தூரம் போகாதே என் மழை மேகமே!! - 18

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
ஆதிரை, குழப்பத்துடன் தான் இருக்கும் நிலையை கண்டு அச்சமுற்றாள். 'இதே போல்தான் நேற்றும் ஈரமான தன் ஆடை மற்றும் அதே அவன் என் அருகில். தனக்கு என்னமோ நடந்திருக்கிறது என்பதை ஆதிரையால் உணர முடிந்தது. ஆனால் இந்தக் கடுவன் புன்னை எப்படி இங்கே!. அதனோடு இது!! இது என்ன இடமென்றே தெரியவில்லையே!. என்னை ஏதேனும் இவன் மயக்கம் மடைய செய்து கொணர்ந்தானா! ஒரு வேளை அந்த ரொட்டி துண்டுகள். !!' என்று விழிகள் விரிய யோசித்தாள்.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற முதுமொழிக்கேற்ப, குழப்பமுற்ற ஆதிரையின் மனது நடக்காத ஒன்றை உருவகப்படுத்துக் கொண்டு அர்ஜூன் மீது கோபத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் அர்ஜூன் ஆதிரையின் அருகில் நெருங்கி "ஆதிரை… உனக்கு ஒன்றுமில்லையே!” என்று கவலையுடன் கேட்டான்.


அவனை எரித்துவிடுபவள் போல் பார்த்தவள் “என்ன… ஏன் இப்படி செய்தீங்க" என்று அவளால் ஆன வரை சத்தமாக கேட்டாள் ஆதிரை.


‘என்ன நான் செய்தேன்' என்று குழப்பமுடன், “என்ன , என்ன செய்தேன்! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றான் அர்ஜூன்.


“உங்களுக்கு ஒன்றும் புரியாது. அந்த அந்த ரொட்டி துண்டுகளில் என்ன மயக்க மருந்து கலந்தீங்க! அதை சாப்பிட்டதால்தான் அங்கிள்கள் ரெண்டு பேரும் அப்படி அந்த park – ல தூங்கி போனாங்களா!. “ என்று எங்கோ பார்த்துக் கொண்டு கற்பனையில் யோசித்துக் கொண்டே அர்ஜூனிடம் கேட்டாள் ஆதிரை.


இவ்வாரெல்லாம் யாரேனும் யோசிக்க கூடுமா! என்று கண்கள் இடுங்க ஆதிரையை வெறித்தான் அர்ஜூன். “ நீ என்ன பேசுகிறாய் என்று யோசித்துத்தான் பேசுகிறாயா!” என்று எச்சரிக்கும் குரலில் கேட்டான் அர்ஜூன்.


“இதில் என்ன யோசிக்க இருக்கிறது. நேற்றும் இது போல்தான் ஏதேனும் நடந்திருக்குமோ! உங்கள் company – ல் அந்த coffee- ஐ குடித்த 10 நிமிடத்தில் எனக்கு என்ன நடந்தது என்று நினைவே இல்லை. அதன் பிறகு கண் விழித்துப் பார்த்தால் இதே போல் நேற்றும் என் ஆடை நனைந்திருந்தது. அங்கே அங்கிளும் இல்லை என் ராஜாவும் இல்லை. நீங்க … நீங்க மட்டும் தான் இருந்தீங்க. இதோ இன்று போல!” என்று ஏற்ற இறங்கங்களுடன் ஆச்சரியமும் அச்சமும் பரவ சொன்னாள் ஆதிரை.


அர்ஜூன் ஆதிரையின் பேச்சை கேட்டதும் , ‘இவளுக்குப் பைத்தியம் பிடித்து இருக்கிறதா என்ன? . இப்படியெல்லாம் கற்பனை செய்கிறாள். பேசாமல் இவள் கதை எழுத சென்றிருக்கலாம். ஒரு நொடியில் எப்படியெல்லாம் இவள் கற்பனை சக்தி வேலை செய்திருக்கிறது.' என்று மனதுள் நினைத்தான். பின் "உனக்கென்ன பைத்தியமா! என்ன கற்பனை செய்கிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா!” என்றான் முகத்தில் கடினத்தை காட்டி.


