நிழலாய் ஒரு நினைவு - அறிமுகம் 2

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: எல்லாருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்:giggle::giggle::giggle:
இந்த பொங்கல் திருநாள்ல "நிழலாய் ஒரு நினைவு" கதையின் இன்னொரு டீஸர்...:):):)


வைபவ் வர்மா

IMG_20200115_192848.jpg

பார்த்தாலே தெரியும் இவன் ஒரு ப்ளே பாய் என்று... ஆனால் அதை வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியக்காரன்... கெட்டவனுக்கு மிகவும் கெட்டவன்... நல்லவனுக்கும் சில சமயங்களில் கெட்டவன் தான்... சரியான மாமா பையன் (மாமாவிற்கு ஏற்ற மருமகன்:p:p:p) இவன்... அவர் சொல்வதே வேத(சாத்தான்) வாக்கு இவனுக்கு... மற்றபடி எப்போதும் ஹீரோக்களை வர்ணிப்பது போல ஆறடி ஆணழகன்... சரியான 'ஃபிட்னெஸ் ஃப்ரீக்'... தன் உடலழகைப் பேணிக் காப்பதில் அலாதி ஆர்வம் உடையவன்... ஏனெனில் அதுவே மற்றவர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் என்ற எண்ணம் உடையவன்... வெளிநாட்டில் MBBS MS முடித்தவன் தன் அப்பாவின் 'வர்மா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்'ன் 'எல்.கேர்' ஹாஸ்பிடலில் எலும்பியல் மருத்துவராக இருக்கிறான்.

அதர்வா

IMG_20200115_192721.jpg

தன்னைச் சுற்றி எல்லாரும் எப்போதும் கலகலவென இருக்க வேண்டும் என்பதே இவனின் கொள்கை... ஆறடிக்கு ஒரு இன்ச் கம்மியாக வெண்ணையில் செய்ததைப் போன்று பளபளப்பாக அனைவரையும் கவரும் தோற்றத்தில் இருந்தாலும், இவனுக்கு முதல் பிளஸ் இவனின் குறும்பான, யார் மனதையும் புண்படுத்தாத பேச்சு தான்... எல்லாரோடும் எந்த வேறுபாடும் இன்றி சட்டென்று பழகிக் கொள்வான்... பெண்களின் இதயத்தை கொள்ளைக் கொள்ளும் இவன் ஒரு 'இதய மருத்துவன்' (ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்).

பாவ்னா

IMG_20200115_192742.jpg

பிறருக்கு உதவி செய்வதில் இவளை மிஞ்ச ஆள் கிடையாது... அதனாலே பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்பவள்... எதிர்காலத்தில் இவளை வைத்துக் கொண்டு 'அவன்' என்ன பாடு படப்போகிறானோ ... ஐந்தரை அடி அழகுப் புயல்... ஒருவன் வாழ்வில் புயலாகவும் மற்றொருவன் வாழ்வில் தென்றலாகவும் வீசக் காத்திருக்கிறாள்... மருத்துவராவதற்கு கடைசி படியில் இருக்கிறாள் (ஹவுஸ் சர்ஜன்)... 'எல்.கேர் மருத்துவக் கல்லூரி'யில் தான் தன் MBBSஐ மேற்கொள்கிறாள்... இவளின் இலட்சியம் பெண்மைப் பிணியியல் மருத்துவராவதே (gynaecologist)...

மனிஷ் வர்மா - பல்லவி வர்மா

1579099540341.jpg

கல்யாணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்றும் அதே காதலோடு வாழ்பவர்கள்... மனிஷ் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்... பல்லவியோ தமிழ் பெண்... இவர்கள் இருவரும் காதலால் கசிந்துருகி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின் திருமணம் புரிந்து இப்போதும் அதே புரிதலுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்காலிப்... இருவரின் காதலுக்கு சாட்சியாய் இரு மகன்கள் உள்ளனர்... பெரியவன் கௌரவ் வர்மா... சின்னவன் வைபவ் வர்மா... பல்லவியின் விருப்பத்திற்காக மனிஷ் இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கும் தான் உருவாக்கிய 'வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸின்' தலைமையகத்தை சென்னைக்கு மாற்றியவர்...

கைலாஷ்

IMG_20200115_202158.jpg

தங்கையைக் காக்கும் தமையனாய் இருப்பவன்... தன் தங்கை பல்லவிக்காக திருமணத்தை மறுத்து வாழ்பவன் (!!!)... முதலில் தங்கையின் காதலை மறுத்தவன் அவர்களின் அன்பைக் கண்டு மனம் மாறி அவர்களின் திருமணத்தை ஆதரித்தவன்... தற்போது அவன் தன் கடமையாகக் கருதுவது தன் இளைய மருமகனை வழிநடத்துவதே (!!!) மாமாவின் பேச்சைக் கேட்கும் மருமகன் அவன் வாழ்வில் சந்திக்கப் போவது???

கௌரவ் வர்மா - தீப்தி வர்மா

1579100456427.jpg

திருமணமாகி நான்கு ஆண்டுகளான இளைய (!!!) தம்பதிகள்... சிறு சிறு சண்டைகள் அதன் பின் சமாதானங்கள் என்று வாழும் அக்மார்க் 'ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்'... கௌரவ் கட்டிடக் கலையில் தன் மேற்படிப்பை முடித்துவிட்டு 'வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்'ன் ஆணிவேரான 'வர்மா கன்ஸ்டரக்ஷன்ஸை' வழிநடத்தி வருகிறான். இந்தியா முழுவதும் தன் தந்தையின் முயற்சியால் கிளைப்பரப்பிய 'வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸை' உலகம் முழுவது பிரபலப் படுத்துவதற்கு அயராது உழைப்பவன்... தீப்தியும் அவனுக்கு உதவியாக முதலில் இருந்தாலும், தற்போது தங்கள் இரண்டரை வயது வாண்டை சமாளிக்க வீட்டிலேயே இருக்கிறாள்...

சுர்வி வர்மா

IMG_20200115_191949.jpg

தன் மழலையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் குட்டி தேவதை... கௌரவ் - தீப்தி தம்பதியின் ஒரே புதல்வி... அவ்வீட்டில் அனைவருக்கும் செல்லம் அவள்... யாராலும் நெருங்க முடியாத தன் சித்தப்பாவைக் கூட தன் பேச்சால் கட்டிப்போடும் சின்ன சிட்டு...

வெங்கடேஷ்

IMG_20200115_191347.jpg

அதர்வாவின் தந்தை... சாதாரண மளிகை கடையில் ஆரம்பித்த இவர் வாழ்வு தற்போது 'டெபார்ட்மென்டல் ஸ்டோர்' வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது... சென்னையின் முக்கிய இடத்தில் உள்ளது இவரின் 'AV Departmental Store'... கல்யாணம் ஆகி ஆறு வருடங்களிலேயே மனைவியை இழந்தவர் தன் மகனிற்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருப்பவர்... தன் மகனின் மகிழ்ச்சியைத் தன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்...

இன்னும் சில கதாப்பாத்திரங்களை கதையின் போக்கில் காணலாம்...:giggle::giggle::giggle:
இவர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்து கொண்டு இந்த பொங்கலைக் கொண்டாடுவோம்...;):p:giggle:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes