கொலுசொலி மயக்குதடி - 8

Advertisement

புடவையை பார்த்தவள் அதை மென்மையாக தடவிக் கொடுத்தபடியே இருந்தாள். அழகான சிவப்பு வண்ணத்தில் இருந்த புடவையை பார்த்ததும் தனக்கு பிடித்த வண்ணத்தில் எப்படி எடுத்தான் என யோசித்துக் கொண்டிருந்தாள்....
தனது நினைவிலிருந்து மீண்டவள் வாசு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் அவசரமாக தனது முகத்தை சாதாரணமாக மாற்றினாள்....
ட்ரெஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வாங்க சாப்பிட ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன் என்றவாறு புடவையை எடுத்து டேபிள் மேல் வைத்து விட்டு கிச்சன் உள்ளே போனாள்....

நிலாவின் புத்துணர்ச்சி வாசுவையும் தொற்றிக் கொள்ள சரியென உள்ளே போனான்....

சுடச்சுட வெங்காய பக்கோடாவும் காபியும் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து வந்த சில நிமிடங்களில் வாசுவும் உடைமாற்றி வந்தான்...

இந்தாங்க வாசு எடுத்துக்கோங்க என அவனிடம் நீட்டவும் இன்முகத்துடன் எடுத்துக் கொண்டான்.....

ஒரு பக்கோடாவை எடுத்து வாயில் போட்டதும் அதன் சுவையில் மெய் மறந்து போனான்.... உன் கையிலே ஏதோ ஒரு மேஜிக் இருக்கு நிலா..... பேசாமல் நீ ஒரு ஸ்டார் ஹோட்டல்க்கு குக் ஆ போயிடு...

ஏன் வாசு நீங்க தப்பிக்கலாம்னு பார்க்கறீங்களா.... அப்படி எல்லாம் முடியாது... நிலா அவனை சீண்டவும்... அடப் போ மா... என்ன சொன்னாலும் நம்ப மாட்டங்கற...

நிலாவும் சிரித்தவாறு சும்மா சும்மா.... க்ளாஸ்ல ஜாயின் பண்ணிட்டேன்... மார்னிங் பத்து டூ ஒரு மணி வரைக்கும்.. எனக்கு ரொம்ப ஹேப்பியாக இருக்கு... ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்...

நாளைல இருந்து மேடத்தை கையிலேயே பிடிக்க முடியாது... பயங்கர பிசியோ பிசி தான்... கலக்கு நிலா....

அப்படி எல்லாம் எதுவும் இல்ல. பொழுது போகனும் தான் என்றவாறு நிலா சிரிக்க இருவரும் அதைப்பற்றி கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்...

மறுநாள் வாசு கிளம்பியதும் இவளும் ரெடியாகி க்ளாசிற்கு போனாள்.... அங்கு ஆங்கில வழியில்தான் அனைத்து பயிற்சிகளும் கொடுக்கப்பட ஆர்வமாக கற்றுக் கொண்டாள்....

அதற்கு பின்பு வந்த நாட்களில் எல்லாம் நிலாவின் நேரங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.....

வாசுவிடம் தனது வகுப்புகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதோடு தான் கற்றுக் கொண்டதை வீட்டிலும் அவ்வப்போது முயற்சி செய்வாள்.....

அது வேண்டும் இது வேண்டும் என பெயரே தெரியாத பொருட்களை எல்லாம் பட்டியல் இட்டு வாசுவிடம் வாங்கி வரச் சொல்லுவாள்.... அவனும் மண்டையை சொறிந்தவாறு கடையில் போய் நிற்பான்.... ஆனாலும் எப்படியோ வாங்கி கொடுத்து விடுவான்.....

நிலா அன்று கற்றுக் கொண்ட சாக்லெட் கேக்கை செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்... கேக் நன்றாகவே வந்திருந்தது....

சூப்பர்... நீ பெரிய ஆளுடி... இன்னைக்கு வாசு இதை சாப்பிட்டு செம குஷியாகப் போறாங்க... தனக்குத் தானே பேசியவாறு அதை அலங்கரித்து ப்ரீசரில் வைத்தாள்.....

வாசு வரும்போதே நிலா... என உற்சாகமாக அழைத்தவாறு வந்தான்... என்ன வாசு மூஞ்சில பல்ப் எரியுது என்ன விசயம்....

நம்ம கம்பெனிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு... ஐம் சோ ஹேப்பி தெரியுமா... ரொம்ப மாசமா எதிர்பார்த்தது இப்போ நமக்கு கிடைச்சது நெனச்சா... ப்பா சொல்ல வார்த்தையே இல்ல....

நிலாவும் அவனின் மகிழ்ச்சியில் இணைந்து கொண்டவள் கேக்கை கொடுக்க இருவரும் பேசியேபடியே ஒருவர் முகத்தில் ஒருவர் கேக்கை பூசிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்....

வாசுவிற்கு கிடைத்த ப்ராஜெக்டிற்காக கோவிலிற்கு சென்று வரலாம் என நினைத்தவள் வாசு வாங்கிக் கொடுத்த புடவையை கட்டலாம் என திட்டம் போட்டாள்.
நினைத்தபடியே மறுநாள் புடவை கட்டியவள் மல்லிகைப் பூ தலைநிறைய வைத்துக் கோவிலிற்கு கிளம்பினாள்....

காலை நேரம் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்க அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு... விளக்கு எண்ணெய் திரி எல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்...

வேண்டுதலை முடித்துக் கொண்டு பிரகாரத்தில் அமர்ந்தபடியே சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்...

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இடித்துக் கொண்டே ஒருவன் நிற்பதை பார்த்ததும் அவளிற்கு கோபம் தலைக்கேறியது....

நேராய் அங்கே போனவள் அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட சுற்றியிருக்கும் அனைவரின் பார்வையும் அவள் மேல் விழுந்தது....

தமிழில் அவள் கண்மூடித் தனமாக திட்டவும் அங்கிருந்த யாருக்கும் அவள் பேசியது புரியவில்லை.....

சிறிது நேரம் கழித்தே அங்கு இருப்போர் அனைவரும் அவளையே பார்ப்பதை அறிந்ததும் அவனை விட்டுவிட்டு வெளியே நடக்கத் தொடங்கினாள்....

ஓய்....சங்கத் தமிழச்சியே நில்லு..... திடீரென கேட்ட தமிழில் அவள் கால்கள் சடன் ப்ரேக் போட்டது போல் நின்றது......

நின்று திரும்பி பார்த்தவளின் கண்களோ தீப்பிழம்பாய் ஔிர்ந்தது.... அவனை அனல் தெறிக்கும் பார்வையில் பார்த்தாள்....

யப்பா என்ன கோவம்டா சாமி.... நம்மளையே மிஞ்சிருவா போலயே.. சக்தி அவளை பார்த்தவாறு தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்.....

அதற்குள் அவனின் அருகில் வந்திருந்தவள்... என்ன டா வம்புக்கு இழுக்கிறியா.....நிலாவின் கேள்வியில் அவனிற்கு கோபம் தலைக்கேறியது.....

டா னு எல்லாம் சொன்னால் பல்லை உடைச்சிருவேன்.... எவ்ளோ தைரியம் இருந்தால் டா போட்டு பேசுவ... அவனும் சீறினான்....

ஆமா இவரு பெரிய சார்லஸ் இளவரசர்.... போடா... உனக்கு எதுக்கு டா மரியாதை.... இதற்கு முன்னால் தன்னிடம் அடி வாங்கியவன் மேல் இருந்த மொத்த கோபமும் சக்தியின் மேல் திரும்பியது....

சக்தி டி... சக்தி சரவணன்... என்னோட பேரை கேட்டாலே பத்து ஊரும் பயப்படும்... நீ இத்துணூண்டு இருந்திட்டு என்னைய மரியாதை இல்லாமல் பேசுவியா...

சுண்டெலியின் அளவில் இருப்பது போல சக்தி அவனின் சுண்டு விரலைக் காட்டி அவளைப் பார்த்து கத்தினான்....

நீட்டிய அவனின் விரலை எட்டிப் பிடித்து இழுத்தவள்.... சிவா டா நான்.... இந்த சிவாக்கு முன்னாடி சக்தி எல்லாம் ஒண்ணுமே இல்லை.... பிடித்த அவனின் விரலை கையில் பிடித்து முறுக்கினாள்....

நிலாவிடம் இருந்து அவனின் விரல்களை சாதாரணமாக விடுவித்தவன்... சக்தி இல்லைனா சிவனே இல்லை... நீ வெறும் சிவா தானே.. அவளை அருகில் இழுத்திருந்தான்....

எதிர்பாராமல் அவன் இழுத்ததும் அவனின் மேல் மோதாமல் இருக்க கால் விரல்களை அழுத்தமாக நிலத்தில் ஊன்றி தன்னை சமன்படுத்தி நின்றிருந்தாள்......

கோவிலில் சற்று தள்ளி மறைவாக நின்று கொண்டிருந்ததால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை....

ஏய்..... என சீறியவளின் முகத்தை அழுந்த பற்றி... அடியே இராங்கித் தனமா இருக்க உன்னோட திமிரை அடக்கல என்னோட பேரு சக்தி இல்லடி....

ஒரு வசீகர புன்னகையுடன் அவளின் காதில் இருந்த ஜிமிக்கியை கையோடு எடுத்துக் கொண்டவன்... வரட்டா..... திமிராக பேசியவாறு அவளை விட்டு விலகி நடந்தான்.....

ஒரு நிமிஷம்.... சொடக்கிட்டு அவனை அழைத்தவள்.... உன்னோட திமிரை நான் அடக்கறேன் டா... ஆண்னு ஒரு திமிர்ல தானே என் கிட்ட வம்பு இழுத்திட்டல்ல... இந்தா இதையும் வச்சுக்க என மறு காதில் இருந்த கம்மலையும் கழற்றி அவனின் மேல் வீசினாள்....

கேட்ச் பிடித்தவன் அவுட்... என கட்டை விரலை கீழே காட்டி நக்கலாக அவளைப் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினான்..

மயக்குவாள்...

வீரமாக பேசியவன் அந்த இரண்டு கம்மலையும் பத்திரமாக ஏன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் என்பதை அவன் மட்டுமே அறிவான்.....

அவனாவது அறிவானா... இல்லை என்றாலும் புரிந்து கொள்வானா.... காலம் அவனிற்கு புரிய வைக்குமா....?

பொறுத்திருந்து பார்க்கலாம்
....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

என்னப்பா டிராக் மாறுது?
அப்போ வாசுதேவனுக்கு இந்த நிலாப் பெண் ஜோடியில்லையா?
சக்தி சரவணனுக்கு ஏற்கனவே இவளைத் தெரியுமா?
நிலான்னு பேர் இருக்கும் இவளுடைய முழுப் பெயர் என்ன?
ஏன் அவள் வீட்டை விட்டு பெற்றோர் உற்றோரை விட்டுட்டு ஓடி வந்தாள்?
இந்தப் பெண்ணின் பிளாஷ்பேக்கை எப்போ சொல்லுவீங்க?
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

என்னப்பா டிராக் மாறுது?
அப்போ வாசுதேவனுக்கு இந்த நிலாப் பெண் ஜோடியில்லையா?
சக்தி சரவணனுக்கு ஏற்கனவே இவளைத் தெரியுமா?
நிலான்னு பேர் இருக்கும் இவளுடைய முழுப் பெயர் என்ன?
ஏன் அவள் வீட்டை விட்டு பெற்றோர் உற்றோரை விட்டுட்டு ஓடி வந்தாள்?
இந்தப் பெண்ணின் பிளாஷ்பேக்கை எப்போ சொல்லுவீங்க?
சீக்கிரமாக நிலா யார் அவளது பின்புலம் பெற்றோர் யார்.எதனால் வீட்டை விட்டு வெளியேறினாள். சக்திக்கும் அவளிற்கும் என்ன சம்பந்தம். யார் நிலாவிற்கு துணை எல்லாம் கூடிய விரைவில் தெரியும் டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top