என் காதல் தீ 06

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
தாமதத்திற்கு மன்னிக்கவும். சடங்குகள் பற்றி அவ்வளவாக தெரியாது எனக்கு. அதனைப் பற்றி தெரிந்தவரை எழுதியுள்ளேன். ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னித்துவிடவும். எங்கே பிழை செய்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டினால் திருத்த வசதியாக இருக்கும். லைக்ஸ் மட்டும் கமெண்ட்ஸ் இட்ட அனைவருக்கும் நன்றி!!! விரைவில் தனித் தனியாக அனைவருக்கும் பதிலளிக்கிறேன்...

அடுத்த எபி இதோ!


HelloGuruPremaKosame.jpg

“அண்ணீ…,” தன் முன் வந்து நின்ற அந்த பெண்ணைப் பார்த்து முயன்று சிரித்தாள் நிரல்யா. சிறிது நேரத்திற்கு முன்புதான் அவளுக்கு பூவைத்து திருமணத்தை உறுதிசெய்திருந்தார்கள். அதனை எதுவும் செய்து தடுக்க முடியாது பார்த்திருந்தாள் அவள். மனமோ, ஏதேனும் செய்துவிடேன் என்று கதறிக்கொண்டிருந்தது. நினைப்பதெல்லாம் நடக்க இதுவென்ன நாம் எழுதுவதா? அதற்கென்றே ஒருவன் இருக்கிறானே! இதுதான் நடக்குமென்று அவன் நினைத்துருக்க, மாற்றத்தான் முடியுமா?

தன் வயதை விட இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவராய் இருக்கலாம் என்று எதிரே நின்றிருந்தவரைப் பற்றி கணக்கிட்டாள் நிரல்யா. தன்னை கதிரின் தங்கை என்று அறிமுகப்படுத்திக்கொண்டவள் நிரல்யாவின் உடனமர்ந்து அளவளாவ ஆரம்பித்துவிட்டாள். (மன்னிக்கவும்! நிரல்யா கேட்கிறாளா இல்லையா என்று கூட பார்க்காமல் தன்னைப் பற்றியும் தன் ஆருயிர் அண்ணனைப் பற்றியும் புராணம் படித்தாள்!)

அபிராமி என்ற அவள் கூறியதிலிருந்து நிரல்யா அறிந்துகொண்டது, அவள் கதிரின் உடன்பிறந்தவள்; மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, தற்போது கோவையில் குடித்தனம் நடத்துகின்றாள்; ஒரு குழந்தைக்கு தாய். மற்றது எல்லாம் என் அண்ணன் இப்படி, என் அண்ணன் அப்படி என்பது தான். இவை எல்லாம் கேட்டுவிட்டு, ‘ஆண்டவா! எனக்கு இப்படி ஒரு நங்கையாவா? இவங்கள எப்படி சமாளிக்க?’ என மானசீகமாக தலையில் கை வைத்துவிட்டு அமர்ந்திருந்தாள் நிரல்யா. அதன்பின், அவள் எதுவும் கேட்காமல் ‘ம்ம்’ கொட்ட மட்டுமே செய்தாள். (தப்பு பண்ணிட்டியேமா, தப்பு பண்ணிட்டியே! பட்சி ஒரு இம்பார்ட்டன்ட் பாயின்ட் சொன்னத மிஸ் பண்ணிட்டியே!)

திருமணத்தை இரு வாரங்களில் வைக்க, அனைத்து வேலைகளும் மளமளவென்று நடந்தன. இவை எதிலும் விருப்பமற்று கலந்துகொண்டாள் மணப்பெண். கதிர் வழக்கம் போல காலேஜுக்கு சென்று வர, பூவைத்தவுடனே இவளை திருமணம் முடிந்தபின் தான் செல்லவேண்டும் என்றுவிட்டனர். அதில் அவளுக்கு ஒரு கடுப்பு. (இந்த சிச்சுவேஷனில் இருந்து கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆக நினைத்தா, அதுவும் போச்சா?)