ஆனால் ஆதிரையின் மனதில் அர்ஜூனை பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லாததால் அவள் நினைப்பது சரி என்று உறுதியாக இருந்தாள். அதனை நிரூபிக்கும் விதமாகவே பேசலானாள். “ என்னை என்ன தைரியத்தில் தொட நினைத்தீங்க. உங்கள் மனதில் என்னைப் பற்றி இருக்கும் எண்ணம், நான் உயிருடன் இருக்கும் வரை ஒரு போதும் நடக்காது. நான் நெருப்பைப் போன்றவள். கணவனற்று குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணை மற்ற ஆண்கள் எப்போதும் அசிங்க கண்ணோடுதானே பாபீங்க. இதில் நீங்க என்ன விதிவிலக்கா!” என்று அவனைப் பார்த்து ஏளன புன்னகையுடன் கேட்டாள். பேச்சின் நடுவில் கடல் காற்றில் குளிரிய தன் தேக நடுக்கம் நாவிலும் ஒட்டி அதனை நடுங்கச் செய்ததும்...


அர்ஜூனுக்கு, அந்நியன் படம் பார்ப்பது போல இருந்தது ஆதிரையின் பேச்சும் செயலும். ஆனால் ஆதிரையின் இந்த அநியாய குற்றச் சாட்டை அர்ஜூனால் ஜீரணிக்க முடியவில்லை. “போதும் நிறுத்து. அங்கிள் கெஞ்சிக் கேட்டாரே! என்றும், பாவம் உன் குழந்தை தாயில்லாமல் தவிக்க போகிறதோ என்று எண்ணியும் உன்னைத் தேடி வந்ததற்கு என்னவெல்லாம் பேசுகிறாய். நான் தெரியாமல்தான் கேட்கிறேன். உன்னைக் கடத்தி கொண்டு வருவதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது. உனக்கென்ன உலகின் பேரழகியென்று நினைப்பா! “ என்று அவளை பார்த்துக் கேட்டான்.


அவன் உதடு அவளைப் பேரழகியா என்று கேட்ட போதே, அர்ஜூனின் கண்கள் அவளை அளவெடுத்தது. ‘ அவள் பேரழகிதானோ!. அவ்வளவு கோபத்திலும் அவளது கண்கள் பார்ப்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறதே!. அதோ அவள் மூக்கு செதுக்கினார் போல சிற்பத்தைவிடவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறதே!. அவள் உதடு , கோபத்தை அடுக்குவதற்காக அவள் வெண் பற்களை கொண்டு கடித்து புண்ணாக்கியதால் சிவந்ததா! இல்லை இல்லை. அவை இயற்கையாகவே கோவை பழ சிவப்புதான்.. அவளது மெல்லிடை. நேர் கொண்டு நிமிர்ந்து நிற்கும் தைரியமான கர்வம். எல்லாவற்றிற்கும் மேலாக அவளது கூந்தல், அந்த மாலை சூரியன் மறையும் பொழுதில், கடலின் ஈரக்காற்று வீசும் சூழலில் அவள் முகத்தில் விளையாடி, அவளது அழகைப் பன்மடங்கு உயர்த்தி அவளை பேரழகியாகவே தோன்ற வைக்கிறதே!’ என்று மனதில் எண்ணினான் அர்ஜூன்.


“என்ன அங்கிள்கள் கேட்டாங்களா:” என்று ஆதிரையின் குரலில் சுருதி குறைந்து கேட்டது. . தொடர்ந்து “என்ன நடந்தது! எல்லோரும் எங்கே!. அங்கிள் என்ன சொன்னார்?” என்றாள்


“ஆமா! என்னைப் பேச விடாமல் என்னவெல்லாம் பேசுகிறாய்! நாம் எங்கிருக்கிறோமென்று எனக்குமே தெரியவில்லை.” என்று சுற்றுமுற்றும் குழப்பத்துடமன் பார்த்தான் அர்ஜூன். அவ்வாறு பார்த்த போதும் ஆதிரையின் மீது ஒரு கண் வைத்திருந்தான்.


அப்போதுதான் ஆதிரையும் ,அவளைச் சுற்றி இருக்கும் இடத்தைப் பார்த்தாள். இது ஆள் அரவமற்ற இடமாக மட்டுமல்ல காட்டின் மிக அருகில் என்று தோன்றவும் , “ நாம் எங்கிருக்கிறோம்" என்று அர்ஜூன் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னாள்.


“ம்ம். கண்டு பிடிக்க வேண்டும். பரவாயில்லை. அம்மையாருக்கு, கொஞ்சம் உணர்வு வந்தார் போல இருக்கு! கொஞ்சம் வீண் கற்பனைகளை விடுத்து எனக்கு உதவி செய்ய முயற்சி செய். மற்றபடி , நீ நினைப்பது போல எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. இங்கிருந்து இருட்டுவதற்குள் நாம் கிளம்ப வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து வீண் விவாதங்களில் நேரத்தை வீண் செய்யாதே!” என்றுவிட்டு அவனது phone – ஐ எடுத்து , “GPS மூலமாகச் சென்னை கடற்கரையிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறோமென்றே தெரியவில்லை!” என்று குழப்பத்துடன் அவனுக்குள் கேட்டுக் கொண்டான்.


