கொலுசொலி மயக்குதடி - 4

Advertisement

ஐந்து மணிக்கே வழக்கம்போல வாசுவிற்கு விழிப்பு தட்டிவிட கடினப்பட்டு விழிகளை திறந்தான்....

நைட் சோபாவில் தூங்கினேன் இப்போ எப்படி இங்கே வந்தேன் அதை யோசித்ததும் அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை விறுவிறுவென எழுந்து வெளியே வந்து விட்டான்.. அதற்கு பின்பே உள்ளிழுத்த மூச்சை வெளியிட்டான்...

திக்பிரமை பிடித்தது போல அமர்ந்து இருந்தவன் நிலாவின் உலுக்கலில் நினைவிற்கு வந்தான்...

என்ன வாசு ஆச்சு... ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கீங்க.... நிலா என்னவோ காலங்காலமாய் அங்குதான் இருப்பது போல அவனிடம் சாவகாசமாய் கேட்டு வைத்தாள்...

வாசுதான் அவளின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் ..

வாசு... ஓய் வாசு.... எதுக்கு இப்போ இப்படி உட்கார்ந்துட்டு இருக்க... போ போய் பால் வாங்கிட்டு வா.. காபி போடனும்... அப்படியே மாவு பாக்கெட், தயிர் பாக்கெட் ஒண்ணும் வாங்கிட்டு வா....

நிலாவோ அவனை கவக்காமல் அவள் பாட்டுக்கு பட்டியல் இட்டுக் கொண்டிருந்தாள்... அவன்தான் அவன் நிலையில் மாற்றம் இல்லாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான்..

அடேய்.... ஓங்கி அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்... சாரி நிலா... நான் வேணும்னு உள்ளே வந்து தூங்கல... என்னை எதுவும் தப்பாக நினைக்காதே...

இவன் என்ன லூசா என்ற ரேஞ்சில் நிலா அவனை பார்த்து வைத்தாள்... அதற்கு பின்பே அனைத்தும் அவளிற்கு விளங்கியது.... அவனிருந்த நிலையும் அவளது புத்தியில் உரைத்தது...

என்னை பாருங்க முதல்ல.. பாருங்கனு சொல்றேன்ல.. வாசு அவளைப் பார்க்கவும்.. நான் தான் உங்களை உள்ளே வந்து தூங்க சொன்னேன்... நிலா பொறுமையாக சொல்லவும்.... நிஜமாவா...? அவன் ஆர்வத்துடன் கேட்டான்..

கண்களை மூடித்திறந்து ஆமா என்றாள்... அப்போ சரி... இனிமேல் தினமும் நான் அந்த பக்கம் தூங்கறேன்... நீ அந்த பக்கம் தூங்கிக்கோ... ஏதோ பெரிய வழியை சொல்லி விட்டது போல தனக்குத் தானே சபாஷ் போட்டுக் கொண்டான்...

என்னடா இது... ஒரு நாள்னு நினச்சோம். இன்னொரு ரூமை ரெடி பண்ணி அங்கே போயிடலாம்னு பார்த்தால் இப்படி பேசறான்... தனக்குள் யோசித்தவாறு அமர்ந்திருந்தாள்....

என்ன யோசிக்கற நிலா... வாசுவின் குரலில் வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் சரியென சொல்லி விட்டாள்...

ஓ.கே நிலா.. நான் போய் நீ கேட்ட எல்லாமே வாங்கிட்டு வரேன்... எழுந்து வேகமாக கிளம்பினான்....

அவனது வழியை மறித்தவள்.. எங்கே போறீங்க....

பால், மாவு, தயிர் எல்லாம் வாங்க....

இப்படியேவா.... அவனை ஒரு பார்வை பார்த்தாள்....

நேற்றே இப்படித்தான் பார்த்தாள்.... இன்றும் என்றால் என்னவோ இருக்கு... எதற்கும் என்னனு கேட்டு விடலாம்.... சொல்லு நிலா.. என்ன ஆச்சு...

ஒரு நிமிஷம் இருங்க... நேராக கிச்சனிற்குள் சென்றவள் ஒரு பையை எடுத்து வந்து அவனது கையில் கொடுத்தாள்..

