என் இதய விழி நீயே -episode 10

achuma

Active Member
#1
hi rendu episode ah potutaen due to space suffiencey

என் இதய விழி நீயே

"அபி மா, நாளைக்கு நம்ம நேர்லயே போய் சொல்லிட்டு வரலாம் டா சரியா , என்று சிவநேசன் மிகவும் பொறுமையாக அபியிடம் கூறினார்...

"மாமா! நான் பெரியப்பா பெரியம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும், அங்கு என்னோட தாங்ஸ், அப்புறம் அதை நீங்க போட்ட லெட்டர்ஸ் , எல்லாம் இருக்கு..."

"அங்க என் பிரண்ட்ஸ்க்கு நடந்த மேரேஜ் சொல்லணும் ..."

"ரெண்டு நாள் தான் பெரியப்பவை பார்த்துக்க அங்க ஒரு அக்கா விடம் சொல்லி இருக்கேன், இப்போ நான் நேர்ல பொய் அதுக்கு ஏற்பாடு பண்ணனும்.."..

"நாம போய் இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்துடலாம் , என்று பாவமாக, அவளின் தன்னிலை விளக்கம் கொடுத்தாள் ..."

ஆதிக்குமே, அப்பாடா , என்று இருந்தது....

இனி அபி எப்பொழுதும் நம்முடன் தான் , ஒரு அழகான பொம்மை சிறுவனின் கையில் இருந்து பறிக்க பட்டது போன்ற நிலையில் இதுவரை இருந்தான் ஆதி...

"அபி சொல்வது போல் நாம் எல்லாரும் நாளைக்கு நேர்ல போய் அபி பெரியப்பா ராமமூர்த்திக்கு சொல்லணும்."

நாளை ஸ்ரீ -அர்ஜுன் ,ஆதி- அபி , மற்றும் சிவநேசன் செல்வதாக இருந்தது...
திவ்யா தானும் வருவதாக கூறியதால் அனைவரும் சரி என்றனர்...


சந்தீப்பை ஹாஸ்பிடல் பார்த்துக்கொள்வதாக, ஆதி கூறினான் ...


சந்தீப் அபியின் அருகில் சென்று, "அபி இந்த அண்ணன் , உனக்கு இருக்கான் , இவன பார்த்து நீ பயப்பட கூடாது, எப்பவுமே பொண்டாட்டிய பார்த்து புருஷன் தான் பயப்படணும் ..."

" நாளைக்கு வரலாறு உன்ன திட்ட கூடாது பாரு , அதுக்கு சொல்றேன் ..."

"உனக்கு ஸ்ரீ அண்ணி , திவ்யா இருக்காங்க , அவங்க கிட்ட ட்ரைனிங் எடுத்துக்க , என்று நிலைமை சகஜம் ஆக்கும் பொருட்டு , சந்தீப் கிண்டல் அடித்தான் ..."

சந்தீப்பின் கலாட்டாவில் அங்கு நிலைமை சற்று சகஜம் ஆகியது ...

ஸ்ரீ , ஆதியின் அருகில் சென்று, "டேய்! நீ இப்டி கத்திட்டே இருந்தனா , அவ என் கைய பிடிக்காம என்ன பண்ணுவா , அவ கிட்ட, முதல பொறுமையா பேசு , அவ நிலைமையும் புரிந்துக்கொள்ள , என்று ஆதியிடம் அறிவுரை கூறினாள் ...

ஆதியும் "சரி!" என்றான். இவை அனைத்தும் அபி அடுத்து ஆதியிடம் அடுத்து சொதப்பாமல் இருக்கும் வரை தான் ...

ஆதிக்கும் , அபியுடன் நன்றாக பழக வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் அபியின் ஒதுக்கம், அவனை கோவம் செய்யக் கொள்கிறது ...

ஆதியும் இந்த நேரத்தில் அவனின் காதல் கூற விரும்ப வில்லை , ஏதோ அபியை ஒரு வித சுயநலத்தில் திருமணம் செய்தது போன்று ஆகும் என்றே அவனின் காதலை மறைத்து வைத்தான் ...

ஆதிக்கும் ஒரு வித குற்றவுணர்ச்சி , ஆகையால் அவனின் காதலை அபியிடம் தற்காலிகமாக மறைத்து வைத்தான் ...

ஆதியும் அவனின் கோவத்தினை ஆழ்ந்த மூச்சு எடுத்து , பிறகு அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்...

"அபி!" என்று அபியை அழைத்தான் ...

ஸ்ரீ, திவ்யா இரண்டு பேரும் , அபியை ஆதியின் அருகில் சென்று அமர வைத்து , "நாங்க பாலும் பழமும், எடுத்துட்டு வரோம் , நீங்க இங்க இருங்க , " என்று இருவருக்கும் தனிமை குடுத்து சமையல் அறை சென்றனர் ...

அர்ஜுன் மற்றும் சந்தீப்பிடம் அங்கு மண்டபத்தில் , சுந்தரம் குடும்பத்தினருக்கு தேவையானதை ஏற்பாடு செய்யுமாறு சிவநேசன் கூறினார் ...

அவரின் அறையில் ஓய்வு எடுக்க சென்றார் ...


அவர் ஓய்வு எடுக்க சென்றதும், சந்தீப், அபியின் அருகில் சென்று

"தங்கச்சி ! , உனக்கு அண்ணன் நான் இருக்கேன், இவனால ஏதாவது பிரச்சனை வந்தா , எனக்கு ஒரு போன் போடு, மா , ஏன் நம்பர் *************இது தான், அவன நான் பார்த்துக்கிறேன் , என்று ஆதியின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் , அபியிடம் வேண்டும் என்றே ஏதோ ஏதோ உளறி கொண்டிருந்தான், ... "

நண்பன் அவனிடம் அவனின் காதல் பற்றி ஏதும் கூறவில்லையே என்று சந்தீப் ஆதியின் மீது இருக்கும் கோவத்தினை இவ்வாறு பழி தீர்த்துக்கொண்டான், ஆதியும் சந்தீப் பற்றி நன்றாகவே தெரியும் ஆதலால், அவனின் பொறுமையும் சிறிது சிறிதாக பறந்து கொண்டு இருக்கிறது ...

ஆதி "திவ்யா!"என்று ஒரு முறை அழைத்ததும், அவ்விடம் வந்து சேர்ந்தாள் திவ்யா ...

திவ்யாவும் , சந்தீப் அங்கு நிற்பதை கண்டு , என்ன நடந்து இருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது...

"ஹே லூசா டா நீ !",அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா தடவை ஸ்பென்ட் பண்ணட்டும்னு பார்த்தா , நீ நடுவுல கரடி மாதிரி வர , போ , என்ன வேலையோ அத பாரு " என்று சந்தீப்பை நன்றாக திட்டி விட்டே அனுப்பி வைத்தாள் ...

"அபி! அவன் நிலைமையே திண்டாட்டம், இதுல உன்ன அவன் பார்த்து கிழிப்பான்," என்று அர்ஜுனும் அவனின் பங்கிற்கு , சந்தீப்பினை ஓட்டினான் ...

ஆதியும் அவன் பங்கிற்கு சந்தீப்பினை கலாய்த்து அனுப்பினான் ...

அபிக்கும், தினேஷிடம் கிடைக்காத சகோதர பாசம் சந்தீப்பிடம் கிடைத்ததில் சந்தீப் மற்றும் திவ்யாவுடன், நன்றாக பழகினாள் ....

அவர்கள் சென்றதும், ஆதி , "இங்க என்ன பாரு அபி!" என்றான்...
அபியும் ஆதி குரலில், அவன் புறம் திரும்பி அமர்ந்தாள், ஆனால் தரையை ஏதோ அளவு எடுப்பது போல் , ஆதியை பார்க்காமல் தரையை பார்த்தாள் ...

ஆதி, அபியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து,

"ஹே! இங்க பாரு டீ , உன்ன ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன் , என்ன ஏதோ புது ஆளா பார்க்கிற மாதிரி பார்க்கிற ," என்று அவள் விலகி செல்லும் நேரம், அவள் கைகளை அழுத்தமாக பிடித்து அமர்த்தி கொண்டே கூறினான்...

"என்னது?"
"டீ"யா என்பது போன்று அபி உடனே நிமிர்ந்து ஆதியை முறைப்பதற்கு முயற்சி செய்தாள் , ஆனால் ஆதியின் கைகளின் அழுத்தம் அவளின் கைகளுக்கு வலியை கொடுத்தது ...
ஏதும் கூற முடியாமல் , அமைதியாக அவனிடம் இருந்த அவள் கைகளை எடுக்க முயற்சி செய்தாள் ...

நான் எப்பவுமே உனக்கு தெரிந்த அதே ஆதி தான், புரிஞ்சிதா ,
என்னோட நார்மலா இருக்க பாரு ...

"அப்போ வீட பார்க்கும் போது உனக்கு ஏதோ கேட்கணும் தோணிட்டே இருந்தது தான ?"
"உனக்கு இனி எது ஒன்னும் கேட்கணும்னும் என்கிட்ட கேளு..."
இனி நமக்கு மீடியேடேர் எதுக்கு தேவ இல்லாம , எது நாளும் நம்ம பேசி தீத்துக்கணும் , புரிஞ்சிதா...


