என் மன்னவன் நீ தானே டா...8

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்க்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இதோ அடுத்த பதிவு..

என் மன்னவன் நீ தானே டா...8

தனது அம்மாவின் படத்தின் முன்பு கண்கள் சிவக்க நின்றிருந்தான் கிருஷ்ணன்.புரையேரியதன் காரணமாக அவனது முகமும் சிவந்து காணப்பட்டது.கோபத்துடன் தனது தாயை திட்டிக்கொண்டிருந்தான்,

"பத்தூ...நான் தான் உன்கூட டூ னு சொன்னேல..அப்புறம் எதுக்கு என்ன நினைச்ச ,பாரு உன்னால ஒரு தோசை கூட முழுசா சாப்பிட முடியல..."என்று ஏறகுறைய கத்திக்கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

"டேய் பையா...போதும் டா முடியல..காது வலிக்குது..ஏன் டா இப்படி படுத்துர.."என்று கேட்டது பத்மினியின் அசிரிரீ.

"என்ன நான் உன்ன படுத்துரேனா..உனக்கு வர வர கொழுப்பு அதிகமாகி போச்சு.."

"டேய் நீ தான் ஏன் கூட டூ னு தான சொன்ன அப்புறம் ஏன் டா கத்திட்டு இருக்க..."என்றார் பத்தூ.

"நீ ஏன் என்ன நினைச்ச சொல்லு.."

"டேய் பையா..நான உன்ன நினைக்கவே இல்லை டா..."என்றார் பாவமாக.

"பொய் சொல்லாத என் கிட்ட பேசமா உன்னால இருக்க முடியாது எனக்கு தெரியும்.."

"போடா..டேய்..நானே இப்பதான் நிம்மதியா இருக்கேன் நான் ஏன் உன்ன நினைக்கனும் லூசா டா நீ...போய் தூங்கர வழிய பாரு இல்ல நாளைக்கு லேட்டா போய் மாட்டிப்ப.."என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

"போ..பத்தூ..போ..நான் உன்கூட டூ தான்...நான் ஒன்னும் மாட்டிக்கமாட்டேன் ஏன்னா சூப்பரா அலாரம் செட் செஞ்சுட்டனே...குட் நைட்.."சொல்லி படுத்துவிட்டான்.அந்தோ பரிதாபம் மறுநாள் யாரை பார்க்கமல் இருக்க எண்ணினானோ அவளிடம் தான் மாட்டிக்கொண்டு நின்றான்.

திவ்யாவின் அறையில் என்ன காரணம் சொல்லி தப்பிப்பது என்று யோசனையில் இருந்தான் கிருஷ்ணன்.இன்று காலையில் கார்மெண்ட்ஸை சுற்றி பார்வையிட வந்த திவ்யா முதலில் சென்றது கிருஷ்ணன் வேலை செய்யும் பகுதிக்கு தான் ஆனால் அவன் அங்கு இல்லாதை கண்டு அவன் வந்தவுடன் தன் அலுவலக அறைக்கு அனுப்புமாறு செல்வத்திடம் சொல்லிவிட்டு வந்தாள்.

"மிஸ்டர்.கிருஷ்ணன் அதனா உங்க பேரு...ஆபிஸ் டைமிங் என்னனு நியாபகம் இருக்கா.."என்றாள் நக்கல் குரலில்.

"ஸாரி மேடாம்..."என்று பல்லை கடித்து சொன்னவன் பின் நிதானமாக இது என்னோட தப்பு இல்ல அங்கிளோட தப்பு தான் என்று தனது பக்கத்தில் பதட்டத்தோடு அமர்ந்து இருந்த செல்வத்தை காட்டி அவர் தலையில் இடியை இறக்கினான்.

"நா...நான்...என்னப்பா பண்ணேன்..."என்று பாவமாக கேட்டார் செல்வம்.நேற்று அவ்வளவு சொல்லியும் தாமதமாக வந்து மாட்டிக் கொண்டானே என்று அவனை காப்பாற்றும் நோக்கோடு வந்தால் இவன் என்ன என் தலைய உருட்டுரான் என்று குழம்பி போய் அமர்ந்து இருந்தார்.

திவ்யா புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.கிருஷ்ணனோ இது எதை பற்றியும் கவலைபடாமல் நேற்று நடந்ததை விவரித்தான்,

பத்துவுக்கு குட் நைட் சொல்லிவிட்டு படுத்தவன்,மோபைல் ஒலித்தது செல்வம் தான் அழைத்திருந்தார்.இவரு எதுக்கு இந்த டையமுக்கு கூப்புடுறாரு யோசித்தவன் காதில் வைத்தான்,

"சொல்லுங்க அங்கிள்..."என்றான்.

"தம்பி நாளைக்கு நேரத்துக்கு வந்துடுப்பா..புது முதலாளி கொஞ்சம் கோபக்காரங்கனு சொல்ராங்க...நீ மாட்டிக்காத..அதனால தான் சொல்ரேன்.."என்றார்.