ஓ.. இது கொண்டு போகனுமா... அவங்க கொடுக்க மாட்டாங்களா...

வாசு கேட்ட கேள்விக்கு நீங்க என்ன ஷாப்பிங் போறீங்களா... அவங்களே பை எல்லாம் கொடுக்க... அதுசரி காசு எடுத்துட்டீங்களாா... நிலா சந்தேகமாக கேட்டாள்....

நிலாவின் கேள்வியில் ரோசம் வரவும், வேகமாக அவனது பர்சை எடுத்தவன் இங்கே பாரு எல்லாம் கார்ட்ஸ், அப்புறமாக ஐநூறு, இரண்டாயிரம் அவளது முன்னால் காட்டினான்...

அடேய்... கொன்றுவேன்.. நீ பண்ற இம்சை தாங்கல... இரு வரேன்... உள்ளே போய் ஒரு நூறு ரூபாயும், ஐம்பது ரூபாயும் கையில் கொடுத்தாள்....

எதுக்கு நிலா... வாசுவிற்கு அனைத்தும் விசித்திரமாக இருந்தது... ஒண்ணும் இல்ல... எடுத்துட்டு போங்க... வாங்கிட்டு வாங்க.... அவனிடம் சொல்லி அனுப்பவும் சரியென கிளம்பினான்...

வாசு கிளம்பியதும் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை... நேராக கிச்சனிற்குள் போய் சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கி விட்டாள்....

வாசு அவள் கேட்டதை வாங்கி வந்தவன், அவளைக் காணமல் போக கிச்சனிற்கு போனான்...

ஒரு நிமிடம் அவனால் எதையும் நம்ப முடியவில்லை.... காண்பது கனவா நனவா என கண்களை கசக்கி பார்த்தான்...

சமையல் மேடை சிங்க் எல்லாம் பளிச்சென இருந்தது.. பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டு இருந்தது... அலமாரியில் எல்லா பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது...

என்ன நிலா இது.. நீ என்ன சூப்பர் மேனா... அதுக்குள்ள எப்படி இவ்ளோ வேலைகளை முடித்தாய்... கிச்சனே மாறிப் போயிருச்சு.. வேகமாக போய் சமையல் மேடையில் அமர்ந்து கொண்டான்...

ஹாஹாஹா.. இதுக்கு பேரு தான் கிச்சன் மிஸ்டர் வாசு... நல்லா பார்த்துக்கோங்க... இவ்ளோ நாளா இருந்ததுக்கு பேரு என்னனு எனக்கு தெரியல.... அவனிடம் வம்பு பேசியவாறு அவன் வாங்கி வந்திருந்த பால் பாக்கெட்டை எடுத்து காய்ச்சி இருவருக்கும் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்....

போங்க... போய் ப்ரஷ் பண்ணிட்டு வாங்க... அவனோ ஐயோ அதெல்லாம் காபி குடிச்சுட்டு பண்றேன்.... சொல்லி முடிக்கவில்லை தோசைக் கரண்டியை எடுத்திருந்தாள்....

இதோ கிளம்பிட்டேன்...அங்கிருந்து ஒரே ஓட்டம் தான்... அவளும் சிரித்தவாறு வேலையைத் தொடர்ந்தாள்....

வாசு திரும்ப வரும்போது காபியின் மணம் அவனது மூக்கைத் துளைத்தது...

அடஅடஅட... பேஷ் பேஷ்... காபியைக் கொடு அவள் கொடுக்கும் முன்பே அவளது கையில் இருந்த காபியை வாங்கி இரசித்து குடிக்கத் தொடங்கினான்.....

நிலாவும் அவனைப் பார்த்து சிரித்தவாறு மாவு பாக்கெட்டை கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் ஊற்றியவள்... தயிரையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றினாள்....

வாசு காபியை குடித்து முடித்து விட்டு கப்பை சிங்கில் போடவும்... என்ன சார் பண்றீங்க...

ஏன் பார்த்தால் தெரியலயா....

அதெல்லாம் தெரியுது... நான் காபி குடித்த கப் எங்கே....

இதோ.. அவள் கழுவி வைத்த கப்பை சுட்டிக் காட்டியவன் அதற்கு பின்பே அவள் சொல்ல வந்தது புரிய பேசாமல் காபி கப்பை கழுவி வைத்தான்...