முகுர்த்தத்திற்குத் தேவையான நகைகள் எடுக்க அவளை அழைத்தபோதும் செல்ல மறுத்துவிட்டாள். பின், அபிராமிதான் சென்று வந்தாள்.

*********

கதிர் நடப்பதெல்லாம் கனவா நனவா என்றே பிரித்தறிய முடியா நிலையில் இருந்தான். கிட்டாது என்று அவன் நினைத்த சொர்கத்தை தன் வாழ்நாள் முழுவதும் அருகில் இருந்து பார்த்துக்கொள்ளப் போகிறான். என்று அவளை இருவரது தாய்மார்களும் அவனிடம் ஒப்படைத்தார்களோ, அப்போதிருந்தே அவள் அவனது உயிரானவள் ஆனாள். தன்னை விட்டு அவள் வெளியூர் சென்றபோது அவன் அடைந்த வேதனை அவன் மட்டுமே அறிந்தது.

அதன்பின், ஒவ்வொரு முறை மாணிக்கம் அழைக்கும்பொழுதும் அவர் தன் தந்தையிடம் பேசி முடிக்கும் வரையும், அதன் பின்பும் வெகு நேரம் அந்த அடிக்காத தொலைபேசிக்கு காவல் காத்திருக்கிறான், தன்னவளின் குரலை கேட்கலாம் என்ற நட்பாசையில். ஆனால், அது நடந்ததே இல்லை.

சிறுவன் வாலிபனாக வளர, அவனுள் இருந்த காதலும் வளர்ந்தது. ஆனால், உலகம் என்று ஒன்று இருக்கிறதே! நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்துவிடும். அவ்வாறே, இவனுக்கும் ‘அடேய்… இது நடவாத ஒன்றடா!’ என்று அவன் தலையில் அடித்து சொல்லியது அவன் நண்பனின் காதலால்.

அங்கே பெரும்பாலும் சிறுவயதிலேயே இன்னார்க்கு இன்னாரென்று பரிசம் போட்டு விடுவதுண்டு. அதன்பின், உரிய வயது வந்ததும் திருமணம் செய்வது வாடிக்கை. அவ்வாறே, கதிரின் நண்பன் கணேஷுக்கும் நிச்சயித்திருந்தனர். பல வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது அவனுக்கு நிச்சயித்த பெண் வேறு ஒருவரை காதலிப்பது. அதனை அறிந்து கணேஷ் மனதொடிந்து போனான். அதிலிருந்து அவனை மீட்டெடுப்பதே மிகவும் கஷ்டமாகிப் போயிற்று. அன்றே முடிவு செய்திருந்தான் கதிர், தன் காதல் கைகூடும் வரம் இருந்தால் நிச்சயம் தன்னை சேரும், அதுவரை அதற்கு தீனி போட்டு வளர்க்கலாகாது என்று.

கதிரால் அதன்பின் ஓர்முகமாய் தன் படிப்பில் கவனம் செலுத்தி பட்டமும் பெற்றுவிட்டான். அவன் காதல் மட்டும் கவனிக்கப்படாமல் ஆழ்மனதில் உறக்கம் கொண்டிருந்தது. அது மேலெழும்பும் நாளும் வந்தது, நிரல்யா இந்தியா வரும் செய்தி கேட்டு.

அதற்கும் ஆயுள் குறைவு தான் என்பது அவள் வந்த நாளில் தெரிந்து போனது. நாகரிகத்தில் ஊறியவள் தனக்கு இணையாவாளா என்ற கேள்வி அவனுள் எழ, வழக்கம் போல அனைத்தையும் ஆண்டவனிடத்தில் விட்டுவிட்டான்.

அந்த ஆண்டவனும் செவி சாய்த்தான் போல இவன் காதல் தவத்திற்கு. மாணிக்கத்திற்கும் அவன் தந்தைக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இருவரும் ஒருமித்த முடிவாக நிரல்யாவை அவனுக்கு மணமுடிக்க முடிவெடுத்திருந்தனர். இவர்கள் இருவரும் இவ்வாறு நினைப்பர் என்பது அவனுக்கு தெரியுமாதலால் அது அவனுக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால், இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதுதான் அவன் நினையாதது.

