சின்னஞ்சிறு அதிசயமே!(குட்டி கதை)

Preetz

Writers Team
Tamil Novel Writer
#1
"ஓய் நீ ஏன் இப்படி இருக்க???..."

"......."

"சரியாவே சாப்பிட மாட்டேங்கிற...ஒழுங்கா சாப்பிட்டாத்தானே பாக்கறதுக்கு இன்னும் அழகாவ?..."

"......"

" சீக்கிரமே இந்த காயமெல்லாம் ஆறி இது இருந்த வடு கூட இல்லாம எவ்வளோ அழகா பூத்துக் குலுங்க போற பாரு!" என்று அவள் அறை மேசையின்மேல் இருந்த சிறிய பூத்தொட்டியிடம் பேசிக் கொண்டிருந்தவளை கலைக்கும் வண்ணம்...

"அடிப்பாவீ!!! ராட்ச்சசீ!!!" என்றவாறு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.


"என்னவாம்?" என்று அவள் தலையை மட்டும் திருப்பினாள் அவன்புறம்.

"என்னவாமா வா???... ஒரு மனுசன் நமக்காக காத்துக் கெடக்கானே சீக்கிரம் கிளம்புவோம்னு இல்லாம...இந்த வாடிப் போன செடிக்கிட்ட இவ்வளோ நேரமா பேச்சு வார்த்தை நடத்திட்டிருக்க நீ..."


தன் தவறை உணர்ந்து 'ஸ்ஸ்ஸ்' என்று நாக்கை கடித்துக் கொண்டவள் அவனிடம் திரும்பினாள்.

"சாரி அஜு!!! இரு தண்ணி விட்டுட்டு வரேன்!" என்றவள் அங்கிருந்த குவளையிலிருந்து அந்த பூத்தொட்டிக்கு நீர் வார்க்கப் போனாள்.

"ஏன் ஆரா...அந்த செடிதான் வாடிருச்சே அப்புறமும் ஏன் போட்டு தண்ணி விடற???" என்றவன் வினவ குவளையை பக்கத்து இருக்கையில் வைத்தவள் அவனிடம் திரும்பினாள்.

"இல்ல அஜு... நிச்சயம் இந்த செடி ஒரு நாள் பூத்து குலுங்கும்..."

"ஆரா...அத கொஞ்சம் பாரேன்... முழுசா பட்றுச்சு... எப்படி வாடிக் கெடக்கு பாரு... இதுல எப்படிடா பூ வரும்? பாஸிட்டிவ் திங்கிங் இருக்கலாம் ஆனா அதுக்குனு இந்த அளவுக்கா?" என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள்

"நீ வேணா பாரு... இதுல ஒரு நாள் பூ பூக்கத்தான் போகுது!" என்றாள்.

"அம்மா தாயே அது பூக்கறது இருக்கட்டும்... இப்போ நீ கிளம்புனாத்தான் ராத்திரி பத்துக்குள்ள உன்ன வீட்டுல விட்டுட்டு நான் வீட்டுக்கு போக முடியும்..." என்க அவளும்

"ஹே... சாரி சாரி இரண்டு நிமிஷம் நான் வந்துட்டேன்" என்று துள்ளி ஓடியவள்....இன்று அவன் முன்னால்...அதே அறையின் மெத்தையில் ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க கண்மூடிக் கிடந்தாள்.


கோமாவாம்...ஹ்ம்ம்

அவன் பார்வை அந்த மேசையை தொட்டு திரும்பியது... அந்த பூத்தொட்டியில்... துளிர் விட்டிருந்தது!

அழுவதா....இல்லை சிரிப்பதா... என்றுத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அவன்.

அவனுக்கு அவள் என்றுமே அதிசயம்தான்.

வாழ்கைக்கான அவளது கண்ணோட்டமே வேறு. எல்லாவற்றிலும் நன்மையை தேடுபவள்...அவள் பார்வையில் எல்லாமே அழகுதான்!
அவனுக்கு அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை...அதனால்தானோ என்னவோ கடைசிவரை அவளுடன் இருக்க ஆசைப் பட்டான்...ஆனால் இன்று...

தனது இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டவன் அவளருகில் சென்றான்.

அவளது வலது பக்கத்தில் தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவன் அவள் கையை தன் கைகளுக்குள் ஏந்திக் கொண்டான்.

அவள் வலது கையை தன் இரு கைகளுக்குள் பொத்தியவன்... அவள் முகம் பார்த்தவாறு...

"நான் நம்பறேன் ஆரா... நீ சீக்கிரமே எழுந்து வருவ... நாம கல்யாணம் பண்ணிப்போம்... தினமும் சண்டை போடுவோம்...நிறைய சிரிப்போம்... நீ எழுந்து வந்து 'போடா லூசு அஜு'ன்னு என்ன திட்டுவ ஆரா..." என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளை நீர் திரையிட அவன் தோளில் பதிந்தது வாசுவின் கரம்...ஆராவின் தந்தை!

நிமிர்ந்து கண்கள் கலங்கி நின்றிருந்தவரைப் பார்த்தவன் ஆதரவாக கண்களை மூடித் திறந்தான்...அவள் சரியாகி விடுவாள் என்பதாக...!


*********************************************

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளுக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா... ஏனோ தெரியல இந்த கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே ஓ க்ரேஸி மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி<3
 
Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "சின்னஞ்சிறு
அதிசயமே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தா கௌரி டியர்
 
Last edited:
#5
என்னப்பா, ப்ரீத்தா டியர் இப்படி
டீஸர்லேயே அழ வைக்கிறீங்களே?
வளராத செடிக்கு பரிதாபப்பட்டு
நீர் வார்த்து அந்தச் செடியை
வளர்த்தவளுக்கு கோமாவா?
நல்லா இருந்தவளுக்கு எப்படி
கோமா ஸ்டேஜ் வந்தது?
ஏதேனும் விபத்து நடந்ததா?
"ஆரா"வின் முழுப் பெயர்
என்ன, ப்ரீத்தா டியர்?
ஆரா உடம்பு சரியாகி
அர்ஜூனுடன் சேர்வாளா?
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
#6
:D :p :D
உங்களுடைய "சின்னஞ்சிறு
அதிசயமே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரீத்தா கௌரி டியர்
Thank you so much Banu ma:):):) idhu kutty kadhai than ma:D... May be future la novel ah maathiralam:D Minnal oda seekiram varen:)
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
#7
என்னப்பா, ப்ரீத்தா டியர் டீஸர்லேயே அழ வைக்கிறீங்களே?
வளராத செடிக்கு பரிதாபப்பட்டு
நீர் வார்த்து அந்தச் செடியை
வளர்த்தவளுக்கு கோமாவா?
நல்லா இருந்தவளுக்கு எப்படி
கோமா ஸ்டேஜ் வந்தது?
ஏதேனும் விபத்து நடந்ததா?
"ஆரா"வின் முழுப் பெயர்
என்ன, ப்ரீத்தா டியர்?
ஆரா சரியாகி அர்ஜூனுடன் சேர்வாளா?
Whoah!!! irunga ma naan ippove Malli akkata kettupaakaren thread create senju novel ah continue pannidalam:D
 

Advertisement

New Episodes