இவனோ பாதி தூக்கத்தில் "ஓகே.. ஓகே..." சொல்லி வைத்தான்,பின் செல்வம் மறுபடியும் அழைப்பார் என்று யோசித்துவிட்டு மோபைலையை சைலன்டில் போட்டுவிட்டு உறங்கியும்விட்டான்.காலையில் எழுந்தவன்

"ஐய்..நான அலாரம் இல்லாம எந்திரிச்சுட்டேனே.."என்று குத்துவிட்டு மணியை பார்த்தால் மணி 9மணி என்று காட்டியது,பின் அடித்து பிடித்து வந்திருந்தான் இருந்தும் மாட்டிக்கொண்டான்.

அனைத்தும் சொல்லிவிட்டு மேஜை மேல் இருந்த டம்பளர் தண்ணீரை பருகிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்,இன்னும் முடியலாய என்ற எண்ணத்துடன் பார்த்திருந்தனர் செல்வமும்,திவ்யாவும்.

"மேடாம்...நீங்க டூவிலர்ல வந்திருக்கீங்கலா..."என்று திவ்யாவிடம் கேட்டான்.

இவன் என்ன சம்ந்தம் இல்லாம கேட்கிறான் என்று பார்த்திருந்தாள் திவ்யா.பின் அவனே தொடர்ந்தான்,

"நீங்க வந்திருக்க மாட்டிங்க...வந்த தான் என்ன மாதிரி தொழிலாளர்கள் நிலைமை என்னனு தெரியும்.."என்று கூறிக்கொண்டு இருந்தவனை கைகளை உயர்த்தி நிப்பாட்டினாள் திவ்யா.செல்வமோ மயக்கம் வரத குறையாக இவனது கதையைக் கேட்டு அமர்ந்திருந்தார்.

திவ்யாவுக்கு தலைசுற்றுவது போல் இருந்தது.அதனால் அவனை எதுவும் சொல்லாமல் வெளியில் அனுப்பிவிட்டாள்.அவன் சொன்ன கதையில் உறைந்து அமர்ந்து இருந்த செல்வமோ அரைநாள் விடுமுறை எடுத்து சென்றுவிட்டார்.

அனைவரும் சென்றவுடன் திவ்யா நினைத்தது இதுதான் ஏன் லேட்டுனு கேட்டது ஒரு குத்தமா டா..இப்படி தலைசுத்தர அளவுக்கு வச்சுடானே...என்று நினைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

கிருஷ்ணனோ "ச்ச..முழுகதையும் சொல்ல முடியாம போச்சே.."என்று வருத்துடன் சென்றான்.

என்னதான் கிருஷ்ணன் விளையாட்டு தனமாக இருந்தாலும் வேலையில் கெட்டி,வேலை வாங்குவதிலும் புத்திசாலி. அதனால் அவனது பிரிவில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருந்தது.சிலருக்கு கிருஷ்ணனின் மேல் பொறாமையும் இருந்தது.அவனை எதிலாவது மாட்டிவிட வேண்டும் என்று காத்திருந்தனர்.

வீட்டில் திவ்யா எவ்வளவு இறுக்கமாக உணர்ந்தாலும் அலுவலகம் வந்தால் ஒரு துள்ளலுடன் தான் அனைத்து வேலைகளையும் ஈடுபடுவாள்.கிருஷ்ணனை பார்க்கும் போது அவளது மனதில் ஒரு வித இதம் பரவும் அது ஏன் என்று அறிய முற்ப்பட்டு தோற்று போனாள்.

எவ்வாறு இரண்டு மாதங்கள் சென்றது என்றே திவ்யாவுக்கு தெரியவில்லை.இந்நிலையில் வரதராஜன் திவ்யாவிடம் இன்னும் இருபது நாட்களுக்குள் உனது திருமணம் நடக்க வேண்டும் என்று தலையில் இடியை இறக்கினார்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
செல்போனை சைலண்ட்டில் போட்டு லேட்டா எழுந்து விட்டு அலாரம் இல்லாமல் எழுந்ததாக பீற்றல் களஞ்சியம் கிருஷ்ணன்
ஹா ஹா ஹா
இதிலே முழுக் கதையையும் திவ்யா கேட்கலைன்னு கிருஷ்ணன் அண்ணனுக்கு குறை வேற
பீலிங்க்குஸ் ஆப்பு இந்தியாவாம்ப்பா
இவனோட கதையைக் கேட்டு செல்வம் அங்கிள் ஹால்ஃப் டே லீவா?
ஹா ஹா ஹா
அச்சோ
கிருஷ்ணனின் எனிமீஸ் அவனுக்கு கெடுதல் ஒண்ணும் பண்ணக் கூடாது
அவன் பாவம்ப்பா
இன்னும் இருபது நாளில் திவ்யா கல்யாணம் நடக்கணுமா?
ஹா ஹா ஹா
அப்போ உனக்கு இன்னும் இருபது நாளில் கல்யாணம்டா, கிருஷ்ணா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top