தூரம் போகாதே என் மழை மேகமே!! - 32

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


கீழே இருந்து பார்த்தபோது ஏதோ ஒரு மரவீடு என்றுதான் எண்ணினாள் ஆதிரை. உள்ளே சென்று பார்த்த போது மிகவும் வியய்ப்புற்றாள். மூக்கில்களினால் ஆன வீடு அது. மூக்கில் தண்டுகளை இரண்டாக கீற்றிட்டு அவற்றை ஒவ்வொன்றாக இணைத்து ஏதோ நார் போல தெரிகிறது அதனைக் கொண்டு கட்டி இந்த வீட்டினை அமைத்திருக்கிறார்கள். பெரியதாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக அமைந்த ஒற்றை அறையுடன் கூடிய வீடு அது. காற்றோட்டமாக இருக்கவென்று இரு சிறிய ஜன்னல்கள். அவற்றை மூடுவதற்கென்றும் அந்த அறையின் கதவினை மூடுவதற்கென்றும் அதே மூங்கில் தண்டினால் ஆன கதவு. கொஞ்ச நஞ்ச வெளிச்கத்தையும் மறைக்கும்விதமாக மூங்கில் தண்டுகளின் மேலே தென்ன ஓலையோ இல்லை மூங்கில் ஓலையினாலோ போட்டிருக்க வேண்டும். அந்த அறையின் ஓரத்தில் கோரைபுற்காளால் ஆன ஒரு மெத்தை போன்ற அமைப்பு. அது மெத்தையாகத்தான் இருக்க முடியும். இந்த அறையினை பயன்படுத்துவது இல்லை பயன்படுத்தியது ,ஒருவர் அல்லது இருவரா இருந்திருக்க வேண்டும். இப்போது இந்த வீட்டில் யாருமில்லை என்பதால் இதை யாரும் பயன்படுத்துவதில்லை என்று சொல்ல முடியாது என்பதற்குச் சான்றாக அந்த வீட்டின் ஒருமுனையில் ஒரு சிறிய பானை. பானையின் மீது மூக்கிலினால் ஆன ஒரு தட்டு போன்ற மூடி. அதன் மேல் ஒரு பண் பாத்திரம். தண்ணீர் எடுத்துக் குடிக்கவாக இருக்கலாம். உடனே ஏதோ தோன்ற அந்தப் பானையினை திறந்து பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல் அதில் பாதி பானையளவு தண்ணீர் இருந்தது. அதுவும் சுத்தமான தண்ணீர். குறைந்தது ஒரு வாரத்திற்குள்ளாகப் பிடித்து வைத்திருந்திக்க வேண்டும். அதனை ஆச்சரியமாக உணர்ந்தாள். இத்தனையையும் கவனித்த ஆதிரை. இங்குக் கண்டிப்பாக யாரோ வசிப்பதை உறுதிக் கொண்டாள். அதுவும் இவ்வளவு அழகுடனும் நேர்த்தியாக அமைந்திருந்த அந்த வீடு ஆதிரையினை சிறிது பிரமிக்கச் செய்தது. தன்னைத் துரத்தி நெருங்கி வந்த அந்தக் கரடிக்கு மனதுள் நன்றி சொன்னாள் ஆதிரை.


கற்பனையும் கலையும் உள்ள விழிகளில் பார்த்த ஆதிரைக்கு மட்டுமே இவற்றைக் கவனிக்க முடிந்தது. இவற்றில் துளியும் ஆர்வமில்லா அர்ஜூன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஆதிரையை பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் வியப்பில் விரிந்த விழிகளைப் பார்க்கும் போது அர்ஜூனுக்கு அவள் விழியழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.


திடீரென்று அவன் கண்ணில் ஆதிரையின் மேல் சட்டை பின்னால் சிறிது கிழிந்து தெரிந்தது. ‘அவசரமாக மேலே ஏறி வந்ததில் சாதாரண ஓலையினால் ஆன அந்த ஆடை கிழிந்துவிட்டத்தில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதனை அவளிடம் எப்படிச் சொல்வது.’ என்று யோசித்தவன் உடனே அவளைப் பார்ப்பதை தவிர்த்து அவன் விழியினை தாழ்த்தினான். “ஆதிரை..” என்று மெதுவாக அழைத்தான்.


