என் காதல் தீ 18

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்கா...

எல்லாருக்கும் ஒரு பெரிய சாரி... சில மாதங்களாக சைட் பக்கம் வர முடியாமல் போயிருச்சு. இப்போ ஒரு குட்டி அப்டேட். அதன்பின், இரண்டு அல்லது மூன்று அப்டேட்களில் கதையை முடித்து விடுவேன். அவற்றை நாளையே முடிந்தவரை தர முயற்சிக்கிறேன்.


என் காதல் தீ 18



மூன்று வாரங்கள் கடந்திருந்தது இருவரும் சண்டையிட்டு. இன்றுவரை கதிரும் சரி, நிரல்யாவும் சரி, பேசவே இல்லை. யார் முதலில் பேசுவது என்று ஒரு வாரம், அவர்களே வந்து பேசட்டுமே என்று ஒரு வாரம், நான் அவ்வளவு தான் முக்கியமா? என்று ஒரு வாரம் கடந்திருந்தது.

ஆனால், இருவருமே மற்றவர்மேல் ஒரு கண் வைத்துக்கொண்டுதான் இருந்தனர். மழையில் நனைந்து நிரல்யாவிற்கு காய்ச்சல் வர, அவள் சோர்ந்த முகத்தைக் கண்டு கணக்கிட்டு மாத்திரை வாங்கி வந்து டீப்பாயில் வைத்திருந்தான் கதிர். ‘இதற்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை, ஆனால், நம்பிக்கை மட்டும் தான் இல்லையாம்’ என்று முனுமுனுத்தவாறே அதனை தொடாமலே கடந்து சென்றிருந்தாள் அவள். தான் அவன் நம்பிக்கை கொள்ளுமளவு என்ன செய்திருந்தோம் என நினைவிலில்லை போலும்.

கோபத்தோடு பேசியபோது எழுந்த விவாகரத்து எண்ணம் மட்டும் விவாகரத்து வாங்கியிருந்தது இருவரது சிந்தனையிலிருந்தும்.

அன்று மாலை வீட்டில் இருவரும் இருக்க, கதிரின் கைப்பேசி அழைத்தது. அதனை காதிற்கு கொடுத்தவன், மறுபுறம் வந்த கேவல் ஒலியில் சற்று திகைத்தான்.

“என்ன ஆச்சுன்னு இப்படி விசும்பற?”

…..

“சரி, அழாத. இப்போவே வரேன்” என்றவன், எங்கும் சொல்லாமலே கிளம்பிச் சென்றான்.

இவை யாவையும் பார்த்து நின்றவளிடம் ஒரு வார்த்தையு சொல்லவில்லை அவன். இருந்தும், எங்கே, எதற்காக சென்றான் என்று அவளுக்கு தகவல் தானாக வந்துவிட்டது. அது வந்தவுடனேயே அந்த விஷயத்தின் அடி ஆழத்தைக் கண்டறிந்தவள் அடுத்த நாள் ஒரு இடத்தில் சென்று நின்றாள்.

*****​

“வணக்கம்ண்ணா”

“வா தங்கச்சி… என்ன பொறந்தவனைப் பார்க்க இவ்வளவு தூரம்?”

“இந்த சைட் ஒரு வேலை இருந்ததுண்ணா. அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேண்ணா” என்றவள், இருவரும் அருகில் இருக்கும் கேண்டீனிற்கு சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கி வந்து அமரும் வரை பொதுப்படையாகவே பேசினாள்.

சிறிது நேரம் செல்லவும், மெதுவே, “அண்ணா… நான்…” என்று அவள் தொடங்க,

“என்னம்மா, உன்ன தூது விட்ருக்காறா உன் புருஷன்?” என்று நேரடியாக விடயத்திற்கு வந்தவரிடம் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து, “உங்களுக்கு அப்படி தோனுதா?” என்று கேட்டாள் நிரல்யா.

அவளது கூற்றில் சிறிது நிதானித்தான் எதிரில் இருந்தவனும். அவனும் அறிவான், கதிர் எதுவாக இருந்தாலும் நேரில்தான் பேசுவான் என்று.

