சித்திரையில் பிறந்த சித்திரமே-28(final)

#40
சித்திரையில் பிறந்த சித்திரமே-28

"மூன்று வருடங்களுக்கு பிறகு"

"தமிழகத்தின் சிறந்த கவிதைக்கான விருது வழங்கும் விழா"

"முதல் வரிசையில் தன் குடும்பத்துடன் உதயா அமர்ந்திருக்க மேடயில் அவன் கருவா டார்லிங் விருது வாங்கி கொண்டிருந்தாள்"

"உதயாவின் கைகளில் இருந்த அவர்களின் மகன் "மகிழன்" சந்தோஷத்துடன் கூச்சலிட்டு கொண்டிருந்தான் விருது வாங்கும் தன் அன்னையை கண்டு"

"லெட்சுமி நீங்க இந்த விருது வாங்குறதுக்கு காரணமா இருந்தவங்கள உங்க கவிதையில சொல்லுங்க பிளிஸ் ,நாங்கயெல்லாம் ஆர்வமா இருக்கோம்" என நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கேட்க"

"தன் கணீர் குரலால் தொடங்கினாள் தன் கவிதையை

"ஆண்டவன் அனுப்பினான் அகிலத்தை நான் காண
என் தாய் தந்தையின் தபால் வழி
பெண் என்ற பேதமின்றி
பெருமகிழ்வோடு வளர்த்தனர் என் பெற்றோர்
என்ன புண்ணியம் செய்தேனோ நான் என எண்ணி நின்ற போதிலே
எரிமலைதான் வெடித்தது என் வாழ்விலே
காயங்களோடு நான் கரையவிருந்த வேளையிலே
கரம் பிடித்தான் என் காதலனே
கரம் கோர்த்து கூட்டி சென்ற பூஞ்சோலையில்
வாடாமலரென அன்பு வீற்றிருக்க
வேசம் இல்லா பாசத்தோடு சொந்தங்கள் துணையிருக்க
என் காதலனனின் கண்காணிப்போடு
கடந்து வந்தேன் என் கடந்த காலத்தை
வரவேற்றேன் என் வசந்தகாலத்தை
நான் விரும்பிய வழி செல்ல
விருப்பம் தெரிவித்த என் கணவனின்
விழிகளின் முன்னால் விருது வாங்குகிறேன்
நான் அவரின் மனைவியென
என் வெற்றிகளின் ஆணிவேராய் அவரிருக்க
கரைந்து நிற்கிறேன் என் கணவனின் காதலிற்க்குள்ளே"


"அவள் கூறி முடித்த நொடி இடியென கைதட்டல் எத்திக்கும்"

"எதிர்பார்ப்போடு கணவன் கண் நோக்க கலங்கியிருந்தது அந்த காவலனின் கண்கள் கூட அவளின் காதல் கண்டு"

"நீங்களும் உங்க கணவரும் இதே மாதிரி உங்க வாழ்நாள் முழுக்க சந்தோசமா இருக்க எங்கள் வாழ்த்துக்கள் லெட்சுமி" என தொகுப்பாளர் கூற சிரித்த முகத்துடன் விடைபெற்றாள்,

"மகன் அவளை கண்டதும் அவளிடம் தாவ தன் மாமனார் மாமியார் அருகில் வந்ததும் அவர்களின் காலில் விழ "

"எந்திரிடா லெட்சுமா எப்பவும் இதே சந்தோசத்தோட நீ இருக்கனும் டா" என இருவரும் வாழ்த்த

"அவள் கண்கள் ஆசையுடன் உதயாவின் கண்களை தழுவியது"

"அவனும் அவளை பார்த்து புன்னகைத்தான்"

"நிவி-நிரஞ்சன்.கீர்த்தி-அர்ஜூன் எல்லோரும் விழாவுக்கு வந்திருந்தனர்"

"விருதோடு தன் மகளை கண்ட பத்ரா விரிந்த புன்னகையோடு நின்றிருந்தார்"

"அவரின் அருகில் சென்றவள் அவரின் கழுத்தைக்கட்டிகொள்ள,அவரும் ஆசையோடு அவளுக்கு உச்சி முகர்ந்து முத்தமிட்டார்"

"நிவியும் நிரஞ்சனும் அவர்களின் மகனோடு போராடி கொண்டிருந்தனர்,அர்ஜூனும் கீர்த்தியும் அவர்களின் செல்ல மகள் மதுரவசனியோடு போராடி கொண்டிருந்தனர் இவர்களுடன் உதயா-லெட்சுமியின் மகன் மகிழனும் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது
இவர்களின் பின்னால் எப்பொழுதும் ஒருவர் சுற்றி கொண்டே இருக்க வேண்டும் அந்த அளவிற்கு சேட்டை செய்வர்"