அதன் காரணத்தை அறியவே அவன் மாணிக்கத்தை தொடர்பு கொண்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தையர் இருவரும் விரைந்து முடிக்க எண்ணுகின்றனர் என்பதை அறிந்தபோது காதல் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியுறுவதைக் காட்டிலும் அவரை நினைத்தே கவலை கொண்டான்.

எங்கே, தந்தைக்காகவே தன்னை மணமுடிக்க சம்மதித்திருப்பாளோ என்ற ஐயத்திலேயே அவன் நிரல்யாவை அன்று காண வந்தது. அவளுடன் பேசியபோது, அவ்வாறு இல்லை என்று அவனுக்கு புரிந்ததாலே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

என்னதான் அனைத்து வேலைகளையும் தானே முன்னின்று செய்தாலும், இதற்கு இடையில் மாணிக்கத்தின் மருத்துவ ரிப்போர்ட்களை தனக்கு தெரிந்த மருத்துவர்களிடம் காட்டி அவர்களின் ஆலோசனை பெறவும் அவன் தவறவில்லை. (மாணிக்கம் தனக்கு சிகிச்சை இங்கு தான் நடைபெற வேண்டும் என்று தீர்மானத்துடன் உரைத்துவிட்டார்.)

கதிரின் இந்த செயல்களால் மாணிக்கம் மேலும் அவனை நினைத்து பெருமை கொண்டார்.

*********

அன்று உப்பு மாற்றி முகுர்த்தப் புடவை எடுக்க வேண்டிய நாள். நிரல்யா எவ்வளவோ மறுத்தும் அன்று வந்தே ஆக வேண்டும் என்று அவளை அழைத்துவந்து விட்டனர்.

கோவிலில் உப்பு மாற்றும்பொழுது அருகில் இருந்த அபிராமியின் காதைக் கடித்து ‘இது எதற்கு?’ என்று நேரம் கடத்த அவள் கேட்க, ஒரு அணுகுண்டை தூக்கிப் போட்டாள் அபிராமி, இனி திருமணம் முடிந்து பந்தல் பிரிக்கும் வரை அசைவம் சாப்பிட முடியாதென.

பாவம் நிரல்யா! அசைவம் இல்லாது அவளுக்கு நாளே செல்லாது. இத்தனை நாட்களாய் இருந்த கவலையில் அதனை திரும்பி கூட பார்க்கவில்லை அவள். இன்றோ, நினைத்தாலும் தரமாட்டார்கள் எனத் தெரிந்து நொந்துபோனாள். யாருக்கும் தெரியாமல் சாப்பிட நினைத்தால், அவள் கண்முன்னே அவளை பெற்ற ஹிட்லர் வேறு வந்து நின்றார்.

இச்சடங்கை முடித்துவிட்டு நேரே அவர்கள் அனைவரும் சென்றது, கோவையின் மத்தியில் இருக்கும் போத்தீஸுக்கு. ஒரு தளம் முழுக்க திருமணச் சேலைகளுக்கு ஒதுக்கியிருக்க, பெண்கள் அனைவரும் ஒன்று கூடி அனைத்தையும் ஆராய்ந்து முடிக்கும்முன் கதிருக்கு ஆடை எடுத்துவிட்டு வந்துவிட்டனர்.

கதிரே நிரல்யாவின் ஆடைகளை தேர்வு செய்கிறேன் என்று கூற, அனைவரும் தங்களுக்கு எடுக்கவென்று விலகிக்கொண்டனர். அதன்பின், ஒருமணி நேரத்தில் நிரல்யாவிற்கான அனைத்து உடைகளும் தேர்வுசெய்யப்பட்டிருந்தன அவனால். வேண்டா வெறுப்பாக அவன் தேர்வு செய்தவற்றை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவளுக்கு, அனைத்தையும் ஆராய்ந்து, பிடித்ததை தனியே வைத்து அவற்றில் இருந்து அவன் தெரிவு செய்து எடுத்த விதத்தைப் பார்த்தவளுக்கு அவனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

மதியமாகிட, உணவு உண்டுவிட்டே செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். கதிர் அபிராமியிடம் ஏதோ கூற, அவள் தன் தந்தையிடம் அதனை கொண்டு செல்ல, அவன் நினைத்தபடியே கதிருடன் நிரல்யாவை தனியாக அனுப்பி வைத்தனர் உணவருந்த.