இப்போ ஓ.கே.... போங்க போய் ரெடியாகி வாங்க... ஆபிஸ் போகனும்ல.... அவன் சொல்லாமலே புரிந்து கொண்டு பேசவும் மெச்சுதலாய் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ரெடியாக போனான்...

பூப்பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை...
பட்சிகளின் குக்குக்கூ
பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்
சங்கீதம் சொல்லித்தந்த
தங்கப் பெண்ணே...

பாடல் வரிகளின் லயத்தோடு அவளிற்கு உற்சாகம் பொங்கி வழிய வேலையை தொடர்ந்தாள்...

பயணத்தின் போது அவன் சொல்லியதை நினைவில் கொண்டு வந்தவள் தோசைகளை மொறுமொறுவென சுட்டு ஹாட்பாக்சில் அடுக்கினாள்... தயிரினை தாளித்து தோசைக்கு எடுத்து வைத்துவிட்டு மீதியை தனியே எடுத்து வைத்தாள்....

குக்கரும் விசில் அடங்கியிருக்க சாதத்தை ஒரு ப்ளேட்டில் ஆற வைத்தவள் பதத்திற்கு வந்ததும் எடுத்த வைத்த தயிரை ஊற்றி தயிர் சாதத்தை செய்து முடித்தாள்...

செய்த அனைத்தையும் டைனிங் ஹாலில் அடுக்குவதற்கும் வாசு தயராகி வரவும் சரியாக இருந்தது....

என்ன நிலா ப்ரேக்பாஸ்ட் பண்ணிட்டியா.... கேட்டவாறே டைனிங் டேபிளில் அமர்ந்தான்....

லன்ஞ்ச் கூட ஓவர்.... சாப்பிட்டு எடுத்துட்டு போங்க.... அவனிற்கு பதில் கூறியவாறு தட்டை வைத்து தோசையும் தயிரும் வைத்தாள்...

நான் சொன்னதை நினைவில் வைத்து பண்ணியிருக்க... சூப்பர் நிலா... வெகுநாளிற்கு பின்பு தாயின் நினைவுகள்...வாசுவிற்கு கண்களின் ஓரம் நீர் கசிந்தது...

பொதுவாக வாசு காரம் அதிகமாக சாப்பிடாதவன்.. அவனது அம்மா இருந்தவரை அவ்வாறே வளர்ந்தான்... ஆனால் அவரது இறப்பிற்கு பின்பு அதுபோல் அக்கறை காட்டாமல் போனதால் தயிரை பிடித்தவாறு தாளித்தோ இல்லை தயிர்சாதமோ சாப்பிடுவான்... நண்பர்களால் தான் காரமாக சாப்பிட பழகியது எல்லாம்.... இதைப்பற்றி எல்லாம் நிலாவிடம் சொன்னதால் அதைப்போலவே செய்திருந்தாள்...

சுய சிந்தனையில் இருந்து வெளிவந்தவன் நீயும் சாப்பிடு நிலா... ஏதோ நினைவுல நான் பாட்டுக்கு சாப்பிடறேன்....

இல்ல வாசு... நீங்க சாப்பிட்டு கிளம்புங்க... பொறுமையாக நான் சாப்பிடறேன்... மேலே பேசாமல் அவனிற்கு மேலும் தோசைகளை எடுத்து வைக்க வயிறு நிறைய சாப்பிட்டு முடித்தான்....

லேப்டாப் பேக்கோடு அவன் கிளம்பவும் லன்ஞ்ச் பேக்கை அவன் கையில் கொடுத்தாள்....

கீழே அவனோடு போனவள்... அவன் வண்டியை எடுத்து கிளம்பியவுடன் மறுபடியும் வீட்டிற்குள் வந்தாள்.....

பொறுமையாக சாப்பிட்டு முடித்து கிச்சனை ஒழுங்கு படுத்திவிட்டு வாசுவின் அறைக்குப் போனாள்....

எப்படித்தான் ஸ்கூல் பாப்பா போல இவரு காரணம் சொல்ராரு என அவனைப் பற்றி தனக்குத்தானே பேசியபடியே அவனது துணிகளை எல்லாம் எடுத்து துவைத்து காயப் போட்டாள்... அடுத்து என்ன எல்லா பொருட்களையும் எடுத்து அடுக்கவும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அறை நேர்த்தியாகி இருந்தது....