"இந்த காட்சிகளை கண்ட பெரியவர்களுக்கு ஆனந்தமாய் இருந்தது தங்களின் குடும்பத்தை கண்டு"

"இப்போது கமல் போலீஸ் அதிகாரி தன் மாமாவை போலவே,வேலை பளுவினால் லேட்டாக வந்து தன் அக்காவிடம் வசமாக சிக்கி கொண்டான்"

"சாரிக்கா பிளீஸ் "

"போடா உனக்கு நான் யாரோ தானா"

"ஏய் லூசு அப்படியெல்லாம் இல்ல,நீ எப்பவும் என் செல்ல அக்கா தான்"

"விடுடி அவன் பாவம் "என உதயா கூறியதற்கு பிறகு தான் அவள் சமாதானம் அடைந்தாள்.

"சரி பிழைச்சு போ என் புருஷன் சொன்னதுக்காக உன்னை சும்மா விடுறேன்" என்றாள்

"இரவு வெகு நேரமானதால் எல்லோருக்கும் உதயாவின் வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது"

"எல்லோரும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுக்க செல்ல மகிழன் கமலோடு தான் படுப்பேன் என அவன் கழுத்தைக்கட்டி கொண்டு அடம் பிடித்து கொண்டிருந்தான் குழந்தைகள் மூவருக்கும் கமல் என்றால் மிகவும் பிரியம் அவனும் தன் அக்கா குழந்தைகளை ஆசையுடனே அரவணைப்பான் அதனால் மூவரையும் தானே பார்த்துக்கொள்வதாக கூறி அழைத்து சென்று விட்டான்"

"நிரஞ்சன்-நிவியிடம்

"ஏய் பொண்டாட்டி என்னடி இன்னைக்கு செம்மயா இருக்க,மாமா மேல கொஞ்சம் கருணை காட்டுடி இவ்ளோ அழகா இருக்காதடி " என கிறக்கமாக காதில் கிசுகிசுக்க

"அண்ணா உன் இரகசியத்துல இரசத்தை எடுத்து ஊத்த ஏன்டா இப்படி ஹாலில் வைச்சு ரொமான்ஸ் பண்ணுற" என உதயா வார

"டேய் அண்ணன் அடுத்த பிள்ளைக்கு ரெடி பண்ண போறான் டா உதயா "என அர்ஜூனும் சேர்ந்து கலாய்க்க நிவி உள்ளே ஓடி விட்டாள்.

"டேய் உங்களுக்கு வேணும்னா நீங்களும் ரெடி பண்ணுங்கடா.இருந்தாலும் நான் உங்களுக்கு அண்ணன் இல்லையா அதுனால போய் பிள்ளைய ரெடி பண்ணப்போறேன்,
போங்கடா டேய் போய் பொண்டாட்டிய கவனிக்கிற வேலைய பாருங்கடா "என கூறிக்கொண்டே நிவியின் பின்னே சென்று விட்டான்.


"சிரிப்போடு தங்கள் மனைவிகளை தேடி உதயாவும் ,அர்ஜூனும் சென்றனர்"

"தங்கள் அறைக்குள் நுழைந்த அர்ஜூன் தன்னவளை தேட பால்கனியில் நின்றிருந்தவளின் அருகே சத்தமில்லாது சென்றவன்

"அது எப்படி கீது அன்னைக்கு கல்யாணத்துக்கு முன்னாடி மாமா உன்ன சுவர் ஏறி குதிச்சு பார்க்க வந்த மாதிரியே அழகா இருக்க "என அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறே கேட்க

"அதுவா மாமா மனதை மகிழ்ச்சிபடுத்தும் மணாளன் கிடைச்ச மங்கை அவள் முகம் மலர்ந்திருக்குமாம்" என் தங்கச்சி அவ கவிதையில எழுதிருக்கா மாமா"

"அப்ப மாமா உன்ன சந்தோசமா வைச்சிருக்கேனாடி"

"இதில என்ன மாமா சந்தேகம்"

"ஐ லவ் யூ டி பொண்டாட்டி"

"மீ டு மாமா" எனக் கூறி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"உதயா அறைக்குள் நுழைய லெட்சுமியின் கண்களில் கண்ணீர் அவன் அறியும் முன் வேகமாய் அவள் துடைக்க முற்பட அவளின் சிறு அசைவையும் உணருபவனுக்கு அவளின் கண்ணீர் தப்பவில்லை"