அவனது குரலில் சுயநினைவுக்கு வந்த ஆதிரை மெதுவாகத் திரும்பினாள். திரும்பியவளுக்கும் அவனிடம் முன் போல இயல்பாகப் பேச முடியவில்லை. அவனை அணைத்துக் கொண்டு நின்றதை அவன் என்னவென்று நினைத்திருக்கக் கூடுமோ என்பது நினைவு வர, ஏனோ ஆதிரையின் கன்னங்கள் மீண்டும் சிவந்தது. என்றும் இல்லாத விதமாக அவள் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே தெளிவாக வெளியில் கேட்டது. அவனை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று அவள் நின்றிருந்த இடத்திலே குத்துகாலிட்டு அமர்ந்தாள். பின் அவன் இன்னும் அவளது பதிலுக்காக காத்திருப்பது போலவும் அவள் குரல் கேட்காததாலும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.


அவளின் மன நிலையை அவள் முகமும் அவள் அமர்ந்திருந்த தோற்றமும் அப்படியே காட்டியது. “ஆதிரை…” என்று மீண்டும் அழைத்தான்.


“ம்…ம்ம்… சொ… சொல்லுங்க சார்” என்று வராத குரலிலும் காற்றிலுமான வார்த்தையாகச் சொன்னாள்.


“என்ன உன் முகம் என்னமோ போலிருக்கிறது. ஏதேனும் செய்கிறதா! உனக்கொன்றுமில்லையே!” என்று கண அக்கறையாகக் கேட்டான்.


‘அவனுக்கு என்ன பதில் சொல்வது உண்மையில் என்னுள்ளே ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டதைச் சொல்வதா! என்ன வென்று சொல்வது. தலை வலி இல்ல காய்ச்சல் என்றால் சொல்லலாம். ஆனால் இது என்ன உணர்வென்றே தெரியவில்லையே!. சுகமாகவும் சுமையாகவும் தோன்றுகிறதே. கூடவே இனம் புரியாத பயம்! என்னுள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையே! கரடியைப் பார்த்த பயத்தில் ஒரு ஆதரவாகத்தானே அவன் மீது சாய்ந்து கொண்டேன். அதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறதே!. இதோ இப்போது கூட அவன் தவறாக எதுவும் நினைக்காமல் பேசாமல் எவ்வளவு அக்கறையாக பேசுகிறான்.’ என்று அவள் மனம் அவளின் செயலுக்கு நியாயம் பேசியது. ‘என்ன இருந்த போதும் பார்த்து இரண்டு நாள் கூட ஆகாத யாரென்றே தெரியாத ஒரு ஆணை அது பாதுகாப்பின் பொருட்டே என்ற போதும் அணைப்பது சரியாகாது’ இவ்வாறாக அவள் மனமும் புத்தியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. இறுதியில் புத்தியே வென்றது. அதன் பலனாக ஆதிரை பேசினாள்.


அவளின் இந்த மனபோராட்டாம் அவள் முகத்திலிருந்த கருவண்டுகள் போன்ற கண்கள் இங்கும் அங்கும் நடனம் ஆடியதைக் கொண்டும் நெற்றி சுருக்கத்தைக்யும் கொண்டுமே அர்ஜூன் அறிந்து கொண்டான். இப்படி ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தே அவள் மன போராட்டத்தை அறிய முடியுமென்று யாரேனும் நேற்று முன்தினம் அவனிடம் சொல்லியிருந்தால் அதனை அவன் நம்பியிருக்க மாட்டான். அவனே இன்று அதனை உணரும் போது ஏதோ மாயகலை கற்றது போல ஒரு பெருமிதமே உண்டானது. அதுவும் ஆதிரையின் மனதை இனி படிக்கமுடியுமென்று அறியும் போது குதுகலமிக்க மகிழ்ச்சியே உண்டானது.


