என் இதய விழி நீயே 16 2

Advertisement

achuma

Well-Known Member
hi adutha epi potutaen pls read n give comments
how r u all




லீலாவிற்கு எந்த ஒரு சத்தமும் கேட்காமல் நாடகமே உலகம் என்று நாடகத்தில் மூழ்கி விட்டார்.
அனு வீட்டினுள் வந்து , அபியின் வருகை கூறியதற்கு , இப்போவே வந்துட்டாளா , அந்த துணிய எடுத்து துவைத்து போட சொல்லு , அடுத்து மதியம் சமையல் பார்க்க சொல்லு , என்று அடுத்து அடுத்து கட்டளை பிறப்பித்தார் , அனுவிடம் என்ன, ஏது என்றே கேளாமல் , கண்கள் நாடகத்தில் இருந்தது ...

அனுவிற்கு கோவமே அன்னையின் செயலில் , இவை அனைத்தும் கேட்டு கொண்டே வீட்டினுள் நுழைந்தனர் அனைவரும், லீலாவின் பேச்சினிலே அபியின் நிலைமை இவ்வீட்டில் என்னவென்று அனைவருக்கும் தெளிவாக விளங்கியது ...
ஆதிக்கு கோவமும் வருத்தமும் ஒரு சேர வந்தது , அபியின் நிலை நினைத்து ...
இருந்தும், அபியின் கைகளில் அழுத்தம் கொடுத்து இன்னும் தன்னுள் அபியை தோளோடு சேர்த்து அனைத்து ஒன்றாக நடந்து லீலாவின் முன் சென்று நின்றான், தொலைக்காட்சியை மறைப்பது போன்று ...
அதன் பிறகே லீலாவை சுற்றி பூரணி குடும்பம் அங்கு நிற்பது கண்ணுக்கு தெரிந்தது ...
புதிதாக வந்து இருக்கும் திவ்யா யார் என்றும், கல்யாணம் முடிந்து அங்கு இல்லாமல் இங்கு எதற்கு வந்தார் என்றும் லீலா அவராகவே குழப்பத்தில் இருந்தார் ...
அவரின் குழப்பம் அறிந்து , ஆதி, அபியின் வலது பக்க தோளின் மீது அவனின் கை மிக அழுத்தமாக வைத்து , இன்னும் நெருக்கத்தில் நிற்க வைத்தான் ...
இந்த ஒரு செயல் லீலாவிற்கு மிகவும் தெளிவாக புரிந்தது ...
அபியை ஆழ்ந்து ஒரு முறை பார்த்த பின்பு அவளின் கழுத்தினில் உள்ள தாலி சரடு அனைத்தும் விளக்கியது ...


"பெரியம்மா" , என்று அபி அழைத்ததும், "உனக்கு எவ்வளவு தைரியம் ?"
"தேவி வாழந்த வரை சந்தோஷமா வாழந்த, எல்லா இடத்திலும் அவளுக்கு தான் மதிப்பு. என்ன யாரும் பெருசா கண்டுக்கல ..."
அவ போனதும், என்னோட கோவம் எல்லாம், உன்ன கூடவே இந்த வீட்டுல இருக்க வச்சி பழி தீர்த்துக்கலாம்னு பார்த்தேன்.
உனக்கு கல்யாணம் வயசு வரும்போது கூட உன் உடம்புல பிரச்சனைனு, ஒரு கதைய அக்கம் பக்கம், பரப்பி விட்டுட்டு, கடைசி வரை உனக்கு க ல்யாணம் பண்ணாம , ஒரு வேல காரியா உன்ன எனக்கு சேவகம் பண்ண வெச்சிடுலாம்னு பார்த்த , இப்டி பெரிய இடமா பார்த்து கல்யாணம் பன்னிட்டு வந்து இருப்ப ...
ஏண்டி , எந்த காதல் கன்றாவினு , சுத்த போறியோனு , உன்ன எப்படி அடக்கி எனக்கு பயந்த மாதிரி மிரட்டி இருக்கேன் ...
உன் ஒரு பிரெண்ட்ஸ் வீட்டுக்குள்ள விட்டு இருப்பானா ...
உங்கிட்ட புக் வாங்க வந்த பையன் ஒரு முறை வந்ததுக்கு அவனை திட்டி அனுப்பிட்டு , உன் காலுல சூட இழுத்தனே , எதுக்கு, இந்த மாதிரி எந்த காதலும் உன் மனசுல வர கூடாதுனு தான ...
இது அனைத்தும் கேட்ட பிறகு, அங்குள்ள அனைவர்க்கும், லீலாவை கொல்லும் வெறியே வந்தது...
ஆதிக்கு சொல்லவே வேண்டாம் ...
ஆனாலும் அமைதியாக இருக்கும்மாறு சிவநேசன் ஆதியை அடக்கினார் ...
இனி லீலாவின் மனதில் இருக்கும் அணைத்து கெட்ட எண்ணங்களும் வெளியே வரட்டும் என்று ...