"அவள் அருகில் சென்று அமர்ந்தவன்

"என்ன உங்க அப்பாவ நினைச்சியா"என கேட்க

"ஆமா மாமா இன்னைக்கு அப்பா இருந்திருந்தார்னா எவ்ளோ சந்தோஷப்பட்டிருபார்ல மாமா"

"ஹம் கண்டிப்பா,ஆனா இல்லையே அவரு ,அத பத்தியே யோசிக்காத கண்ணம்மா இன்னைக்கு நான் எவ்ளோ சந்ட்தோசமா இருக்கேன் தெரியுமா என் பொண்டாட்டி நான் தான் அவ வெற்றிக்கு காரணம்னு சொல்லிருக்கா "

"அதில என்ன மாமா சந்தேகம் நீங்க மட்டும் தான் என் வெற்றிக்கு காரணம்"

"அப்படி இல்லடி கருவாடார்லிங் தூண்டு கோள் எல்லாம் வெளிச்சத்துக்கு காரணம்னு சொன்னா விளக்குகளுக்கு என்ன மரியாதை,உன்னோட உழைப்பு தாண்டா இதுக்கெல்லாம் காரணம்"

"ஆனா அதுக்கு உறுதுணையா இருந்தது நீங்க தான மாமா"

"கண்டிப்பா இப்ப மட்டும் இல்ல இந்த ஜென்மம முழுக்க உனக்கு உறுதுணையா நான் இருப்பேண்டி என் பொண்டாட்டி" எனக்கூறி அவளை இழுக்க அவன் மேலையே விழுந்தாள்

"அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டு " ஐ லவ் யூ மாமா" என கூற

"ஐ யூ லவ் யூடி கருவா டார்லிங்"எனக் கூறி அவள் இதழோடு இதழ் சேர்த்தான்"

"விடிந்தால் சித்ரா பௌர்ணமி மதுரையின் முக்கிய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா எல்லோரும் இங்கிருந்தே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது"

"நள்ளிரவு லெட்சுமியை எழுப்பி கொண்டிருந்தான் உதயா"

"மாமா பிளீஸ் தூக்கம் வருது"என கூறியளை எதுவும் சொல்லாது கைகளில் அள்ளியவன்
மொட்டைமாடிக்கு சென்றான்"


"அங்கு அவளை இறக்கி விட தூக்கத்தில் இருந்து விளித்தவள் என்னவென்று பார்க்க

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டி கருவா டார்லிங்" என அவளை பார்த்து கொண்டே கூறியவன்
அவள் கைகளில் வைர மோதிரத்தை அணிவிக்க அது பௌர்ணமி ஒளியோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது"


"அவனை இறுக்கிகட்டியணைத்தவள் அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தாள்"

"அவளை தானும் இறுக்க கட்டியணைத்தவன் மாமாவும் உனக்காக ஒரு கவிதை வைச்சிருக்கேண்டி சொல்லவா" என அவன் கிசுகிசுப்பாக கேட்க

"என்ன தவம் செய்தேனோ என் மாமாவின் கவிதையை கேட்க" என அவள் கூற

"நிலவின் ஒளியில் தன்னவளின் முகம் பார்த்து தமிழ் கவிதை சொன்னான்

" உன்னை கண்ட நொடியில்
உன் கருவிழிக்குள் என்னை சிறையெடுத்தவளே
காதலால் என்னை கட்டி போட்டவளே
காவலன் நான் கைதியாகினேன் உன் இதயத்தில்
உன்னை களவாடிய பொழுதுகளில் கள்வனானேன்
சிக்கல் நிறைந்த வாழ்வில்
உன் சிறு கை தான் கோர்த்து
சிரமம் இன்றி கடக்கிறேன்
சித்திரையில் பிறந்த என் சித்திரமே
என் சிந்தனையின் நட்சத்திரமே
சிறந்த வாழ்வு வாழவேண்டுமடி
உன் சிற்றிடை அதில் கை கோர்த்து
சித்திரையில் பிறந்த சித்திரமே
சிகரம் தொட உடன் வருவாயா"


"அவன் இதழில் தன் இதழை ஆழமாக புதைத்து தன் சம்மதத்தை தெரிவித்து இருந்தாள்"

"நாமும் விடைபெறுவோம் நலமுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு"

"சுபம்"

"இப்படிக்கு உங்கள் சண்முகலெட்சுமி@தாழைக்கனி"

நன்றி
வணக்கம்
எளிமையான இனிமையான கதை. அப்பா போல் கணவன் அமைவது மிக பெரிய வரம்.
 
Advertisement

New Episodes