நீ இருக்கும் நெஞ்சம் இது …17

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
சந்தோஷ் வாசுகியிடம் என்னாச்சு வாசுகி? ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற? இந்த மாதிரி பண்ண கூடிய ஆள் இல்லையே நீ என்னன்னு சொன்னாதானே? எங்களுக்கு தெரியும்.

கல்யாணம் என்பது எல்லார் வாழ்க்கையிலும், ஒரு முறையே வரக்கூடிய ஒரு சந்தோஷமான நிகழ்வு, இன்னும் சொல்லப் போனா, வாழ்க்கையோட மிக முக்கியமான அடுத்த கட்டம.

நம்ம கிருஷ்ணாவுக்கு, அவன் கல்யாண வாழ்க்கையை நெனச்சு, எவ்வளவு கனவு இருக்கும். அதுலயும், கண்மணி அவன் விரும்பி, ஆசைப்பட்ட பொண்ணு, எவ்வளவு கற்பனை இருக்கும், அவனும் சராசரி மனுஷன் தானே, அதுலயும், அவன் காஞ்சிபுரம் போயிட்டு வந்த அன்னைக்கு, எவ்வளவு சந்தோஷமாக இருந்தான்.

அவன் கண்மணியை பார்த்ததிலிருந்து, எல்லாமே நம்ம கிட்ட தானே, முதல்ல சொன்னான். சரி, நம்ம கிருஷ்ணா விடு,

அந்த கண்மணி பொண்ணு, என்ன பாவம் பண்ணுச்சு, ஒரு நாத்தனார் செய்ய வேண்டிய கடமை, ஒன்னு செஞ்சியா. அவங்க ,மறுவீடு போகவேண்டிய சடங்கு, உன்னால நின்னு போச்சு.

அங்க, உங்க அம்மாக்கு, அவங்க சம்பந்தி முன்னாடி, எவ்வளவு பெரிய தலைகுனிவு, இதெல்லாம் யாரால, உன்னால சரி, எந்திரிச்சு வா. இனிமேலாவது, அவங்களுக்கு, நைட்டு சடங்கு செய்ய வேண்டி இருக்கு. அதையாவது ஒழுங்கா செய்வோம். உனக்கு, நல்லா தெரியும் கிருஷ்ணாவுக்கு நம்ப இல்லாம ஒன்னும் செஞ்சுக்க மாட்டான் .

இவ்வளவு நேரம், இவன் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள், பேசி முடிச்சிட்டீங்களா, கிளம்புங்க நான் தூங்கணும்.

இதை கேட்டு, அதிர்ந்த சந்தோஷ், இவன் இவ்வளவு நேரம், பொறுமையாக சொன்னதை கேட்டு அமைதியாக இருந்ததை பார்த்து. ஏதோ, புரியாமல் செய்துவிட்டாள், பேசி சரி பண்ணிவிடலாம் என்று நினைத்தான்.

இவள் இப்படி சொல்லவும், அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. இவள் இல்லாமல், எப்படி அங்கு போவது? போனாலும், அக்கா நம்ம முகத்தையே பார்ப்பாங்க, அதைவிட, கிருஷ்ணா முகத்தை பார்க்கவே முடியாது. என்ன பண்ணலாம்? இப்ப இவள சரி பண்ண முடியாது, என்று யோசித்துக் கொண்டிருக்க.

அதற்கேற்றாற்போல், கிருஷ்ணா, யசோதாவிடம் அக்கா எத்தனை வாட்டி போன் பண்ணாலும், எடுக்க மாட்டேங்குற என்னம்மா ஆச்சு? என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

அவருக்கே ஒன்றும் தெரியவில்லை, அவருக்கு ஒன்றும் தெரியாத போது, என்ன என்று சொல்வார். கிருஷ்ணா இப்போ இதெல்லாம் பேசவும், யோசிக்கவும், அதுக்கான டைம் இது இல்ல.

இப்போ நீ, ,கண்மணியே மட்டும் தான் யோசிக்கணும், அவ “நம்மள நம்பி நம்ம வீட்டுக்கு வந்த, இந்த வீட்டு பொண்ணு” இதெல்லாம், நாளைக்கே கூட சரியாகலாம்.

“ஒரு பொண்ணு மனசுல ஆரம்பத்துல ஒன்னு பதிந்துவிட்டால , அவ்வளவு சீக்கிரம், அது அந்த பொண்ணு மனச விட்டு போகாது” “அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி…”

தேவையில்லாம ஏதாவது பேசி “ நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நீயே கெடுக்காதே” என்று சொல்லவும். அதிர்ந்து அம்மா என்றான். எனக்கு எதுவும் தெரியாதா?.

நீ சொல்லலனா, நான் உன் அம்மாடா, போ, போ போய் கண்மணி கிட்ட உட்காரு. நான் பின்னாடியே வரேன். எதுவும் பேசாமல், கண்மணி பக்கத்தில் போய் அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.

பின்னாடியே, வந்த யசோதா, கண்மணி வந்து விளக்கேத்து மா என்று சொல்லவும். கண்மணி அமைதியாக சென்று விளக்கு ஏற்றி, மனமுருக வேண்டிக்கொண்டால், “கடவுளே இந்த வீட்டில இருக்கிறவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்”

“என்னை எல்லாருக்கும் பிடிக்கணும், நான் இவங்களோட ,முழு மனசா முழுமனதோடு, ஒத்துமையா வாழனும் .நானும் என் வீட்டுக்காரரும், சந்தோஷமா இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டாள்

பிறகு, பால்,பழம் தரப்பட்டது, அந்த சடங்கு முடிந்ததும், கிருஷ்ணாவை அவன் ரூமிற்கு சென்று ஓய்வெடுக்கச் சொன்னார்கள். இங்கு கீழே உள்ள ரூமில், கண்மணி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது.

கண்மணி சென்று கதவை திறந்ததும், கிருஷ்ணாவின் பெரியம்மா மகள் சிந்து உள்ளே வந்தவள். கண்மணி இடம் குளிச்சிட்டு ரெடியாகி வாம்மா, நான் ஒரு கால் மணி நேரம், கழிச்சு வரேன், என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். எதற்கு, என்று புரிந்த கண்மணி, இப்பொழுது இது தேவைதானா, என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நாம் நினைத்து என்ன ஆக போகுது? என்று முடிவெடுத்து குளிக்கச் சென்றாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகியின் ஓவர் கொலஸ்ட்ரால் அவளை கிருஷ்ணாவிடமிருந்து எவ்வளவு தூரத்தில் தள்ளி நிறுத்தப் போகுதோ?
ஒரேயடியாக பிரிந்தாலும் ஆச்சர்யமில்லை
எது எப்படியிருந்தாலும் தம்பியின் கல்யாணத்தன்னிக்கே வாசுகி இப்படி தாடகை குணத்தை காட்டியிருக்கக் கூடாது
 

Pragathi Ganesh

Well-Known Member
வாசுகியின் ஓவர் கொலஸ்ட்ரால் அவளை கிருஷ்ணாவிடமிருந்து எவ்வளவு தூரத்தில் தள்ளி நிறுத்தப் போகுதோ?
ஒரேயடியாக பிரிந்தாலும் ஆச்சர்யமில்லை
எது எப்படியிருந்தாலும் தம்பியின் கல்யாணத்தன்னிக்கே வாசுகி இப்படி தாடகை குணத்தை காட்டியிருக்கக் கூடாது
Banu ma superrrrrr...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top