என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி teaser 4

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் ஷரபின் நிலையை சொல்ல ஒரு song ஓட வந்துட்டேன்:whistle::whistle:

இங்கே ஷரப்பின் நிலைமையோ படு மோசமாக இருந்தது ஆன்ஷியின் நியாபகம் அவனை வாட்ட மதுவில் முழு நேரமும் லயித்தவனுக்கோ மாது கசந்தது. காதல் நெஞ்சம் நிறைத்து ஆட்டிப் படைக்க அந்த உணர்வை வெறுத்தவன் மதுவை நாடினான். ஆனாலும் ஆன்ஷி அவனை விட்டுச் செல்லாமல் மது அருந்திய போது அவன் கண் முன்னே வந்து அவனை இம்சை செய்ய ஆரம்பிக்க பாட்டிலை தூக்கி வீசியவன் அதை தொடவே இல்லை."ஏன் டி இப்படி படுத்துற உன்ன மறக்கணும்னு தானே பாட்டில் பாட்டிலா குடிச்சேன். அப்பொவும் வந்து இம்சை செய்யுற. எங்கடி போய் தொலைஞ்ச ராஜஸ்தான் முழுக்க தேடியாச்சு நீயும் இல்ல யொத்தாவுமில்லை. என் கண்ணுல சிக்காம நீங்க ரெண்டு பேரும் அநியாயம் பண்ணுறீங்க. மரியாதையா வந்துடு நா தேடி கண்டு பிடிச்சேன், என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல" கண்ணாடியை பார்த்தவாறே தனக்கு தானே பேசிக் கொண்டவன்,

"த்து நீயெல்லாம் ராஜவம்சத்துல பொறந்தானு பெருசா பீத்திக்கிற, ஒரு பொண்ண தேடி கண்டு பிடிக்க முடியல, அங்க தாதிமா யொத்தாவ கொண்டுவான்னு பாதி உயிரை வாங்குறாங்க, நீவேற என்ன விட்டு போய் மீதி உயிரை வாங்குற, எதனாலும் செத்து செத்து பொழைக்கிரேண்டி உன்னால, வ்ருஷாத் வ்ருஷாத் எங்கடா போய் தொலைஞ்ச”

:cry::cry:
one of my favorite song
 
Last edited:

Advertisement

New Episodes