என்னோட படிப்பு முடிஞ்சதும் அங்கேயே நான் ரெண்டு வர்ஷம் வேல பார்த்தேன், அந்த காசுல, அம்மா பர்த்டே க்கு ஒரு பரிசா , இந்த இடம் வாங்கினேன் , அப்புறம் வீடு கட்டிமுடிஞ்சதும் , வீட்டுக்கு பூஜை செய்ற அன்று காலையில தான் அம்மாக்கு உடம்பு முடியமா , மயக்கம் போடு விழுந்தாங்க

அப்புறம் தான் அவங்க கேன்சரோட லாஸ்ட் ஸ்டேஜ்ல, இருக்குறாங்கனு தெரிய வந்தது...
எங்க எல்லாருக்கும் இனி எப்படி அவங்கள இதுல இருந்து save பண்ண முடியும்னு தெரியாம இருந்தோம் ...

வந்த உறவினர் எல்லாரும் இந்த வீட்டோட ராசி சரி இல்ல அது இதுனு வேற என்னவோ, இந்த வீட்டை பற்றியே குறைய சொல்லிட்டு இருந்தாங்க...ஆனா எனக்காக அம்மா அவங்க இங்கயே இருந்தாங்க ...

நான் சரியாய் ஹாஸ்பிடல் கூட போகாம இங்க அம்மா கூடயே இருந்தேன் .

இந்த வீட்ல தான் அவங்க உயிர் போச்சு...

எனக்கு பழய வீட்டுக்கு போக பிடிக்கல , ஏதோ அம்மா கடைசியா இந்த வீட்ல இருந்ததால எனக்கு அவங்க இங்க என்னோட இருக்குற மாதிரி ஒரு பீல்...

எனக்காக அப்பாவும் இங்க இருக்காரு...

ஆரவுக்கு அப்போ 1 வயசு, குழந்தைக்கு இந்த சூழல் வேண்டான்னு அப்பா , அண்ணன் , அண்ணி கு ழந்தை மட்டும் பழைய வீட்ல இருக்க சொல்லிட்டாரு ...

எனக்கு அம்மா அனுபவிக்காத வீட்டுக்கு எந்த பொருளு ம் வாங்காம

அப்டியே இருக்கட்டும்னு விட்டுட்டேன் ...

அதான் நானும், அப்பாவும் யூஸ் பண்ற தேவையான திங்ஸ் இருக்கும், அவ்வளவு தான் .

அண்ணி கூட வீடு சுத்தம் செய்ய செர்வண்ட்ஸ் போட சொன்னாங்க , எனக்கு அம்மாவே இந்த வீட்ல இருக்கிறதா ஒரு உணர்வு, அதான் வீடு சுத்தம் செய்ற வேளைக்கு கூட நான் யாரையும் விடாம நானே எல்லா வேலையும் பார்த்துக்குவேன் ...

அண்ணி இங்க எதுவும் எங்களை குக் செய்ய விடுறது இல்ல, நெக்ஸ்ட் தெருல தான் நம்ம பழைய வீடு இருக்கு, நாம வேற வழியா இப்போ வந்ததால உன்னால பார்க்க முடில...

எனக்கு உன்ன இங்க தான் கூட்டிட்டு வரணும்னு இருந்தது, அதான் இங்க வந்தோம்....

இப்போ வீட்டை பற்றிய கேள்விக்கு விளக்கம் போதுமா?" என்று அபியின் கைகளை இருக்க பற்றிய படியே கூறி முடித்தான்... எங்கு கையை விட்டாள் , அபி சென்று விடுவாளோ... என்று ...

"அபி மனதில் நினைத்ததை பற்றி எப்படி ஆதிக்கு தெரிந்தது என்று?"........
அவள் சிந்தித்து இருந்தால் கூட அவளிற்கு ஏதேனும் ஆதியை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்து இருக்கும் ...

அபியின் சிந்தனை முழுதும் ஆதியிடம் இருந்து கைகளை உருவதிலே இருந்தது ...

ஆதியும் அவனின் கடந்த கால வருத்தங்கள் அனைத்தும் கூறாமல் அபியின் சந்தேகம் தீரும் அளவிற்கு சில விஷயங்கள் கூறினான் ...

அதுவே அவனின் மன பாரம் சிறிது நீங்கினால் போன்று இருந்தது ...

அதன் பிறகு, அபியின் கைகளின் மென்மையில் அவன் கைகளின் அழுத்தத்தினை குறைத்து, அவளின் பூ போன்ற விரல்களை மிருதுவாக வருடினான் ....