“எனக்கு கடுப்பா இருக்கும்மா தினமும் வீட்டுக்கு வரவே. மாலையில் வேலை முடிந்து வர்றப்போவே ஒரு பஞ்சாயத்து எனக்காக காத்துட்டு இருக்கும் அங்கே. இரண்டு நாளுக்கு முன்னாடி ரொம்ப பேசிட்டா. அதுல கோபம் வந்து நானும் போன்னு சொல்லிட்டேன். இதுதான் சாக்குன்னு வீட்ட விட்டு போய்ட்டா”

“சரி அண்ணா, வீட்டுல என்ன நடக்குதுன்னு கொஞ்சமாவது பார்த்துருக்கீங்களா?” என்றவளது கேள்விக்கு குழப்பத்துடன் நோக்கினான்.

“உங்களோட விருப்பத்தினால மட்டும் தான உங்க வீட்டுல உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க?”

அவன் தலை மௌனமாக அசைந்தது.

“அப்போ இருந்தே பிரச்சனை ஆரம்பமாகிருச்சு. உங்க மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் ஒத்து வரல. அதுவும், அவங்க கர்ப்பமா இருக்குறப்போ பையன் தான் நீ பெத்து தரனும்னு நேரடியா சொல்லிருக்காங்க. ஆனா, பொண்ணு பிறக்கவும், அவங்க உங்க மனைவியை ரொம்ப திட்டீருக்காங்க. மறுபடியும் அவங்க கரு தரிக்கும்போதும் இந்த முறை பையன் இல்லைனா உன்ன விலக்கி வைச்சுட்டு எங்க மகனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைச்சுடுவோம்னு சொல்லவும்தான் அவங்க உங்ககிட்ட அதப்பத்தி சொல்லிருக்காங்க. அது சரியா கம்யூனிகேட் ஆகாம பிரச்சனை ஆகிருச்சு”

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன், “இத்தனை வருடம் என்னிடம் இதை எல்லாம் சொல்லாமல் இருந்தவள் உன்னிடம் மட்டும் எப்படி சொன்னா?”

“நீங்க சொன்னீங்க பாத்தீங்களா, ஈவினிங் வேலை முடிந்து வீடு வரவும் ஏதாவது காத்திருக்கும்னு. அப்படி வீட்டுக்கு நீங்க வந்தா ரிலாக்ஸ்டா இருக்கனும்னு பெரும்பாலும் அவங்க எதுவும் சொல்றது இல்ல. உங்க அம்மா சொன்னாலும், அதன்பின் அவங்க ஏதாவது சொன்னா, உங்க அம்மாவ குறை சொல்றாங்கன்னு நினைச்சுப்பீங்கன்னு எதுவும் சொல்ல மாட்டாங்க. இப்போ அவங்க சண்டை போட்டது கூட எங்க நீங்க அவங்கள விட்டு போய்டுவீங்களோங்கற பயத்துல தான்”

“அப்போ, என் அம்மா தான் தப்பு செய்யறாங்கன்னு சொல்ல வர்றீங்க, அப்படிதானே?” என்றவனின் வார்த்தைகளில் சிறிது கோபம் கனன்றது. அது எப்படி என் அம்மாவை நீ குறை சொல்லலாம் என்று.

மெலிதாக புன்னகைத்தவள், “நான் அவங்க மேல தப்பே சொல்லல. தன் மகன் தன் சொல்படி நடக்கனும் என்பது ஒவ்வொரு பெற்றோரில் இயல்பும் தான். அதுவும் ஒரே பிள்ளை உள்ள குடும்பத்தில் இது மோஸ்ட்ல்லி இருக்கும். அந்த ஒரு ஹெல்ப்லெஸ் ஃபீல் தான் அம்மாக்கும். அதை ஈசியா சரி பண்ணிடலாம். அதற்கு உங்க மனைவியும் கொஞ்சம் பொறுமையா இருக்கனும். அவங்க இரண்டு பேரும் சரியாகுற வரை நீங்களும் கொஞ்சம் பொறுத்து போகனும்” என்று அவள் சொல்ல, அவன் முகமும் தெளிவு பெற்றது.

விடைபெற்று வெளியே வந்தவனின் மனதில் ஒரு நிறைவு, தன்னை தோழியாக நினைத்து அனைத்தையும் கூறியவளின் வாழ்வு இனி சீராகிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது அவளுக்கு. அவள் அண்ணனுடனான தன் வாழ்வு என்னவாகும் என்று நினைக்கையில் மெல்லிய பெருமூச்சு உண்டானது நிரல்யாவிற்கு. அதனை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலானாள்.




HelloGuruPremaKosame.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top