ஜீவநதி - 1

Aishwarya Nachiar

Writers Team
Tamil Novel Writer
#1
ஜீவநதி-1

இராஜபாளையம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி. இராஜபாளையத்திலிருந்து அரைமணி நேர தூரத்தில் ஆண்டாள் ஆட்சி செய்யும் திருவில்லிபுத்தூரும்(srivilliputhur) , ஒரு மணி நேர தூரத்தில் பொதிகை (குற்றால) மலையும் அமைந்துள்ளது.


குற்றால சாரல் காலத்தினால் (சீசன்) அந்திமாலை பொழுது கூட நடுசாமம் போல் காட்சியளித்தது இராஜை என்றழைக்கப்படும் இராஜபாளையம்.பல பல டெக்ஸ்டைல் நிறுவனங்களையும் , நூற்பாலைகள் மற்றும் கட்டுதுணி(bandage cloth) தயாரிப்பு நிறுவனங்களையும் உள்ளடக்கிய இந்நகராட்சி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் .

இந்த இனிய மாலை வேளையில் கூட பெரிய வீட்டின் மருமகள் செல்வி மிகவும் பதற்றமாக நடந்து கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு இல்லை ரசித்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் குடும்ப தலைவரும் செல்வியின் காதல் கணவருமான ஆறுமுகம் .

ஆறுமுகம்-பொற்செல்வி தம்பதியர் காதல் திருமணம் புரிந்தவர்கள். இன்றளவும் ஆறுமுகத்தின் அம்மா சௌந்தரவள்ளி மருமகளை தேள் போன்று கொட்டுபவர் . ஆறுமுகம்-பொற்செல்வி தம்பதியினர்க்கு ருத்விக் , வருணா என இரு பிள்ளைகள் .

ருத்விக் பெங்களூர் ஐஐடியில் பொறியியல் பட்ட படிப்பும் , சிங்கப்பூரில் மேனேஜ்மென்ட் படிப்பும் முடித்து தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வருகிறான் . ருத்விக் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் கோபக்காரன் மற்றும் அன்பானவன் . ருத்விக் 26 வயது கட்டிளங்காளை . வருணா சென்னையில் BA முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் 19 வயது சிட்டு .

என்னங்க நான் இவ்ளோ பதட்டமா இருக்கேன் நீங்க என்னனா டீவி பாத்திட்டு இருக்கேங்க என வேக மூச்சுக்கள் வாங்கிக்கொண்டு இருந்தார் செல்வி . அச்சோ பொன்னு உங்க அம்மா-மகன்‌ ஆட்டத்துக்கு நான் வரல மா இப்ப சண்டை போட்டுகிவேங்க அஞ்சு நிமிஷத்துல சேர்ந்திடுவேங்க .. உங்க சண்டையில் நான் நுழைஞ்சு கடைசி என்னோட தலை தான் உருளும் என்ன விட்டுடா மா தங்கம் என்று முழுநீள சோபாவில் பதுங்கி விட்டார் ஆறுமுகம் .

தன் மாமாவின் பேச்சைக் கேட்டு திகைத்த பொன்னு வின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அவர் எண்ணத்தின் நாயகனே வருகை புரிந்தான் . அந்த பெரிய வீட்டின் வாசலில் அதிவேகமாக கீரீச் என்ற சப்தத்துடன் வந்த் நின்றது நீல நிற மாருதி சுசூகி . கார் வந்து நின்ற வேகத்திலேயே அதன் எஜமானரின் கோபத்தின் அளவும் புரிந்தது .நதி இணையும்.... images(94).jpg images(83).jpg
 
#3
:D :p :D
உங்களுடைய "ஜீவநதி"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஐஸ்வர்யா நாச்சியார் டியர்
 
Advertisement

Sponsored