காட்டு ரோஜா என் தோட்டத்தில் இறுதி அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
காட்டு ரோஜா என் தோட்டத்தில்

அருமையான கதை. இப்படியும் குறும்பு செய்ய முடியுமானு அதும் இவ்வளவு செய்ய முடியுமானு மயக்கமே வருது இந்த ஸ்ருதி புள்ளை பண்ணும் குரும்பெல்லாம் பார்த்து. பயம்ங்கரது கொஞ்சம் கூட இல்லை. எப்போவும் இவ நடக்கிறதே கிடையாது. ஓடுறது, குதிக்கிறது, தாவுறது அப்படினு டார்வின் தியரிய கரெக்ட்டா புரூவ் பண்றா. யாரையுமே விட்டு வைக்காம கலாய்க்குறா. அவங்க அம்மா அப்பாவே நொந்து போறாங்க, இவள விட இவளை கட்டிக்க போற மாப்பிள்ளையை நினைச்சு அவங்க ரொம்ப கவலை படுறாங்கன்னா பார்த்துக்கோங்க. 12த் முடிக்ககுள்ள 18 பள்ளி இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க இவளோட வால்தனத்தை. அக்கா இறந்து போக அவ பிள்ளையை தன் பிள்ளையா பார்த்துக்கிறா. அப்படி ஒரு பாசம் அவன்மேல். இவளோட குறும்பு எல்லாம் அப்படியே அவனுக்கு பார்சல் பண்ணிட்டா. அவன் வேற யாரையும் அம்மானு கூப்பிட கூடாதுன்னே அக்கா கணவனை திருமணம் செஞ்சுக்குறா. அவனிடம் அவளுக்கே தெரியாத ஒரு பிடிப்பு இருக்கும் முன்னவே. கல்யாணம் ஆகி கூட இவ அடங்கவே இல்லை. அதும் ஹாஸ்பிடலில் இருக்கும் போது கூட இவ பண்ணும் சேட்டைகள் அப்பப்பா படிக்கும் நமக்கே கண்ணை கட்டும். கொஞ்சமாவது அடங்குவது அஸ்வினுக்கு தான்(அப்பறம் அவன் படும்பாடு தனி) இந்த குறும்புக்காரியும் வளர்ந்த பொண்ணா அஷ்வினொட காதல் பண்றது, அவனை தாங்குறது அவன் மேல் இவள் காட்டும் அன்பு லவ்லி... 9month pregnant la கூட இவ சுவர் ஏறி குதிக்க முனையும் இடம் நமக்குதான் தலை சுத்தும். இவளை போலவே இவளுக்கு வரும் வாலுங்க மூணையும் சமாளிக்க முடியாமல் வீட்டுல இருக்குற எல்லாரும் தினருறத பார்க்கும் போது சிரிச்சு முடியல என்னால. Such a mischievous children.

அஸ்வின் - பிஸினஸ் தான் முதல்ல இவனுக்கு, கல்யாணத்தை ஒரு கடமையாதான் பண்றான். ரொம்ப அமைதி. ஒருவார திருமண வாழ்வு பிறகு வெளிநாடு, இவன் திரும்பி வரும் போது ஒரு குழந்தையை விட்டுட்டு மனைவி இறந்துடுவா. ஆல்ரெடி அமைதி இதில் இன்னும் இறுகி போய்டுவான். தப்பு மனைவி மேலனா கூட அதை அவ ஃபேமிலி கிட்ட காட்ட மாட்டான். இவனையும் பேச வைக்க வராங்க நம்ம ஸ்ருதி அவளோட குறும்பால். அவளோட சேட்டையால் கவரப்பட்டு காதலில் விழுந்து கல்யாணம் பண்றான். பாவம் இவன் படும் அவஸ்தைகள். இவங்க ரெண்டு பேர் வர இடமெல்லாம் செம்மையாக இருக்கு. அவளை இவன் சமாலிக்குறது, அவளுக்கு ஒன்னுனா துடிக்கிறது, அவ மேல கொண்ட அளவில்லா காதல் வாவ் இவன் நிறைய இடத்தில மனசுல நின்னுட்டான். பரென்ட்ஸ் மீட்டிங் க்குக் பயந்து இவன் ஓடும் காட்சி ஹாஹாஹா... அவள் சொல்லும் விளக்கங்களுக்கு முழிக்கும் இடங்கள் ஹாஹாஹா..

கற்பகம் - அமைதியான இவங்களையும் கலகலப்பாக அவளோட சேட்டை மற்றும் அன்பால் மாத்திடுவா சேட்டைக்கார ஸ்ருதி.. மகனொட நல்வாழ்வு மட்டுமே இவங்க குறிக்கோள். ஸ்வேதா தப்பு செய்தும் கூட அவங்க குடும்பத்தை ஒரு குறை சொல்லாம அன்பா இருக்காது சூப்பர்.

சந்திரன் - கோகிலா : ஒருமகள் தவறு செய்து மருமகனின் வாழ்க்கையை அழித்து விட்டாள் என அவள் மேல் கோபமும் அவள் மறைவில் வருத்தமும் இருந்தாலும் இன்னொரு மகளை அவனுக்கே திருமணம் செய்வித்து அவங்களோட இருக்காங்க. பாவம் ரெண்டு பேரும் சின்னதில் மகளின் சேட்ட்டையால் நொந்து போனவர்கள் இப்பொழுது பேரன் n பேத்தியின் சேட்டையில் தலை சுத்திபோய் இருக்காங்க. அதும் கோகிலா சொல்லும் ஸ்ருதியின் சேட்டைகள் படிக்கும் நமக்கே மயக்கத்தை கொண்டு வரும்.. பேரனின் பரெண்ட்ஸ் மீட்டிங் க்கு போக அவர் பயப்படும் காட்சிகள் ஹாஹாஹா பாவமோ பாவம் அவர். Ukg க்கே 50டைம்ஸ் மீட்டிங் போவாங்க ஹாஹாஹா ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன்.. செம்ம லவ்லி ஸ்டோரி...
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. என்னுடைய இத்தனை அ்ததியாயங்களை ரத்தினச் சுருக்கமா இவ்வளவு அழகா சொல்லியிருக்கிங்க.. .நன்றிப்பா..:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Junior shruthi team oru kallaku kalakuraanga ..

Kadaisiya kaetaalae oru kelvi.. naanu kooda enna thaan ketka poraalo nu nenachen .. school ku neenga thaan poganumnu sonnathu thaan periya highlight...

Sema entertaining story idhu.. shruthi adavadi chance less...
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்..:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Last story played in the storyum sema kalakittinga awesome narration. Ability irukavanga kitta than innum innum athigama expect panna thonum expecting more and more stories from you
ஹாஹாஹா.. நீங்களெல்லாம் இவ்வளவு ரசிச்சு படிக்கிறதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. எனக்கு கதை எழுதுர திறமை இருக்குன்னே என் பொண்ணு சொல்லிதான் எனக்கு தெரியும் சிஸ்.. முடிஞ்ச வரைக்கும் நல்லா எழுத முயற்சி செய்றேன்பா
 

Gurukirthi

New Member
Omg sema story. சரிச்சு வயிறு வழிக்குது சகா I think I’m reading ur novel first time super writing keep rocking sis.
 

Chittijayaram

Well-Known Member
நாலும் சேர்ந்து அஸ்வினை ஒரு வழியாக்குதுக டியர்..என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி .. நான் இந்த கதை ஆரம்பிக்கும்போது வேற சைட்ல இதுபோல ஒரு கதை படிச்சேன்னு சொன்னிங்களே டியர்.. இப்பவும் அதே மாதிரிதான் இருக்கா டியர்.. அந்த போட்டி கதை முடியவும் இங்க வர்றேன் .. எனக்கு முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் கமெண்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்
Starting mattum Dan appadi eruku dear apparam appadi Ella vera concept dear, mrida Mohan writer ezhuduramga, ippo 18uds varai poi eruku konjam niruthi erukamga personnel work adunala varala, sikirama next story Oda vamga dear thanks.
 

amuthasakthi

Well-Known Member
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. இந்த சைட் ஓப்பன் பண்ணும்போது கனவுபட்டறை கதை தொழிற்சாலை கதைகள்ன்னு ஒரு தலைப்பு இருக்கும ்பாருங்க அதை கிளிக் செய்ங்க சிஸ்... அந்த சைட் ஓப்பன் ஆகிரும் புதன் கிழமையிலிருந்து புதுக்கதை ஆரம்பிக்கிறேன் சிஸ்..
நன்றி
 

Prabha75

New Member
View attachment 5887View attachment 5888



Kaattu Roja En Thottathil 19 1

Kaattu Roja En Thottathil 19 2



ஹாய் பிரண்ட்ஸ் இந்த கதையோட கடைசி அத்தியாயத்துக்கு வந்திட்டோம்.. ஆரம்பிக்கும் போது பத்து அல்லது பனிரெண்டு பதிவுதான் வரும்னு நினைச்சேன்.. ஆனா நீங்க எல்லாரும் போட்ட கமெண்ட்ஸ் பார்த்து நானும் இதை 19 பதிவு வரைக்கும் கொண்டு வந்திட்டேன்... இது மாதிரி நிறைய கதை நீங்க எல்லாரும் படிச்சிருப்பிங்க.. மனைவி இறந்தவுடன அவளோட தங்கையை திருமணம் செய்து கொள்வது போல.. நான் என்னோட பாணியில் இந்த கதையை சொல்லியிருந்தேன்.. என்னோட மற்ற கதைகள்ல வர்ற நாயக நாயகிகளை போல அஸ்வின் ஸ்ருதியையும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.. இதுவரை எனக்கு கமெண்ட்ஸ் , லைக்ஸ் போட்டு ஊக்கம் அளித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. அதோட சைலண்ட் ரீடர்ஸ் நிறைய பேர் இந்த கதைக்கு கமெண்ட்ஸ் போட்டிருந்தாங்க.. அனைவருக்கும் எனது பெரிய நன்றிகள் பிரண்ட்ஸ்...



என்னோட அடுத்த கதை....



“வரம் வாங்கி வந்தவள் நான்



இந்த கதை இங்க எழுதலைப்பா.. போட்டிக்கதைக்காக நம்மளோட அந்த தளத்தில எழுதுறேன்.. என்னுடைய மற்ற கதைகள் மாதிரி நான் எழுதப்போற இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.. என்னுடைய எல்லா கதைகளுக்கும் கொடுத்த அன்பையும் ஆதரவையும் இந்த கதைக்கும் கொடுக்கனும்.. நிறை, குறை என்ன இருந்தாலும் சொல்லிருங்க நான் திருத்திக்கிறேன்..

மிக மிக கவிதை போல இருந்தது உங்கள் கதை
நன்றி

ஒரு புது கதைக்களம், கதை மாந்தர்கள்... நாயக நாயகிகளோடு உங்களுக்கு எல்லாம் பிடிக்கிற மாதிரி ஒரு கதையோட வர்றேன்.. நீங்க எல்லாரும் கமெண்ட்ஸ் போட மறந்துறாதிங்க.. நீங்க எல்லாரும் உங்க வரத்தை எனக்கு கொடுப்பிங்கன்னு நம்பிக்கையில் சீக்கிரமே அங்கு சந்திப்போம் பிரண்ட்ஸ்...

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Omg sema story. சரிச்சு வயிறு வழிக்குது சகா I think I’m reading ur novel first time super writing keep rocking sis.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. நேரம் கிடைக்கும்போது என்னுடைய மற்ற கதைகளையும் படித்து பாருங்கள் .. நன்றிப்பா..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Starting mattum Dan appadi eruku dear apparam appadi Ella vera concept dear, mrida Mohan writer ezhuduramga, ippo 18uds varai poi eruku konjam niruthi erukamga personnel work adunala varala, sikirama next story Oda vamga dear thanks.
நல்ல வேளை டியர்... நான் அத ஒவ்வொரு முறையும் உங்ககிட்ட கேட்கனும்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. போட்டிக்கதையை நாளைக்கு ஆரம்பிச்சருவேன் டியர்... கமெண்ட்ஸோட வாங்க...:love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top