நீண்ட நேரமாக ஆதிரையின் போராட்டம் தொடர்வதை ஏதோ விருப்பமான தொலைக்காட்சி தொடர் போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அவளின் இந்த அழகிய தோற்றத்தையும் அவளது விழி அழகையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவற்றை ஒவ்வொன்றாக தன் மனத்திரையில் சேமித்துக் கொண்டே இருந்தான். அவ்வாறாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் இந்தத் தோற்றத்தை களைக்கும் எண்ணமே தோன்றவில்லை. அவனையும் அறியாமல் அவனது உதட்டில் மெல்லிய புன்னகை விரிய ஆரம்பித்திருந்தது.


அப்போது ஆதிரை விழி நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். பார்த்தவள் அவனது விழிகள் அவளையே இத்தினை நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தபோதும் மீண்டும் அவள் காது மடல் வரை சூடேறியது. மீண்டும் தன் விழிகளைத் தாழ்த்தினாள் மெதுவாக, “அ.. அது.. சா.. சார்.. sorry சார். நா… வேணும்னு அ… அப்படி… செய்யல” என்று திக்கி திக்கி அவள் புத்தி கூறியதை அவனிடம் கூறினாள்.
அதற்கு..” ஆஹம்.. எ… எப்படிச் செய்தாய்” என்று அவளைப் போலவே புன்னகை மாறாமல் கூறினான். அவள் இந்த இன்ப அவஸ்தையை ரசித்தவாறே!


அவனைப் பார்த்த ஆதிரைக்கு அவனது புன்னகை அவளைக் கேலி செய்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது. இருந்தும் ‘இவனுக்கு இதிலென்ன விளையாட்டு. நான் அவதியுறுவது இவனுக்கு வெல்லக்கட்டி போல இனிக்கிறதா!’ என்று கடுகடுப்பு உண்டானது.


“நா…உ… உங்கள..” என்று சொல்ல முடியாமல் நின்ற ஆதிரைக்குக் குரலாக அர்ஜூன், “ நீ. என்னை” என்று ஊக்கினான்.


“அது. வேணும்னு அணைத்துவிடவில்லை. பயத்தில் அப்படிச் செய்துவிட்டேன்” என்று ஒரு வழியாகக் கூறினாள்.


“ஓ… அப்படியா! எனக்கு நீ அணைத்தது போலவே தெரியவில்லை. சரி அப்படியே இருந்தாலும் அதற்கென்ன” என்று அதனைப் பொருட்படுத்தாமல் கூறினான்.


“விருப்பமில்லாத ஒருவரிடம் எல்லை மீறுவது எவ்வளவு வேதனை அளிக்குமென்று நீங்கத்தானே இன்று காலை சொன்னீங்க. அதுதான் sorry சார்.” என்றாள் ஆதிரை..


“ம்ம். அது விருப்பமில்லாமல் செய்தால் தானே. எனக்கு நீ என்னை அணைத்தது எனக்கு விருப்பமே!. நீ சங்கடமில்லாமல் இயல்பாக இருந்ததும் நன்றாகத்தான் இருந்தது. அதனால் எனக்கு இரு மடங்கு மகிழ்ச்சியே. அது எப்படி எல்லை மீறுவதாக முடியும்” என்று தன் மனதுடன் அவள் மனதையும் தெளிவு படுத்திவிட்டான் அர்ஜூன். இருந்த போதும் அதனை ஆதிரை மறுத்துப் பேச கூடுமென்று அவன் உணர்ந்திருந்ததால் அவளைப் பேசவிடாமல் , “அதுதான் உன் கவலையென்றால் அதனைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம். எனக்கு அதில் எந்த வேதனையும் இல்லை. இப்போது முக்கிய பிரட்சனை உன் மேல் சட்டை கிழிந்திருக்கிறது அதற்கு ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்ப்போம்” என்று அவள் எண்ணத்தைத் திசை திருப்பும் விதமாகக் கூறினான்.


அர்ஜூன் சொல்வதை கேட்டிருந்த போதும் , பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்துக் கொண்டிருந்த ஆதிரைக்கு அவள் ஆடை கிழிந்திருக்கிறது என்றதும் பெண்மையின் வேகத்தில் அவன் சொல்வதை மறந்து அவளது ஆடையினை அவசரமாக ஆராய்ந்தாள்.