“என்ன நடந்தது சார்" என்றாள் ஆதிரை.


அவளை ஒருதரம் உற்று பார்த்துவிட்டு , “ பிறகு சொல்கிறேன். இப்போது நாம் வீடு சேரும் வரை நான் சொல்வதை செய்" என்றான் அர்ஜூன்


அர்ஜூனின் நிலையை உணர்ந்த ஆதிரை, 'தற்போது ஏதும் அவனிடம் பேசுவது உசிதமாகாது, முதலில் ராஜாவைப் பார்க்க வேண்டும். வானத்தைப் பார்த்தால் இன்னும் 1 மணி நேரத்திற்குள் இருட்டிவிடும் போல இருக்கிறதே!’ நினைத்தாள்.


அர்ஜூன் ஆதிரையை மறுமுறை பார்த்தான். ஆதிரையும் அர்ஜூனை கண்டாள். சில வினாடிகள் இருவரும் பேசும் எண்ணமற்று அவர்களை அறியாமல் பார்த்துக் கொண்டனர். அப்போது அர்ஜூனின் phone- ல் இருந்து signal வந்ததற்கு அறிகுறியாக ஒரு missed call notification வந்தது. சேகர் அங்கிள்தான்.


அவசர்மாக அர்ஜூன் ஆதிரையை நோக்கி “ஆதிரை. தப்பாக ஏதும் எண்ணாமல் , நான் phone பேசி முடிக்கும் வரை என் கையை பிடித்திருக்க வேண்டும். மீண்டும் நீ எங்காவது போய்விட்டால் என்னால் உன்னைத் தேடி அலைய முடியாது. ஏற்கனவே நேரம் ரொமப ஆகிவிட்டது.” என்றான் .


"‘என்ன!” என்று அர்ஜூனை முறைத்தவள், “நேரம் ஆகிறது ஆதிரை. தாமதமானால் , இன்று இரவு இங்கே நாம் தங்க நேரிடலாம். இது சிறிது காட்டுப்புறமாக தோன்றுகிறது. என்ன விலங்கு இருக்கும் ஏதும் தெரியாது. நம்மிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை" என்றவுடம், ஏதும் பேசும் சக்தியற்று அவனது கையை வந்து பற்றினாள்.சில்லிட்டிருந்த அவளது கைக்கு அவனது கதகதப்பான கை சுகமாக இருந்தது.


அர்ஜூன், phone – ல் பார்த்ததும் உணர்ந்து கொண்டான். சுமார் 10 km தூரத்தில் கடற்கரையிலிருந்து இருந்தார்கள். GPS location – ஐ , கப்பலின் கேப்டனுக்கும் , சேகர் அங்கிளுக்கும் அனுப்பிவிட்டு, சேகர் அங்கிளிடம் ஆதிரையைப் பற்றி கூறிவிட்டு அவர்களை ஓய்வெடுக்கச் செல்ல சொன்னான். அப்போது ஆதிரையிடம் பேச வேண்டுமென்று சேகர் அங்கிள் கேட்டதற்கிணங்க phone – ஐ அவளிடம் கொடுத்தான்.


"ஒரு இரு வார்த்தைகள் ஆருதலாகச் சொல்லி அவர்களை ஓய்வெடுக்கச் சொல்" என்றான் அர்ஜூன்.


“hello ! “ என்று அவளது குரலை கேட்டதும், “என்ன ஆதிமா! இப்படிச் செய்துவிட்டாய். நான் மிகவும் துடிதுடித்து போய்விட்டேன். உனக்கு விருப்பம் இல்லையென்றால் நீ எங்கும் செல்ல வேண்டாம். கவலையில்லாமல் வந்து சேர். ராஜாவைப் பற்றியும் கவலை பாடாதே. அவனை நாங்க பாத்துக்கிறோம். இது போல எப்போதும் செய்யதிடாதேமா" என்று படபடப்புடன் பேசினார் சேகர்.


அதற்கு அர்ஜூன் அவசரமாக, "சரிங்க அங்கிள் , நீங்க rest எடுங்க , நாங்க வந்துடுறோம்'"என்று சொல் என ஆதிரையைப் பணிந்தான். அவளும் அவ்வாறே சொன்னாள். ஆனால் அவள் மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top