கத்தரிக்காய் கொத்சு

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#14
கத்தரிக்காய் கொத்சு: View attachment 3866

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடிக்க :

சிவப்பு மிளகாய் - 4
மல்லி - 2 ஸ்பூன்
1 கரண்டி எண்ணெயில் இவற்றை பொன்னிறமாக வறுத்து, இடித்து, பொடி செய்து, தயாராக வைத்துக்கொள்ளவும்.

கத்திரிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி -1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிதம் செய்யவும்.
நறுக்கிய. கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் ,
2 கோப்பை நீர் சேர்த்து நன்கு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

பிறகு, மையாக கடைந்து கொள்ளவும், வறுத்து பொடித்த மிளகாய், மல்லி பொடி சேர்த்து,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
மல்லி இல்லை தூவி, இட்லி, தோசைக்கு பரிமாறவும்.

குறிப்பு:
கத்தரிக்காய் மட்டும் வேகவைத்து கடைந்து கொண்டு, தக்காளி வெங்காயம் வதக்கியும், பொடி கலந்து செய்யலாம்.
very nice.
long back i tried something like this.. it had ginger and cashews also.. that was also good.
will try this weekend :)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement