என் மன்னவன் நீ தானே டா..3

Advertisement

Ambal

Well-Known Member
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழிகளே...என் கதைக்கு ஆதரவு தெரிவித்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே....உங்களது கருத்துக்கள் தான் என்னை ஊக்குவிக்கும் பெரிய சக்தி...சென்ற பதிவுக்கு தந்த ஆதரவை இந்த பதிவிற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்...



என் மன்னவன் நீ தானே டா...3



திவ்யாவுக்கு என்ன முயன்றும் தனது கோபத்தை அடக்க முடியவில்லை.ஓங்கி தனது செடயரிங்கில் ஒரு குத்துவிட்டாள்,இருந்தும் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.

"கோபத்தை குறை திவிம்மா...கோபம் மூளையை மழுங்க செஞ்சிடும்...மனச அமைதிபடுத்த முயற்சி செய்..எல்லா விஷயத்துக்கும் தீர்வு கிடைக்கும்.."என்று தனது தாத்தா ராம் மோகன் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்தவள்,தன்னை சமன் செய்ய எண்ணி காரை ஓரமாக நிறுத்தி சீட்டின் பின்னால் சாய்ந்தாள் தன் போல் அவளது கடந்த காலம் கண்முன் விரிந்தது.

ராம் மோகன் என்றால் தொழில் துறையில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு தொழில் துறையில் தனக்கு என்று ஒரு முத்திரையை பதித்திருந்தார் .ஆர்.ம் கார்மெண்ட்ஸ் அவரின் மிக பெரிய கனவு அதை நினைவாக்க மிகவும் கஷ்டப்பட்டார்.சாதாரண மனிதன் சாதனை படைப்பது என்பது சிறிய விஷயமல்ல,அவரது முன்னேற்றத்துற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது துனைவி மணிமேகலை.

ராம் மோகன்,மணிமேகலைக்கு இரு பிள்ளைகள் மூத்தவள் சகுந்தலா,இளையவர் சுகுமார்.சுகுமார் பிறபில் சிக்கல் ஏற்பட்டது,அதனால் மணிமேகலை மிகவும் கஷ்டபட்டார் ,அதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.சுகுமார் பிறந்து இரண்டு வருடங்களில் மணிமேகலை உயிர் பிரிந்திருந்தது.மனைவியின் பிரிவில் ராம் மிகவும் உடைந்து போனார்.

தனது தனிமையை போக்க அவர் தனது தொழிலில் கவனம் செலுத்தினார்,அதனால் வீட்டில் அவரது வருகை குறைந்தது.அதனால் சுகுமாரை சகுந்தலா தான் தாய் போல் பார்த்துக்கொண்டார்.அனைத்திலும் தனக்கு தான் முன்னுரிமை வேண்டும் என்று நினைப்பவர் சகுந்தலா தனது தம்பி பிறந்தவுடன் தான் பின்னுக்கு சென்றுவிட்டேன் என்று நினைத்து சுகுமாரை தன் கை பொம்மை போல் வளர்த்தார்.சுகுமாருக்கும் அக்கா என்றால் உயிர்,அவரது சொல்லே வேதவாக்கு.

சகுந்தலாவுக்கு தனது நண்பர் மகன் சிவகுருவை மணம்முடித்தார் ராம்.ஒரு வரருடத்தில் அவர்களுக்கு அபினாஷ் பிறந்தான்.சுகுமாரை தொழிலில் இறங்க வைக்க முயற்சி செய்து தோற்றார் ராம்.

தனது தூரத்து உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலைவாணியைக் கண்டார்.கலைவாணியின் அமைதியும்,சிரித்த முகமும் பிடித்துப்போக சுகுமாருக்கு திருமணம் செய்தார். சகுந்தலாவுக்கு இத்திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை.சகுந்தலா எவ்வளவோ மறுத்தும் அவர் அசரவில்லை,இதனால் தந்தை மீது வன்மம் முளைத்து,தன்னை மதிக்கவில்லை என்று.

சுகுமார், கலைவாணி திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் திவ்யா பிறந்தாள்.மணிமேகலையை உரித்து வைத்தது போல் திவ்யா இருந்ததாள் ராம் மோகனுக்கு செல்ல பெயர்த்தி ஆகி போனாள் திவ்யா.திருமணத்திற்கு பின் தனது கெட்ட பழக்கங்களை விட்டு சற்று தனது தந்தை உடன் தொழிலை கவனிக்கத் தொடங்கினார் சுகுமார்,ராமிற்கு மகனின் மாற்றத்தில் மகிழ்ச்சி.

அனைத்தும் நன்றாகவே இருந்தது,சுகுமாரும் தொழிலில் கால் ஊன்ற ஆரம்பித்த சமயம் சகுந்தலாவின் கணவர் திடீர் மாரடைப்பில் மறைந்துவிட சகுந்தலா முழுவதுமாக தாய் வீடு வந்தாள்.சகுந்தலாவுக்கு கலைவாணியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது அதிலும் தனது தம்பி எதற்கெடுத்தாலும் வாணி என்று சொல்வதால் அவருள் பொறாமை மூண்டது.அதனால் கலைவாணியை பற்றி சுகுமாறனிடம் தவறாக கூற தொடங்கினார் சகுந்தலா.அக்கா பேச்சை நம்பி மனைவியிடம் சண்டை போட ஆரம்பித்தார் சுகுமார்.

கலைவாணி இயல்பிலேயே பொறுமையானவர் அதனால் கணவரின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள தொடங்கினார் வர்ஷி சிறியவள் அதனால் தந்தையின் மாற்றம் அவளுக்கு தெரியாது,ஆனால் திவ்யாவிக்கு தனது தந்தை தாயிடம் சண்டையிடுகிறார் என்று தெரிந்தது. ஆனால் எதனால் என்று புரியவில்லை.

சில சமயம் தாயிடம் கேட்பாள் ஆனால் கலைவாணி ஏதாவது சொல்லி சமாளித்துவிடுவார்.இந்நிலையில் சுகுமாருக்கு குடிபழக்கம் உருவானது அதனால் வீட்டில் தினமும் சண்டை சச்சரவு தான் திவ்யா தந்தையின் செயல்களில் ஏற்பட்ட மாற்றத்தில் திணறினாள்,தந்தை பற்றி தனது தாத்தாவிடம் சொல்ல சென்றால் கலைவாணி தடுத்துவிடுவார்.

கலைவாணி அவ்வாறு சமாளிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு ராம் மோகன் தனது தொழிலை விரிவு படுத்தும் வேலையில் ஓடிக்கு கொண்டு இருந்தார்,இதில் வீட்டு விஷயத்தை திணிக்கவேண்டாம் எண்ணினார்.அதன் விளைவு சுகுமார் முழு நேரம் போதை பழக்கத்திற்கு அடிமையானார்.இதில் சகுந்தலாவின் கேட்ட போதனைகளும் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாறிக்கொண்டு இருந்தார்.திவ்யா கொஞ்சம் கொஞ்சமாக தனது தந்தையை வெறுக்க ஆரம்பித்தாள்.

இந்நிலையில் திவ்யா தனது தந்தையை முழுமையாக வெறுத்து ஒதுக்கும் நாளும் வந்தது.அனைவரின் வாழ்வையும் புரட்டி போட்ட நாள்..திவ்யா தனது சிரிப்பை முழுவதுமாக துளைத்த நாள்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அன்னையைப் போல பாசம் காட்டி வளர்த்து விட்டு கூடப் பிறந்த தம்பியிடமே பொறாமையா?
வெளங்கினாப்புலதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top