அனுவிற்கே அவளின் அம்மாவின் குணம் சிறு அதிர்ச்சியாய் குடுத்தது ...
அறையில் இருந்த ராமமூர்த்திக்கு அவரின் ஒன்றும் செய்ய முடியாத நிலை நினைத்து, கண்களில் இருந்து கண்ணீர் நின்றபாடில்லை ...
திவ்யா அபியை நினைத்து தேம்பி அழுதுகொண்டிருந்தாள் ...
அர்ஜுனிற்கு இது அனைத்தும் அபி எதற்கு மறைத்தாள் , என்றே முழு ஆத்திரம் ...
இவ்விடயம் வெளியே யாருக்கேனும் தெரிந்தாள் , அவளின் பெரியப்பா உயிர்க்கு ஆபத்து என்று லீலா மிரட்டியதே காரணம் என்று அபியல் எவ்வாறு கூற முடியும் ...

அபி ஆதியின் கை அணைப்பில் பயத்துடனே நின்று கொண்டிருந்தாள் ...


சிவநேசனிற்கு நடந்ததை பற்றி கூறுவதற்கான வாய்ப்பே லீலா கொடுக்கவில்லை.
"அது எப்படி வீட்டுக்கு தெரியாம எப்படி எப்படியோ ஓடி போய் கல்யாணம் பண்றது எல்லாம் கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இப்டி ஒரு வழி நான் கேள்வி பட்டது இல்லை" ...
"இதுல கேவலம் என்னனா , குடும்பமே இதுக்கு உதவி வேற , அசிங்கமா இல்ல , யோவ் நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன் . ஹ்ம்ம்!" , என்று வரை முறை இன்றி லீலா பேச அங்கு அனைவரும் அதிர்ந்து விட்டனர் ...
அர்ஜுன் மற்றும் ஆதி கோவத்தில் பொங்கி எங்கு ஒரு பெண்ணை அடித்து விடுவோமோ என்று அ வர்களின் கோவத்தினை கட்டுப்படுத்தும் வழி தெரியாது இருந்தனர்...
சிவநேசன் மிகவும் தலை இறக்கமாக கூனி குறுகி நின்றார்.
ஸ்ரீ அர்ஜுனை கட்டுப்படுத்தி அவனின் கைகளில் அழுத்தம் குடுத்து அர்ஜுனின் கோவத்தினை அடக்கி நிறுத்தினாள் ...
ஆனால் ஆதி லீலாவின் மீதான கோவத்தினை ,அங்குள்ள தொலைக்காட்சியை ஓங்கி தட்டி விட்டான் ...
அது கீழே பட்டு உயிரை விட்டது ...
அதுவரை ஏனோ தானோ என்று கத்திக்கொண்டிருந்த லீலாவின் வாய் தன்னால் அடங்கியது ...
அப்பொழுது தான் ஆதியின் முகத்தினை நிமிர்ந்து பார்த்த லீலா அவன் கண்களில் கோவத்தினை கண்டு அச்சம் கொண்டாள் ...

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா," என்று அவளின் முன்பு கைகள் நீட்டி எச்சரித்தான் ஆதி ...
இனி எந்த விளக்கமும் இவரிடம் கூறுவதற்கு இல்லை , என்ற முடிவுடன்," ஆமா நாங்க காதலிச்சோம் , அதற்கு இப்போ என்ன , உன்னால என்ன பண்ண முடியும் என்று மரியாதை இன்றி ஒருமையில் பேசினான் ஆதி ... நீ அபியை பார்த்து கொள்ளும் லட்சணம் இப்போதான் தெரிஞ்சிது , இல்லனா அப்போவே இவள என்னுடன் அழைத்து சென்று இருபேன் , என்று கூறினான் ...

"நீ இத்திருமணத்துக்கு ஒற்றுக்க மாட்டேன் தெரியும் , அதான் இப்டி ஒரு பிளான் , என்ன செய்ய முடியும் உன்னால இப்போ ...
என்னோட அப்பா எவ்ளோ பெரிய மனிதனு உனக்கு தெரியுமா , அவரை இன்னிக்கி தலை குனிய வச்சிட்ட இல்ல , இங்க வந்ததுக்கு பிறகு தான் அபிய நீ நடத்துற விதம் எனக்கு புரியுது ...
இதுக்கே உன்ன உள்ள தள்ளனும் ..."
"அநியாயமா , ஒரு பொண்ணுக்கு கொடுமை நடக்க விட்டுட்டேன் எனக்கு எப்டியோ இருக்கு" ...
"ஆதி!" , என்று அவனின் தந்தை அழைத்ததற்கு , "அப்பா, இவங்களுக்கு எல்லாம் நீங்க அவ்ளோ மரியாதை குடுத்து எல்லாம் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை" ..

"ஆமா , எங்க உன் பெரியப்பா என்று அபியிடம் கேட்டு , அந்த அறைக்கு சென்றனர் , மூவரும்...
கமலா அனைத்தும் ஒரு பக்கம் அதிர்ச்ச்சியுடனும், அபிக்கு கிடைத்த வாழ்க்கை நினைத்து மகிழிச்சியுடன் , கேட்டுக்கொண்டே ராமமூர்த்தியை சாய்வாக அமர வைத்துக்கொண்டிருந்தாள் ...
அதற்குள் ஆதி அவ்விடம் வந்து அவரை சாய்வாக அமர வைத்தான் ...
அந்த ஒரு செயலே அவனின் நற்குணம் அங்கிருப்போர்க்கு விளங்கிற்று...

அவர் இந்த நிலைமையில் இருப்பதால் தான் அபிக்கு இங்கு கொடுமை என்று புரிந்து கொண்டு , அவனே எதை பற்றி கூற வேண்டுமோ அது வரை கூறி முடித்தான் , நிஷாவின் காதல் கதை மறைத்து ...
ராமமூர்த்திக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது , மகிழ்ச்சியில் ...
பிறகு இருவரும் அவரிடம் ஆசி வாங்கினார் ...
அதன் பின்பு திக்கி திணறி வார்த்தை விட்டு அபியை அவரின் அருகில் அழைத்து, அவளின் நகை மற்றும் அவர் பெற்றோர் அவளிற்கு சேர்த்து வைத்த அணைத்து பொருட்களும் எடுத்து கொண்டு செல்லுமாறு கூறினார் ...
ஆதி எதுவும் வேண்டாம் என்றதற்கு, அவர், மிகவும் கெஞ்சி கேட்பதாக , கூறவே, இங்கு இதில் ஏதோ இருப்பதாக ஆதி மற்றும் சிவனேஷிற்கு புரிந்தது ....
இருவரும் சரி என்றனர்.

மேலும் அபி ஆதியின் முகத்தயே பார்ப்பதும் பின் தயங்குவதுமாய் இருப்பதை கண்டு, ஆதியே புரிந்து கொண்டான்.
அபி நீ கேட்க வேண்டாம்,, அங்கிள் நீங்க என்னோடயே வந்துடுங்க , நாங்க பார்த்துக்கொள்வோம், என்று ஆதியே கூறினான் ...
இதில் லீலா பெரிதும் அடி வாங்கினாள் , கணவர் என்ன பதில் கூறுவார் , என்று அறையின் ஓரத்தில் நின்று,
அவரின் முகத்தயே பார்த்து நின்றிருந்தார் பயத்துடன் ...
ராமமூர்த்திக்கு தெரியும், லீலாவின் மதிப்பு அவர் இங்கில்லை என்றாள் லீலாவின் நிலைமை ..

என் தம்பி வாழந்த வீடு , எனக்கு முடிவும் இங்க தான் , நான் இங்கயே இருக்கேன் என்றார் ...
என்னை பற்றிய கவலை வேண்டாம் என்றும் கூறினார் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top