“ஆதிரை… பெரிதாக ஒன்றுமில்லை. கவலைப் படாதே. சிறிதாகத்தான் தெரிந்தது. ஒரு வேளை உனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் என் மேல் சட்டையை தரட்டுமா! கீழே கரடி இன்னும் இந்த மரத்தில் சாய்ந்து கொண்டு நாம் கொண்டு வந்த தர்பூசணியினை சாப்பிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறது. அதனால் இப்போதிக்கு ஆயுதமும் இல்லாமல் கீழே சென்று என்னால் நம் கோணி பையையும் உன் துணியினையும் கொண்டு வரமுடியாது. நான் சினிமா பட hero இல்லையே! அதனால் என்ன சொல்கிறாய். இப்படியே இருக்கிறாயா! இல்லை என் சட்டை தரட்டுமா” என்றான் அர்ஜூன்.


வேறேதும் தோன்றாமல், “நானுமே அதைத்தான் யோசித்தான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்க சட்டையைத் தர முடியுமா! சார்” என்றாள் ஆதிரை.


“ம்ம். பரவாயில்லை. கொஞ்சம் தெளிவாக தான் இருக்கிறாய். இதற்கும் உன்னுள் போராட்டம் கொண்டு நேரம் கடத்தாமல் சொல்லிவிட்டாயே!” என்று அவன் சட்டையை கழற்றி அவளிடம் தந்தான். கையற்ற வெள்ளை பனியன் அவன் உடலோடு ஒட்டுக் கொண்டு அவனுடைய ஆண்மை தேகத்தை ஆதிரைக்குக் காட்டியது. அவனைக் கண்டு அவளின் தைரியமும் , இவ்வளவு காலம் மனதைக் கட்டி வைத்திருந்தேன் என்று எண்ணியிருந்த மமதையும் இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்து கொண்டது.


அவளருகில் வந்து அவனே அந்தச் சட்டையை தந்த போதும் ஒரு வினாடி அவனைப் பார்த்தவள் உடனே முகம் தாழ்த்திக் கொண்டாள். அவளைப் பார்த்த அர்ஜுனுக்கு , ‘இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட பெண்கள் இருக்கிறார்களா!’ என்று ஒரு வினாடி ஆச்சரியமே கொண்டான். பின் மீண்டும் அவளை வேண்டுமென்றே சீண்டுவதற்காக ,” ஆதிரை. நேற்றிலிருந்து இந்த phant போட்டுக் கொண்டு இருக்கிறேன். உனக்குச் சங்கடமாக இருக்காதென்றால் நான் கொஞ்சம் வசதியாக ஆடையை மாற்றிக் கொள்ளட்டுமா!” என்றான்.


புரியாமல் அவனைப் பார்த்த ஆதிரை , “ ஆன்… “ அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்த ஆதிரைக்கு வியர்த்துவிட்டது.


“ஏய். பயப்படாதே. நான் boxer தான் போட்டிருக்கிறேன். நான் இப்படித் தொடர்ந்து phant போட்டுக் கொண்டே இருந்ததில்லை. தூங்கும் போதும் உனக்காக அப்படியே தூங்கினேன். எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அதனால்தான் கேட்டேன். ஆனால் உனக்குச் சங்கடமாக இருக்குமென்றால் வேண்டாம். உன்னைப் பார்த்தால் அப்படியோன்றும் என் அழகில் மயங்கிவிடுபவளாகத் தெரியவில்லை. இருந்தபோதும் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளலாமென்று கேட்டேன்” என்று ஒரு கிடுக்குபிடி போட்டே அவளிடம் கேட்டான். அவன் மனதுள் என்ன சொல்ல போகிறாள் என்ற ஆர்வம் உண்டானது. அவள் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அர்ஜூனுக்கு சந்தோஷமாகவே இருக்கும் என்பது போலான கேள்வியையல்லவா கேட்டிருக்கிறான்.