அவனுடன் இன்னும் அதிக நேரம் செலவிட வேண்டிய தன் விதியை நொந்துவந்தவளின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது அந்த பிரசித்திபெற்ற அசைவ உணவகத்தைக் கண்டு. அவள் விருப்பப்படி ஆர்டரிட சொல்லிவிட்டு, திருமணம் முடியும் வரை மட்டும் அசைவ உணவுகளை தவிர்க்குமாறு அதற்கான காரணத்தோடு கூறினான். சரியென்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தவளுக்கு கலவையான உணர்வுகள் ஏற்பட்டது. நம்முடைய சிறு விருப்பங்களையும் யாரேனும் கவனித்து அதனை நிறைவேற்றினால் வரும் சந்தோசத்தை ரசித்துக்கொண்டிருந்த அவள் மனத்தால் கதிரின் காதல் பார்வைகளை ரசிக்க முடியவில்லை.

அதன்பின், சிக்கன் பிரியாணி வாங்கிக்கொடுத்த புண்ணியவானின் கோரிக்கையால் ஒரு வாரத்திற்கும் மேலாக வாயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள் நிரல்யா. (நான் எல்லாம் அந்த ஒரு வாரத்துல தான் நல்லா வெளுத்து கட்டுவேன்!)
**********
 
Last edited:

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஊரில் இருந்த அந்த பெரிய கோவிலிலேயே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிரல்யாவிற்கு தன் தோழிகள் இருவரைத் தவிர்த்து யாரையும் அழைக்க விருப்பமில்லை. அவர்களை அழைக்கும் முன்பும் பல பத்திரங்கள் சொல்லித் தான் அழைத்திருந்தாள். கதிரும் திருமணம் நடைபெறும் சூழலில் யாரையும் அழைக்கவில்லை. பொதுவாக ஒரு விருந்து வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவனும் விட்டுவிட்டான்.

திருமண நாள் கதிருக்கும் நிரல்யாவிற்கும் இருவேறு விதமாய் விடிந்தது. கதிரோ, இன்றோடு தன் வாழ்வில் பங்குபெற ஒருத்தி வரப்போகிறாள் என்ற சந்தோசத்தில் இருக்க, நிரல்யாவோ, பிரம்மமுகுர்த்தத்தில் திருமணத்தை ஏன் வைத்தார்கள் என்று எண்ணிக்கொண்டே தூக்க கலக்கத்தில் சொன்னபடி செய்தாள்.

பாவம், அவளும் தான் என்ன செய்வாள்? முதல்நாள் நிச்சயம் முடிந்து உறங்கும்பொழுது மணி நள்ளிரவைத் தாண்டிவிட்டது. சில நாட்களாகவே நித்திரைக்கு பஞ்சமாகிப் போயிற்று அவளிடம்.

நடக்கும் ஒவ்வொரு சடங்கையும் கதிர் மகிழ்ச்சியுடன் பங்குபெற்று செய்துகொண்டிருக்க, அவன் பாதியாகவேண்டியவளோ, அவன்தன் பதியானதும் ஓடிச் சென்று நித்திரை கொள்ள நினைத்திருந்தாள்.

மணமேடையை மணமகளாய் வந்தடைந்த நிரல்யாவைக் கண்டு கதிரின் இதயம் தாளம் தப்பி பின் துடித்தது. இதுவரை புடவையில் கண்டிராதவளை இன்று தான் தேர்ந்தெடுத்த அந்த சிகப்பு நிறத்தில் தங்க சரிகையிட்ட சேலையில் காணக் காண தெகிட்டவில்லை அவனுக்கு. நிரல்யாவோ, தன்னை நேசத்துடன் பார்த்துக்கொண்டிருப்பவனையோ, இல்லை, தன்னெதிரே ஆனந்தக் கண்ணீர் கரை தட்ட அமர்ந்திருந்த தந்தை என யாரையுமே கண்டுகொள்ளவில்லை.