வந்ததில் இருந்து ஒரே துணியை வேறு போட்டிருக்க கசகசவென இருந்தது... அவனது அலமாரியில் புதிதாக இருந்த ஒரு செட் டீசர்ட் மற்றும் ஷார்ட்சை எடுத்தவள் குளித்து விட்டு அதை அணிந்து கொண்டாள்.... அவளுடைய துணிகளையும் துவைத்து போட்டாள்.....

மணியைப் பார்த்தாள் பனிரெண்டை கடந்திருந்தது.... என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை.... பால்கனியின் கதவை திறக்க அங்கே இரண்டு சேர் மற்றும் சிறிதாக ஒரு டேபிள் இருந்தது.

சேரில் அமர்ந்தவள் காலை டேபிளின் மீது போட்டவாறு அமர்ந்து கொண்டாள்... என்ன ஒரு விசித்திரமான வாழ்க்கை.... நான் அந்த இரயிலில் ஏறும்போது என்னுடைய மனநிலை என்ன... இப்போது என்னடாவென்றால் இன்னொருவர் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கிறேன்....

வேண்டாம் என ஒதுக்கிட நினைத்த போதும் பழைய நினைவுகளில் மனம் முட்டி மோதியது... எதில் இருந்தோ தப்பிக்கும் நோக்கத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.....

வாசு அவனது ஆபிஸ் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி வந்தான்.... அங்கிருந்த செக்யூரிட்டி வழக்கமான வணக்கத்தோடு அவனை விசித்திரமாக பார்த்தார்....

வாசுவும் பதில் வணக்கத்தை சொல்லிவிட்டு உள்ளே யோசனையுடன் நடந்தான்... எதிர்படும் அனைவரும் வாழ்த்தோடு அதே போல பார்க்கவும்... என்ன ஆச்சு எல்லோருக்கும்... என்னையே ஒரு மாதிரி பார்க்கறாங்க....

அதற்குள் அவனது அறை வந்திருக்க.... வாசு தேவன் எம்.பி.ஏ மேனேஜிங் டைரக்டர் என்ற பெயரிடப்பட்ட கதவினை திறந்து உள்ளே போனான்....

கண்களில் அனல் தெறிக்க.... யார் கிடைத்தாலும் சுட்டுப் பொசுக்கி விடும் உத்தேசத்துடன் அவனது எதிரில் அமர்ந்திருந்தவனை பார்த்தவாறு வாசு அவனது இருக்கையில் அமர்ந்தான்....

அதற்காகவே காத்திருந்ததைப் போல... என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசில... கொஞ்சம் ஆச்சும் பொறுப்பு இருக்கா.... இன்னைக்கு அந்த இன்டர்நேசனல் கன்பெனிக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் செக் பண்ணி சைன் பண்ணிட்டியா.... பைனல் வெரிபிகேசன் ஓவர் ஆ...

பிறகு வருகிறேன் என தன்னை முன்னால் அனுப்பியவன் இன்று தனக்கு முன்னால் ஆபிஸ் வந்து கண் முன்னால் அமர்ந்து கேள்வி கேட்டால் பாவம் அவனும் தான் என்ன செய்வான்....

உன்னைத் தான் கேட்டுட்டு இருக்கேன்... பதில் சொல்லாமல் எதுக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்க... என் மூஞ்சில என்ன படமா ஓடுது....

அவன் பாட்டிற்கு கத்திக் கொண்டிருக்க.... அதை லட்சியம் செய்யாமல் கையில் இருந்த லன்ஞ்ச் பாக்சை திறந்தவன் மேலே இருக்கும் ஒரு அடுக்கை மட்டும் எடுத்து அவனை நோக்கி நீட்டியவாறு.... இந்தா சாப்பிடு.... பசி வந்தால் நீ நீயா இருக்க மாட்ட என்றவாறு நீட்டினானே பார்க்கலாம்....

இருந்த கொலைவெறியில் அவன் கையில் இருந்த பாக்சை பிடுங்கி தூக்கி வீசப் போனான்.... ருத்ரமூர்த்தியாக இருந்தவனை பார்த்த வாசவோ.... சக்தி... என ஓங்கி ஒரு குரல் கொடுத்தான்....

