கேளாய் பூ மனமே 11

Advertisement

Novel-reader

Well-Known Member
9th update - ல் நல்லா பொங்க வெச்சுட்டு, இப்ப பொறுமையா 11th update - ல முதல் மூணு பாராவில், ஜமுனாக்காக யுவராஜ் மேல கோவப்பட்டு பொங்குன மனசையெல்லாம், கசப்பான நியாங்களை எடுத்துச்சொல்லி அப்பிடியே தடவிக்கொடுக்குறீங்க பாருங்க - super.

இந்த உண்மையை உணர்ந்து தன்னோட attitude - ஐ கட்டுப்படுத்தி ஜமுனாவை வழிக்கு கொண்டுவருவானா யுவராஜ்? அத்தைகிட்ட சொல்லறதை தயாநிதி மாமாகிட்ட சொன்னா குறைந்தா போயிடுவ?

உன் பொண்ணுக்கு வராத கண்ணீரை துடைக்கிறியே அப்ப அந்த அப்பாக்கும் தன் பெண்ணோட ஆசை நிறைவேறலையே என்கிற கோவத்தில் வருத்தம் இருக்கத்தானே செய்யும். அந்த வேதனையால் தவறாக பேசிவிட்டார். உடனே அதை உணர்ந்து குற்ற உணர்ச்சியோட விளக்கம் அளிக்கவும் முன்வந்தார். ஆனால் உன் ego உன்னை மன்னிப்பு கொடுக்கவிடலை. இப்பவும் அவர்கிட்ட நீ தணியக்கூடாதுன்னு தானே நினைக்கிற( நான் ஊர் பஞ்சாயத்து பற்றி சொல்லவில்லை ). அவ அப்பாகிட்ட உன்னை விட்டு கொடுக்கலை. அதுனால தான் படிக்க போகலை. ஆனால் நீ?
கவலைப்படாதப்பா உன் பெண்ணுக்காக ஜமுனா உன்கூட எப்பிடியும் வந்துடுவா.

ஜெயலஷ்மிக்கு என்ன ஒரு காலம் கடந்த ஞானோதயம்.

பரவாயில்லை தயாநிதிக்கு ஊர் பஞ்சாயத்தை தாண்டி மாப்பிள்ளை மேல மரியாதை இருக்கு.

இவங்க நடுவில் இனிமேல் தான் divorce என்கிற thought வருதா இல்லை ஏற்கனவே ஜமுனா அதுக்கு apply பண்ணிட்டாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top