திலே எழுந்தவன் வேண்டுமென்றே, கண்ணை மூடி படுத்துக் கொண்டிருக்க, இவள் அவன் மேல் மீளவும், விழவும், வேண்டுமென்றே அதை உணராதவன். கண்மணி என்ன விடு கண்மணி என்று தூக்கத்தில் உளறுவது போல், நடித்துக் கொண்டிருந்தான். அங்கே, கதவுக்கு வெளியே, சிந்து, கண்மணி என்று குரல் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஐயோ! எழுந்திரிங்க கதவைத் தட்டுறாங்க, “ப்ளீஸ்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள். கண்மணி இதற்குமேல் அழுது விடுவாள், என்று உணர்ந்த கிருஷ்ணா, கண்ணைத் திறந்து ஒன்றுமே தெரியாதது போல்,என்ன கண்மணி? என் மேல படுத்து இருக்க? உங்க மேல கால் தடுக்கி விழுந்துட்டேன், கொஞ்சம் மேல படுத்துக்கோங்க என்று சொல்லவும், என்னது மேலயா! ஐயோ! கட்டில் மேல என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்தவள். அவன் கட்டில் மேல் படுத்த பிறகு வேகமாக சென்று கதவை திறந்தாள்.

வெளியே நின்றிருந்த சிந்து அவளைப் பார்த்து சிரித்துவிட்டு, குளிச்சிட்டு சீக்கிரமா கீழ வா கண்மணி என்று சொல்லிவிட்டு, அவளுக்கு மாற்று உடை, கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

உள்ளே சென்ற கண்மணி, வேகமாக குளித்துவிட்டு தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்தவள். அவன் சுவற்றின் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டிருக்கவும், வேகவேகமா புடவை கட்டணும், என்று முடிவு செய்தவள் வெளியே வரவும், அவள் பக்கமாக திரும்பி படுத்தான்.ஐயோ! என்று கத்தினாள், பாத்ரூம்ல கொஞ்சம் வெயிட் பண்றீங்களா.

நான் சீக்கிரம் கட்டிட்டு புடவை கட்டிட்டு, கீழே போகணும் என்று சொல்லவும், வேகமாக எழுந்தவன், சரி சீக்கிரம் ரெடி ஆகு கண்மணி, அக்கா வீட்டுக்கு போகணும் என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவு அடைத்தான். கண்மணி கீழேசென்று கண்மணி சாரி அத்தை கொஞ்சம் லேட்டாயிடுச்சு, என்று சொல்லவும் இல்லம்மா கோயிலுக்கு போகணும், அதான் சீக்கிரம் எழுப்பினேன், என்று யசோதா சொல்லவும் கிருஷ்ணா வரவும் சரியாக இருந்தது.

சரிமா, ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க, என்று சொன்னவர் தானே சென்று பரிமாறவும். அம்மா, அக்கா வீட்டுக்கு போகணும் என்று கிருஷ்ணன் சொன்னான். முதல்ல கோயிலுக்கு போகணும். சரிம்மா கோயிலுக்கு போயிட்டு, அப்படியே, அக்கா வீட்டுக்கு போறோம்.இருவரும் வடபழனி முருகர் கோவிலுக்கு, சென்று முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, அங்கே சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணா அமைதியாக இருக்கவும், கண்மணி என்ன ஆச்சு என்று கேட்டாள். இல்ல அக்கா நேத்துல இருந்து ஒரு போன் கூட பண்ணல, அவங்களுக்கு என் மேல் எதாவது கோவமா, என்று கண்மணி கேட்கவும், சாச்சா அப்படி எல்லாம் எதுவும் இருக்காது, நீ எதுவும் வரி பண்ணிக்காத எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன்.

இருவரும் வாசுகி வீட்டுக்கு சென்றனர், அங்கே செல்லும்போது, அவர்கள் கண்டது, பாட்டி, தாத்தா ஒரு சோபாவிலும் பக்கத்தில் விமல். பாட்டி மடியில் ஸ்ருதி இருக்கவும், வேகமாக சென்ற கண்மணி, ஸ்ருதியை தூக்கிக்கொண்டாள்.

கிருஷ்ணா, பாட்டியிடம் என்ன ஆச்சு பாட்டி? என்று கேட்கவும். கண்ணீர் நிறைந்த கண்களோடு பாட்டி நீ உள்ள போய் பாரு கிருஷ்ணா, என்று சொல்லவும் வேகமாக உள்ளே சென்ற கிருஷ்ணா, அங்கே அவன் கண்டது கண்ணாடி உடைந்து போயிருந்தது ,எல்லாம் அலங்கோலமாக கிடந்தது.

சந்தோஷ் ஒரு மூலையிலும், வாசுகி ஒரு மூலையிலும், அமர்ந்திருந்தனர். வேகமாக உள்ளே வந்து கிருஷ்ணா என்ன ஆச்சு மாமா? என்று கேட்கவும். நீ எங்கடா இங்க வந்த இப்ப? அதுவா விஷயம், என்ன ஆச்சு? என்று கேட்கவும். அமைதியாக இருந்த சந்தோஷ், வாசுகியை பார்க்க அவள் அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை.

வாசுகி இடம் சென்றவன், என்னாச்சு அக்கா? என்று கேட்டான். அவன் கையைத் தட்டிவிட்டாள். நீ எதுக்கு இங்க வந்த? என்று கேட்க. வேகமாக எழுந்த சந்தோஷ், உனக்கு, எப்படி இது தாத்தா வீடு, அதே மாதிரி தான் அவனுக்கு.

.உன்ன கல்யாணம் பண்ணல நாளும், இது அவனுக்கு உரிமையான வீடு என்று சொல்லவும். இப்ப இதுவா பேச்சு என்று சொன்ன கிருஷ்ணா. என்ன ஆச்சு அக்கா? ஏன் இப்படி நடந்துக்கிற.? இதுதாண்டா, நான் நேத்து இருந்து கேட்டுட்டு இருக்கேன். இதுக்கு பதில் சொல்லாம, ஏதேதோ பேசிட்டு இருக்கா, பார் வீட்டை எப்படி பண்ணி வச்சிருக்கா.

உள்ளே போன கிருஷ்ணா வெளியே வராததால், உள்ளே வந்தாள் கண்மணி. அப்பொழுதுதான், அவளை பார்த்த சந்தோஷ் வாம்மா. கல்யாணமாகி முதல்முறையாக வர என்னால சரியா “ரிசீவ் பண்ண” முடியல, பரவாயில்லை அண்ணா என்று சொன்னவள் வாசுகியை பார்த்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
முதன்முதலில் வீட்டுக்கு வந்த புது கல்யாண ஜோடியை வாசுகி ரொம்ப நல்லா ரிஸீவ் பண்ணுறாள்
தம்பிக்கு கொடுக்கும் வரவேற்பு சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top