அவன் கைகளின் அழுத்தத்தின் வலிகளை கூட அபியால் பொறுத்து கொள்ள முடிந்தது, ஆனால் ஆதியின் அபியின் மீதான நெருக்கம் அபிக்கு மிகவும் அவஸ்த்தையை தந்தது ...அதற்குள் ஸ்ரீ மற்றும் திவ்யா புது ஜோடிக்கு பாலும் பழமும் எடுத்து வந்து கொண்டிருந்தனர்...

அவர்களை கண்டதும், ஆதியிடம் இருந்து கைகளை , உருவி கொண்டாள் ...

ஆதி மிகவும் அழுத்தம் இன்றி பிடித்து கொண்டதால், அவனிடம் இருந்து கைகளை அபியால் எடுக்க முடிந்தது, அவள் கைகளின் மேன்மை அவனிடம் இருந்து , போன காரணத்தினால் , அபியை ஆதி முறைத்தான் ...

அபி "அக்கா.................. திவ்யா ," என்று திக்கி திணறி கூறினாள் ...

ஆதியும் அவர்களை கண்டு அமைதியாக அமர்ந்தான்...

இந்தா ஆதி, நீ இதை கொஞ்சம் குடிச்சுட்டு அபிக்கு குடு, என்று பாலினை அவன் கையில் குடுத்தாள் ஸ்ரீ ...

ஆதி ஸ்ரீயிடம் இருந்து பால் வாங்கி, முதலில் அபியே பருகட்டும் என்று அவளிடம் கொடுத்தான் ...

ஏனெனில் , அபி இவன் குடித்த பிறகு குடிப்பாளோ மாட்டாளோ என்று, அபியையே முதலில் பால் குடிக்க கூறினான்...

அபி முதலில் தயங்கினாலும் ஸ்ரீ கூறியதால் , குடித்து ஆதியிடம் மீதியை குடுத்தாள் ...
ஆதியும் அதனை வாங்கி கொண்டான்...

"சரி ஆதி! நான் வீட்டுக்கு போன் போட்டு, சாப்பாடு செய்து கொண்டு வர செர்வண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன், நீங்க போய் ரெஸ்ட் எடுங்க," என்று கூறினாள் ஸ்ரீ....

ஸ்ரீயும், திவ்யாவும், அங்குள்ள ஒரு அறையில் குழந்தையுடன் ஓய்வு எடுக்க சென்றனர், இருவருக்கும் தனிமை குடுத்து ...

ஆனால் அபிக்கு அவள் கனவினிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஆகிற்று ...

பிறகு அபி ஆதியினிடம் ஏதோ கூற முயற்சி செய்வது கண்டு ,ஆதி என்ன என்று கேட்டதற்கு, "நான் ஸ்ரீ அக்கா கூட போகட்டா ?" என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டாள் ...


ஆதியும், அபியின் முக பாவனையில், சரி என்று அவளை அனுப்பி வைத்தான் ...

அபியும் அவர்கள் சென்ற அறைக்குள் சென்று அமர்ந்தாள் ...

இருவரும் அங்கு தரையில் அமர்ந்து கொண்டனர்.

அபியை கண்டதும் இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது ...

அபி அவ்விருவரையும் முறைத்து வைத்தாள் ...

"அபி ! உனக்கு ஆமா சாமி போட்ட ஆதி எங்க போய்ட்டான் என்று ஸ்ரீ அவளிடம் கிண்டல் அடித்து கொண்டாள் ."

"அண்ணி ! அவளே அவன்கிட்ட இருந்து தப்பிச்சி வந்து இருக்கா , பாவம் இதுல நீங்க வேற அவள இப்டி கலாய்க்கிறீங்களே , "

என்று அபியை காப்பாற்றுவது போல், அவள் பங்கிற்கு அபியை ஓட்டினாள் திவ்யா...

"உங்களுக்கு என்ன பார்த்தா கிண்டலா தெரியுதா"?

"அந்த நெட்ட கொக்கு என்ன அப்படி திட்டுறான் , நீங்க என்ன அவன் கிட்ட இப்படியா கோத்து விட்டு வருவீங்க," என்று அவர்களிடம் பதிலுக்கு சண்டைக்கு நின்றாள் , அபி ...


விளையாட்டில் சிறு வயதில் சண்டைக்கு நின்று, அர்ஜுனையும், ஸ்ரீயையும், அவள் உதவிக்கு அழைக்கும் ஆபியாக கேட்டாள் ஸ்ரீயிடம் ...


"இது புருஷன் பொண்டாட்டி உறவு மேடம் , இதுல நாங்க நடுவுல வர கூடாது , அபி ",
என்று ஸ்ரீ அபியிடம் அவளின் கேள்விக்கு விடை அளித்தாள் ...

அந்த வழியாக படிக்கட்டு செல்வதற்கு வந்த ஆதியின் காதில் அபியின் வார்த்தை நன்றாக விழுந்து வைத்தது...
இனி?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement