என்னை சிரிப்பால் சிதைத்தவளே 3 (2)

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 3 (2 )

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அன்று காலையில் வைதேகி மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள்.

"என்னடி வைதேகி இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது..... என்ன விஷயம்..... எனிதிங் ஸ்பெஷல்" என்று அவளுடைய அறை தோழி நிலா கேட்டாள்.

அவள் கேட்டதற்கு வைதேகியிடம் இருந்து ஒரு சின்ன சிரிப்பே பதிலாக வந்தது.

“ஆமா.... ஆவுன்னா இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சிடு... என்னதான் இருந்தாலும் நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கடி.... அதுவும் நீ சிரிக்கும் போது உன் கன்னத்துல விழுகுற குழி இருக்கே... சம்மயா இருக்கு போ .... எவன் இதை பார்த்து பிளாட் ஆகப்போறானோ..... “என்று வைதேகியை கிண்டலடித்து கொண்டிருந்தாள் நிலா.

"சீ போ டி..... இன்னிக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா...." என்று அழகாக சிணுங்கினாள் வைதேகி....

“ஹே நீ வெட்கம்லாம் படுவியா…. வைதேகி வெட்க படுராடி....எல்லாரும் இங்க சீக்கிரம் ஓடிவாங்க....” என்று நிலா கத்த ஆரம்பித்து விட்டாள்.

இனியும் தான் அங்கு இருந்தோம் என்றால்..... தன்னை ஒரு வழி படுத்தாமல் நிலா விடமாட்டாள் என்று வைதேகி பாத்ரூமிற்குள் குளிப்பதற்காக புகுந்து கொண்டாள்.

"பாத்ரூமிற்குள் சென்ற வைதேகியின் மனதின் மூலையில் ஏன் எனக்கு வெட்கம் வரக்கூடாதா... ஸ்போர்ட்ஸ் பெர்சனா இருந்தா... தன்னுடைய உணர்வுகளை கொன்று விட வேண்டுமா என்ன...." என்று அவளுடைய மனம் கோவம் கொண்டது. அதன் பிறகு அவளே.... சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பாள் நாம் தான் எதை எதையோ யோசிக்கிறோம் என்று தன்னை தானே சமாதானமும் செய்து கொண்டாள்.

அதன் பிறகு அனைவரும் கிளம்பி, மெஸ்ஸிற்கு சென்று உணவு உண்டுவிட்டு காலேஜிற்கு புறப்பட்டனர்.

அன்றைய தினம் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி ஆரம்பித்து இருந்ததால் கல்லூரியே நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே கல்லூரியின் பேருந்துகளில் இருந்து மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்கி கொண்டிருந்தனர்.

அங்கிருந்த ஒரு பேருந்தில் இருந்து "அஸ்வந்த்" இறங்கினான். அஸ்வந்த், "டாடா கம்மின்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்று சென்னையில் இயங்கி கொண்டிருந்த கம்பெனியின் ஒரே வாரிசு. அதனுடைய கிளைகள் வெளிநாட்டிலும் பரவி இருந்தது.

அவன் பிறந்தது மட்டும் தான் சென்னை.... வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவில் தன்னுடைய அத்தை மாமாவுடன் தான்.

அவனுக்கு அப்பொழுது ஆறு வயது..... அவன் பள்ளி கூடம் சென்றிருந்தான். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. கோவிலுக்கு சென்றிருந்த அவனுடைய தாய் தந்தை இருவரும் வரும் வழியில் எதிர் பார்காத கார் விபத்தில் இறந்து விட்டனர் என்று கூறினர்.

அவனை அப்பொழுது சாவித்ரி தான் அரவணைத்து கொண்டார். சாவித்ரி, சண்முகத்தின் (அஸ்வந்த்தின் தந்தை) தங்கை. சாவித்ரியின் கணவன் கணேசன் அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவர்களுக்கு சொப்னா என்று ஒரே பெண். அஸ்வந்த்தின் பெற்றவர்கள் இறந்தவுடன் சாவித்ரி அவனை தன்னுடன் அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.

சண்முகத்தின் தொழில்கள் அனைத்தையும் கணேசனும், சென்னையில் இருந்த சண்முகத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் பார்த்து கொண்டனர்.

பேரனை தாங்கள் பார்த்து கொள்வதாக கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவி சகுந்தலாவும் சாவித்ரியிடம் எத்தனையோ முறை கேட்டு பார்த்தனர். ஆனால் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டதற்கும், அஸ்வந்த், பெற்றவர்கள் இல்லை என்ற குறை இல்லாமல் வளரவேண்டும். அதனுடன் தானும், தன் கணவனும் அவனுக்கு அன்னை தந்தையாக இருப்போம் என்று கூறி அவனை கையோடு அழைத்து சென்று விட்டாள்.

தன்னுடைய இரண்டாம் வருட மெக்கானிக்கல் என்ஜினீரியிங் படிப்பின் பொழுது கிருஷ்ணமூர்த்தியின் உடல் நிலை மிகவும் மோசமானது. அவர் தன்னுடைய இறுதி தருணத்தில் தன்னுடைய பேரனை காணவேண்டும் என்று அவருடைய மனம் துடிக்க ஆரம்பித்தது. அஸ்வந்த்தினை காணாமல் அவர் உயிர் போக போவதில்லை என்பதை போல் இழுத்து கொண்டிருந்தது என்று தான் கூற வேண்டும்.

இதனை கேள்வியுற்ற அஸ்வந்த் அடுத்த பிளைட்டினை பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்தான். அவனை கண்ட கிருஷ்ணமூர்த்தி நிம்மதியுடன் தன் கண்களை மூடினார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சகுந்தலா "என்னையும் உங்க கூட கூட்டிட்டு போகாம போய்ட்டிங்களே... இனி நீங்க இல்லாம நான் என்ன பண்ணுவேன்." என்று அழுது கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய அழுகை குறைந்து அங்கிருந்த வெட்ட வெளியினை வெறித்து பார்க்க ஆரம்பித்தார்.

சாவித்ரி அவருக்கு எவ்வளவோ சமாதானம் கூறிப்பார்த்தார். ஆனால் சகுந்தலாவிடம் ஒரு அசைவும் இல்லை. இது அங்கிருந்த அனைவருக்கும் பயத்தினை ஏற்படுத்தியது. அஸ்வந்த் டாக்டரினை உடனே சென்று அழைத்து வந்தான்.

டாக்டர், "அவங்க ரொம்ப டிப்ரெஸ்டா இருக்காங்க.... அவங்களுடைய மனம் முழுவதும் தனக்கென்று இந்த உலகத்தினில் யாரும் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறது…… அதனால் அவர்களுக்கு என்று நீங்கள் இருப்பதாக புரிய வையுங்கள்..... இல்லையென்றால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம்" என்று கூறிவிட்டு அடுத்த பேஷன்டினை பார்க்க சென்று விட்டார்”.

அடுத்து வந்த ஒரு வாரமும்.... ஒவ்வொருவரும் தங்களை சகுந்தலாவிற்கு புரிய வைப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. அஸ்வந்த் பேசினால் மட்டுமே அவரிடம் ஒரு அதிர்வலை தென்பட்டது.

அதற்கு மருத்துவர், "அஸ்வந்த் நீங்க அவங்களோட மனசுல ஆழமா புதைத்திருக்கிங்க ..... உங்களால மட்டும் தான் அவங்கள வெளியில் கொண்டு வர முடியும்” என்று கூறிவிட்டார்.

அஸ்வந்த் தன்னுடைய பாட்டியினுடனே சென்னையில் தங்கினான். மற்றவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு பயணப்பட்டனர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து அவரை பார்த்து சென்றனர்.

ஒரு வருடத்தில் அவரும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார். மிகவும் போராட்டமாக சென்ற அந்த ஒரு வருடமும் அஸ்வந்த் தன்னுடைய பாட்டியையும், தன் தந்தையின் தொழில்களையும் பார்த்து கொண்டான்.

அஸ்வந்த்திற்கு சுத்தமாக தமிழ் பேச வரவில்லை. இந்த ஒரு வருடத்தில் அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கு தன்னுடைய தேவைகளை புரிய வைப்பதற்குள் அவன் இரண்டு முறை தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது.

தன்னுடைய பாட்டி முழுமையாக குணம் அடைந்தவுடன் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுடைய பாட்டி அந்த காலத்திலேயே இரண்டு டிகிரி முடித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆதலால்... அவன் தனக்கு என்ன வேண்டும் என்றாலும் தன்னுடைய பாட்டியிடம் தான் கேட்டான்.

கம்பெனி, வீடு என்று அஸ்வந்த்தின் வாழ்கை போய் கொண்டிருந்தது. ஒரு நாள் சகுந்தலா அஸ்வந்த்திடம் வந்து, “Aswanth…. I’m completely fine now. I can able to manage our companies… so you just continue the studies where you stopped in America. I already got seat for you in sathyabama university” என்று அவன் அமெரிக்காவில் விட்ட தன்னுடைய படிப்பை இங்கே தொடருமாறு கூறினார்.

“No grandma…. Still your health condition is not perfectly alright….. So I won’t allow you to handle the companies work” என்று அஸ்வந்த் சகுந்தலாவின் உடல்நிலையை கூறி மறுத்து கொண்டிருந்தான்.

“Aswanth….. Come to company in the evening time after your college is over” என்று கூறி அவனை சமாதான படுத்த முயன்றார்.

அஸ்வந்த் எவ்வளவோ மறுத்து கூறியும் சகுந்தலா தன் நிலையிலேயே உறுதியாக நின்றார்.

அஸ்வந்த் தான் விட்டு கொடுக்க வேண்டி இருந்தது. இறுதியாக அஸ்வந்த் அன்று தான் சத்யபாமா காலேஜிற்கு முதன் முறையாக வந்திருந்தான்.

அஸ்வந்த் பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில் சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்கு வெள்ளை நிறத்தில் பார்ப்பவரை அசரடிக்கும் அளவிற்கு அவனுடைய தோற்றம் இருந்தது.

பேருந்தில் இருந்து இறங்கியவனை பார்த்து சிரித்த சில பெண்களை ஒரு முக சுழிப்புடன் பார்த்து விட்டு அவர்களை கடந்து கல்லூரிக்குள் நுழைந்தான்.

அங்கு எதிர் திசையில் வைதேகி வந்து கொண்டிருந்தாள்.....




என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, அஸ்வந்த்தின் பாட்டி
சாவித்திரி, டபுள் டிகிரி
ஹோல்டரா?
வாவ் சூப்பர்ப், தாரணி டியர்
ஹீரோ அஸ்வந்த் வந்துவிட்டார் (ஹீரோதானே?)
 

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
ஹோ, அஸ்வந்த்தின் பாட்டி
சாவித்திரி, டபுள் டிகிரி
ஹோல்டரா?
வாவ் சூப்பர்ப், தாரணி டியர்
ஹீரோ அஸ்வந்த் வந்துவிட்டார் (ஹீரோதானே?)
yes sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top