மந்திரங்கள் ஓத, மங்கலநாணை நிரல்யாவின் கழுத்தில் சூடினான் கதிர். அந்நிமிடம், அவன் விருப்பப்பட்டது தான் எனினும், அவன் கையும் மனமும் நடுங்கியது நிஜம். நிரல்யாவிற்குமே ஒரு நிமிடம் அந்த தூக்கத்திலும் துக்கத்திலும் உடல் சிலிர்த்து அடங்கியது.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்நிமிடத்திலிருந்து வாழ்க்கை மாறும் தான். நாம் நம் வேரையே வேறிடத்தில் நட வேண்டுமென்றால், அந்த வேர் பட்டுப்போகாமல் காக்கும் பொறுப்பு பாதி வந்து சேர்ந்து விடுகிறது அவர்களுக்கும். இதுநாள் வரை தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து செயல்பட்டவனுக்கு இனி ஒவ்வொரு அடியும் இருவர் நலத்தையும் யோசித்தே எடுத்து வைக்க வேண்டியதிருக்கும். இருவர் மட்டுமல்ல, இரு குடும்பங்களுக்கும் நல்லதொரு உறவை காலம் முழுமைக்கும் நீட்டித்து வைக்கும் பொறுப்பும் வந்துவிட்டதே! அங்கே ஒரு வாலிபன் முதிர்ச்சியடைந்தான். வண்டியின் இரு சக்கரமும் சரியாக இருந்தால் தானே அது சாலையில் நன்றாக ஓடும்? இவை யாவையும் கணவன் மட்டும் நினைத்தால் போதுமா? (ரொம்ப ஃபீலிங்க்ஸா போச்சோ?)

அதன்பின் தான் காமெடியே நடந்தது. அதுவரை கண்ணைக் கசக்கி தன்னை தூங்காமல் காத்தவளோடு சேர்ந்து புரோகிதரும் அதை செய், இதை செய் என்று சொல்லி விழிப்புடன் வைத்திருந்தார். ஆனால், அதன்பின் வந்த சடங்கிற்கோ, அவள் தேவைப் படவில்லை. மணமகனான கதிரும் அவளுக்கு அண்ணன் முறையான ஒருவரும் மேடையில் கைகோர்த்து ரொமான்ஸ் பாட, (கைக்கோர்வை என்று அழைக்கப்படும் சடங்கானது கொங்கு நாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ளது) நம் பிள்ளை அங்கேயே தூங்கிவிழுந்து விட்டாள். அவள் கீழே விழாது காத்த பெருமை அபிராமியையே சேரும்! (பிடிக்கல, பிடிக்கலன்னு கண்டுக்க கூட இல்ல போலயே! லைஃப் சேஞ்சிங் மொமெண்ட்-மா! இப்படியா தூங்கி விழுவ? உனக்காக ரீ-டெலிகாஸ்ட் கூட செய்ய முடியாதே!)

இதனைக் கண்ட கதிர், அதன்பின் வந்த சடங்குகள் யாவற்றையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு அவள் நன்கு தூங்க ஏற்பாடு செய்தான்.

(மொத்தத்துல பிள்ள கண்ணாலத்துல காமெடி பண்ணிருக்கு! சத்தியமா மிடில! பட் கதிர், அவளை நல்லா தூங்க விட்ட பாத்தியா, உன் அந்த பாசம் எனக்கு பிடிச்சிருக்கு!)



சிறு நடை தூரம் உன்னோடு நான் வந்தேன்

சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்

அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய்

அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன்

ஹோ… எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே

ஏன் இந்த மௌனம் என் கண்மணியே

உன் விரலோடு விரல் கோர்த்து நான் வரவேண்டும் துணையே



ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை

என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை

நான் உனதானேன் என எப்படி சொல்வேன்

என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன்



ஹோ… எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே

ஏன் இந்த மௌனம் என் கண்மணியே

உன் விரலோடு விரல் கோர்த்து நான் வரவேண்டும் துணையே



துணை வருவானா????


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top