‘இது என்னடா சங்கடமா போச்சு. இப்போ பரவாயில்லை. உங்க விருப்பம் போல் இருங்க என்றால் எனக்குச் சங்கடமாக இருக்கும் அவனை நேராகக் கண்டு பேச முடியாமல் கூச்சமாக இருக்கும். வேண்டாம் என்றாலோ அவனழகை கண்டு அஞ்சுவது போலாகும். என்ன செய்வது’ என்று அவளை மேலும் ஒருமுறை யோசிக்க வைத்தான். பின் “உங்க விருப்பம் சார் இதில் நான் சொல்ல என்ன இருக்கு. நான் இந்த ஓலையில் ஆடை அணிந்த போது உங்க அனுமதி கேட்டா போட்டுக் கொண்டேன்” என்று எங்கோ பார்த்தவாறு அவனுக்குப் பதில் கூறினாள்.


அவளது பதிலில், “ ஓ… அதுவும் அப்படியா! சரி.. எனக்கு ஒரு ஆடை சுதந்திரம் கிடைத்தது.” என்று உல்லாசமாக விசிலடித்த வண்ணம் அவனது phant – ஐ கலற்றிவிட்டு அங்கிருந்த அந்த கோரைபுற்கள் மெத்தையின் மீது லாகவமாக படுத்துக் கொண்டான்.


‘என் அண்ணன் வீட்டில் இப்படிதான் இருப்பான். இதிலேதும் தப்பில்லையே. ஆனால் இவனை இப்படிப் பார்க்கும் போது மட்டும் என் மனம் குதிரை பந்தயம் போடுவதேன். இன்றோ இல்லை நாளையோ நாம் சென்னை போனதும் அவன் யாரோ இல்ல நாம் யாரோ அப்படி இருக்க இப்படித் தவிப்பதேன். இம்முக்கும் இந்த மனதுக்கு முட்டி கட்டை போட வேண்டும் என்று தன் தலையினை சிலுப்புக் கொண்டு எழுந்தாள்.


“சார். நீங்க சில நிமிடங்கள் வெளியில் இருக்கீங்கலா. நான் இந்தச் சட்டையை போட்டுக் கொள்கிறேன்.” என்றாள்.


“ஓ.. நான் உன்னைப் பார்ப்பதற்கில்லை. நான் இப்படி திரும்பிக் கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார். நான் தான் விருப்பமில்லாமல் எல்லை மீறமாட்டேனென்று இன்று காலை வாக்களித்திருக்கிறேனே!. எனக்குக் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. இந்த வீடும் கொஞ்சம் வசதியாக இருக்கிறது. வேண்டுமென்றால் என் phant-ஐயும் போட்டுக் கொள்” என்று விற்றேறியாக சொல்லிவிட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.


அவனது இந்தச் செயல் ஆதிரையிடமிருந்த குணம் மீண்டும் திரும்ப வெளி வரக் காரணமாகியது. அவனுக்கு அலகு காட்டுவது போல நாக்கை வெளியே நீட்டி அவனுக்குக் கோணல் காட்டினாள். “ஊங்க phant எனக்கொன்றும் தேவையில்லை. என் பாவாடையே நன்றாக இருக்கிறது. அதனோடு சட்டையென்றால் பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் உங்க phant பெரிதாக இருந்தால், இருந்தால் என்ன பெரிதாகத்தானே இருக்கும். அதனை போட்டுக் கொண்டு என்னால் அதனோடு அவஸ்தை கொள்ள முடியாது. இந்தாங்க நீங்களே வச்சிக் கொங்க” என்று அவன் மீதே அந்த phant – ஐ வீசி எரிந்தாள் ஆதிரை.


“அப்புறம் உன் இஸ்டம்” என்று ஏதோ பாட்டினை முணுமுணுத்தவாறு அவன் மீது போட்ட phant –ஐ எடுத்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.


அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரைக்குக் கோபம் உச்சி வரை ஏறியது. ‘இவன் எப்போதும் கடுவன் பூனைதான். வேண்டுமென்றே என்னை வம்புக்கு இழுக்கிறான். இவன் நல்லவன் என்றெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது’ என்று கொஞ்சம் சத்தமாகவே முனுமுனுத்துவிட்டு வேறு வழியில்லாமல் அந்தச் சட்டையை மாற்ற எத்தனித்தாள் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top