வாசுவின் குரலில் சினம் குறைய அவனது கையோடு வந்திருந்த பாக்சை அப்படியே டேபிளின் மேலே வைத்தான் ..

நான் இங்க கத்திட்டு இருக்கேன்.... சாப்பாடை கொடுக்கற.... வெயிட் வெயிட் என்னடா கையில் லன்ஞ்ச் எல்லாம் புதுசா..

ஓஓஓஓஓ...... இதனால தான் ஆபிசே நம்மள ஒரு மாதிரி பார்த்துச்சா.... வாசு அவனது சிந்தனையில் இருக்க..... தேவா... அடேய் வாசு தேவா... என்றவாறு சத்தம் போட்டான்....

ஆங்.. சொல்லு சக்தி.....

சக்தி சரவணன் டா.... என்னை யாருனு நெனச்சுட்ட... ஒழுங்காக சொல்லிடு என்ன நடக்குது.... புதுசா எதாவது பாட்டிக்கு பாவம் பார்த்து நான் வரதுக்குள்ள சமையல் வேளையை கொடுத்துட்டியா.....

நண்பனின் கேள்வியில் வாசுவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினான்....

இருந்த இறுக்கம் எல்லாம் முற்றிலும் வடிய வாசுவைப் போல வாய் விட்டு சிரிக்காமல் போனாலும் சக்தியின் முகம் இயல்பானது..

சரி விடு... அனுப்பியாச்சா இல்லையா அதை சொல்லு.. சக்தி பொறுமையாக கேட்டான்....

இப்போ சொல்றேன்... அந்த ஆர்டர் நாளைக்கு தான் அனுப்பனும்.... டென்சன் ஆனா இப்படித்தான் காம்டவுன்...

சக்தியும் சரியென கூறியவன் டேபிளின் மேலே இருந்த பாக்சை காட்டி இதற்கு முதலில் பதில் சொல்லு என ஆரம்பித்தான்...

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டியே... இப்போ இதுக்கு எப்படி அணை போடறது... அவனது மனசாட்சி புலம்பவும் முதலில் அதை அடக்கினான்....

மச்சி நீ முதல்ல சாப்பிடு... நல்லாவே தெரியுது நீ பசியோட இருக்கறது.... ஸ்பூனை எடுத்து போட்டு அவனது கையில் கொடுத்தான்....

கடுகடுவென்ற முகத்துடன் அவன் சொன்னதற்காக வேண்டா வெறப்பாக ஒரு வாய் வைத்தவன் பின்பு தலை நிமிரவே இல்லை... மொத்தமாக காலி செய்து விட்டே நிமிர்ந்தான்....

வாசுவோ அவனை கொலைவெறியில் முறைத்தான்.... அதை அசால்ட்டாக ஒதுக்கியவன்... அவனது கையில் இருந்த இன்னொரு பாக்சையும் வாங்கி உள்ளே தள்ளினான்....

சூப்பர் டா... நம்ம தமிழ்நாட்டுக் காரங்க கைப்பக்குமே தனி ருசி தான்... அந்ந பாட்டி நம்ம ஊரா டா....

சக்தியின் கேள்வியில் விழித்த வாசுவோ... எந்த பாட்டி டா... நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டான்....

சமைச்ச பாட்டியை தான் கேட்கறேன்... எந்த பாட்டினு என்னைய திருப்பி கேட்கற... உனக்கு தானடா தெரியும்...

இவன் இன்னும் நான் கூட்டிட்டு வந்தது வயசான பாட்டினு தான் நெனைக்கிறானா.. இது மட்டும் நிலாக்கு தெரிஞ்சது நம்மளை சட்னி ஆக்கிருவா.... இவனுக்கு வயசுப் பொண்ணுனு தெருஞ்சா நம்மள உயிரோட சமாதி கட்டிருவான்....

எந்தப் பக்கம் மாட்டுனாலும் சேதாரம் நமக்கு தான்... எதுக்கு வம்பு இப்போதைக்கு இவன் கிட்ட சமாளிப்போம் அப்புறமாக நிலாவை சமாளிப்போம்....

மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வந்தவன்...ஆமா மச்சி...பாட்டி தான்... நம்ம ஊரு பாட்டி தான்... இங்க பார்த்தேனா... கஷ்டப்படறாங்கனு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்..

வாய்க்கு வந்ததை அவன் முகம் பார்க்காமல் உளறிக் கொட்டினான்...

சக்தி என்ன மூடில் இருந்தானோ சரி சரி நான் போய் என்னோட வேலையை பார்க்கறேன் டா.. கேரி ஆன்.. அதற்கு மேல் அவன் நிற்கவில்லை.. வேகமாக வெளியேறி விட்டான்....

முதல் நாளே இப்படியா.... முடியல டா சாமி.... சீக்கிரமாக உண்மையை சொல்லிடனும்... அவன் அப்படி நினைக்க காலம் அதாங்க டைம் வேற மாதிரி இருக்கு...

வாசுவோட கம்பெனி ஒரு ஏற்றுமதி நிறுவனம்.... வெளிநாடுகளுக்கு அவர்கள் தயாரிக்கும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்...

தேவ் இன்டஸ்டிரீஸ்....இதுதான் வாசு நடத்தும் நிறுவனத்தின் பெயர்.. அவனது நிறுவனம் நன்றாக இயங்க ஒரு தூண் வாசு என்றால் இன்னொரு தூண் சக்தி...

சக்தி தான் அந்த கம்பெனியின் ஜி.எம்... வந்த புதிதில் இருந்து இன்று வரை அவனிடம் இருக்கும் சமார்த்தியம் வாசுவின் நெருங்கிய நண்பனாய் அவனை மாற்றியது... சக்தியும் தமிழாய் இருந்ததும் இன்னொரு காரணம்....

நகமும் சதையும் போல வாசுவும் சக்தியும்... ஆனால் என்ன குணம் தான் நேரெதிர்.... சக்தியிடம் வாசு விலகி நிற்க ஒரு காரணம் இருக்குமென்றால் யாரையும் அவன் நம்பவே மாட்டான்... வாசு எவ்வளவோ முறை எடுத்து சொல்ல முற்பட்டும் பலன் என்னவோ பூச்சியம் தான்..

யாரையும் நம்பாத சக்திக்கு வாசுவின் மேலே பிரியம் வந்தது என்னவோ அதிசயம் தான்...

மதியம் வரை எந்த பிரச்சனையும் இன்றி போய் கொண்டிருந்தது.... சக்தி மீண்டும் வாசுவின் கேபினிற்கு வரும் வரையில் தான் வாசுவும் நிம்மதி நிலைத்தது..... சக்தி வந்ததும் கேட்ட ஒரே கேள்வியில் அவனின் ஒட்டுமொத்த நிம்மதியும் புயலில் பறக்கும் கூரையைப் போல் பறந்தே போய் விட்டது....

மயக்குவாள்.....

சக்தி அப்படி என்ன தான் நம்ம வாசுவை பார்த்து கேட்டானோ.... நாளை பார்க்கலாம் நட்பூஸ்.... உங்களுக்கு கெஸ்ஸிங் இருந்தால் மறக்காம கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.... யாராவது சரியாக சொல்றீங்களானு பார்க்கறேன்.... இல்லனா ஒண்ணும் பிரச்சனை இல்லை... நாளைக்கு நானே சொல்றேன்...


 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

அட ராமா
மத்தியானம் லஞ்சுக்கு தயிர் சாதம் ஓகே
தோசைக்கும் தயிரா?
வாசு முழி பிதிங்கி முழிக்கும் அளவுக்கு சக்தி சரவணன் அப்படி என்ன கேட்டிருப்பான்?
:unsure::unsure::unsure::mad::mad::unsure::unsure:
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

அட ராமா
மத்தியானம் லஞ்சுக்கு தயிர் சாதம் ஓகே
தோசைக்கும் தயிரா?
வாசு முழி பிதிங்கி முழிக்கும் அளவுக்கு சக்தி சரவணன் அப்படி என்ன கேட்டிருப்பான்?
:unsure::unsure::unsure::mad::mad::unsure::unsure:
Nan unga ellar kitayum kekara dr. Ena solli irupan.
Vasu pavam baby ah atha curd eh saptu mummy valathanga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top